என் மலர்
வழிபாடு
- முக்காலத்தையும் உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- பங்குனி உத்திர திருநாளில் சிவனுக்கு விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம்.
முன்காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்த்தும் விதமாக இறைவன் ஓரிடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்புக்குரிய தலம் அக்னீஸ்வரர் ஆலயம்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இங்கு சென்று இறைவனை வணங்கினால் முக்காலத்தையும் உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்வோம்.
பங்குனி உத்திர விழா
தேவார பாடல் பாடியவர்களில் ஒருவரான சுந்தரர், சிவ பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருக்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளில் விமரிசையாக விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து அமுதூட்டி வணங்கும் நடைமுறையை தவறாமல் பின்பற்றி வந்தார்.
இந்த சேவையில் சுந்தரரின் துணைவியார் பரவை நாச்சியாரம்மாளும் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார். ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் விழா எடுப்பதில் சிக்கல் உண்டானது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சுந்தரர் ஒவ்வொரு ஆலயமாக சென்று வேண்டினார். இறுதியில் திருப்புகலூர் ஆலயத்திற்கு வந்தடைந்தார். அப்போது அங்கு திருப்பணி நடந்து கொண்டிருந்தது. அதனால் ஆலயத்தின் கற்றுப்பகுதியில் மணலும், செங்கற்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
வாஸ்து பரிகார தலம்
நெடுந்தூரம் பயணம் செய்து வந்த காரணத்தினால் சுந்தரருக்கு சோர்வு ஏற்பட்டது. கட்டுமான பணிக்கு குவிக்கப்பட்டிருந்த மணலில் படுத்து ஓய்வெடுத்தார். செங்கற்களை தலையணையாக்கிக் கொண்டார். கண் அயந்தாலும் கூட 'மகேஸ்வர பூஜையை எப்படி நடத்துவது?' என்பதிலேயே அவரது சிந்தனை இருந்தது. அவரது கனவில் "பங்குனி உத்திரத்துக்கு காசு எங்கே?" என்று மனைவி கேட்பதுபோல இருந்தது. சட்டென்று கண் விழித்து பார்த்தார். தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்கக்கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு சுந்தரர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இது இறைவனின் லீலை என்று நினைத்து ஆனந்தப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பின்பு அக்னீஸ்வரர் ஆலயம் வாஸ்து பரிகார தலமாகவும் விளங்க ஆரம்பித்தது. இப்போது கூட புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு, அந்த செங்கற்களை எடுத்து செல்கிறார்கள். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வட கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.
அக்னிதேவன்
இந்த ஆலயத்திற்கு அக்னீஸ்வரர் என்று பெயர் வர ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஒரு சமயம் அக்னி தேவனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அப்போது அக்னி தேவன், வாயு தேவனை பார்த்து, "இந்த உலகத்தில் நானே பெரியவன், என்னை எதிர்த்தால் யாராக இருந்தாலும் பொசுக்கி சாம்பலாக்கி விடுவேன். நான், தாக்கத் தொடங்கினால் மலையானாலும் வெடித்து சிதறும்" என்று தற்பெருமை கொண்டார்.
அதற்கு வாயு தேவன், "அக்னியே! நீ எவ்வளவு சக்தி படைத்தவனாக இருந்தாலும் கூட நீ என் மகன்தான். பஞ்ச பூதங்களின் தோற்றத்தில் என்னிடம் இருந்தே நீ தோன்றினாய். ஆதலால் நீ எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் என் ஆற்றலே உன்னிடம் உள்ளது. ஆதலால் நீ என் ஆற்றலுக்கு முன்னே நிற்காது ஒழிவாயாக" என சாபமிட்டார். தன்னுடைய தந்தையின் சாபத்தை நீக்குவதற்கு என்ன வழி என்று தன் குல குருவாகிய பிரகஸ்பதியிடம் கேட்டார்.
அதற்கு அவரோ, "உன் தந்தையின் சாபம் பொல்லாதது. சோழ நாட்டில் புன்னாக வனம் என்றொரு தலம் இருக்கிறது. அங்கே நீ சென்று நாற்புறமும் அகழியை தோண்டி அங்கு தங்கி இருந்து சிவ நாமம் சொல்லி, சிவ பூஜை செய்து வா. அப்படி செய்தால் எந்த சாபமும் உன்னை அண்டாது" என்று அருளினார்.
அக்னி பகவானும் அவ்வாறே சென்று புன்னாக வனத்தின் நடுவில், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதில் மனம் இரங்கிய சிவபெருமான், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அக்னி தேவனுக்கு காட்சி கொடுத்தார்.
உடனே அக்னிதேவன் சிவபெரு மானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நான் எதைத் தீண்டினாலும். எதை உண்டாலும் என்னுடைய புனிதத் தன்மை கெடாமல் இருக்க வேண்டும். நீங்கள் இத்தலத்திலும் வீற்றிருந்து உலக மக்களுக்கு அருள் வழங்க வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே அக்னிக்கு அருள் புரிந்ததால், இத்தல இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் விளங்குகிறது. மேலும் இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள அகழி, 'பாண தீர்த்தம்' என்றும், 'அக்னி தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.

திருமண தடை நீங்கும்
இத்தல இறைவியின் திருநாமம் கருந்தாள் குழலி என்பதாகும். சாய ரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள். அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்த கால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்களில் இருந்து விடுபடலாம். நிகழ்காலத்தில் நடக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம் என்கிறார்கள்.
சனி தோஷம் விலகும்
சனி தோஷத்தை போக்கும் தலமாகவும் இது அறியப்படுகிறது. இந்த தலத்தில் நள சக்கரவர்த்தியும், சனீஸ்வரனும் ஒரே சன்னிதியில் வீற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். ஒரு சமயம் நள சக்கரவர்த்திக்கு சனி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட திருநள்ளாறு செல்வதற்கு முன்பாக இத்தலத்திற்கு வந்து சனீஸ்வரனை வழிபட்டார். அப்போது இறைவன் "திருநள்ளாற்றில் உன்னைப் பிடித்த சனியை விலக்கிக்கொள்கிறேன்" என அசரீரி வாக்காக கூறினார். அதனால் இங்குள்ள சனீஸ்வரனை 'அனுக்கிரக சனி என்று அழைக்கிறார்கள். இந்த தலத்துக்கு வந்தாலே சனிதோஷம் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து ௩௭ கிலோ மீட்டர், திருவாரூரில் இருந்து 20 கிலோ மீட்டர், மயிலாடுதுறையில் இருந்து 32 கிலோ மீட்டர், நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருப்புகலூரை அடையலாம்.
- இந்தியாவில் புகழ்பெற்ற மலைக்கோவில்கள் ஏராளம்.
- காமாக்யா கோவிலுக்கு சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள்.
இந்தியாவில் புகழ்பெற்ற மலைக்கோவில்கள் ஏராளம் அமைந்துள்ளன. அவற்றுள் வட இந்தியாவில் உயரமான இடங்களில் அமைந்துள்ள கோவில்கள் சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக...
அமர்நாத்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான குடைவரை கோவில் அமர்நாத். இது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் பனிக்கட்டி வடிவில் அமைந்துள்ளது. இந்த பனி லிங்கம்மே முதல் ஆகஸ்டு வரையான காலகட்டங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது. இந்து புராணங்களின்படி இங்கு தான், சிவன் வாழ்வின் ரகசியங்களை பார்வதிதேவிக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இக்குகை 3,888 மீட்டர் (12,756 அடி) உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

காமாக்யா கோவில்
அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் நிலாச்சல் என்ற மலையில் கடல் மட்டத்தில் இருந்து 700 அடி உயரத்தில் இந்த கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள், குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்திய வரலாற்றின் படி இந்த கோவில் 16-ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது. பின்பு 17-ம் நூற்றாண்டில் பீகார் மன்னர் நாராயண் நரசிங்கால் மீண்டும் கட்டப்பட்டது. இங்குள்ள சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர்.

ஜாகேஷ்வர் கோவில்
உத்தரகாண்டின் மலை மாவட்டமான அல்மோராவில் 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜட கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது 'ஜாகேஷ்வர் தாம்' கோவில். இது 125 கோவில்களின் பழமையான தொகுப்பாகும். கி.பி. 7 முதல் கி.பி. 12-ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்திற்குள் கட்டப்பட்ட இந்த கோவில்கள் சிவன், விஷ்ணு, சூரியன் குபேரன், எமன், சண்டி, விநாயகர், சக்தி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
இந்த ஜாகேஷ்வர் கோவில்களை இந்திய தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. சிவ புராணம், லிங்க புராணம், கந்த புராணம் ஆகியவற்றிலும் இந்த கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் ஏராளமான கேதுரு மரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில மரங்களில் சிவபெருமான், பார்வதி, விநாயகர் ஆகியோரின் உருவங்களை காணலாம்.

படால் புவனேசுவர்
இது சுண்ணாம்பு குகைக் கோவிலாகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் பிதவுரகர் மாவட்டத்தில் புவனேசுவர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. அழகான மலையில் அமைந்துள்ள இந்த குகைக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த குகையில் விநாயகப் பெருமானின் தலை, பாறை வடிவில் உள்ளது. அதன்மேல் 108 இதழ்கள் கொண்ட பிரம்மகமலம் உள்ளது. இந்த வாய் வழியாக கருப்பையில் நுழைந்து வாலை அடைபவர் முக்தி அடைவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இது தவிர, குகையில் ஷேஷ்நாக் சிலையும், கருடன் சிலையும் உள்ளது. குகையில் முக்கியத்துவம் வாய்ந்த பல குளங்களும் உள்ளன. உலக அழிவின் ஆழமான ரகசியமும் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை கோவிலுக்குள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பைஜ்நாத் கோவில்
இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் பைஜ்நாத் என்னும் சிறிய நகரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு வைத்தியநாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். கருவறையில் சிவலிங்கம் உள்ளது. பிரதான மண்டபத்தில் உள்ள கல் பலகைகளில் இரண்டு நீண்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 8-ம் நூற்றாண்டில் வணிகர்களான மன்யுகா, அகுகா ஆகியோரால் இந்த கோவில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1905-ம் ஆண்டு. காங்க்ராவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் இந்த வழிபாட்டு தலத்தை சேதப்படுத்தியது. பின்பு தொல்லியல் துறையினர் சீரமைத்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3.274 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் கட்டுமானத்தைக் கண்டு பக்தர்கள் வியப்படைகின்றனர்.

ஹிடிம்பா தேவி கோவில்
இது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மணாலியில் அமைந்துள்ளது. மகாபாரதத்தில் பீமனின் மனைவி ஹிடிம்பா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான குகைக்கோவிலாக அறியப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில் துங்கிரி வான்விஹார் என்ற தேவதாரு காடுகளால் இக்கோவில் சூழப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 1553-ம் ஆண்டு மகாராஜா பகதூர் சிங்கால் கட்டப்பட்டது. மணாலியில் உள்ள மக்கள் ஹிடிம்பா தேவியை தெய்வமாக வழிபடுகின்றனர். நவராத்திரியின் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் துர்கா தேவியை வழிபடுகிறார்கள். ஆனால் மணாலியில் உள்ள மக்கள் ஹிடிம்பா தேவியை வணங்குகிறார்கள். இது கடல் மட்டத்திலிருந்து 3,360 மீட்டர் உயரத்தில் உள்ளது.
- யாகசாலை பணிகள் இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்றது.
- புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு `கோவிந்தா' கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண்ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.
இந்த கும்பாபிஷேக நேரத்தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ரதோற்சவம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-7 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 8.47 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 5.35 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுப முகூர்த்த தினம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ரதோற்சவம். சுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-அன்பு
கடகம்-ஆர்வம்
சிம்மம்-மேன்மை
கன்னி-பண்பு
துலாம்- இன்பம்
விருச்சிகம்-நன்மை
தனுசு- பெருமை
மகரம்-நிம்மதி
கும்பம்-வெற்றி
மீனம்-நிறைவு
- நீண்ட நெடிய நல்வாழ்வு வாழ்வதையே கடவுளும் விரும்புகிறார்.
- ஆரோக்கியம் நிறைந்த வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகின்றோம்.
`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது நம் முன்னோர்களின் பொன்மொழி. ஆனந்தமும், அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்த வாழ்வையே நாம் அனைவரும் விரும்புகின்றோம். அப்படிப்பட்ட இனிமையான, லட்சிய வாழ்வு தான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் கூட. அதற்காகவே நாளும் பல்வேறு புதிய புதிய முயற்சிகளையும் செய்து வருகின்றோம். நாம் நோய்நொடியற்ற, ஆசீர்வாதமான, நீண்ட நெடிய நல்வாழ்வு வாழ்வதையே கடவுளும் விரும்புகிறார்.
இறைமகன் ஆண்டவர் இயேசு தம் ஊழியத் திட்டத்தின்படியே உடல் நலமற்றிருந்தோர் மீது பரிவு கொண்டு அவர்களை குணமாக்கினார். ஆண்டவர் இயேசு தொழுநோயாளி மீது காண்பித்த பரிவிரக்கத்தை தூய மாற்கு நற்செய்தி நூலில் (1:40-45) காணலாம்.
தொழுநோயாளி ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம் வந்து, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். ஆண்டவர் இயேசு அவர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக' என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்கிட அவர் நலமடைந்தார்.
யூதர்கள் பார்வையில் தொழுநோய் என்பது மிகக் கொடிய நோயாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு; முதலாவது, இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை 'கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்' என்று கருதினர்.
"கடவுளின் தாசனாகிய மோசேக்கு விரோதமாகப் பேசியதால், சினம் கொண்ட கடவுள் மிரியாமை வெண்மையான தொழுநோயால் தண்டித்தார்". (எண்.11:10).
"எலிசா இறைவாக்கினரின் பணியாளனாகிய கேகசி, சிரியா மன்னனின் படைத்தலைவன் நாமானிடமிருந்து ஏமாற்றிப்பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொண்ட போது கடவுள் வெண்மையான தொழுநோயால் தண்டித்தார்". (2 அர.5:27)
"அரசன் உசியா ஆண்டவருக்குக் கீழ்படியாமல், தூபபீடத்தின் மேல் தானே தூபம் காட்டி, குருக்கள் மேல் கோபங்கொள்ளவே கடவுள் உசியாவை தொழுநோயால் தண்டித்தார்". (2 குறி.26:19)
எனவே கடவுளின் சாபத்தின், தண்டனையின் வெளிப்பாடே தொழுநோய் என நம்பினர். இரண்டாவது, நியாயப்பிரமாணத்தின்படி இவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டவர்களாயிருந்தனர்.
"ஒரு தொழுநோயாளியை 'அவர் தீட்டுள்ளவர்' என்று குரு அறிவிப்பார். அவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, 'தீட்டு, தீட்டு' எனக் குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர் ஆனபடியினால் அவர் பாளையத்துக்கு வெளியே தனியாக குடியிருக்க வேண்டும்". (லேவி.13:44,45)
மூன்றாவதாக, 'தொழுநோயைக் குணப்படுத்துவது மரித்தவனை எழுப்புவதற்கு ஒப்பாகும்' என யூத ரபிமார் களால் கருதப்பட்டது.
தொழுநோயின் வேதனையோடு வாழ்ந்து வருகின்ற இந்த மனிதர் சமூகத்தின் சட்டங்களைப் பொருட்படுத்தாமல், பின்விளைவுகள் பற்றியோ, பிறர் என்ன சொல்வார்கள் என்பது பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் ஆண்டவர் இயேசுவிடம் வந்து சுகம்பெற வேண்டுமென்று மன்றாடுகிறார். 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று தொழுநோயாளி தன் மாபெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
'முழந்தாள்படியிடுதல்' என்பதன் மூலம் மிகுந்த தாழ்மை யான ஒப்படைப்பைக் காண்பிக்கின்றார். இயல்பாகவே மக்கள் மீது அளவற்ற மனதுருக்கம் கொண்ட ஆண்டவர் இயேசு, தன்னால் முடியுமென்ற ஆழ்ந்த பற்று, உறுதியுடன் வந்த இந்த தொழுநோயாளியின் மீது தன் பேரிரக்கத்தை வெளிப் படுத்துகிறார்.
"இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்; அவர் வல்லமையும் ஞானமும் கொண் டவர்" (யோபு. 36:5).
தொடக்கூடாதென்று யூத சமூகம் ஒதுக்கி வைத்திருந்த தொழு நோயாளி மீது பரிவு கொண்டு தொட்டு சுகமளிக்கின்றார். அவரை ஏற்றுக்கொள்வதோடு, அவரும் சமூகத்தில் மிக முக்கியமானவர் என்பதை மற்றவர்களுக்கு வலியுறுத்துகிறார்.
நீங்களும் கொடிய வியாதியினாலோ, நெடுநாள் பலவீனத் தினாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தின் நிமித்தமாகவோ இந்த சமூகத்தால், உறவினர்களால், நண்பர்களால், சொந்த குடும்பத்தினரால் கூட ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வரலாம். ஆண்டவர் இயேசு கண்ணீர் நிறைந்த உங்கள் வேண்டுதலை கனிவுடன் கேட்டு, பரிவுடன் இரங்கி உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவராக இருக்கிறார்.
ஏனெனில், 'ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை' (திபா.69:33).
எப்போதும் நம்மை சோதித்துக்கொண்டோ, கொடுந்துன்பத்தினால் நாம் வடிக்கின்ற கண்ணீரைப் பார்த்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருக்கிறவர் அல்ல நம் கடவுள். அவர் நம் கண்ணீரைக் காண்கிற கடவுள். நாம் மகிழ்ச்சியான, மன நிறைவும் ஆரோக்கியமும் நிறைந்த நல்வாழ்வு வாழ்வதையே ஆண்டவரும் விரும்புகிறார். அப்படிப்பட்ட ஆசி நிறைந்த நிறைவாழ்வை ஆண்டவரால் நமக்கும் தரமுடியுமென்று உறுதியாக நம்பு வோம். அவர் திருப்பாதத்தில் நம்மை நாம் முழுமையாய், தாழ்மையாய் ஒப்படைப்போம்.
வில்லியம் ஹோரி, 'கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்; கடவுளுக்காக பெரிய காரியங்களை செய்யுங்கள்' என்கிறார்.
- இறைவன் அல்லாஹ் அருள் மிக்கவன்.
- அல்லாஹ் ஈடு இணை இல்லாதவன்.
ஏக இறைவன் அல்லாஹ் அருள் மிக்கவன், தன்னை நாடி வரும் அடியார்களின் குறைகளை தீர்ப்பவன். அவர்களை நல்வழிப்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் நல்வாழ்வு வாழ அருள்புரிபவன். அல்லாஹ் ஈடு இணை இல்லாதவன், எந்த தேவையும் அற்றவன்.
அவன் நாட்டம் இல்லாமல் இந்த உலகில் எதுவும் நடைபெறாது. இத்தனை மகத்துவம் மிக்க இறைவனின் கட்டளைகளை நாம் ஏற்று நடந்தால் நமது வாழ்வு செழிக்கும். இறை கட்டளைக்கு மாறு செய்தால், அவனது கோபத்திற்கு ஆளானால் நம்மை பாதுகாப்பவர்கள் யாரும் இல்லை.
இந்த உலகையும் மனிதர்களையும் இன்னபிற உயிரினங்களையும் படைத்தவன் எவனோ, அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அவை மட்டுமே உண்மையிலும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை சிந்திப்போர் அறியலாம். அதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே அறிவுடைமை. இன்னும் அதுவே நம் வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியவும், அதை பயனுள்ள முறையில் செலவிடவும் உதவும்.
இதை உண்மை சம்பவம் ஒன்றின் மூலம் அறியலாம், வாருங்கள்.....
முன்னொரு காலத்தில் 'ஸமூத்' என்றொரு சமூகத்தைச்சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். இறைவன் அவர் களுக்கு செல்வ வளத்தை வழங்கி இருந்ததால் நல்ல உடல் பலம் மிக்கவர்களாக விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இறைவன் வழங்கிய அருள்களை அனுபவித்த அந்த மக்கள் ஆணவம் கொண்டனர். 'எம்மை யாராலும் அசைக்க முடியாது' என்ற மமதையில் வாழ்ந்தனர். அந்த மக்களுக்கு போதனை செய்வதற்கு இறைவன் "ஸாலிஹ்" என்றொரு நபியை அனுப்பினான்.
அவர் அந்த மக்களுக்குப் போதனை செய்தார். ஆனால், ஆணவமும் அகங்காரமும் கொண்ட அந்த மக்கள் அவரை ஏற்பதாக இல்லை. அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
"இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: 'என் சமூகத்தாரே, அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பாவ மன்னிப்பு தேடுங்கள்;
இன்னும் 'தவ்பா' செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 11:61)
"அதற்கு அவர்கள், 'ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்திலிருக்கிறோம்' என்று கூறினார்கள்". (திருக்குர்ஆன் 11:62)
ஸாலிஹ் நபியை அந்த சமூகத்தில் உள்ள பலவீனமான மக்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர். இதை வைத்து ஆணவக்காரக் கூட்டம் சத்தியத்தை எதிர்த்தது. "நீ ஒரு இறைத்தூதர் தான் என்பதற்கு ஒரு அத்தாட்சி வேண்டும்" என்று கேட்டனர்.
"அதிசயமாக ஒரு கற்பாறையில் இருந்து ஒரு ஒட்டகம் வர வேண்டும்" என்று கேட்டனர்.
ஸாலிஹ் நபி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் கேட்டதைப் போலவே அதிசயமான ஒரு ஒட்டகம் கற்பாறையில் இருந்து வந்தது. இருந்தும் அந்த மக்கள் சத்தியத்தை ஏற்கவில்லை.
ஸாலிஹ் நபி அந்த மக்களைப் பார்த்து ``இது இறைவனின் ஒட்டகம். இதற்கு எந்தத் தீங்கும் செய்து விடாதீர்கள். இந்த ஊரின் கிணற்றில் அதை நீரருந்தவிடுங்கள். பூமியில் அது மேய்ந்து திரியட்டும். அதற்கு தீங்கு செய்தால் இறைவனின் தண்டனை வரும்" என்று எச்சரித்தார்கள்.
இருந்தும் அந்த ஊரில் உள்ள ஒன்பது குழப்பக்காரர்கள் ஒன்று சேர்ந்து அந்த அதிசய ஒட்டகத்தை அறுத்துவிட்டனர். அது மட்டுமின்றி 'நீ எச்சரிக்கை செய்த வேதனையைக் கொண்டு வா பார்க்கலாம்' என்றும் ஸாலிஹ் நபிக்கு சவால் விட்டனர்.
ஸாலிஹ் நபி, 'மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் உண்டு. அதன் பின்னர் நீங்கள் அழிக்கப்படு வீர்கள்' என்று கூறினார்கள். ஸமூத் கூட்டம் தமது கற்குகை வீடுகள் தங்களை பாதுகாக்கும் என்று நம்பினர்.
அந்த மூன்று நாட்களும் நகர்ந்தன. மிகப்பெரும் இடி முழக்கத்தினால் அந்த மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது வீடுகளுக்குள்ளேயே சடலங்களாகக் கிடந்தனர்.
அரேபியாவில் மதாயின் ஸாலிஹ் என்ற பெயரில் இன்றும் கூட அந்த மலைப்பாறை வீடுகள் இருப்பதை நாம் காணலாம். இறை கட்டளையை மீறுபவர்களின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதை இந்த நிகழ்வு மூலம் நாம் அறியலாம். இன்றைய காலக்கட்டத்தில் மக்களில் பலர் பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இறைவன் வழியில் இருந்து விலகிச்செல்கின்றனர். அத்தகையவர்களுக்கு இந்த நிகழ்வு உணர்த்தும் பாடம் தான், இறைக்கட்டளைகளை மதித்திடுவோம், இறையருளை பெற்றிடுவோம்.
- அரசனின் ஆட்சி முறை அனைத்து தரப்பினராலும் பாராட்டும்படி இருந்தது.
- அரசனின் மனமோ நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது.
அந்த நாட்டை ஆட்சி செய்து வந்த அரசனின் ஆட்சி முறை அனைத்து தரப்பினராலும் பாராட்டும்படி இருந்தது. அவனது ஆட்சியில் மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்படவில்லை. வறுமையும் இல்லை. கள்வர் பயமும் மக்களிடத்தில் இல்லை. விவசாயமும், கலைகளும் வளர்ந்தன. அறிஞர் பெருமக்கள் கவுரவிக்கப் பட்டனர். மக்களின் மனதில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது.
ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருந்த அரசனின் மனமோ நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் அவனது மனச்சுமை கூடியதே தவிர, குறைந்தபாடில்லை. இறுதியில் தன் மனக் கவலையை போக்க ஒரு ஊரில் வசித்து வந்த துறவியை நாடிச்சென்றான்.
அரசனை கண்டதும், துறவி அன்புடன் வரவேற்றார். அவனிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அரசனின் மனம் அமைதியின்றி தவிப்பதை புரிந்து கொண்டார். அவனிடமே அதற்கான காரணத்தை விசாரித்தார்.
`மன்னா! அரச காரியங்கள் அனைத்தும் முறையாக, சரியாக நடக்கின்றனவா?" என்று கேட்டார்.'
எந்த குறையுமில்லை. எல்லாம் சரியாக நடக்கிறது சுவாமி" என்றான் அரசன்.
மக்கள் எந்த குறையும் இன்றி, துன்பமும் இன்றி வாழ்கிறார்களா? என்று கேட்டார். துறவி.
`மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை' என்று பதிலளித்தான் அரசன்.
அப்படியானால் உனக்கு என்னதான் கவலை?"என்று திரும்ப கேட்டார் துறவி.
மன்னனோ, நாடே எனக்கு சொந்தமாக இருந்தும், என் மனதில் கொஞ்சம் கூட அமைதி இல்லை என்று சொன்னான்.
அப்படியா! நீ ஒன்று செய். உன்னுடைய நாட்டை எனக்கு கொடுத்து விடு என்றார் துறவி.
இப்படியொரு வார்த்தையை துறவியிடம் இருந்து மன்னன் எதிர்பார்க்கவில்லை. திகைப்படைந்தான். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், "சரி சுவாமி. அப்படியே ஆகட்டும்" என்றான்.
மீண்டும் துறவியிடம் இருந்து கேள்வி வந்தது. "நீ நாட்டை என்னிடம் கொடுத்து விட்டாய். இனி நீ என்ன செய்வாய்?" என்று கேட்டார்.
கொஞ்சம் பொருளை எடுத்துக் கொண்டு எங்காவது போய் வாழ்வேன்" என்றான் அரசன்.
நாடு எனக்கு சொந்தமாக இருக்கும்போது. கஜானாவில் இருக்கும் பொருளும் எனக்குத்தானே சொந்தம். அதை நீ எப்படி எடுப்பாய்?" என்று கேட்டார் துறவி.
சிறிது நேரம் யோசித்த அரசன், தாங்கள் சொல்வது சரிதான். நான் இப்படியே புறப்படுகிறேன். எங்காவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்" என்றான்.
இப்போதும் துறவி, "அந்த வேலையை நீ என்னிடமே செய்யலாமே. என் பிரதிநிதியாக இருந்து, இந்த நாட்டை நீயே கண்காணித்து வா. உன் செலவுக்கு அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து ஊதியம் பெற்றுக்கொள். எனக்கு வசதிப்படும் நேரத்தில் அங்கு வந்து கணக்குகளை சரிபார்த்துக் கொள்கிறேன்" என்றார் துறவி.
மன்னனும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, துறவியின் பிரதிநிதியாக இருந்து நாட்டை வழிநடத்தி வந்தான். இரண்டு ஆண்டுகள் முழுமையாக கடந்து போய்விட்டன.
ஒரு நாள் அரண்மனைக்கு வந்தார் துறவி. அவரை பார்த்ததும் ஓடோடி சென்று வரவேற்றான் அரசன். ஆசனத்தில் அமர்ந்த துறவியிடம், "சுவாமி! கொஞ்சம் இருங்கள். நான் போய் கணக்கு வழக்குகளை கொண்டு வருகிறேன்" என்றான்.
அரசனை கையமர்த்தி அமரும்படி கூறினார் துறவி. பின்னர் "மன்னா! இப்போது உன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.
நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த வித கவலையும் என்னுடைய மனதில் இப்போது இல்லை" என்றான், அரசன்.
அதற்கான காரணம் என்னவென்று உனக்கு தெரியுமா?" என்று கேட்டார் துறவி. அதற்கான பதிலை அரசனால் சொல்ல முடிய வில்லை.
மீண்டும் துறவி கேட்டார். "இதற்கு முன்பு நீ செய்த ஆட்சிக்கும், இந்த இரண்டு வருட கால ஆட்சிக்கும் ஏதாவது மாறுதல் உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "இல்லை" என்ற பதில் அரசனிடம் இருந்து வந்தது.
அதே அரண்மனை, அதே பரிபாலனம். ஆனால் இப்போது உனக்கு நிம்மதி இருக்கிறது. அப்போது ஏன் இல்லை" என்று கேள்வி எழுப்பினார் துறவி.
அதற்கான பதில் அரசனிடம் இல்லை. துறவியே கூறினார்.
இதற்கு முன்பு இது உன்னுடையது என்று நினைத்து நீ ஆட்சி செய்தாய். இப்போது இது வேறு ஒருவருடையது. அவருடைய பிரதிநிதியாக இருப்பதாக கருதிக்கொள்கிறாய். இது என்னுடையது என்று எண்ணியவரை, உன்னுடைய மனம் அமைதி இன்றி இருந்தது. உன்னுடையது அல்ல என்ற எண்ணம் வந்ததும் உன் மன துயரங்கள் விலகிவிட்டன. எந்த பொருளையும் என்னுடையது என்று கருதும்போது தான் இன்ப, துன்பங்கள் நம்மை தாக்குகின்றன" என்றார். துறவி. அரசன் மனம் தெளிந்தான்.
- கார்த்திகை மாதம் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும்.
- சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம்.
சோமவார விரதம் மேற்கொள்ளும் அதேநாளில் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். எனவே சோமவார விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று சங்காபிஷேகத்தை பார்த்து சிவனை தரிசிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நேரம் `திருக்கார்த்திகை' திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

இந்நாளில் சிவனின் உடல் அதிக வெப்பத்தை தாங்கும் விதமாக, அதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு, சங்காபிஷேக பூஜை நடத்தி குளிர்விக்கப்படுகிறது. சங்காபிஷேகம் பார்த்தால் கஷ்டங்கள் விலகும்.
இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். தேவையான அளவுக்கு மழை பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்க மாகும். சங்கு செல்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வார்கள். அப்படி தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வலம்புரி சங்கில் பாலை நிரப்பி, இறை வனை நீராடினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். அதில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால், பிறவி பிணியை அறுக்கலாம் என்று பத்ம புராணம் கூறுகிறது.
ஏழு பிறவிகளில் செய்த வினைகளில் இருந்து மீளலாம் என்று கந்த புராணமும் சொல்கிறது. இதன் காரணமாகவே சங்கை கொண்டு சங்காபிஷேகம் பெரிய பெரிய சிவாலயங்களில் நடத்தப்படுகிறது.
கார்த்திகை சோம வார நாட்களில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் வைப்பார்கள். ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேத பாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள்.
1008 சங்குகளை வைத்து அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு 'சகஸ்தர சங்காபிஷேகம்' என்று பெயர். 108 சங்குகளை கொண்டு அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு `அஷ்டோத்ர சங்காபிஷேகம்' என்று பெயர்.
ஓம்கார சொரூபமான சங்கில் நாம் எந்த வேதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த வேதா மூர்த்தம் தனது அருள் நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும்.
இதன் அடிப்படையிலேயே கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சங்காபிஷேகத்தை பார்ப்பவர்களின் வாழ்வில் அவ்வப்போது எதிர்படும் கஷ்டங்கள் வந்த சுவடு தெரியாமல் விலகிச் செல்லும்.
- திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
- முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.
வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.
மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.
அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.
இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.
கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.
அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.
`அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.
கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.
முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.
ஆலய அம்சங்கள்
இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.
- இன்றுகாலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலா.
- தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலாவும் நடந்தது. இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்த பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடக்கிறது.
தேர் மாடவீதிகளில் அசைந்தாடி வருவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர் மாட வீதிகளில் வலம் வரும். அம்மன் தேர் உடன் சண்டிகேஸ்வரர் தேரும் மாட வீதிகளில் வலம் வரும்.
இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை சார்பில் தேர் திருவிழாவிற்காக அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சி தருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-6 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: தசமி இரவு 10.56 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 7.03 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம்: அமிர்த, சித்தயோகம்.
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா. பழனி ஆண்டவர் பவனி, பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-சிந்தனை
சிம்மம்-ஆதாயம்
கன்னி-ஆர்வம்
துலாம்-சுகம்
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு-போட்டி
மகரம்-உயர்வு
கும்பம்-பெருமை
மீனம்-அன்பு
- திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-5 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: சதயம் இரவு 8.38 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சிக்கல் சிங்கார வேலர் விடையாற்று. திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-அன்பு
கடகம்-உயர்வு
சிம்மம்-வரவு
கன்னி-ஆதரவு
துலாம்- நன்மை
விருச்சிகம்-தெளிவு
தனுசு- ஜெயம்
மகரம்-புகழ்
கும்பம்-நட்பு
மீனம்-சாந்தம்






