என் மலர்
வழிபாடு
- ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது.
- நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.
கங்கை நதி இந்தியர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. தாயாக, கடவுளாக கங்கை நதியை இந்தியர்கள் போற்றுகிறார்கள். வழிபடுகிறார்கள்.
உலகில் எந்த நாட்டிலும், எந்த நதிக்கும் இப்படி சிறப்பும், பெருமையும் கிடையாது. வட மாநில மக்கள் கங்கை நதியை வெறுமனே கங்கை என்று சொல்வ தில்லை. `கங்கா மாதா' என்றுதான் சொல்வார்கள்.
ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இமயமலையில் கங்கை எங்கு தோன்றுகிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த நதி மூலம் புரியாத புதிராகவே உள்ளது.
இமயமலை சாரலில் உருவாகும் கங்கை நதி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து மக்களை வாழ வைத்து, வளப்படுத்தி விட்டு வங்கக்கடலில் கலக்கிறது. இது புவியியல் ரீதியிலான உண்மை. ஆனால் புராணங்கள் மூலம்தான் கங்கையின் சிறப்பு இந்தியர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
கங்கை நதி தோற்றத்தின் பின்னணியில் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் இருப்பதாக இந்தியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் கங்கையை புனித கங்கையாக கும்பிட வைக்கிறது. எனவே புராணத்தில் கூறப்பட்டுள்ள புனித கங்கை வரலாற்றை ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாருங்கள் புனித கங்கை வரலாற்றை பார்க்கலாம்.
ஒரு தடவை இமய மலையில் சிவபெருமான், மகா விஷ்ணு, பிரம்மா மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மகாவிஷ்ணு தனது இனிமையான குரலால் ராகம் போட்டு பாடத்தொடங்கினார். கேட்பவர்களை எல்லாம் அந்த பாடல் மதிமயங்கச் செய்யும் வகையில் இருந்தது.
சிவபெருமானோ விஷ்ணுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்தார். ஒரு கட்டத்தில் உருகிப் போய்விட்டார். அதாவது உண்மையிலேயே கருணை வெள்ளமாக உருகி விட்டார்.
இதைக்கண்ட பிரம்மா 'சட்டென்று ஒரு காரியம் செய்தார். சிவபெருமான் கருணை வெள்ளமாக மாறி இருந்ததை தடுத்து, அந்த தண்ணீர் முழுவதையும் தனது கமண்டலத்தில் அடைத்துக் கொண்டார்.
அதாவது சிவனின் அம்சமாக அந்த கருணை வெள்ளம் இருந்தது. இந்த நிகழ்வு நடந்த சில தினங்களில் பூலோகத்தில் மகாபலி சக்கரவர்த்தி மிகப்பெரிய யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து அங்கு வந்து மூன்றடி நிலம் வேண்டும் என்று தானம் கேட்டார்.
குள்ளராக இருந்த வாமனரை புரிந்து கொள்ளாமல் மகாபலி சக்கரவர்த்தியும் மூன்று அடிதானே, எடுத்துக்கொள் என்றார். அடுத்த வினாடி வாமனர் வளர்ந்து விண் உலகையே ஒரு காலால் அளந்து விட்டார். இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் குள்ள வாமனராக வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து பயபக்தியுடன் வணங்கினார்கள்.
அப்போது அங்கு இருந்த பிரம்மா சமயோசிதமாக ஒரு செயலை செய்தார். தனது கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த ஈசனின் கருணை வெள்ளத்தை எடுத்து விஷ்ணுக்கு அபிஷேகம் செய்தார். அந்த கருணை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.
தேவர்களும், முனிவர்களும் இதற்காகவே காத்திருந்தது போல மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மேல் உலகில் ஓடிய அந்த ஆற்றுத் தண்ணீரை தங்கள் தாகம் தீர்க்க வந்த புனித பெண்ணாக கருதினார்கள். எனவே அவர்கள் அதை `மந்தாகினி' என்று அழைத்து போற்றிக் கொண்டாடினார்கள்.
ஆகாயத்தில் மட்டுமே ஓடியதால் அதை ஆகாய கங்கை என்று மற்றவர்கள் அழைத்தனர். இந்த ஆகாய கங்கை பின்னர் பூமிக்கு வந்தது, கங்கை எப்படி பூமிக்கு வந்தது என்பதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு கூறப்படுகிறது.
சிவன், விஷ்ணு, பிரம்மா மும்மூர்த்திகளால் உருவான ஆகாய கங்கை விண்ணில் தேவர்களுக்கு தாகம் தீர்த்து வந்த காலத்தில் பூமியில் பகீரதன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். எல்லா செல்வங்களும் இருந்தும் அவனுக்கு குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது. எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் குழந்தை பாக்கியம் அவனுக்கு தாமதமாகிக் கொண்டே இருந்தது.
இறுதியில் பித்ரு தோஷம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டு இருப்பதை அறிந்தான். பித்ருக்களின் அஸ்தியை கங்கையில் கரைத்தால் பித்ருக்கள் ஆத்மா சாந்தி அடையும். அதன் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று முனிவர்கள் கூறினார்கள். உடனே கங்கா தேவியை நோக்கி பகீரதன் தவம் இருக்க தொடங்கி விட்டான்.
அவன் முன்பு தோன்றிய கங்கை என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள்? அதற்கு பகீரதன், "தாங்கள் வானத்தில் ஓடாமல் பூமியில் தரையில் இறங்கி ஓட வேண்டும். அப்போதுதான் எனது மூதாதையர்களின் அஸ்தியை கரைத்து நான் பலன் பெற முடியும்" என்று கூறினான். இதை கங்கை ஏற்றுக்கொண்டாள்.
அதே சமயத்தில் அவள் ஒரு நிபந்தனையையும் விதித்தாள். அவள் கூறுகையில், "நான் பூமியில் இறங்கி ஓட தயாராக இருக்கிறேன்.
ஆனால் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது எனது வேகம் வலிமையானதாக இருக்கும். பூமியால் அதை தாங்கி கொள்ள இயலாது. யாராவது ஒருவர் அதை தாங்கி இறக்கி விட்டால் பூமிக்கு வருவதற்கு உதவியாக இருக்கும்" என்றாள்.
உடனே பகீரதன் கங்கை பூமியில் இறங்கும் போது தாங்கும் சக்தி யாருக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்தான். அப்போது முனிவர்கள் கங்கையை தாங்கும் சக்தி சிவபெருமானுக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிவபெருமானை நோக்கி பகீரதன் தவம் இருந்தான். அவன் முன் சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு பகீரதன் இதுவரை நடந்தவற்றையெல்லாம் விளக்கமாக சொல்லிவிட்டு, "கங்கையை தாங்கும் சக்தி உங்களிடம்தான் உள்ளது. எனவே எனக்காக கங்கை நதி பூலோகம் வருவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்" என்று சொன்னான். அதை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி கங்கையை தனது தலைமுடியை விரித்து சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் சிவன் தலை முடியில் கங்கை நிரந்தரமாக குடியேறிவிட்டாள். அங்கிருந்து அவள் பூலோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகீரதனின் திட்டப்படி பாகீரதியாகப் பெருகி, ஏறக்குறைய 1,600 மைல் ஓடி, கங்கா இறுதியில் கடலில் கலக்கிறாள். பாயும் இடங்களுக்கெல்லாம் புனிதம் கூட்டிப் பசுமைப்புரட்சியும் செய்கிறாள்.
கங்கை எங்கு உற்பத்தியாகிறாள் என்பது தான் இன்னும் புரியாப் புதிராக இருக்கிறது. என்றாலும் பகீரதனின் முயற்சி வியக்க வைக்கிறது.
இமயமலைச் சாரலிலே ஏறக்குறைய 14 ஆயிரம் அடி உயரத்திலே ஒரு குகை. இதன் வாய் பசுவின் வாய் போல் இருப் பதால் கோமுகி என்று பெயர். இதிலிருந்து கங்கை வெளிப்படு கிறாள். இப்பகுதி கங்கோத்ரி எனப்படுகிறது.
கங்கோத்ரியில் கங்கை அம்மனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. இதை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர். இக்கோவிலில் கங்கையைத் தவிர, புவிக்குக் கங்கையைக் கொண்டு வந்த பகீரதன், பின்னால் கங்கையோடு இணைந்து திரிவேணி என்று புகழ் சேர்க்கப்போகும் யமுனை, சரஸ்வதி, இக்கோவிலுக்குக் காரணபூதரான ஆதிசங்கரர் ஆகியவர்கள் சிலா வடிவம் கொண்டுள்ளனர். கங்கையின் உற்சவ விக்ரகம் பொன்னால் ஆனது. இந்த ஆலயத்துக்கு அருகிலேயே பைரவருக்கும் ஓர் ஆலயம் உண்டு.
நவம்பர் முதல் மே வரை உறைபனி காலமாக இருக்கும். ஆதலால் கோவிலை மூடி விடுவார்கள். அகண்ட தீபம் ஒன்றில் நெய்யிட்டு ஏற்றிவைத்து விட்டு, உற்சவ விக்ரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி விடுவார்கள். அட்சய திருதியை அன்று மீண்டும் ஆலயம் திறக்கப்படும். அப்போதும் நெய் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். ஒளிமயமான இறைவன் தன்னொளி காட்டும் விந்தை இது.
இங்கு பல தீர்த்தங்கள் உள்ளன. அவை சூரிய குண்டம், விஷ்ணு குண்டம், கவுரி குண்டம் என்று வழங்குகின்றன. சூரிய குண்டத்தில் ஒரு பாறை தானாகவே சிவலிங்க வடிவம் கொண்டுள்ளது. கங்கையும் அருவியாக விழுந்து அதை நீராட்டுகிறாள்.
வழியிலே சரஸ்வதியும் அலகநந்தாவும் சங்கமமாகும் இடம் கேசவப் பிரயாகை என்றும், நந்தாவும் அலக நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ணப் பிரயாகை என்றும், அலக நந்தாவும் மந்தா கினியும் சந்திக்கும் இடம் ருத்ரப்பிரயாகை என்றும் பெயர் பூண்டு, புகழ் கூட்டும் தீர்த்தத் தலங்களாக விளங்குகின்றன.
கங்கை பூமியைத் தொட்டும் தொடாமலும் துள்ளிப்பாய்ந்து வரும் இடம் ரிஷிகேசம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 500 அடி அகலத்துக்குச் சுழித்துக் கொண்டு ஓடும் கங்கையில் நீராட வேண்டும் என்று ஆசைப்பட்டால், படிகளில் உட்கார்ந்து ஜாக்கிரதையாக ஸ்நானம் செய்ய வேண்டும். நீரின் இழுப்புக்குத் தாக்குப் பிடிப்பது அவ்வளவு சிரமம். தண்ணீரின் சில்லிப்புக்கு ஐஸ் தோற்று விடும். கோடையில் குளித்து எழுந்தால், இதமாக இருக்கும்.
இயற்கைச் சூழலிலே, ஆற்று ஓரத்திலே சிவானந்தர் நிறுவிய சிவானந்த ஆசிரமம், சுவர்க்காசிரமம், ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் நிறுவிய சங்கர மடம், ஸ்ரீ சிதானந்தர் நிறுவிய கீதா பவனம் போன்றவை இருக்கின்றன. எதிரும் புதிருமாக உள்ள சிவானந்த ஆசிரமத்துக்கும் கீதாபவனுக்கும் போக அதாவது இக்கரை - அக்கரை போகப் படகுவசதியும் பாலவசதியும் உண்டு.
காலார நடந்து இக்கரை-அக்கரை போக வேண்டும் என்றால் ஒரு தொங்கு பாலமும் இருக்கிறது. இதற்கு லட்சுமண ஜூலா என்று அழகான பெயர் வைத்திருக்கிறார்கள்.
கங்கோத்ரியில் இருந்து 365 மைல் உள்ள ரிஷிகேசம் டெல்லியில் இருந்து 150 மைல்களுக்குள்ளேயே இருக்கிறது. ரிஷிகேசத்தில் இருந்து 14 மைல் இறங்கிவந்தால் ஹரித்துவாரம் நகரை அடையலாம். நடந்து வந்தாலும் வாகனத்தில் வந்தாலும் கங்கையும் நம்மோடு துணை வருவாள்.
சப்த புரிகளில் ஒன்றான மாயாபுரியே ஹரித்துவாரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு கங்கையின் இருபுறமும் இருக்கும் கட்டிடங்கள் கட்டங்களாகவும் திகழ்கின்றன. என்றாலும் பிரதான ஸ்நான கட்டம் பிரம்ம குண்டம் தான். இதுவே அக்னி குண்டமெனவும் போற்றப்படுகிறது.
பகீரதனின் பிரார்த்தனைக்கு இரங்கி ஆகாய கங்கையான மந்தாகினி இறங்கி வந்து விழுந்த முதல் தலமாகையால், இதற்குக் கங்காத்வாரம், கங்கா முகம் என்ற பெயர்களும் உண்டு.
இங்கே கங்கைக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று ஒரு குன்றின் மேல், இன்னொன்று ஸ்கான கட்டத்தில். 'ஹர் கீ பவுடி'யில் விஷ்ணுபாத தரிசனம் விசேஷம். இங்கே மாலை ஆரத்தி சிறப்பாக நடைபெறுகிறது. தீப ஆரத்தியைத் தொடர்ந்து பக்தர்கள் நெய் விளக்கேற்றிக் கங்கையில் மிதக்க விடுவார்கள். இந்த தீப அலங்கரத்தில் கங்கையின் ஜொலிப்பைக் காணக் கண்கோடி பற்றாது.
கும்பமேளா தலங்களில் ஹரித்துவாரமும் ஒன்று, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த கும்ப மேளாவின் பொழுது, இங்கு நீராடினால், லட்சம் முறை பூமியை பிரதட்சணம் செய்த பலன் கிடைக்குமாம். கங்கை மண்ணுலகுக்கு வந்த நாளை 'கங்கா சப்தமி' என்று இங்கே கொண்டாடுகிறார்கள்.
அமைதியையும் ஆத்மானந்தத்தையும் நாடி இங்கு வதியும் அறவோர்களும் துறவோர்களும் இம்மண்ணின் புனிதத்துக்கு புனிதமேற்றுகின்றனர். சுருங்கச் சொன்னால், ஹரித்துவாரத்தில் துறைகள் தோறும் கோவில்கள், காடுகள் தோறும் தபோவனங்கள்! என்றாலும் சுங்கை பிரகாசிப்பது காசி நகரில்தான்.
பகவான் வால்மீகி, மகாகவி காளிதாசர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் 'கங்காஷ்டகம்' இயற்றிக் கங்கையின் ஒளிக்கு மேலும் ஒளி கூட்டி இருக்கின்றனர்.
மோட்சபுரிகள் ஏழு என்று கணக்கிட்டிருக்கின்றனர் நம் முன்னோர். அவற்றில் நடு நாயகமாக காசி விளங்குகிறது. மற்ற தலங்களில் நல்வினை செய்தோர்க்கு மட்டுமே மோட்சமாம். காசியில் தீவினை செய்தவர்க்கும் மோட்சம் கிட்டுகிறதாம் - இப்படி சனத்குமார சம்ஹிதை கூறுகிறது.
மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், பத்ம புராணம் ஆகியவை இன்னும் ஒரு படி மேலே போய் மிருகங்களும் பறவைகளும் கூட காசியில் கடைத்தேறுவதாகக் கூறுகின்றன.
காசியில் மரித்தாலே முக்தி என்றால், காசியில் தானம், ஜபம், தபம், பூஜை போன்ற நல் வினைகளைத் தினையளவு செய்தாலும் பனையளவு பலனை பெறலாம் என்கிறார்கள்.
முக்தி தரும் தலங்களிலே முத்தாக இருப்பதால்தான், 'காசி காசி, காசி' என்று ஸ்மரித்துத் கொண்டே இருந்தால் முன் வினைகள் இற்றுப் போகும் என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம்.
காசி தன்னை முக்தி சதலமாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளவே, இறப்போரின் செவிகளிலே ராமநாமத்தை ஒதத் திருவுள்ளம் கொண்டார். கைலையங்கிரியில் இருந்து காசிக்குக் குடி பெயர்ந்தார்.
கங்காநதி தன்னை மகாநதி என்று நிரூபிக்க யமுனை, சோண பத்ரை, கோமதி,கண்டகி, கவுசிகி போன்ற புண்ணிய நதிகளைத்தன்னோடு இணைத்துக் கொண்டு செல்கிறாள் ஒரு புறம்.
இன்னொருபுறம், தான் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து ஹரித்துவாரம் வரை தெற்கு நோக்கி ஓடி, அங்கிருந்து பிரயாகை வரை தென் கிழக்காகப் பாய்ந்து, பிறகு நேர் கிழக்குக்குத் திரும்புகிறாள். காசிக்கு அருகிலே வடக்கு நோக்கி ஓடி உத்தரவாகினி யாகப் புனிதம் கூட்டுகிறாள்.
இது இரு துருவங்கள் இணையும் முயற்சியாகத் தோன்றுகிறதல்லவா? ஆத்மா. தான் தோன்றிய இடத்துக்கே திரும்ப முயலும் முனைப்பாகவும் படுகிறதல்லவா? எனவேதான் உத்தரவாகினிக்கு அத்தனை சிறப்பு.
அதோடு காசி கண்டம் தீர்த்தமாம் நதிகளை நான்கு வகை யாகப் பிரிக்கிறது, தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்ற கணக்கில் தானம், தர்மம் செய்வதற்குரிய தீர்த்தமாக மட்டுமே சில தீர்த்தங்கள் உள்ளன. அவை தர்ம தீர்த்தம் எனப்படுகின்றன.
சில தீர்த்தங்கள் வர்த்தகத்துக்கு மட்டுமே உகந்தவையாக இருக் கின்றன. அவை அர்த்த தீர்த்தம் எனப்படுகின்றன. வேறு சில தீர்த்தங்கள் வாழ்க்கைக்கு இன்பம் கூட்டுவதாக, உல்லாசப் பயணங்கள் போன்றவற்றுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. அவை காமதீர்த்தம் எனப்படும்.
சில தீர்த்தங்கள் அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம ஞானத்துக்கும் வீடுபேறுக்கும் வழிகாட்டு பவையாகத் திகழ்கின்றன. அவை மோட்ச தீர்த்தம் எனப்படும். கங்கை நதிக்குள்ள சிறப்பு என்ன வென்றால் இந்த நான்கையும் அது தன்னுள் கொண்டதே ஆகும்.
பல புராதன மூடப் பழக்க வழக்கங்களும், நவநாகரிக வாழ்க்கை முறைகளும் பலவகையாலும் இன்று கங்கையை அசுத்தப்படுத்த முயல்கின்றன. அவற்றின் முயற்சி பலிக்க வில்லை என்று இன்றைய விஞ்ஞானம் ஏற்கிறது.
கங்கை நீரில் நச்சுக் கிருமிகள் நீடித்து உயிர் வாழ முடியாமல் நசித்துப் போகின்றன வாம். ஏன், எப்படி என்று புரியாமல் வளர்ந்து வரும் விஞ்ஞானமே திகைக்கிறது; மெய்ஞானம் காட்டும் தெய்வ சக்தி கங்கைக்கு உண்டு என்றும் கூறாமல் கூறுகிறது.
வாரணாசி வட்டத்துக்குள் பிறைச் சந்திர வடிவத்தில் ஓடும் கங்கைக்கு அறுபத்து நான்கு ஸ்நான கட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தற்பெருமையல்ல; தன் பெருமை பேசுகின்றன. இவை தீவிர 98 பலவகைத் தீர்த்தங்கள் இருப்ப தாக அல்லது இருந்திருப்பதாகத் தெரிகிறது. எல்லாத் துறைகளிலும் நீராடுவது விசேஷம்தான். என்றாலும் முக்கியமாக 5 கட்டங்கள் ஸ்கானாத்துக்கும் பித்ருக்களுக்குப் பிண்டம் போடவும் எடுத்தவை. அவற்றில் வைதிக முறைப்படி புரோகிதர் களின் துணை கொண்டு சிரத்தையோடு கடமைகளைச் செய்ய வேண்டும். அது ஆயுளுக்கும் சிரேயஸ் தரும். அதோடு கங்கையில் படகில் பயணம் செய்தபடி அத்தனை துறைகளையும் தரிசனம் செய்யும் பாக்கியத்தையும் பெறலாம்.
தென்முனையில் உள்ள அசி கங்கா சங்கமம், தசாச்வமேதம் பஞ்சகங்கை, வரணாசங்கமம் என்னும் ஆதிகேசவ கட்டம், மணி கர்ணிகா கட்டம் ஆகியவையே அவை. வடகிழக்கில் உள்ள வரணாசங்கமமே இறுதிக் கட்டம். ஐந்து கட்டங்களிலும் பிண்டம் போட்டுத் திரும்பும் பொழுது படகிலேயே கங்கைக்கு வழிபாடு செய்வது மரபு. கிருதயுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்ர வடிவத்திலும், துவாபரயுகத்தில், தேர் வடிவத்திலும், கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி க்ஷேத்திரம் இருப்பதாகக் காசி ரகசியம் கூறுகிறது.
காசி விசுவநாதர் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒருவர். இனிப்புக்குப் பெயர் போனது தீபாவளிப் பண்டிகை என்பதை விசுவநாதர் உணர்த்தும் முறையே தனி. இவரது கருவறைக்கு வெளியே உள்ள முன் மண்டபத்தில், ஒரு சிவலிங்கம் தொட்டியினுள் உள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் இந்த லிங்கத்தைச் சுற்றி லட்டுக்களால் தேர் உருவாக்குவார்கள். விசுவநாதரின் முன்னேயும் பல வகை இனிப்புப்பண்டங்களை அடுக்கி வைப்பார்கள். நிவேதனம் ஆனபின் பக்தர்களுக்கு வழங்கு வார்கள். அதனால் தீபாவளிக்கும் மேலாக மிட்டாய்த்திருவிழா என்றே இது புகழ் பெற்று விட்டது.
தீபாவளிக்குப் பின் மூன்றாவது நாள் காசியின் முக்கிய ஆலயங்கள் அனைத்துமே அன்னக் கூடமாகக் காட்சி அளிக்கும். பலவகைத் தின்பண்டங்களும் அன்னமும் மலைபோல் குவிந்து அன்னபூரணியின் ஆட்சிக்குக் கட்டியம் கூறும்.
விசுவநாதரோடு காசியில் தீபாவளி கொண்டாடுபவர்கள் பாக்கியசாலிகள். வெந்நீரில் குளித்துக் 'கங்கா நீராடல் ஆச்சா?' என்று கேட்காமல் நிஜமாகவே கங்கையில் நீராடும் வாய்ப்பு கிட்டுகிறதல்லவா?
காசி கண்டம் கூறும் கணக்குப்படி தாமே உண்டான சுயம்புவ லிங்கங்கள் 11, தேவர்கள் ஸ்தாபித்த லிங்கங்கள் 46, ரிஷி முனிகள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் 47, கிரகங்கள் வணங்கிய லிங்கங்கள் 7, கணங்கள் வழிபட்ட லிங்கங்கள் 40, மற்ற பக்தர்கள் நிறுவிய லிங்கங்கள் 295. ஆகமொத்தம் 511. இவற் றைத் தவிர பாரதத்தின் மற்ற புகழ்பெற்ற ஷேத்திரங்களை நினைவு கூரும் லிங்கங்கள் 65 உள்ளன.
காசிக்கு பிறகு கயா, பாட்னா, கொல்கத்தா வழியாக கங்கை நதி கடலில் கலக்கிறது.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- சங்கரநயினார் கோவில் தலங்களில் அம்பாள் அலங்காரத்துடன் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 19 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி நாளை விடியற்காலை 5.௦௫ மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: பூசம் நண்பகல் 1.07 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் புறப்பாடு. மதுரை தெற்குமாசி வீதி காமாட்சி-ஏகாம்பரேசுவரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளிச் சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம். இரவு தங்கக்கிளி வாகனத்தில் திருவீதி உலா. பத்தமடை, தூத்துக்குடி, வீரவநல்லூர், தென்காசி, சங்கரநயினார் கோவில் தலங்களில் அம்பாள் அலங்காரத்துடன் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஊக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-நட்பு
கடகம்-ஆதரவு
சிம்மம்-பிரீதி
கன்னி-சுபம்
துலாம்- பெருமை
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- போட்டி
மகரம்-வெற்றி
கும்பம்-சாதனை
மீனம்-பயணம்
- திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர்.
காரைக்கால்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலக புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
வருகிற 20.12.23 அன்று மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெறவுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர். அதேபோல் கோவில் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்ததால் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால், மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், பாதுகாப்பு பணியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக 10 நாட்களில் 6.70 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
- திருப்பதியில் நேற்று 66,048 பேர் தரிசனம் செய்தனர். 24,666 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
ஏகாதசியையொட்டி 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக 10 நாட்களில் 6.70 லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
அதன்படி வருகிற 10-ந்தேதி 2.25 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 20,000 டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.
இதில் டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் ரூ.10 ஆயிரத்துடன் ரூ.300 சிறப்பு தரிசனம் டிக்கெட் டோக்கன் பெற்று தரிசனம் செய்து கொள்ளலாம்.
மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் அடுத்த மாதம் 22-ந்தேதி முதல் திருப்பதியில் 9 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட கவுண்ட்டர்கள் மூலம் 4.25 லட்சம் நேர ஒதுக்கீட்டு தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஆர்ஜித சேவைகள், கை குழந்தையுடன் வரும் பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 66,048 பேர் தரிசனம் செய்தனர். 24,666 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
- பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
- உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 18 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி பின்னிரவு 3.13 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: புனர்பூசம் காலை 10.50 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்கா ரம். பத்தமடை, வீரவநல்லூர், சங்கரநயினார் கோவில் தலங்களில் அம்பாள் அலங்காரத்துடன் பவனி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. சக்தி நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. தென்காசி உலகம்மை பவனி, திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை தவழும் கண்ணன் அலங்காரம், இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-ஆதாயம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-சிந்தனை
கன்னி-அமைதி
துலாம்- தாமதம்
விருச்சிகம்-சோர்வு
தனுசு- மாற்றம்
மகரம்-பெருமை
கும்பம்-கவனம்
மீனம்-கடமை
- பிரதோஷ விரதம் இருந்தால் மன அமைதி கிடைத்திடும்.
- அமாவாசை விரதம் இருந்தால் பித்ருக்களின் ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.
* விநாயக சதுர்த்தி விரதம் இருந்தால் வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.
* வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.
* சஷ்டி விரதம் இருந்தால் மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும்.
* கவுரி விரதம் இருந்தால் குறையாத செல்வமும் நீண்ட ஆயுளும் குழந்தைகளும் கிடைக்கும்.
* வரலட்சுமி விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும், திருமண உறவில் எந்த விரிசலும் இருக்காது.
* பிரதோஷ விரதம் இருந்தால் மன அமைதி கிடைத்திடும், நீண்ட ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்.
* மகா சிவராத்திரி விரதம் இருந்தால் சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* வைகாசி விசாக விரதம் இருந்தால் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
* நவராத்திரி விரதம் இருந்தால் மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.
* கோகுலாஷ்டமி விரதம் இருந்தால், மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.
* அமாவாசை விரதம் இருந்தால் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.
* பவுர்ணமி விரதம் இருந்தால் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.
* கார்த்திகை விரதம் இருந்தால் எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.
- தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே ‘சின்முத்திரை’ என்பர்.
- கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும்.
* 'தட்சிணம்' என்ற சொல்லுக்கு 'தெற்கு' என்றும், 'ஞானம்' என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடு பவர்களுக்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தட்சிணாமூர்த்தி. ஞானமானது தட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்று கொண்டிருக்கிறது.
* தட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோவில்களில் அருள்பவர் வியாக்யான தட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.
* வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே 'சின்முத்திரை' என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.
- பிள்ளையார் சுழி போட்ட பிறகு எழுதத் தொடங்குவார்கள்.
- `உ' என்பது காத்தல்.
சிலர் ஏதாவது எழுதுவதற்கு முன்பாக 'உ' என, பிள்ளையார் சுழி போட்ட பிறகு எழுதத் தொடங்குவார்கள். 'ஓம்' என்ற மந்திரத்திற்கு பிறகே 'கணேசாய நமஹ', 'நாராயணாய நமஹ', 'சிவாய நம' என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் 'ஓம்' என்பதை, அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது, அ, உ, ம் என்ற எழுத்துக்களை இணைத்தால் 'ஓம்' என்று வரும். 'அ' என்பது படைப்பதையும், 'உ' என்பது காப்பதையும், 'ம்' என்பது அழிப்பதையும் குறிக்கும்.
'அ' என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. 'உ' என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் தொடங்கிய காரியம் தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.
மேலும், `உ' என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால், நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே 'உ' என எழுதுகிறோம்.
- பெருமாள் `தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது அபூர்வம்.
மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் முதலானவை மிகவும் புகழ் பெற்றவை. இங்கே நாம் பார்க்க இருப்பது, தாமோதரன் என்ற திருநாமத்துடன் பெருமாள் வீற்றிருக்கும் ஒரு ஆலயத்தைத்தான்.
பக்தர்களிடம் என்றென்றும் நீங்காத அன்புடையவர், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர், தாய் யசோதையால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தினால் வயிற்றில் தழும்பினை ஏற்றுக்கொண்டவர், தாமோதரன். சமஸ்கிருதத்தில் `தாமா' என்றால் `கயிறு', `உதாரம்' என்றால் `வயிறு' என்று பொருள்படும். இதனாலேயே பெருமாள் `தாமோதரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
காஞ்சிபுரத்திற்கு அருகில் புகழ்பெற்ற தாமல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தலம், திருமாலழகி உடனாய தாமோதரப் பெருமாள் திருக்கோவில். இத்திருத்தலத்தில் நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது எங்கும் காணப்படாத அபூர்வ காட்சியாகும்.
சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இத்திருக்கோவில், மத்வ சமூகத்தைச் சேர்ந்தவர் களால் ஆராதனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக இந்த கோவில் வழங்கப்பட்டதால் 'தானமல்லபுரம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.
பின்னர் மருவி இவ்வூர் 'தாமல்' என்றானதாக தெரிகிறது. கி.பி. 556-ம் ஆண்டு பல்லவர் செப்பேடுகளில் தாமல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தாமலில் பிறந்த பல்கண்ணன் எனும் புலவர், பாண்டியன் அறிவுடைநம்பியின் அவையில் வீற்றிருந்தவர். இவரை தாமப் பல்கண்ணனார் என்று அழைப்பர். இவருக்கு கொடையாக அளிக்கப்பட்ட ஊர் என்பதால் 'தானமல்லம்' என்று அழைக்கப்பட்டு, பின் மருவி 'தாமல்' என்று ஆகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் மீது, அக்கம் பக்கத்தவர்கள் யசோதையிடம் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். யசோதாதேவி கண்ணனின் விஷமத்தைக் பொறுக்க முடியாமல், ஒரு கயிற்றைக் கொண்டு உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டாள். அன்பிற்குக் கட்டுப்பட்டு கண்டுண்ட கண்ணன், உரலுடன் இரண்டு மரங்களுக்கு இடையில் புகுந்து இரு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினான். இதைக்கண்டு அனைவரும் வியந்து போனார்கள். கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.
வயிற்றில் பதிந்த வடுவின் காரணமாக அவருக்கு 'தாமோதரன்' என்ற திருப்பெயர் உண்டானது. கண்ணனின் இந்த லீலைகளில் மனதைப் பறிகொடுத்த மகரிஷிகள் சிலர், பெருமாளிடம் "இதே திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளி மக்களைக் காத்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பெருமாள், மகாலட்சுமித் தாயாருடன் தாமல் திருத்தலத்தில் தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளினார். இத்தலத்துப் பெருமாள் கேட்டதைக் கொடுக்கும் தாமோதரனாகவும், கேட்டதைக் கொடுக்கும் திருமாலழகியாக தாயாரும் எழுந்தருளி பக்தர்களின் பிரார்த்தனை களைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
ராஜகோபுரமின்றி சுற்றுச் சுவர்களுடன் காட்சி தரும் இக் கோவிலின் நுழைவாசல் பகுதியில், இரண்டு கருடாழ்வார்கள் சுதைச் சிற்பமாக வீற்றிருக்கிறார்கள். மூலவர் தாமோதரப் பெருமாள் கருவறையில் உபய நாச்சியார்களோடு அழகு மிளிரக் காட்சி தந்து அருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். இத்திருத் தலத்தில் தாமோதரன் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களும் முறையே சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத, ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப்படுகின்றன.

ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ள தேவியர்களுடன் உற்சவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய தாமோதரப் பெருமாள் என்பது இவரது பெயர். திருமாலழகி என்ற அழகிய திருநாமத்தோடு, தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் தாயார் காட்சியளிக்கிறார்.
இந்த தாயாருக்கு நான்கு கரங்கள் உள்ளன. இவரது உற்சவத் திருமேனியின் திருநாமமும் திருமாலழகி என் பதுதான். மற்றொரு தனிச் சன்னிதியில் ஆண்டாள் காட்சி தருகிறார். இச்சன்னிதியில் ஆண்டாளின் உற்சவர் திருமேனியும் இருக்கிறது. முன் மண்டபத்தில் விஷ்வக்சேனர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குமுதவல்லி, திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
பொதுவாக பெருமாள் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் மூலவர் தாமோதரப் பெருமாள், ரோகிணி நட்சத்திரம் அன்று நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன் ராஜ அலங்காரத்தில் அருள்கிறார். மத்வர்களுக்கு மதிப்பு தரும் வகையில் இத்தல உற்சவர் தினமும் கஸ்தூரித் திலகத்துடன் காட்சி தருகிறார். வைகானஸ ஆகம விதிப்படி இத்தலத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தம் விபுல ஸரஸ் என்பதாகும். தல விருட்சமாக வில்வம் மற்றும் புன்னை மரங்கள் உள்ளன.
இத்தலத்து மூலவரின் கால்களில் வெள்ளிக் கொலுசுகள் மின்னுகின்றன. குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து தாமோதரப் பெருமாளை வணங்கி, குழந்தைச் செல்வம் தந்தருளுமாறு வேண்டிக்கொள்கிறார்கள். தாமோதரப் பெருமாளின் திருவருளால் மழலைச் செல்வம் வாய்க்கப் பெற்ற பின்னர், இத்தலத்திற்கு வந்து பெருமாளுக்கு வெள்ளிக்கொலுசை சமர்ப்பித்து வணங்கி மகிழ்கிறார்கள்.
இவ்வாலயத்தில் சித்திரையில் மகாசாந்தி ஹோமம் மற்றும் கோடை உற்சவம், வைகாசி மாதத்தில் வஸந்த உற்சவம், ஆனி மாதத்தில் தாமோதரப் பெருமாள் லட்சார்ச்சனை, கருட சேவை, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், ஆடியில் தாயாருக்கு திருவிளக்கு பூஜை, ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தல், கார்த்திகையில் ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை, மார்கழியில் ஆண்டாள் போகி உற்சவம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சென்னையில் இருந்து வேலூா் செல்லும் நெடுஞ்சாலையிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் தாமல் கிராமம் உள்ளது. திருப்புட்குழி என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம்.
- மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.
- மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம்.
தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, ½ கிலோ நெய் ரூ.150, ¼ கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கை வசூலிக்கப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வந்து நெய் காணிக்கை செலுத்த முடியாத பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இணைய வழியில் நெய் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பக்தர்கள் நெய் காணிக்கைக்கான கட்டணம் செலுத்தலாம்.
இந்த தகவல் கோவில் நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
- திருநெல்வேலி காந்திமதியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி-17 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி நள்ளிரவு 1.41 மணி வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: திருவாதிரை காலை 9.08 மணி வரை. பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருநெல்வேலி காந்திமதியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்- உழைப்பு
ரிஷபம்- வரவு
மிதுனம்- ஓய்வு
கடகம்- ஆக்கம்
சிம்மம்- லாபம்
கன்னி- கடமை
துலாம்- செலவு
விருச்சிகம்- தனம்
தனுசு- உயர்வு
மகரம்- உற்சாகம்
கும்பம்- உவகை
மீனம்- ஊக்கம்
- அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுகிறது.
- கயாவிற்கு வந்து சிரார்த்தம் முடிக்க வேண்டும்
கங்கை புனித யாத்திரை செல்பவர்கள் முதலில் பிரயாகை-அடுத்து காசி - மூன்றாவதாக கயாவிற்கு வந்து சிரார்த்தம் முடிக்க வேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும் போது அட்சயவடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது. அக்ரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது.
அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுகிறது. இந்த ஆலமரத்தின் மூலவேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.
கயாவில் சிரார்த்தம் செய்வதில் உள்ள விசேஷம் பிரம்மனின் வரம் பெற்ற கயாசுரன் என்ற அசுரன் தன் உடலைத் தொட்டவர்கள் அனைவரும் சொர்க்கம் சேர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அவரும் வரத்தை தரவே விபரீத பலனாக நல்லவர் கெட்டவர் யாராயிருப்பினும் கயாசுரன் மீது பட்டு சொர்க்கம் அடைந்தனர். அதனால் புண்ணியம் செய்தவர், செய்யாதவர் எல்லாம் ஒன்றாகி விட்டது.
அதனால் மகாவிஷ்ணுவை சரணடைந்து தேவர்கள் வரத்தை திரும்ப பெற கோரினர். விஷ்ணுவும் கயாசுரன் சிரசில் நமது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பிவிட்டார். விஷ்ணு பாதம் பட்டதால் கயாசுரன் புனிதமாகி விஷ்ணுவிடம் வரம் கேட்டார். உலகில் மகனாகப் பிறந்தவன் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும் பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்கு திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.
என் சரீரமாகிய இந்த இடத்திற்கு வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பதவி அடைய வேண்டிய வரம் கேட்டார். அதனால் கயாசுரனின் உடலான கயா புனித தலமாக விளங்குகின்றது. பல்குனி நதி, விஷ்ணு பாதம் ஆகிய இடங்களில் இரண்ய சிரார்த்தம், அட்சய வடத்தில் அன்ன சிரார்த்தமும் செய்ய வேண்டும்.






