என் மலர்tooltip icon

    வழிபாடு

    • தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுவதே தீபாவளி.
    • விஷ்ணுபகவானுக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன்.

    தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுவதே, `தீபாவளி.' மனதில் இருக்கும் தீய எண்ணங்களான இருளை நீக்கும் விதமாகவும், மனதில் தூய்மை என்னும் வெளிச்சம் பரவும் விதமாகவும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம், அதனை அழிப்பதற்காக அவதரிப்பவர் விஷ்ணு பகவான். அவர் ஒருமுறை வராக அவதாரம் எடுத்து, பூமியை கடலுக்கு அடியில் இருந்து மீட்டெடுத்தார். அப்போது அவருக்கும், பூமா தேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை பெற்றெடுத்த பூமாதேவி, `எனது மகனுக்கு மரணம் ஏற்படக்கூடாது. அதற்கான வரத்தை தந்தருள வேண்டும்' என்று விஷ்ணுவிடம் வேண்டினாள்.

    அதற்கு விஷ்ணு, `இறவா வரத்தை யாருக்கும் கொடுக்கக்கூடாது. அதனால் பல துன்பங்கள் ஏற்படும். ஆனால் உன் மகனை யாராலும் கொல்ல முடியாது. அவன் என்னாலேயே வீழ்வான். அப்போது நீயும் என்னுடன் இருப்பாய்' என்றார். அப்படி விஷ்ணு கொடுத்த வரத்தின் காரணமாகவே, கிருஷ்ண அவதாரத்தின் போது, பூமாதேவி சத்யபாமாவாக தோன்றினாள்.

    பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் நரகாசுரன். அவனது தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவர் அங்கு தோன்றினார்.

    அவரிடம், "நான் எந்த நிலையிலும் மரணிக்கக்கூடாது" என்று நரகாசுரன் வரம் கேட்டான். அதற்கு பிரம்மன், `உலகில் தோன்றிய அனைத்தும் மறைவது என்பது தவிர்க்க முடியாதது. ஆகையால் வேறு வரம் கேள்!" என்றார்.

    சிறிது நேரம் மவுனமாக நின்ற நரகாசுரன், "பிரம்மதேவரே! எனது தாயினால்தான் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையாவது தாருங்கள்" என்றான். அவன் கேட்ட வரத்தையே அருளினார், பிரம்மன். `பெற்ற பிள்ளையை, எந்த சூழலிலும் தாய் கொல்லத் துணியமாட்டாள். எனவே தனக்கு மரணமே கிடையாது' என்ற எண்ணமே நரகாசுரனை இவ்வாறு வரம் கேட்க வைத்தது.

    வரத்தை பெற்றுக்கொண்ட நரகாசுரன், மூவுலகத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கி விட்டான். தேவேந்திரன் முதலான தேவர்களை அடிமைபோல் நடத்தினான். மனிதர்களை துன்புறுத்தினான். நரகாசுரன், அசாம் ராஜ்ஜியத்தில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தான். நரகாசுரனின் கொடுமையால் துயரம் அடைந்த தேவர்கள், அந்த கொடுமையில் இருந்து தப்பிக்க கண்ணனின் திருவடிகளில் போய் சரணடைந்தனர். அசுரனை அழித்து தங்களையும், மக்களையும் காத்தருளும்படி கண்ணீர் வடித்தனர்.

    `நல்லது நடக்கும் நம்பிக்கையோடு புறப்படுங்கள்' என்று தேவர்களுக்கு உறுதியளித்த கண்ணன், அந்த வாக்குறுதியை காப்பாற்ற சத்யபாமாவை தேரின் சாரதியாக அமர்த்திக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்யும் நகரமான பிரக்ஜோதிஷபுரம் நோக்கி சென்றார். நகரின் எல்லையை அடைந்த அவர், அந்த நகரின் பாதுகாவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து, அதன் பிறகு நகருக்குள் நுழைந்து போர் தொடங்க அறிகுறியாக சங்கை முழங்கினார்.

    சத்தம் கேட்டு அரண்மனையில் இருந்து வெளிப்பட்ட நரகாசுரன், தனது கோட்டைகள் உடைக்கப்பட்டு துகள்களாக கிடப்பதையும், அதற்கு காரணமான கண்ணனையும் கண்டு கடும் சீற்றம் கொண்டான். தனது படைகளை திரட்டிக்கொண்டு கண்ணனுடன் மூர்க்கத்தனமாக போரிட்டான். ஆனால் சாந்தம் தவழ்ந்த முகத்துடன் அம்புகளை தொடுத்த கண்ணன், நரகாசுரனின் படைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டார்.

    இதனால் மேலும் கடும் கோபத்திற்கு ஆளான நரகாசுரன் ஏவிய அஸ்திரம் ஒன்று தாக்கி கண்ணன் தேரில் சாய்ந்து விட்டார். இல்லை... இல்லை... சாய்ந்தது போல் நடிக்க தொடங்கி விட்டார். அதுவரை தேர் ஓட்டும் சாரதியாக அமைதியாக இருந்த சத்யபாமா, தனது கணவரின் நிலைகண்டு கொதித்தெழுந்தாள். அதற்காகத்தானே கண்ணன் தேரில் மூர்ச்சையானதுபோல் விழுந்தார்.

    கோபத்தில் கண்கள் சிவக்க, அம்பு மழை பொழிந்தாள் சத்யபாமா. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் நரகாசுரன் வீழ்ந்தான். நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவுக்கு தனது மகன் இறந்துவிட்டானே என்ற துயரம் ஏற்பட்டது.

    இருந்தாலும், `மகன் இறந்தது என் ஒருத்திக்குதான் துக்கம். ஆனால் அவனால் பல துன்பங்களை அடைந்த தேவர்களுக்கும், மக்களுக்கும் இது நன்மை அளிப்பது' என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டாள்.

    பின்னர் கண்ணனிடம் இப்படி கூறினாள். `என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள்.

    தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு 3¾ நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். அதிகாலை நேரம் நீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், வெந்நீரில் நீராடலாம் என்று சொல்லப்பட்டது. அன்றைய தினம் மாலையில் வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    • 9-ந்தேதி திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு திருக்கல்யாணம்.
    • 10-ந்தேதி பிரதோஷம்

    7-ந்தேதி (செவ்வாய்)

    * மாயவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவம் ஆரம்பம்.

    * திருநெல்வேலி காந்திமதி தீர்த்தம், இரவு தங்க அம்மன் சப்பரத்தில் தபசு காட்சி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    8-ந்தேதி (புதன்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை தபசுக்கு புறப்படுதல்.

    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் அன்ன வாகனத்தில் பவனி.

    * மாயவரம் கவுரிமாயூரநாதர் வெள்ளிபடிச் சட்டத்தில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    9-ந்தேதி (வியாழன்)

    * சர்வ ஏகாதசி.

    * திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு அதிகாலையில் திருக்கல்யாணம்.

    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சந்திர பிரபையில் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * பிரதோஷம்.

    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் ஊஞ்சல் சேவை.

    * மாயவரம் கவுரிமாயூரநாதர் கற்பக விருட்சத்தில் பவனி வருதல்.

    * சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (சனி)

    * மாத சிவராத்திரி.

    * மாயவரம் கவுரிநாதர் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருஇந்துளூர் பரிமள ரங்கராஜர் கருட வாகனத்தில் வீதி உலா.

    * வீரவநல்லூர் மரகதாம்பிகை ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (ஞாயிறு)

    * தீபாவளி பண்டிகை.

    * போதாயன அமாவாசை.

    * அங்கமங்களம் அன்னபூரணி அம்பாள் லட்டு அலங்காரத்தில் காட்சி.

    * திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் அனுமன் வாகனத்தில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    13-ந்தேதி (திங்கள்)

    * அமாவாசை.

    * கேதார கவுரி விரதம்.

    * சோலைமலை முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் பவனி.

    * மாயவரம் கவுரிமாயூரநாதர் கோவிலில் யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா.

    * கீழ்நோக்கு நாள்

    • இன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 21 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி காலை 7.12 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம்: மகம் மாலை 6.10 மணி வரை. பிறகு பூரம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருநெல்வேலி காந்திமதியம்மன் தீர்த்தம், இரவு தங்கச் சப்பரத்தில் தபசுக் காட்சி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகர் பஞ்சமூர்த்திகளுடன் உற்சவம் ஆரம்பம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- உழைப்பு

    ரிஷபம்- ஆதரவு

    மிதுனம்- கடமை

    கடகம்- லாபம்

    சிம்மம்- செலவு

    கன்னி- வரவு

    துலாம்- சுகம்

    விருச்சிகம்- ஆக்கம்

    தனுசு-விருத்தி

    மகரம்- பயணம்

    கும்பம்- பாசம்

    மீனம்- உயர்வு

    • 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் சிறப்புக்குரியவர்.
    • அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே இல்லை.

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் சிறப்புக்கு உரியவர். அவரின் நகைச்சுவை சொல்லாடலுக்கு மயங்காத ஆளே அந்த காலத்தில் இல்லை.

    தமிழகம் மட்டு மல்லாமல், தமிழர் வாழும் உலக நாடுகள் அனைத்திலும் அருள் மணம் கமழும் ஆன்மிகத் தென்றலைத் தவழவிட்டவர்.

    வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வாரியார் சுவாமிகள் பிறந்தார். 3 வயதில் இருந்தே தம் தந்தையிடம் கல்வி பயின்றார். கல்வியுடன் புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்தார். 18 வயதிலேயே இறையருள் பெற்று தமது சொற்பொழிவுப் பணியைத் தொடங்கினார்.

    சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கும் வாரியார் சுவாமிகள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 150-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். திரைத்துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, முருகப்பெருமானின் புகழைக்கூறும் சில படங்களிலும் நடித்தார்.

    "தேவைக்கு மேலே ஆசைப்படுவதுதான் இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. வாரியார் சுவாமிகள் கடைசி வரை தனது தேவைக்கு மேல் எதையும் வைத்துக்கொண்டவர் இல்லை. எளிமையான, சிக்கன வாழ்வைத்தான் அவர் மேற்கொண்டார். ஒரு பென்சிலைக்கூட கடைசி வரை அவர் பயன்படுத்துவார். தன்னிடம் வந்த எல்லா சொத்துகளையும் பிறருக்கு வாரி வழங்கிய வள்ளல் அவர்.

    ஒருமுறை மேடையில் வாரியார் சுவாமிகள் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்து சிலர் எழுந்து செல்லத்தொடங்கி இருக்கின்றனர். அதைப் பார்த்துவிட்ட சுவாமிகள், தான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு இடைவேளை விட்டு, எனக்கு எதுக்காக `சொல்லின் செல்வர்' பட்டம் கொடுத்தாங்கன்னு, தெரியுமா? பட்டம் வாங்கும்போது புரியலை, இப்போ தெளிவா விளங்குது" என்று கூறியிருக்கிறார்.

    கூட்டம் திருதிருவென விழித்திருக்க சுவாமிகளே தொடர்ந்திருக்கிறார். `நான் பேசிக்கொண்டிருக்கிறேன், அவர்கள் புறப்படுகிறார்களே.

    `நான் சொல்லின், அவர் செல்வர்'. அதைக் குறிப்பிட்டுத்தானே எனக்கு அந்தப்பட்டம் கொடுத்திருக்கிறார்கள் என சுவாமிகள் சொன்னதும் கூட்டம் முழுவதிலும் சிரிப்பலை. நகைச்சுவையை தேவைப்படும் இடங்களில் மட்டும் நறுக்காகப் பயன்படுத்துவதில் வல்லவர், வாரியார் சுவாமிகள்.

    1993-ம் ஆண்டு லண்டன் பயணம் முடித்து தமிழகம் திரும்பும்போது, விமானத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. ஆம். லண்டனிலிருந்து புறப்பட்ட வாரியார் சுவாமிகள், விமானத்தில் வந்து கொண்டிருக்கும்போதே தம்முடைய மூச்சை நிறுத்திக்கொண்டு, முருகப்பெருமானுடன் ஐக்கியமாகிவிட்டார்.

    சிந்தனை, சொல், செயல் என்று அனைத்தையும் முருகப்பெருமானுக்கே அர்ப்பணித்து வாழ்ந்த வாரியார் சுவாமிகள் இன்று இல்லையென்றாலும், அவர் விட்டுச்சென்ற இலக்கியங்களும், பொன்மொழிகளும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன'. அவரது ஆன்மீக சொற்பொழிவு இறையருளை அளித்தது.

    காங்கயேநல்லூரில் குரு பூஜை

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு அவரது சொந்த ஊரான காட்பாடி காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே பிரம்மாண்டமாக கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாளை வாரியார் சுவாமிகளின் நினைவு நாள் என்றாலும் நட்சத்திரம் முறைப்படி இன்று அவரது நினைவு நாள் இங்கு அனுசரிக்கப்பட்டு குருபூஜை நடந்தது. இன்று காலையில் நடை திறக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன.

    பல்வேறு கோவில்களில் உள்ள சாமியார்கள் வேத விற்பனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடந்தது. மூலவர் சன்னதியில் உள்ள சுவாமிகள் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மதியம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 7 மணிக்கு காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமிகள் வீதி உலா நடைபெறுகிறது. இதனையொட்டி கிருபானந்த வாரியாரின் பக்தர்கள் ஏராளமானோர் காங்கேயநல்லூரில் இன்று தரிசனம் செய்தனர்.

    • இங்கு நீராடினால் பஞ்ச மாபாதங்களும் ஒழிந்து நற்கதி பெறுவீர்.
    • இங்குள்ள புஷ்கரணி `குப்த தீர்த்தம்’ என்ற பெயர் கொண்டது.

    `கலியுகத்தில் மக்கள் தான் செய்த பாவங்களில் இருந்து விடுபட, காசிக்கு வந்து என்னில் நீராடி புனிதம் பெறுகிறார்கள். அதனால் காலங்காலமாய் பாவங்களை சுமந்து நான் பாவமூட்டையாக கனத்து விட்டேன். இதற்கென்ன விமோசனம்?' என்று கங்கா தேவி சிவபெருமானிடம் கேட்டாள்.

    `சோழ நாட்டின் காவிரிக்கு தென்கரையில் ஸ்ரீவாஞ்சி என்ற புண்ணியத்தலம் உள்ளது. அங்கு நீ அந்தர்வாகினியாகச் சென்று புஷ்கரணியில் சேர்த்து விடு, உன்பாவமூட்டைகள் களையப்படுவதோடு உலகம் உய்வு பெற மக்கள் இங்கு நீராடினால் பஞ்ச மாபாதங்களும் ஒழிந்து நற்கதி பெறுவீர்' என்று அருளாசி கூறினார் கங்கைமணாளன்.

    தன் ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு ஏனைய 999 கலைகளுடன் ஸ்ரீவாஞ்சியம் வந்தடைகிறாள் கங்கை அன்னை.

    அந்தர்வாகினியாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வாழ்வதால் `குப்த கங்கை' என்ற பெயர் கொண்டாள். இந்த புஷ்கரணியும், `குப்த தீர்த்தம்' என்ற பெயர் கொண்டது.

    கங்கையின் பாவச்சுமைகளையே போக்க வல்ல சக்தி வாய்ந்த ஸ்ரீவாஞ்சிய சேத்திரம், காசியை காட்டிலும் உன்னதமானதாகும். உயிரை மாய்த்திடும் பணியில் ஈடுபட்டிருக்கும் எமதர்மராஜன் தன் பணியின் கொடுமையினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிட, இத்தல ஈசனான வாஞ்சி லிங்கேஸ்வரரை வணங்கினார். அது முதல் எமனை சேத்திர பாலகராக நியமித்து, கோயிலின் அக்னி மூலையில் தனிக்கோயில் ஒன்றை நிர்மாணித்தார் ஈசன்.

    தெற்கு நோக்கிய சந்நிதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, ஆலம் ஏந்தி இடக்காலை மடித்து வலக்காலைத்தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலை வடிவம் உள்ளது.

    யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு, ஆனால், ஸ்ரீ வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.

    இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களை யெல்லாம் கீழே வைத்து விட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார், எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், 'காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது' என முனிவர்கள் கூறுகின்றனர். பிரம்மாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    ஒரு சமயம், திருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் ஊடல் ஏற்பட்டது. தேவி கண்காணாத தொலைவுக்குச் சென்று விடுகிறாள். அவளில்லாமல், திருமால் தவிக்கிறார். நல்லதொரு முடிவைக் கண்டிட மைத்துனன் சிவபெருமானை அணுகுகிறார் திருமால்.

    இந்த நிலை கண்ட கயிலை நாதன் தேவியை அணுகி `உலகெல்லாம் போற்றித் துதிக் கப்படும் தேவி நீ இல்லையென்பதால், பொலிவிழந்து காணப்படுகிறது. தேவி! தயை கூர்ந்து உனது கணவனுடன் வாஞ்சையாக இருந்திட வருவாய்!' என்று இறைஞ்சி கேட்கிறார் மகாதேவன்.

    பிரிவால் வாடி இருந்த அன்னைக்கு இந்த அழைப்பு. ஆறுதலாக இருந்தது. கணவனுடன் சேர்ந்திட மன மகிழ்ந்து ஒப்புக்கொள்கிறாள்.

    லட்சுமி தேவியை வாஞ்சையுடன் அழைத்தமையால், ஈசன் வாஞ்சி நாதேஸ்வரர் ஸ்ரீவாஞ்சி லிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களைப் பெற்றார். இந்த தலத்திற்கு `ஸ்ரீவாஞ்சியம்' என்ற தலப்பெயரும் கிடைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    • அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி, சாமி வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கும் பணி, வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி, பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்வது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    • தூத்துக்குடி பாகம் பிரியாள் அலங்கார பவனி.
    • திருநெல்வேலி காந்திமதியம்மன் ரதோற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 20 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி (முழுவதும்)

    நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 3.35 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருநெல்வேலி காந்திமதியம்மன் ரதோற்சவம். காலை சிவபூஜை செய்தருளல். தூத்துக்குடி பாகம் பிரியாள் அலங்கார பவனி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் உற்சவ முடிவு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுநதரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரருக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-நற்செயல்

    கன்னி-புகழ்

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-கடமை

    தனுசு- சிந்தனை

    மகரம்-அமைதி

    கும்பம்-சுகம்

    மீனம்-இன்பம்

    • சங்கினால் நீர் தெளித்து, புஷ்ப அர்ச்சனை செய்கிறார்கள்.
    • ஒரு கையில் தூக்குவது மிகவும் சிரமம்.

    ஹரித்துவாரில் கங்கைக்கு நடக்கும் தீப ஆராதனை உலகப்புகழ் பெற்றது. இதனைப்போலவே, காசியில் உள்ள கங்கையின் கரையிலும் தினசரி மாலை சுமார் 6.45 மணிக்கு தீப ஆராதனை சடங்குகள் தொடங்கி சுமார் 8 மணிக்கு முடிவடைகிறது.

    தினசரி நடக்கும் இந்த பூஜைகளின் பெரும்பாலான செலவை கங்கா சேவா நிதி என்கிற டிரஸ்ட் ஏற்றுக்கொள்கிறது. பொதுமக்கள் ஒரு நாள் பூஜைக்கு ஒரு சிறிய பங்கான 551 ரூபாயை இந்த குழுவினரிடம் முன்பணமாக கட்டினால் அவர்கள் விரும்பும் தினத்தில் இந்த பூஜை அவர்கள் சார்பில் செய்யப்படும்.

    தினசரி பூஜைகளை நடத்த இத்தகைய உதவி செய்தவர்களை தீப ஆராதனை தொடங்கும் முன்பு படிக்கட்டுகளின் ஓரத்தில் ஒரு சோபா போட்டு உட்காரச்சொல்லி கங்கைக்கு அவர்களைக் கொண்டு பூஜை செய்யச் சொல்கிறார்கள். ஒரு சோபா போட்டு உட்காரச் சொல்லி கங்கைக்கு பால் அபிஷேகம் செய்து, புஷ்ப அபிஷேகம் செய்து, தூப தீபங்கள் காட்டி. இதனோடு மந்திரங்களைச் சொல்லி கங்கைக்கு பூஜை செய்பவர்கள் பாக்கிய சாலிகள். இந்த சடங்கு முடிந்ததும் கங்கைக்கு தீப ஆராதனை சடங்குகள் தொடங்குகின்றன.

    பஜனைப்பாடல்களைப் பாடுபவர்கள், நுமேம மாதா அபிதமார்த்துமேவா என்கிற சுலோகத்துடன் தொடங்குகிறார்கள். ஊதுவத்தி ஏற்றி ஒவ்வொரு திசையாக 4 திசைகளிலும் ஊது பத்தியைக் காண்பிக்கிறார்கள், பின்னர் பஜனைப் பாடல்களும், சங்கின் நாதமும், சேமங்களின் நாதமும் தொடர்ந்து இடை விடாமல் கேட்கின்றன.

    சங்கினால் நீர் தெளித்து, புஷ்ப அர்ச்சனை செய்கிறார்கள். சுற்றி அமர்ந்திருக்கும் ஆயிரக் கணக்கான பேர்களைப் பார்க்கிறோம். இவர்களில் கணிசமான பகுதியினர் மேலைநாட்டினார். பெர்முடா போட்டுக் கொண்டு, கையில் காசி கயிறும், மேல் உடம்பில் காவி நிறத்தில் பனியனும், அதில் ஓம் என்கிற சமஸ்கிருத எழுத்தும், கணபதியின் படம்போட்ட டீ ஷர்ட்டுகளும் அணிந்து பாடப்படும்.

    பஜனைப்பாடல்களுக்கு ஏற்ப தாளம் போட்டு, தன்னை மறந்து அந்த சூழ்நிலையில் லயித்துக் காணப்படுகின்றனர். படித்துறையின் அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் படகுகளில் இருந்து ஏராளமான பேர் வீடியோ எடுக்கிறார்கள்.

    பாடப்படும் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமையாக நம்மைத் தாளம்போட வைக்கிறது. அடுத்ததாக நீளமாக வளைந்த பிடி உள்ள குழியான கின்னத்தில் சாம்பிராணி போட்டு, மண்டியிட்டு, நெஞ்சுக்கு நேராக, தலைமேல் உயர்த்தி 4 திசைகளிலும் காண் பிக்கிறார்கள்.

    சங்கினுள் கங்கை நீரை ஊற்றி தெளித்துவிட்டு அடுத்ததாக அடுக்கடுக்கான தட்டுகளில் அகல்கள் நிறைந்த கோபுர விளக்கை ஒரு கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மிகவும் கனமான விளக்கு அது. ஒரு கையில் தூக்குவது மிகவும் சிரமம். இப்பேர்ப்பட்ட கனமான கோபுர விளக்கை, வலது கையால் தூக்கிக்கொண்டு இடது கையால் மணியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    பாடல்களில் ஒலியும், சங்கின் ஒலியும். சேமங்கலத்தின் ஒலியும், உம்ருவின் ஒலியும் சேர்ந்து ஒரு விதமான சொற்களால் விவரிக்க முடியாத ஒரு விதமான மாயலோகத்தை உண்டாக்குகின்றன.

    இந்த கோபுர விளக்கையும் 4 திசைகளிலும் தூக்கி காண்பிக்கிறார்கள். பிறகு மணிகளை கீழே வைத்துவிட்டு கைகளாலும் தூக்கி தலைக்கு மேலே காண்பிக்கிறார்கள்.

    இறுதியாக மகா ஆரத்தி நடக்கிறது. நாகக் குடையுடன் நீண்ட வளைவான பிடி யுள்ள குழிவான பாத்திரத்தில் நிறைய கற்பூரக்கட்டிகளைப் போட்டு ஏற்றுகிறார்கள்.

    உம்ரு மிகவும் வேகமாக ஒலிக்கிறது. சேமங்கலமும் துரிதகாலத்தில் அந்த இடம் முழுவதும் பொன் நிறத்தில் ஒளி பரவி ஒரு ரம்யமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

    பஜனைப் பாடல்கள் உச்சஸ்தாயில் பாடப்படுகின்றன. பிறகு ஆரத்தியை கீழே வைத்துவிட்டு, மணியடித்து நீர் தெளிக்கிறார்கள்.

    கங்கைக்கு புஷ்பம் அர்ப்பிக்கிறார்கள். நைவேத்தியம் படைக்கிறார்கள். இரவு நேரம் நெருங்கி வருகிறதல்லவா. காலையில் இருந்து ஓடி ஓடி களைத்த மூழ்கி குளிப்பவர்களின் பாவங்களைக் கழுவிய முதிர்ந்த தாயான கங்கைக்கும் சற்று ஓய்வு வேண்டாமா? கங்கையை உறங்க வைக்க தாலாட்டு பாடுகிறார்கள். மிகவும் இனிமையான மயக்கக் கூடிய ராகத்தில் பாடும் பாட்டைக் கேட்க நமக்கும் உறக்கம் வருகிறது.

    கங்கை சுகமாக உறங்க மயில் பீலி விசிறியால் வீசுகிறார்கள். களைத்துப் போன கங்கையின் திருமுகத்தை 5 பேர்களும் தங்கள் கைகளில் இருக்கும் மஞ்சள் நிறப்பட்டுத் துணி யால் இதமாக துடைத்து விடுகிறார்கள். வெண் சாமரம் வீசுகிறார்கள்.

    தாலாட்டுப் பாட்டு மெதுவாக மெதுவாக கங்கையை உறங்க வைத்துவிட்டு முடிவுக்கு வருகிறது. ஓம் சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி! என்று சொல்லிவிட்டு போலோ கங்கா மாதாக்கி ஜெய் என்று சொன்னதும், அனைவரும் கங்கா மாதாக்கீ ஜெய் என்று சொல்கிறார்கள்.

    இதர தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி பிரார்த்தனை செய்துவிட்டு, இறுதியில் நம பார்வதி பதையே என்று சொல்ல, எல்லோரும் ஹரஹர மகாதேவா என்று சொல்லும் சப்தம் எத்தனையோ கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும். இத்துடன் கங்கைக்கு தீப ஆராதனை முடிவடைகிறது. இது முடிவடைந்ததும் பலரும் கங்கை ஆற்றில் கால்களைக் கழுவி, தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்கிறார்கள்.

    • ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.
    • ஆந்தையின் பார்வை திறன் மனிதனுடையதை விட ஐந்து மடங்கு அதிகம்.

    தீபாவளி தினத்தன்று ஸ்ரீ லட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அவளது வாகனமாகிய உல்லூ-ஆந்தையை சிறப்புடன் போற்றுகிறார்கள். வட இந்தியாவில் ஆந்தை ஒரு மங்களகரமான பறவை.

    தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை அவர்கள் மிக மிக சுப சகுனமாக கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும் போது ஆந்தை கண்ணில் பட்டால் போகும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என தீர்மானமாக நம்புகிறார்கள்.

    தீபாவளி தினம் என்றில்லை. சாதாரண நாளிலும் இரவில் அது ஒரு வீட்டில் வந்து அமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

    மேலும், வட இந்தியர்கள் அப்படி தம் வீட்டில் வந்து அமரும் ஆந்தை, குரல் எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் மிகவும் மனச்சஞ்சலம் அடைவார்கள். தீமை சம்பவிக்கலாமோ என அஞ்சுவர்.

    ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே பதுங்கி வசிக்க தொடங்கி, இரவு பகலாக குரல் எழுப்பினால் விரைவில் லட்சுமி தேவி அந்த வீட்டிற்கு வந்து நிரந்தரமாக தங்கப்போகிறாள் என்று பொருள். அல்லது அந்த வீட்டின் எல்லைக்குள் அமையும் கோவிலில் இப்படி நிகழ்ந்தால் அந்த பகுதி வாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படுமாம்.

    நம்மால் பகலில் மட்டுமே எதையும் காண முடியும். மாறாக ஆந்தையால் இரவில் மட்டுமே எதையும் காண முடியும். பெரிய தலை, அகன்ற முகம், கூரிய வளைந்த உறுதியான அலகு, அதை கண்டு எதையும் எளிதில் கொத்தி கிழித்து தின்றுவிட முடியும்.

    பெரிய கண்கள், அதில் ஆழமான கூறிய பார்வை, இரவில் நட்சத்திரங்களிடம் இருந்து கிடைக்கும் லேசான ஒளியும் ஆந்தையின் விழித்திரையில் விழும். ஆந்தையின் பார்வை திறன் மனிதனுடையதை விட ஐந்து மடங்கு அதிகம். அதன் விழிகள் அசைவதில்லை. கண் சிமிட்டாமல் எதையும் எப்போதும் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும்.

    பார்வையை மாற்ற தலையையே இரு பக்கமும் திருப்பும். பார்க்க கம்பீரமாக இருக்கும். உலகெங்கும் ஆந்தையில் ஏறத்தாழ 200 வகைகள். இந்தியாவில் மட்டும் 29 வகைகள். சில இடங்களில் ஆந்தைகள் சுபமானதாகவும், பல இடங்களில் அபசகுணமானதாகவும் மதிக்கப்படுகின்றன. மேல்நாட்டினர் இவற்றை மிகுந்த அறிவுள்ள பறவைகள் என்கின்றனர்.

    யார் ஆந்தையை எப்படி கருதினாலும் சரி, அதுவொரு நன்மை செய்யும் பறவை. தீபாவளியன்று லட்சுமி தேவி பூஜிக்கப்படுவதால், அந்த அன்னையின் வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.

    • அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
    • 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

    தென்னாட்டில் இருந்து காசியாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய்து, அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். கடலில் மூழ்கி மணல் எடுத்து பின்னர் மூதாதையருக்கு சிரார்த்த காரியங்களை செய்து கொள்ள வேண்டும். பிதுர் தர்ப்பணம் முடித்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள மற்ற 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.

    அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரை ஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகை-திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு சென்ற மணலை கரைக்க வேண்டும்.

    காசி சென்று கங்கையில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வேஸ்வரர், அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து பிறகு கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற வேண்டும்.

    பிறகு கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால்தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.

    சம்பிரதாயப்படி இப்படி தான் செய்யவேண்டும். இருந்தாலும் இன்றைய அவசர உலகத்தில் யாராலும் இதை கடைபிடிக்க முடியவில்லை.

    காசி பிரயாகை கயா யாத்திரை செல்ல முடிவு எடுத்த பின்னர், சம்பிரதாயமாக எவ்வாறு செல்வது என்று புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் பார்த்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை அமைத்துக் கொள்ளலாம்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் காசி அமைந்துள்ளது. காசி நகர் புனிதமான கங்கை கரையின் மேற்குக்கரையில் அமைந்துள்ளது. மோசல் சராய் ரெயில் நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வாரணாசி ரெயில்நிலையம் உள்ளது. காசி, வாரணாசி (பனாரஸ்) அனைத்தும் ஒன்று தான்.

    இவ்விரண்டு இடங்களிலும் ரெயில் ஏறி இறங்கலாம். காசி ரெயில் நிலையத்தில் இருந்து விஸ்வநாதர் ஆலயம் 3 கி.மீ. தூரம் தான். வருணாஆசி ஆகிய இரு நதிகளின் சங்கத்தளம் ஆதலால் வாரணாசி என்று பெயர். இது ஜோதிலிங்க முக்தி தரும் தலங்களில் ஒன்று.

    ராமேஸ்வரம், காசி பிரயாகை என்னும் அலகாபாத், கயா முதலியவற்றை தரிசித்தால் இறை அனுபவ மும் மன நிம்மதியும் பாவங்கள் விலகி, தோஷ சாந்தி ஏற்பட்டு நிம்மதி பெறலாம்.

    • சிவபெருமான் கங்கையின் வேதனையைக் கேட்டு இரக்கப்பட்டார்.
    • மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும்.

    பாவம் செய்த அத்தனைபேரும் குளித்து எழுவதால் அவர்கள் செய்த பாவத்தை எல்லாம் என் மீது சுமத்தி விடுகிறார்கள். இந்த பாவங்களை நான் எவ்வளவு காலம் தான் சுமந்து கொண்டிருப்பது? இந்த பாவங்கள் என்னை விட்டு அகல எனக்கு ஏதாவது விமோசனம் சொல்லுங்கள் என்று ஒருமுறை சிவனிடம் கங்கை கேட்டாள்.

    சிவபெருமான் கங்கையின் வேதனையைக் கேட்டு இரக்கப்பட்டார். பிறகு அவர் உன் மீது பாவம் படிகிறது என்பது என்னவோ உண்மைதான். அது உன்னிடம் நிலையாக இருப்பதில்லை. நீ இமயமலையில் இருந்து புதிய நீரைக் கொண்டு வருகிறாய் ஒவ்வொரு விநாடியும் பழைய நீரைக் கொண்டு சென்று கடலிடம் சேர்ப்பித்து விடுகிறாய். அந்த நீரை கடல்ராஜா பெற்றுக் கொள்கின்றான்.

    அவற்றையெல்லாம் சூரிய பகவான் ஆவியாகக் கொண்டு சென்று வானத்திலே மழை நீர் மேகமாக்கி விடுகிறான். அதனால் பாவங்கள் உன்னிடத்திலோ அல்லது கடலிலோ தங்குவதில்லை. அதேபோல சூரிய பகவானிடமும் இருப்பதில்லை. மேகங்கள் மழையால் பூமியிலே பொழிந்து விடுகின்றன. ஆக அங்கேயும் பாவங்கள் தங்குவதில்லை.

    பூமியில் இருந்து கங்கை வழியாக மேல்நோக்கிச் சென்ற பாவங்கள், மீண்டும் பூமாதேவியிடமே வந்து உன்னிடத்தில் கலக்கின்றன. ஆக மக்கள் செய்யும் பாவங்கள் எல்லாம் சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும். இந்த நிலையில் உன்னை முழுவதுமாக, பரிசுத்தமாக புனிதப்படுத்திக் கொள்வது என்பது மகான்களிடம் தான் உள்ளது. மகான்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருப்பவர்கள். எந்த நேரமும் இறைச்சிந்தனையிலேயே இருப்பவர்கள்.

    அத்தகைய மகான்கள் உன்னுடைய கங்கையிலே வந்து நீராடினால் உன்மீது படிந்திருக்கும் எவ்வளவு பெரிய பாவங்களும் தீயில் போட்ட சருகுகள் எப்படி அந்த நொடியிலேயே பொசுங்கி சாம்பலாகி விடுகிறதோ, அதுபோல மகான்களின் பாதங்கள் பட்ட மாத்திரத்தில் உன் மீதுள்ள பாவங்கள் நாசமாகி விடுகின்றன. உன்னை அவர்கள் புனிதப்படுத்தி விடுகின்றனர். எனவே நீ பயப்பட வேண்டாம் என்றார் சிவபெருமான்.

    அதன்படி இன்றும் ஜமதக்னி, கபிலர், பராசர் வேதவியாசர் போன்ற மாமுனிவர்கள் எல்லாம் தவம் செய்து கங்கையை புனிதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கங்கை எப்போதும் ஞானிகளையும், மகான்களையும் தேடிக்கொண்டே இருக்கிறாள். சிலசமயம் அவளே ஞானிகளைத் தேடிப்போய், தன் மீது இருக்கும் பாவத்தை போக்கிக் கொள்கிறாள். பண்டரிநாதன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இப்படியொரு நிகழ்ச்சி நடந்து இருப்பதை அறியலாம்.

    கங்கைக்கரையில் வளர்ந்த நாகரிகம், பூஜாகாரியம், பித்ரு சாந்தம் இன்றுவரை தவறாது நடந்து வருகிறது. இந்த கங்கையை நமக்கு அளித்த பகீரதனுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். முதலில் பகீரதனை வணங்க வேண்டும். பிறகு கங்கையை வணங்குதல் வேண்டும்.

    ×