என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பிரம்மச்சரியம் என்பதற்கு விளக்கங்கள் பல உண்டு.
    • மனதை அலைபாய விடாமல் இருப்பது பிரம்மச்சரியம்.

    பிரம்மச்சரியம் என்பதற்கு விளக்கங்கள் பல உண்டு. இல்லறத்தை ஏற்கும்முன் அதற்கான தகுதிகளை கல்வியின் மூலம் வளர்த்துக்கொள்ளும் காலம் - பிரம்மச்சரிய நிலை. அப்போது மனதை அலைபாய விடாமல் இருப்பது பிரம்மச்சரியம்.

    அடுத்தது, இல்லறவாசியாக இருந்தாலும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் மனைவியுடன் சேர வேண்டும்; அதுவும் சந்ததியைப் பெறுவதற்காக மட்டுமே! அப்படி நடக்கும் இல்லற வாசி-பிரம்மச்சாரி!

    அடுத்தது, பிரம்மத்தை ஆசிரயிப்பவர் பிரம்மச்சாரி. `ஆசிரயித்தல்' என்ற சொல்லுக்கு, `புகலிடம்' என்பது பொருள். பிரம்மத்தை அடையும் நோக்கத்தோடு, பிரம்மத்தையே புகலிடமாகக் கொண்டிருப்பது, பிரம்மச்சரியம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒன்று தெய்வத்தைத் தேடி வந்தது.
    • தெய்வத்தை அடைய வழி காட்டும் பக்தி நிலைகள்.

    மிகவும் நுணுக்கமான தகவல் இது. தெய்வங்களுக்கு உண்டான இரு மனைவியரில், ஒன்று தெய்வத்தைத் தேடி வந்தது; இன்னொன்று தெய்வமே தேடிப்போனது. தெய்வத்தை அடைய வழி காட்டும் பக்தி நிலைகளை அறிவிக்கக் கூடியவர்கள் இந்த இரு மனைவியர். இந்த இரண்டு நிலைகளை, 'மர்க்கட நியாயம் - மார்ஜால நியாயம்' என்பார்கள்.

    அதாவது, மர்க்கடம்-குரங்கு, மார்ஜாலம்-பூனை, குரங்கு தன் குட்டியைப் பிடித்துத் தூக்காது. குட்டி தான் மல்லாக்கப்படுத்த நிலையில், தாயின் அடி வயிற்றைக் கவ்விப் பிடித்திருக்கும். அந்த நிலையிலேயே தாய் மரத்திற்கு மரம் தாவும். அப்போது தாயைக் கவ்விப் பிடித்திருக்கும் குட்டிக்குரங்கு கீழே விழுந்தால், அதை மறுபடியும் தாய் தன்னுடன் சேர்த்துக் கொள்ளாது. அது போல, தெய்வத்தை நாம் தேடிப் பிடித்து (தவம், யாகம், யோகம், கடும் விரதங்கள் மூலம்) அடைவது என்பது கடினமான காரியம்; தவறுகள் நேர வாய்ப்பு உண்டு. உதாரணம்: விசுவாமித்திரர்.

    ஆனால் மார்ஜாலம் எனும் பூனை பக்தியிலோ, பிரச்சினைகள் கிடையாது. எந்தவொரு பூனைக்குட்டியும் தாயைப் பிடித்துக் கொள்ளாது. இருந்த இடத்தில் இருந்தே `மியாவ்' என்று மென்மையாகக் குரல் கொடுக்கும். உடனே தாய் பூனை ஓடிவந்து, தன் குட்டியை பத்திரமாகத் தூக்கிச் செல்லும். குட்டிக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. பொறுப்பு தெய்வத்தினுடையது. இது பூனை பக்தி. உதாரணம்: கண்ணப்ப நாயனார். இந்த இருவிதமான பக்தி நிலைகளைத்தான், இருவிதமான சக்திகளாக, மனைவிகளாகச் சொன்னார்கள்.

    • குதிரையாக மாறி பூலோகம் சென்றாள் லட்சுமி தேவி.
    • ஆயிரம் வருடங்களாக சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள்.

    சூரிய பகவானுக்கு 'ரேவனிதா' என்ற மகன் இருந்தான். அவனுடைய குதிரைக்கு 'உச்சைஸ் ரவஸ்' எனப்பெயர். பாற்கடலைக்கடைந்தபோது வெளிவந்த குதிரை அது- ரேவனிதா. ஒரு முறை வைகுண்டத்தை நோக்கி, பகவான் விஷ்ணுவை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை தூரத்தில் இருந்து பார்த்த லட்சுமி தேவி, தன்னுடைய பார்வையை அவன் பயணித்து வந்த குதிரையின் மீதிருந்து எடுக்கவில்லை. அதன் அழகில் லயித்திருந்தாள். அதனால் விஷ்ணு, 'யார் வருகிறார்கள்? ' என சில முறை கேட்ட போதும் லட்சுமி தேவிக்கு அது காதில் விழவில்லை.

    இதனால் கோபம் கொண்ட விஷ்ணு பகவான். 'சாதாரண மனிதர்களைப் போல உன் மனமும் சலனமடைகிறது. அதனால் என் பேச்சு கூட உன் காதில் விழ வில்லை. எனவே நீ ஒரு குதிரையாக பூலோகத்தில் பிறப்பாய்' என்று லட்சுமிக்கு சாபம் அளித்தார்.

    இதனால் வருத்தம் அடைந்த லட்சுமி, 'எப்போதும் உங்களை விட்டு பிரியாத நான் செய்த சிறு பிழைக்காக இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று கேட்டாள். அதற்கு விஷ்ணு, 'சில காலம் நீ பூலோகத்தில் இருந்து உன் தவத்தால் குழந்தை பேற்றை அடைந்து மீண்டும் என்னை வந்தடைவாய்' என்றார்.

    குதிரையாக மாறி பூலோகம் சென்றாள் லட்சுமி தேவி. ஒரு முறை சூரியனின் மனைவி சஞ்சனா கூட குதிரையாக மாறி உள்ளார். அஸ்வினி குமாரர்கள் அவளது பிள்ளைகளே. சஞ்சனா எங்கு தவம் இயற்றினாளோ, அதேஇடத்திற்கு லட்சுமிதேவி தவம் இயற்றச்சென்றாள். தான் ஒரு குழந்தையைப் பெற்றால்தான் வைகுண்டம் திரும்ப இயலும் என்ற வார்த்தையால், ஆயிரம் வருடங்களாக சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள்.

    இதைப் பார்த்த மகாதேவனுக்கு ஆச்சரியம்! அவர் அங்கு தோன்றி.."ஏன் விஷ்ணுவை வழிபடாமல் என்னை நோக்கி தவம் செய்கிறாய்?" என்று கேட்டார்.

    அதற்கு லட்சுமி தேவி, "உங்களுக்கும், பகவான் விஷ்ணுவுக்கும் அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லை" என்றாள்.

    "அது எப்படி உனக்குத் தெரியும்?" என்று கேட்டார் ஈசன்.

    அதற்கு லட்சுமி தேவி, "அதை நான் பகவான் விஷ்ணுவிடம் இருந்தே தெரிந்துகொண்டேன்.

    ஒரு முறை அவர் தியானத்தில் இருந்தார். அவர் தியானத்தில் இருந்து வந்ததும், நான் அவரிடம் 'பாற்கடலில் இருந்து நான் வெளிவந்தபோது உங்களையே தேவாதி தேவனாய் கண்டேன். மனதில் கணவராக வரித்தேன். அப்படிப்பட்ட தேவதேவனான தாங்கள், யாரை நோக்கி தவம் செய்கிறீர்கள்' என்று கேட்டேன்.

    அதற்கு அவர், `சிவனை நோக்கி தவம் இருந்தேன். சிவனும் என்னை நோக்கி தியானிப்பார். நாங்கள் இருவருமே ஒன்றுதான் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் ஒன்றுபட்டவர்கள். என்னுடைய பக்தர்கள் சிவனிடம் வேற்றுமையும். வெறுப்பும் கொண்டால் நிச்சயம் நரகம் செல்வர்' என்று கூறினார். அதனால் தான் நான் உங்களை நினைத்து தவம் இயற்றினேன்" என்று முடித்தாள் லட்சுமிதேவி.

    இப்போது ஈசன், "கவலைப் படாதே.. நான் விஷ்ணுவை இங்கே ஒரு குதிரையாக வரச் செய்து, அவர் மூலமாக உனக்கு குழந்தைப்பேறு வழங்குவேன். நீ இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம், மனதை ஜெகதாம்பா மகாமாயையிடம் இருந்து எடுத்ததால் தான். மகாமாயையை மனதில் நிறுத்தினால், அந்த மாயை வேறு எண்ணங்களுக்குள் நம்மை செல்ல விடமாட்டாள்" என்று கூறி மறைந்தார்.

    இதையடுத்து குதிரை வடிவில் இருந்த லட்சுமிதேவி, மகாமாயையை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினாள். இந்த நேரத்தில் சிவபெருமான், மகாவிஷ்ணுவுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் 'தேவி அருகில் இல்லை எனில், வாழ்க்கை என்று ஒன்று இல்லை.

    அவ்வாழ்க்கை ஒருவரை துன்பத்திற்குள்ளாக்கும். நானும் ஒரு முறை சதியைப் பிரிந்து இந்த துயரை அனுபவித்துள்ளேன். அதை தாங்களும் அறிவீர்கள். அதை தாங்களே பரிசோதித்துப் பார்த்தால் உண்மை தெரியவரும். எனவே ஒரு குதிரை வடிவில் தேவியை அடைந்து, ஒரு மகனை தந்து, தேவியை வைகுண்டம் அழைத்து வர வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    விஷ்ணு பகவான், 'இப்படி எவராவது சொல்லமாட்டார்களா' என்று தான் காத்துக்கொண்டிருந்தார். ஈசனின் மொழி கிடைத்ததும், அவர் குதிரை வடிவில் லட்சுமியின் இருப்பிடம் சென்று, அவளுடன் இணைந்து ஒரு மகனைப் பெறச் செய்தார்.

    அவன் பெயர் 'ஹய் ஹய்யா'. விஷ்ணு அந்த பிள்ளையை, குழந்தை இன்றி தவித்து' வந்த ஹரிவர்மா என்ற அரசனிடம் ஒப்படைத்தார். அந்த வகையில் ஹய்ஹய்யாவின் மூலம் ஒரு வம்சத்தை உருவாக்கினார். இந்த வம்சத்தில் பிறந்தவன்தான் கார்த்தவீர்யார்ஜூனன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது.
    • மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை.

    கிறித்தவ சமயத்தில் நவம்பர் முதல் இரண்டு நாட்களும் கனத்த இதயங்களுடன் மக்கள் அவரவர் குடும்பங்களில் மரணித்தவர்களின் நினைவுகளை சுமந்து அதன் வலியும், வேதனையும் உணர்வுகளை சிதைக்கின்ற காரணத்தால் சோகம் நிறைந்த சிந்தனைகளோடு கல்லறைகளை சுற்றி அலைவர். மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடைகளில் மிகவும் முக்கியமானது.

    கிறித்துவத்தில் மரணம் வித்தியாசமாக புரியப்படுகிறது. அதாவது மரணம் பொய்யுலக வாழ்வையும், மெய்யுலக வாழ்வையும் வரையறுக்க கூறுகிறது. அதற்கு மரணம் தான் வழி வகுக்கிறது என்பது புரிதல் அப்படியானால் மரணித்தவருடைய உடல் மண்ணாகவும் அவர்களது ஆன்மா மனித உடலில் இருந்து பிரிந்து எகிருந்து வந்ததோ அதே தத்துவத்தை அடைந்து விடுகிறது. இதைத்தான் மோட்சம், பரலோகம், சிவலோகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

    புரிதல் என்னவென்றால் மரணித்த மனித உடலில் இருந்து விடுபட்டு அவரது உயிர் ஜீவன் என்பது அழிவில்லா தத்துவத்தை அடைகிறது. அதாவது இறைவனோடு கடவுளோடு சங்கமித்துவிடுகிறது. இவ்வாறு மண்ணுலக வாழ்வில் இருந்து விடுபட்டு விண்ணுலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுவதும், நம்பிக்கை புகட்டுவதும் தான் சிறப்பு.

    அதேவேளையில் உயிர்தெழுதல் நாள் வரும்போது இதுபோன்ற ஆன்மாக்கள் மாற்றுடல் பெற்று எழுவார்கள் என்பது நம்பிக்கை. ஆயினும் மரணித்தவர்களின் உடலை மண்ணுக்கே கொடுத்துவிடுகிறோம். ஏனென்றால் மனிதன் மண்ணானவன் என்பது புரிதல் ஆகும். உலகத்தின் எந்த மூலைக்கும் இதுவே புரிதலுக்குள்ளான தத்துவமாகும்.

    1048-ல் தான் 11-ம் நூற்றாண்டில் அபாட் ஓஷலோ என்ற துறவி தனது 54 ஆண்டுகால துறவரத்தை அவர் கொண்டிருந்த துறவர மடத்திலயே மரணத்தின் மூலம் முடிந்தார். இவர்தான் அனைத்து ஆன்மாக்களின் தினம் என்ற ஒரு சிறப்பு நாளை உருவாக்கினார்.

    இதனால் தான் மரணம் அடைந்தோரின் நினைவு நாளை உலகமெல்லாம் உள்ள அனைத்து கிறித்தவர்களும் குடும்பங்களாக அவரவர் தங்கள் உறவுகளின் கல்லறைக்குச் சென்று சுத்தம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து தங்கள் கடமையை நிறைவேற்றுவது வழக்கம்.

    C.SI லூத்திரன் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகள் இந்த நாளை நினைவேந்தி வழிபடவேண்டும் என்று மக்களுக்கு ஆவலை ஊட்டுகின்றன. அதே வகையில் மேற்படி திருச்சபைகளே கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றன.

    சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஏன் இந்தியாவில் மட்டும்மல்லாது உலக அளவில் இந்த நவம்பர் 2-ம் நாள் நீத்தார் நினைவேந்தல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 16 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி நள்ளிரவு 12.35 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 7.45 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி. திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை விருஷப சேவை. இரவு இந்திர விமானத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சங்கரன்கோவில், பத்தமடை, வீரவநல்லூர் தலங்களில் அம்பாள் பவனி. திருத்தணி முருகப்பெருமான் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-உயர்வு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- மேன்மை

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-இன்சொல்

    மீனம்-விவேகம்

    • கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்றது.
    • கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது.

    சென்னை:

    கிறிஸ்தவர்கள் சகல ஆத்மாக்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறார்கள். அந்த நாளில் மரித்த முன்னோர்களை நினைவு கூர்ந்து விஷேச பிரார்த்தனை மேற்கொள்வார்கள். முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்துவார்கள்.

    அதன்படி கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்கள் கடந்த சில நாட்களாக தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது. அங்கு பல ஆயிரக்கணக்கான கல்லறைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பாதுகாத்து பராமரித்து வருவதற்கு தனி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இதேபோல் காசிமேடு கல்லறை தோட்டமும் மிகப்பெரியது. இதுதவிர ஒவ்வொரு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் தனித்தனியாக கல்லறைகள் உள்ளன.

    கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்து, லுத்தரன் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களை சேர்ந்த கிறிஸ்தவர்க ளும் கல்லறை திருநாளான நாளை காலையில் இருந்தே கல்லறைகளுக்கு சென்று முன்னோர்களை நினைவு கூர்ந்து வேண்டுதல் செய்வார்கள். கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடும் நாளை நடைபெறும்.

    குடும்பம் குடும்பமாக சென்று பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கல்லறைகளுக்கும் மரியாதை செலுத்துகின்றனர். மதபோதகர்கள் சிறப்பு பிராத்ததனை செய்கிறார்கள்.

    • சென்னையில் முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம்
    • ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம்-1 ன் படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பஸ் கந்தகோட்டம் முருகன் கோவில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோவில், சிறுவாபுரி பாலமுருகன் கோவில், வடபழனி தண்டாயுதபாணி கோவில், தேனாம்பேட்டை பால சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

    சென்னையில் முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம்-2 ன் படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பஸ் வல்லக் கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், திருவான்மியூர் அறுபடை வீடு கோவில், மருந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலை பேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம்.

    • தெய்வீக சக்தி படைத்தது காமதேனு பசு.
    • பசுவும் தெய்வமாகவே பார்க்கப்படுகிறது.

    ஐப்பசி மாத தேய்பிறை துவாதசி திதியில் கடைப்பிடிக்கப்படும் விரதம் தான் 'கோவத்ஸ விரதம்'. இது பசுவை பூஜிக்கும் ஒரு விரத வழிபாடாகும். இந்த உலகத்தில் ஏராளமான ஜீவராசிகள் இருக்கும் போது, பசுவை தெய்வமாக வழிபட என்ன காரணம் என்பது பலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் பாற்கடல் கடையப்பட்ட போது. அதில் இருந்து மகாலட்சுமியுடன் தோன்றியது காமதேனு பசு, கேட்ட பொருட்களை வழங்கும் தெய்வீக சக்தி படைத்தது காமதேனு பசு. அதனாலும் பசுக்களை தெய்வமாக போற்றுகிறோம்.

    மேலும் அசுரர்களின் ஆதிக்கத்தால் பூமியின் பாரம் அதிகரித்த நேரத்தில், பூமாதேவி பசுவாக மாறி மகா விஷ்ணுவை நோக்கி சரணடைந்து முறையிட்டார். அதன் பயனாக பூமிபாரம் நீங்கியது. பூமாதேவியே பசுவின் உருவத்தில் மாறியதால், பசுவும் தெய்வமாகவே பார்க்கப்படுகிறது.

    இந்த வகையில் பசுவின் வழிபாடு முக்கியமானதாக உள்ளது. பசுவை பூஜிக்கும் கோமாதா பூஜை விசேஷமானது. பசுவின் தோற்றத்திற்கு மாறிய பூமாதேவியின் வழிபாடும் விசேஷமானது. பசுவை பால் சுரக்கச் செய்யும் தாய்மையும் விசேஷம். பசுவின் உடலில் முப்பத்து, முக்கோடி (33 கோடி) தேவர்கள். பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள். நான்கு வேதங்கள், இந்திரன், வருணன் உள்ளிட்ட அஷ்டத்திக்கு பாலகர்கள், நவக்கிரகங்கள், அஷ்ட வசுக்கள், அஷ்ட லட்சுமிகள், சப்த ரிஷிகள் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே பசுவை பூஜிப்பது மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

    கோவத்ஸ விரதம் மேற்கொள்ளும் அன்று காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் உள்ள பசுக்களை குளிப்பாட்டி, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அன்றைய தினம் நம் வீட்டில் உள்ள கன்றுகளை மன திருப்தியுடன் பசுவின் மடியில் பால் அருந்தச் செய்ய வேண்டும். பிற நாட்களில் கன்றானது அனைத்து பாலையும் குடித்து விடாதபடி, கொஞ்சம் அருந்தச் செய்து விட்டு, பிடித்து கொட்டிலில் கட்டி விடுவார்கள்.

    அதுபோன்று கன்றை திருப்தியில்லாமல் விடக் கூடாது என்பதற்காக இந்த தினத்தில் மட்டும், கன்று விரும்பும் வரையில் பசுவிடம் பால் அருந்த விட வேண்டும் என்கிறார்கள்.

    அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது. பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். பசுவின் பாலை விற்பனை செய்யவும் கூடாது. கோதுமை பொருட்கள், உளுந்து மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை பசுக்களுக்கு உணவாக அளிக்க வேண்டும்.

    பசுக்கள் மீதான கிருஷ்ணரின் அன்பையும், அவர் பசுக்களின் அருளாளர் என்பதையும் போற்றும் வகையில் பாடல்களை பாட வேண்டும். அதோடு லட்சுமியின் அஷ்டோத்ரம்' (108 நாமாவளி) சொல்லி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பிரம்ம சாபம், பிரேத சாபம். பெண் சாபம் போன்றவை நீங்கும். லட்சுமியின் கடாட்சம் வீட்டில் பெருகி, செல்வவளம் பெருகும். தங்கள் வீட்டில் பசுக்கள் இல்லாதவர்கள், ஆலயங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள கோசாலைக்கு சென்று அங்குள்ள பசுக்களுக்கு அலங்காரம், பூஜை செய்து வழிபட வேண்டும்.

    • குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம்.
    • இழந்ததை மீட்டுத்தரும் வல்லமை உடைய தெய்வம் கார்த்த வீர்யார்ஜூனர்.

    குலம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம். குலதெய்வமாக வணங்கும் கடவுள்கள் பெரும்பாலும் அவதாரமாகவோ, மனிதனாகவோ மண்ணில் பிறந்து, நமக்கு வழிகாட்டியாக, நம்மை காப்பதற்காக வாழ்ந்தவர்களே. குலதெய்வமாக இல்லா விட்டாலும் பல கடவுள்களின் பிரார்த்தனைகள், பரிகாரங்கள் நம் சங்கடங்களை நிவர்த்தி செய்ய ஆண்டவனால் அடையாளம் காட்டப்பட்டவை.

    கலியுகத்தில் சொத்துக்களை இழப்பது, பொருட்கள் திருடு போவது, குடும்பத்தில் உள்ளவர்கள் பிரிந்து போவது. இளம் வயதில் சாவின் விளிம்பிற்குச் செல்லும் அளவு நோய்வாய்ப்படுவது சகஜமாகிவிட்டது. இப்படி இழந்ததை மீட்டுத்தரும் வல்லமை உடைய தெய்வம் கார்த்த வீர்யார்ஜூனர்.

    கிருதயுகத்தில் சத்ரிய வம்சத்தில் ஹேஹய நாட்டில் மகிஷமதியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கிருதவீரன் - பத்மினிக்கு பிறந்தவர், கார்த்த வீர்யார்ஜூனர். இவர் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகப் பிறந்த தத்தாத்ரேயர், 'சப்தமி ஸ்நபனம்' என்னும் விரதத்தை உபதேசம் செய்து அதன் மூலம் பிறந்தவர். தத்தாத்ரேயரை குருவாக ஏற்று வேத மந்திரங்கள் கற்று பணிவிடை செய்து நினைத்தபோது ஆயிரம் கரங்களைப் பெறும் வல்லமை பெற்றவர்.

    மேலும் மகாவிஷ்ணுவைத் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாத வரத்தையும் பெற்றவர். இவர் 85 ஆயிரம் ஆண்டுகள். மூன்று உலகங்களையும் ஆண்டதாக புராணங்கள் சொல்கின்றன.

    ராமாயணத்தில் ராவணனை பற்றி குறிப்பிடும் பொழுது, கார்த்த வீர்யார்ஜூனர் ராவணனோடு போரிட்டு வெற்றி பெற்றதாக ஒரு குறிப்பு உள்ளது. ஐயப்பனின் 18 படிகளில் 7-ம் படியாக கார்த்த வீர்யார்ஜூனர் இருப்பதாகவும், குருவின் சொல் கேட்டு சாஸ்தா வழிபாடு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. காமதேனுவை பொது சொத்தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஜமதக்னி முனிவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து சென்றார் கார்த்த வீர்யார் ஜூனர்.

    இதனால் விஷ்ணுவின் அவதாரமான ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமருடன் போரிட நேர்ந்தது. இதில் பரசுராமரால் கொல்லப்பட்டு முக்தி அடைந்தார். தன் நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக போரிட்டதால், அவரை காக்கும் கடவுளாக திகழ மகாவிஷ்ணு அருள்பாலித்தார்.

    கார்த்த வீர்யார்ஜூனருக்கு மூலக்கோவில் உஜ்ஜைனியில் மகேஸ்வரர் என்ற இடத்தின் அருகே அகல்யாபாய் கோட்டையில் உள்ளது. தமிழகத்தில் கும்பகோணம் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் ஆலயத்திலும் இவருக்கு தனி சன்னிதி இருக்கிறது.

    வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில், பச்சைக் கல்லில் கார்த்த வீர்யார்ஜூனர் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. இழந்ததை மீட்டுக் கொடுக்கும் இறைவனாக 16 செல்வங்களை வழங்கும் விதத்தில் 16 திருக்கரங்களோடு, காப்பதற்குரிய 16 ஆயுதங்களோடும், சுதர்சன சக்கரத்துடன் காட்சி தருகிறார். காலில் பாதரக்சை, பார்த்தசாரதிப் பெருமாள் போல் மீசை, கதை, சங்கு, சக்கர தாரியாக யந்திரங்களுடன் கார்த்த வீர்யார்ஜூனர் அருள்பாலிக்கிறார்.

    செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் நம்பிக்கையுடன் பூஜை, ஹோமம் செய்து, கார்த்த வீர்யார் ஜூனரை வழிபட்டால் கடன்தொல்லை நீங்கும். இழந்த சொத்து, தொலைந்த பொருள், பிரிந்து சென்ற உறவுகள், நலிந்த உடல் ஆரோக்கியம், அடகு வைத்த நிலம், நகை அனைத்தும் கிடைப்பது திண்ணம். கலியுகத்தில் காக்கும் கடவுளாக மனிதனின் மனக்குழப்பத்தை தீர்க்கும் வகையில் அருள்பாலிக்கும் கார்த்த வீர்யர்ஜூனரை வணங்கி ஆரோக்கியம், ஐஸ்வரியம், ஆனந்தம் பெற கீழே உள்ள கலோகத்தை சொல்லுங்கள்.

    'ஓம் கார்த்த வீர்யாய வித்மஹே

    மஹா சூஷ்மாய தீமஹி தந்நோ ஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்'.

    • தீயசக்திகள் நம்மை நெருங்காது.
    • அனுமனை வணங்கினால் சனியின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.

    வீரத்தின் அடையாளமாக விளங்கக் கூடிய ஆஞ்சநேயகர் சனி பிடிக்காத தெய்வம் என்பதால் அனுமனை வணங்கினால் சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்கலாம். தீயசக்திகள் நம்மை நெருங்காது. அனுமனை வழிபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலர் இவரின் தீவிர பக்தர்களாக இருந்து வருகின்றனர். பிரிந்திருந்த ராமரையும், சீதையையும் ஒன்று சேர்த்து வைத்ததுடன், ராமர் போரில் வெற்றி பெற்று சீதையை மீட்க முக்கிய பங்கு ஆற்றியவராகவும் இருந்தவர் அனுமன். அதனால் அவரை வழிபட்டால் பக்தர்களின் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நமக்கும் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.

    அனுமன் வழிபாடு

    தீவிர ராம பக்தரான ஆஞ்சநேயர், ராமரின் வாயாலேயே சிரஞ்சீவி வரம் பெற்றவர். பக்தி, வீரம், பேச்சுதிறன், சேவை ஆகியவற்றிற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் வீர ஆஞ்சநேயர். அவரை வழிபடுபவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.அனுமனை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். உடல் வலிமை பெற விரும்புபவர்கள் அனுமனை வணங்கலாம். அனுமனை வழிபட்டால் மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடைவதுடன், குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீரும், நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கிரக தோஷங்கள் விலகும்.

    ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் அவரை வழிபட அனைத்து நாட்களும் ஏற்ற தினங்களாகும். இருந்தாலும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். இந்த கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை, துளசி மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஆஞ்சநேயர் சிறப்பான பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவார்.

    • துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார்.
    • பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்யலோகம் சென்றார்.

    ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு சவுடுகர் மகரிஷிகள் சூத முனிவரை ஸ்ரீ சைலஷேத்திரத்தின் பெருமையை அறிய அணுகினார். அப்போது ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரத்திலிருந்து நரசிம்மர் பற்றிய புராணத்தைக் கூறியதாக வடமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு அளிக்கப்படுகிறது.

    தேவ சபையில் சகல சுத்த குணம் பொருந்தியவர் மகாவிஷ்ணுவே என்ற கருத்து இருந்தது. அதனையொட்டி துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார். துர்வாச முனிவர் ராஜகோளத்தில் பிரம்மாவும், மகாலட்சுமியும் தாமச உலகில் ஈஸ்வரனும், சரஸ்வதியும் சத்வகுண உலகில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், பரமேஸ்வரியும் தோன்றியதாக கூறினார்.

    சரஸ்வதியை நான்முகனும், ஈஸ்வரியை ஈஸ்வரனும், லட்சுமியை மகாவிஷ்ணுவும் மணந்ததாகக் கூறினார். சகலவிதமான பொறுமையுடன் ராஜ கோலத்தில் பிறந்த மகாலட்சுமியை வகித்து உலகத்தைக் காப்பாற்றி வருவதால் மகாவிஷ்ணுவே சிறந்தவராவார் எனக் கூறினார் துர்வாச முனிவர்.

    இதைக்கேட்ட இந்திரன் இதனைப் பரீட்சை மூலம் அறிய நினைக்கிறேன் என்றார். பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்யலோகம் சென்றார். அங்கு மகாவிஷ்ணு நித்திரையில் இருந்தார்.

    துர்வாச முனிவரின் வேகத்தைக் கண்ட துவார பாலகர்கள் அவரைத் தடுக்கவில்லை. தான் வந்தும் மகாவிஷ்ணு நித்திரையில் இருப்பதைக் கண்டவுடன் மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார்.

    மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல் சாந்தமுகத்துடன் முனிவரை பார்த்து தாங்கள் உதைத்ததால் மார்புப் பகுதி புனிதம் அடைந்ததாகவும் தங்கள் பாதம் வலிக்குமே எனக் கூறி முனிவரின் பாதத்தை வருடினார். உடனே துர்வாசர் தெளிவடைந்து மகாவிஷ்ணுவிடம் பிழை பொருத்தருளுமாறு கேட்டார்.

    இட்ட பணியை செய்யத்தவறிய துவார பாலகர்களை மூன்று பிறவிகள் எடுத்து (தமக்கு விரோதிகளாக) இருப்பிடம் அடைவீர்! என தண்டனை கொடுத்தார்.

    பகவானை பிரிய மனமற்ற துவாரபாலகர்கள் கட்டளையின்படி மூன்று பிறவிகள் விரோதிகளாகப் பிறக்கிறோம். ஆனால் தங்களாலேயே மரணம் அடைய வேண்டும் என வேண்ட, இறைவனும் அவ்வாறே வரம் தந்தார்.

    அவர்கள் அரக்கன் மதுகைடகர்போல் துவார பாலகர் இருவரும் இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சன் ஆகப்பிறந்து இரண்யாட்சன் பூமியை அபகரித்து பாதாளத்தில் ஒளிந்துகொள்ள மகாவிஷ்ணு யக்ஞவராக அவதாரம் எடுத்து வதம் செய்து பூமிதேவியைக் காப்பாற்றினார்.

    இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரமசிவனிடமிருந்து 50 கோடி ஆட்களையும் தேவர், மானுடர், நீர், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு வேளைகளில் சாகா வரம் பெற்றார்.

    பரமேஸ்வரனின் வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்வித யாகமும், பஜனைகளும் நடைபெறவில்லை. இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக, இரணியன் மகனாகப் பிறக்க கட்டளையிட்டார்.

    கருவிலேயே நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனைத் தக்க வயதில் குருகுலத்திற்கு இரணியன் அனுப்பினான். இரணியன் கட்டளைப்படி 'இரணியாய நமக' என ஆசிரியர் முதலடி போதிக்க அவன் `ஓம் நமோ நாராயணாய நமக' எனக் கூறினான்.

    பலவகைகளிலும் தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன். கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள் கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன காத்தன.

    இதனைக்கண்ட இரணியன் பிரகலாதனிடம், நாராயணனை எனக்கு காட்டு' எனக்கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான். அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்த நரசிம்மமூர்த்தி காட்சியளித்தார்.

    அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனைத் தன் சிங்கநகம் போன்ற கூரிய நகத்தால் அவனை அழித்தார். அப்படியும் கோபம் அடங்காத ஸ்ரீ நரசிம்ம அவதார மூர்த்தியான ஸ்ரீமத் நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல பயந்தாள். பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, ஸ்ரீ நரசிம்மர் ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து அருள்பாலித்தார். அவனும் அதுமுதல் பூஜித்து வரலானான்.

    அதுமுதல் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலையருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவமியற்றினாள்.

    திரேதா யுகத்தில் ராமவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் இமயமலையை வாயுபகவானின் உதவியுடன் தாண்டி சிரஞ்சீவி மலையை பெயர்த்துவந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பிவிட்டு பழையபடி சஞ்சீவி மலையை வைத்துவிட்டுத் திரும்பினார்.

    அப்போது நேபாளத்தில் கண்டகி நதியில் ஓர் சாளக்கிராம மலையைப் பார்த்தார். அதில் ஸ்ரீ நரசிம்மர் பாவித்திருப்பதைக் கண்ட அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காகப் பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை நோக்கி பயணித்தார்.

    சூர்யோதயக் காலம் நெருங்குவதைக் கண்ட அனுமான் அனுஷ்டானம் செய்யத் தீர்மானித்து மகாலட்சுமி தவம் செய்யும் நீர்நிலைகள் அடங்கிய அந்த இடத்தில் வைத்துவிட்டு அனுஷ்டானம் செய்தார். திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

    அப்பொழுது ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள்பாலித்து ராமர் கைங்கரியத்தை முடித்து ராமாவதாரத்திற்குப் பின்பு திரேதாயுகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும், கார்கோடகனும் ஆவிர் பவித்து ஸ்ரீ நரசிம்மர் தூணிலும் சாலிக்கிராமத்திலும் இருந்து ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்திற்காக சாளக்கிராமகிரி ரூபத்தில் இங்கு எடுத்துவந்து ஸ்தாபிக்கப்பட்டார்.

    ஷராப்தி நாதர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதினாலும் உதரத்திலும் ரட்சிப்பதாலும் இந்த நாமக்கல் நகரம் ஸ்ரீ சைலசேத்திரம் என்றும் ஸ்ரீ சைலகிரி என்றும் கார்கோடகன் நற்கதியடைந்ததால் நாகவனம் என்றும் நாமகிரி என்றும் கூறப்படுகிறது.

    • ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.௩௦ மணிக்கு தங்கத்தேரை இழுக்கலாம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    * ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுவதை நாமக்கல் நகர மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இருசக்கர வாகனங்களுக்கு பூஜைபோட கட்டணமாக ரூ.50ம், கார், வேன்களுக்கு ரூ.200ம், பஸ், லாரிகளுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

    * வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது.

    * ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபி ஷேகம் 2009-ம் ஆண்டு நடந்தது.

    * ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    * ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் மற்றும் முத்தங்கி அலங்காரம் உள்ளிட்ட கட்டளை தாரர் சேவைக்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    * தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் அபிஷேகத்தில் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    * மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்ப டுகிறது.

    * அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும்.

    * ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.

    * ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணை பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

    * நாமக்கல் நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    * ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    ×