search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "graveside liturgy"

    • கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்றது.
    • கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது.

    சென்னை:

    கிறிஸ்தவர்கள் சகல ஆத்மாக்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறார்கள். அந்த நாளில் மரித்த முன்னோர்களை நினைவு கூர்ந்து விஷேச பிரார்த்தனை மேற்கொள்வார்கள். முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்தும் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்துவார்கள்.

    அதன்படி கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்கள் கடந்த சில நாட்களாக தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. கல்லறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம் பிரபலமானது. அங்கு பல ஆயிரக்கணக்கான கல்லறைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பாதுகாத்து பராமரித்து வருவதற்கு தனி அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இதேபோல் காசிமேடு கல்லறை தோட்டமும் மிகப்பெரியது. இதுதவிர ஒவ்வொரு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் தனித்தனியாக கல்லறைகள் உள்ளன.

    கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., பெந்தேகோஸ்து, லுத்தரன் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களை சேர்ந்த கிறிஸ்தவர்க ளும் கல்லறை திருநாளான நாளை காலையில் இருந்தே கல்லறைகளுக்கு சென்று முன்னோர்களை நினைவு கூர்ந்து வேண்டுதல் செய்வார்கள். கல்லறை தோட்டங்களில் சிறப்பு வழிபாடும் நாளை நடைபெறும்.

    குடும்பம் குடும்பமாக சென்று பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கல்லறைகளுக்கும் மரியாதை செலுத்துகின்றனர். மதபோதகர்கள் சிறப்பு பிராத்ததனை செய்கிறார்கள்.

    ×