search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அனைத்து ஆத்மாக்களையும் நினைவு படுத்தும் கல்லறை திருநாள் இன்று
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அனைத்து ஆத்மாக்களையும் நினைவு படுத்தும் கல்லறை திருநாள் இன்று

    • மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது.
    • மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை.

    கிறித்தவ சமயத்தில் நவம்பர் முதல் இரண்டு நாட்களும் கனத்த இதயங்களுடன் மக்கள் அவரவர் குடும்பங்களில் மரணித்தவர்களின் நினைவுகளை சுமந்து அதன் வலியும், வேதனையும் உணர்வுகளை சிதைக்கின்ற காரணத்தால் சோகம் நிறைந்த சிந்தனைகளோடு கல்லறைகளை சுற்றி அலைவர். மரணம் இல்லாத வீடு என்பது மன்னுலகத்தில் இருக்க முடியாது. ஏனெனில் மரணம் மானுட மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடைகளில் மிகவும் முக்கியமானது.

    கிறித்துவத்தில் மரணம் வித்தியாசமாக புரியப்படுகிறது. அதாவது மரணம் பொய்யுலக வாழ்வையும், மெய்யுலக வாழ்வையும் வரையறுக்க கூறுகிறது. அதற்கு மரணம் தான் வழி வகுக்கிறது என்பது புரிதல் அப்படியானால் மரணித்தவருடைய உடல் மண்ணாகவும் அவர்களது ஆன்மா மனித உடலில் இருந்து பிரிந்து எகிருந்து வந்ததோ அதே தத்துவத்தை அடைந்து விடுகிறது. இதைத்தான் மோட்சம், பரலோகம், சிவலோகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

    புரிதல் என்னவென்றால் மரணித்த மனித உடலில் இருந்து விடுபட்டு அவரது உயிர் ஜீவன் என்பது அழிவில்லா தத்துவத்தை அடைகிறது. அதாவது இறைவனோடு கடவுளோடு சங்கமித்துவிடுகிறது. இவ்வாறு மண்ணுலக வாழ்வில் இருந்து விடுபட்டு விண்ணுலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுவதும், நம்பிக்கை புகட்டுவதும் தான் சிறப்பு.

    அதேவேளையில் உயிர்தெழுதல் நாள் வரும்போது இதுபோன்ற ஆன்மாக்கள் மாற்றுடல் பெற்று எழுவார்கள் என்பது நம்பிக்கை. ஆயினும் மரணித்தவர்களின் உடலை மண்ணுக்கே கொடுத்துவிடுகிறோம். ஏனென்றால் மனிதன் மண்ணானவன் என்பது புரிதல் ஆகும். உலகத்தின் எந்த மூலைக்கும் இதுவே புரிதலுக்குள்ளான தத்துவமாகும்.

    1048-ல் தான் 11-ம் நூற்றாண்டில் அபாட் ஓஷலோ என்ற துறவி தனது 54 ஆண்டுகால துறவரத்தை அவர் கொண்டிருந்த துறவர மடத்திலயே மரணத்தின் மூலம் முடிந்தார். இவர்தான் அனைத்து ஆன்மாக்களின் தினம் என்ற ஒரு சிறப்பு நாளை உருவாக்கினார்.

    இதனால் தான் மரணம் அடைந்தோரின் நினைவு நாளை உலகமெல்லாம் உள்ள அனைத்து கிறித்தவர்களும் குடும்பங்களாக அவரவர் தங்கள் உறவுகளின் கல்லறைக்குச் சென்று சுத்தம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து தங்கள் கடமையை நிறைவேற்றுவது வழக்கம்.

    C.SI லூத்திரன் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகள் இந்த நாளை நினைவேந்தி வழிபடவேண்டும் என்று மக்களுக்கு ஆவலை ஊட்டுகின்றன. அதே வகையில் மேற்படி திருச்சபைகளே கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றன.

    சென்னை போன்ற பெருநகரங்களிலும் ஏன் இந்தியாவில் மட்டும்மல்லாது உலக அளவில் இந்த நவம்பர் 2-ம் நாள் நீத்தார் நினைவேந்தல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    Next Story
    ×