என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-4 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி நண்பகல் 1.59 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி நள்ளிரவு 1.39 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் திரிபுர சம்கார லீலை. சங்கரநாயனார்கோவில் சுவாமி பூத வாகனத்தில் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-திடம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-பெருமை

    சிம்மம்-நட்பு

    கன்னி-லாபம்

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்-ஈகை

    தனுசு- புகழ்

    மகரம்-முயற்சி

    கும்பம்-உயர்வு

    மீனம்-வெற்றி

    • பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்.
    • பெண்களுக்கான சிறப்பு ராசிபலன்கள்.

     

    மேஷம்

    இந்த சனிப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாகவே உங்களுக்கு அமையப் போகின்றது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். புராதனக் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்கக் கேட்ட உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும். சுய ஜாதக அடிப்படையில் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் சொந்தங்கள் போற்றும் விதம் வாழ்வமையும்.

     ரிஷபம்

    இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

     மிதுனம்

    இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும். இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகப்பணியாளர்களின் ஒத்துழைப்பும் திருப்தி தரும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

     கடகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாகப் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க அனுசரித்துச் செல்வது உத்தமம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவெடுக்க இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் உருவாகலாம். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

     சிம்மம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அடுத்தடுத்து விரயங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீடு மாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். உடன்பிறப்புகளையும் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.

     கன்னி

    இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்திலேயே அமைகின்றது. குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியிலும். தாய் வழியிலும் உதவிகள் கிடைக்கும். கடன்சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும், வீடு, வாகனம் வாங்க கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

     துலாம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்பட எதிர்மறை கருத்துக்களைத் தவிர்த்து நேர்மறை கருத்துக்களை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது உத்தமம். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப்பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர். பக்கத்து வீட்டாரின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

     விருச்சிகம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக வரவிற்கேற்ற செலவுகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தன்னம்பிக்கையும், தைரியமும், அயராத உழைப்பும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் உறவு பலம்பெற விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். கடன் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சிக்கனத்தைக் கையாள முயற்சி எடுப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

     தனுசு

    இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது. பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கல்யாணக் காரியங்களில் இருந்த தடைகள் அகலும். நட்பால் நல்ல காரியங்கள் நடக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தடுமாற்றங்களும், தடைகளும் அகலும். ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். வீடு வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

     மகரம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவால் பெண்களுக்கு செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் அடுத்தடுத்து நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தருவதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர்.

     கும்பம்

    இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீடு மாற்ற மும், இட மாற்றமும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து செயல் பட்டால் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்படிப்பின் விளைவாகவோ, வேலையின் நிமித்தமாகவோ வெற்றி உண்டு. உடன்பிறந்தவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கலாம். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக் கொள்ளலாம் என்பதால் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் நன் மையை வழங்கும்.

     மீனம்

    இந்த சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியாக உங்களுக்குத் தொடங்குகின்றது. எனவே எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் விரும்பும் வண்ணம் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. நீங்கள் என்னதான் சிறப்பாகப் பணிபுரிந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சனிக்கிழமை விரதமும், சனி பகவான் வழிபாடும் நன்மை தரும்.

    • சிதம்பரம் கோவில் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி.
    • திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி.

    19-ந்தேதி (செவ்வாய்)

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம் அருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள், பகாசுரவத திருக்கோலம்.

    * ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர், முதலமைச்சர் திருக்கோலமாய் காட்சியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்)

    * சிதம்பரம் கோவில் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி.

    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் திரிபுர சம்கார லீலை, இரவு கயிலாய பர்வத வாகனத்தில் வீதி உலா.

    * திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப்பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலம்.

    * மேல்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.

    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், காலையில் வெள்ளி சீவிகையில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முருளிக் கண்ணன் திருக்கோலம்.

    * குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி)

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.

    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி.

    * திருவரங்கம் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    23-ந் தேதி (சனி)

    * வைகுண்ட ஏகாதசி.

    * அனைத்து பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறப்பு.

    * திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் யானை வாகனத்தில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (ஞாயிறு)

    * பிரதோஷம்.

    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், எல்லாம்வல்ல சித்தராய் காட்சியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் திருவாய்மொழி உற்சவ சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்)

    * கிறிஸ்துமஸ் பண்டிகை.

    * ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் ரத உற்சவம்.

    * சங்கரன்கோவில் ஈசன், தந்த பல்லக்கில் பவனி.

    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூங்கோவில் சப்பரம்.

    * மேல்நோக்கு நாள்.

    • தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால்.
    • என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன்

    திருப்பாவை

    பாடல்

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

    நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து

    ஓங்குபெருஞ்செந்நெலோடு கயலுகள

    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

    வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    வாமன அவதாரத்தில், மாவலி சக்கர வர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு, வானளாவ உயர்ந்து தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவன் திருமால். மேன்மைமிக்க அவருடைய பெயரைப் பாடி நீராடினால், நாடு முழுவதும் மாதம் மூன்று முறை மழை பெய்யும்.

    நீர்வளம் பெருகி நெற்பயிர்கள் செழுமையாக உயர்ந்து வளரும். நெற்பயிர்களின் நடுவே கயல்மீன்கள் துள்ளும்.

    அழகிய குவளை மலரில் புள்ளிகளைக் கொண்ட வண்டுகள் தேன் குடித்து மெய் மறந்து உறங்கும். தொழுவத்தில் புகுந்து பால் கறப்போர் பருத்த மடிகளை பற்றிக் கறக்க, வள்ளல் குணம்மிக்க பசுக்கள் குடம் நிறைய பாலைச் சுரந்து குடங்களை நிரப்பும். இப்படிப்பட்ட நீங்காத செல்வத்தை நாம் இந்த பாவை நோன்பால் அடைவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

    அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்

    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

    பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

    புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ

    எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

    சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    முத்தைப்போன்று வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் எல்லோருக்கும் முன்பாகவே எழுந்திருந்து, இறைவனை 'என் அப்பன், ஆனந்தன், அமுதம் போன்றவன், இன்பமே வடிவானவன்' என்று இனிக்க இனிக்க பேசுவாய். அப்படிப்பட்ட நீ, நாங்கள் இத்தனைமுறை அழைத்தும் உறங்கிக் கொண்டிருக்கிறாய். வந்து கதவை திறந்து விடு!

    நீங்கள் எல்லாம் இறைவனுடைய பழைய அடியார்கள். இறைவன் அருகில் இருப்பவர்கள். அதிக பற்றுடையவர்கள். அவன் பால் உரிமை உடைய நீங்கள் என்னுடைய தவறை பெரிதுபடுத்தாமல் மன்னித்து ஏற்றால் இழுக்கு ஆகுமா? நீ இறைவனுடன் பற்றும், அன்பும் கொண்டவள் என்று எல்லோரும் அறிவோம்.

    அழகான இதயத்தை உடையவர்கள் சிவபெருமானை நினைத்து பாடாமல் இருக்க மாட்டார்கள்!. உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இதுவும் தேவைதான்.

    • `டைம் ஸ்லாட்’ தரிசன டோக்கன்கள் ரத்து.
    • டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தானத்தின் பல்வேறு துறை தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதன் பிறகு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு `சொர்க்கவாசல்' திறக்கப்படுகிறது. இந்தச் சொர்க்கவாசல் தரிசனம் ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடைகிறது.

    22-ந்தேதி மதியம் 2 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள 9 மையங்களில் 90 கவுண்ட்டர்கள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இந்த டோக்கன்கள் திருமலையில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் வழங்குவோம்.

    திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ராமச்சந்திரா புஷ்கரணி, இந்திரா மைதானம், ஜீவகோணா உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமாநாயுடு உயர்நிலைப் பள்ளி வளாகம், பைராகிப்பட்டிகை ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், எம்.ஆர்.பள்ளி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    22-ந்தேதி தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட `டைம் ஸ்லாட்' தரிசன (எஸ்.எஸ்.டி.டோக்கன்கள்) டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தரிசன டோக்கன்கள் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருமலையில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருமலையில் குறைந்த எண்ணிக்கையிலான அறைகள் மட்டுமே இருப்பதால், இந்த நாட்களில் பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் நேரில் வரும் புரோட்டோகால் வி.ஐ.பி.பக்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான பிரேக் தரிசனம் வழங்கப்படும். 10 நாட்கள் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டோக்கன் இல்லாதவர்கள் திருமலையை சுற்றி பார்க்கலாம்

    வைகுண்ட துவார தரிசனத்தின் பலன் 10 நாட்கள் நீடிக்கும். எனவே வி.ஐ.பி. பக்தர்கள் மற்றும் பிற பக்தர்கள் 10 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னால் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரலாம். ஆனால், சாமி தரிசனம் செய்ய முடியாது. அவர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தலாம். மேலும் திருமலையில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம்.

    தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சாமி தரிசனத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சனிப்பெயர்ச்சி விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இந்தாண்டு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் ரூ.1,000, ரூ.600 மற்றும் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருநள்ளாறுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காரைக்கால் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், சந்தைதிடல், பஜன்கோ வேளாண் கல்லூரி, செல்லூர் வி.ஐ.பி. நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ஆட்டோ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோவில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.

    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும்.
    • பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம்.

    இந்த நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும். பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள்.

    மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். அவற்றை கொடுமைப்படுத்தினால், பெரும் பாபத்தை அடைந்து, பிறவிகளில் பெருந்துயரை அனுபவிக்க நேரிடும்.

    பஞ்சகவ்யம் (பால்,தயிர், நெய்,சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக `முகூர்த்த சாஸ்திரம்' சொல்கிறது. அதேபோல், நாம் செய்த பாவங்கள் அகல, `கோ' தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

    • நாச்சியார் கோயில் மார்கழி பிரம்மோற்சவம் விசேஷமானது.
    • நான்காம் நாள் கல்கருட சேவையும் அற்புதமானது.

    சோழநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநறையூரில் (நாச்சியார் கோயில்) மார்கழி பிரம்மோற்சவம் விசேஷமானது. அதில் நடைபெறும் நான்காம் நாள் கல்கருட சேவையும் அற்புதமானது. திருநறையூரில் ஐந்து உருவங்களிலும் தாயார் பெருமாளை மணந்து கொள்கிறார். இந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆசாரியர் என்று கருதப்படுகிறார்.

    அதனால்தான் திருமங்கையாழ்வார் மற்ற எந்த திவ்ய தேசங்களுக்கும் இல்லாமல் திருநறையூர் என்கின்ற நாச்சியார் கோயிலுக்கு 110 பாசுரங்களை அருளிச் செய்திருக்கிறார். இந்த திவ்யதேசத்தில் மார்கழி, பங்குனி என இரண்டு முறை கல்கருட சேவை புறப்பாடு உண்டு.

    முதலில் கருடன் புறப்பட்டு தரிசனம் தருவார். அதற்குப் பிறகு, அதன் மேல் பெருமாள் ஆரோகணித்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். `பட்சிராஜன்' என்ற பெயரோடு இத்தலத்தில் உள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒன்பது நாமங்களுடன் காட்சி கொடுக்கிறார்.

    இவர் பெரிய வரப்ரசாதி. ஏழு வாரங்கள் தொடர்ந்து இவரை வேண்டிக் கொண்டு அர்ச்சனை செய்துவந்தால், நினைத்த காரியம் நடக்கும்.

    கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம் முதலியவற்றை வாழைச் சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றி இவருக்கு பூஜை செய்தால், நாகதோஷம் நீங்கும், திருமணத்தடை விலகும், நல்வாழ்வு கிடைக்கும், வியாழக்கிழமை தோறும் பயத்தம் பருப்புடன் வெல்லம், ஏலக்காய் கலந்து செய்யப்படும் அமுதக் கலசம் என்ற பிரத்யேக நைவேத்யம் செய்யப்படுகிறது.

    கல்கருட சேவை புறப்பாட்டில் சந்நதியில் இருந்து கருடனை 4 பேர் பாதம் தாங்கி தூக்கி வருவார்கள். படிக்கட்டுகளில் இருந்து தூக்கி வரப்படும் கருடாழ்வாரை நீண்ட உருட்டு மரங்களில் கம்பி வளையத்திற்குள் செருகப்பட்டு பதினாறுபேர் சுமந்து வருவார்கள்.

    இப்படி 32, பிறகு 64 பேர் கருடனைச் சுமந்து வருவார்கள். கோயிலுக்குத் திரும்பும்பொழுது இதே வரிசையில் சுமப்பவர்கள் குறைந்து கடைசியாக நான்குபேர் சுமந்து சந்நதியை அடைவார்கள். வேறு எங்கும் காணக்கிடைக்காத கல்கருட சேவை இன்று.

    • குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி திருமொழித் திருநாள் தொடக்கம்.
    • ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலமாய்க் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-3 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி மாலை 4.16 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூரட்டாதி பின்னிரவு 3.10 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி. குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி திருமொழித் திருநாள் தொடக்கம். ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலமாய்க் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பகாசுரவதம் திருக்கோலமாய் காட்சி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்த கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தி

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-புகழ்

    கடகம்-அமைதி

    சிம்மம்-பக்தி

    கன்னி-திடம்

    துலாம்- பயணம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- பொறுமை

    மகரம்-உதவி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-வரவு

    • பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர்.
    • பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர்.

    நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில், பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது சுசீந்திரம். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற தாணுமாலயசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில் தொடர்பாக அத்திரி அனுசூயை கதை, இந்திரன் சாப விமோசனம் பெற்ற கதை, அறம் வளர்த்த அம்மன் கதை, கன்னியாகுமரி பகவதிஅம்மன்- தாணு (சிவன்) திருமணம் தடைப்பட்ட கதை என 4 கதைகள் உள்ளன. முதல் இரண்டு கதைகளும் புராணம் தொடர்புடையவை.

    அறம் வளர்த்த அம்மன் கதை வட்டார சார்புடையது. திருமணம் தடைப்பட்ட கதை வாய்மொழியாக பேசப்படுகிறது. குழந்தைகளாக மாறினர்

    பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர். வனவாசத்தின்போது ராமன் இவரது ஆசிரமத்தில் தங்கிச் சென்றார் என ராமாயணம் கூறுகிறது.

    அத்திரியின் மனைவி அனுசூயை. இருவருக்கும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லை. இதனால் பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர். அப்போது இறைவன் அவர்களிடம் `யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். பொதிகை மலையின் அருகே ஞானகான வனம் உள்ளது. அங்கே நீங்கள் தவம் செய்து பலன் பெறுங்கள்' என்றார்.

    அதன்படி இருவரும் ஞானகான வனம் சென்றனர். அந்த சமயத்தில் அத்திரி, இந்திரனின் வேண்டுகோளால் இந்திரலோகம் சென்றுவிட்டார். இதனால் அனுசூயை தனியே இருந்து தவம் செய்தாள். அவளைச் சோதிக்க விரும்பிய மும்மூர்த்திகள் (சிவன், விஷ்ணு, பிரம்மா) ஞானகான வனத்தில் மழையில்லாமல் ஆக்கினர். வனம் வறண்டது. தவம் செய்யக்கூட நீர் இல்லை. அனுசூயை கணவனின் கமண்டல நீரை ஞானகான வனத்தில் தெளித்தாள். மழை பெய்தது.

    இப்படி இருக்கும்போது மும்மூர்த்திகள் அனுசூயையைச் சோதிக்க எண்ணி யாசகர்களாக அவரிடம் வந்தனர். அவள் வீட்டின் முன் நின்று யாசகம் கேட்டனர்.அவள் அவர்களை உபசரித்து வரவேற்றாள்.

    அப்போது மும்மூர்த்திகள் அவளிடம், 'நீ ஆடையின்றி உணவு படைக்க வேண்டும்' என கட்டளை இட்டனர். இதை கேட்ட அனுசூயை தன் கற்பின் மகிமையால் அவர்களை குழந்தைகளாக்கி தொட்டிலில் கிடத்தினாள். இதையறிந்த மூன்று தேவிகளும் ஞானகான வனம் வந்து தவம் இருந்து அவர்களை மீட்டனர்.

    அத்திரி-அனுசூயை வேண்டுகோள்படி மும்மூர்த்திகளும் சந்திரன், தாத்ரேய முனிவர், துர்வாசர் ஆகியோராகப் பிறந்தனர். இத்தகைய சிறப்புடைய தலம் சுசீந்திரம்.

    சுசீந்திரம்

    இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதையும் இந்த கோவில் தலபுராணத்துடன் தொடர்புடையது. அது கவுதமர், அகலிகை, இந்திரன் தொடர்பான கதை. ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது. அகலிகைமேல் ஆசைப்பட்டதால் இந்திரன் சாபம் பெற்றான். சாபவிமோசனம் பெற ஞானகான வனத்திற்கு இந்திரன் வந்தான். அவனது தேர் ஞானகான வனத்தின் ஒருபுறம் நின்றது. அதுதான் இன்று தேரூர் என அழைக்கப்படுகிறது. ஐராவதம் யானை மருந்துவாழ்மலைக்கு வந்தது. அது தன் கொம்பால் தரையைக் கீறி ஆற்றை உண்டாக்கியது. அதுதான் கோட்டார் எனப்பட்டது.

    இந்திரன் தவம் பலித்தது. தாணுமாலயன் அவன் முன் தோன்றினான். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற இடமே சுசீந்திரம் ஆயிற்று.

    சுசீந்திரம் கோவில் இறைவியாக கருதப்படும் அறம்வளர்த்த அம்மனின் கதை ஒன்று உண்டு. சுசீந்திரம் ஊரை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னி தாணுமாலயன் கோவிலுக்கு வந்தாள். கோவிலை சுற்றி வந்தபோது அவள் மாயமாக மறைந்தாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். இந்த நிகழ்ச்சி கி.பி. 1444-ம் ஆண்டு நடந்ததாக புராணக்கதை கூறுகிறது. இதன் நினைவாக இந்த கோவிலில் மாசிமாதம் திருக்கல்யாணம் நடக்கிறது.

    கன்னியாகுமரி அம்மனை போலவே, மகிஷாசூரனை வதம் செய்து சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, 'முன்னுதித்த நங்கை அம்மன்' எனும் திருநாமத்தில் கோவில் கொண்டிருக்கிறாள். ரம்பன் எனும் அசுரன் அக்னி பகவானை வழிபட்டு, நினைத்த உருவத்தை நொடியில் எடுக்கும் வரம் பெற்றிருந்தான்.

    ஒருநாள் காட்டில் அழகிய பெண் எருமையைக் கண்டான். அந்த பெண் எருமை, தன் முற்பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தினால் எருமையாகியிருந்தாள். ரம்பனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அவன் ஆண் எருமையாக மாறி அந்த பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான்.

    அந்த உறவால் எருமை தலையுடன் மகிஷாசூரன் பிறந்தான். அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அந்த தவத்தின் மூலமாக 'பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் வேண்டும்' என வரம் பெற்றான்.

    முன்னுதித்த நங்கை

    அந்த ஆணவத்தின் காரணமாக பூலோகம் முழுவதையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதையடுத்து மகிஷாசூரனை அழிக்க சிவபெருமான், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார். அதனுள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வெண்மை நிற ஒளி சென்று கலந்தது. கூடவே பிரம்மாவிடமிருந்து தோன்றிய சிவப்பு நிற ஒளியும் ஒன்றாகி கலந்தன. அந்த ஒளிப்பிழம்புகளில் இருந்து அன்னை பராசக்தி உதித்தாள்.

    பின்னர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு மகிஷாசூரனை பராசக்தி வதம் செய்தாள். வெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து ஆனந்தமாய் நிலை கொண்ட திருத்தலமே, சுசீந்திரம்.

    கவுதமரின் சாபம் நீங்க இந்திரன், 300 தேவகன்னியரை சாட்சியாக வைத்து வேள்வி செய்து பூஜித்தபோது அவர்கள் முன்பாக ஜோதி ரூபியாக உதித்து நின்று திருக்காட்சி அளித்தாள், அன்னை. இதனால் அவள் 'முன்னுதித்த நங்கை' என்று அழைக்கப்பட்டாள்.

    முன்பு ஒரு முறை சுசீந்திரம் பகுதியில் ஆசிரமம் அமைத்த அத்திரி முனிவர், தனது மனைவி அனுசூயைதேவியுடன் அங்கு வசித்து வந்தார். அனுசூயை தேவியின் பொருட்டு மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் அவதரித்தனர். அவர்களுக்கு பாலூட்டி, தொட்டிலில் இட்டு சீராட்டினாள் அனுசூயைதேவி.

    மும்மூர்த்திகளையும் தேடி சுசீந்திரம் வந்தனர் முப்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும். ஆனால் மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் மாறியதால், தேவியர்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

    அப்போது நாரத முனிவர் வழிகாட்ட, மூன்று தேவியர்களும் அருகில் இருந்த முன்னுதித்த நங்கை அம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் நோன்பு இருந்து, முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டு வந்தனர்.

    அப்போது அன்னை ஆதிபராசக்தி, முப்பெரும் தேவியரின் முன் உதித்து அருள்பாலித்ததோடு, குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் அடையாளம் காட்டினாள்.

    சுசி பீடம்

    51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் பிருகு பீடமாக போற்றப்படுகிறது. இதனை `சுசி பீடம்' என்றும் கூறுகிறார்கள். இந்த தலத்தில் அம்பிகையை `நாராயணி' என்றும், `அகோர தேவி' என்றும் போற்றுகிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்திரன் விரும்பிய இடமும், அம்பிகையின் பிருகுபீடம் என்று அழைக்கப்படும் சுசி பீடமும் தான் சுசீந்திரம் என்ற பெயர் உருவாக காரணமாக சொல்லப்படுகிறது.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள்.
    • திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், விமான பதக்கம், முத்துமாலை, பவள மாலை, காசு மாலை, ரத்தின அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
    • திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மார்கழி மாத பிறப்பு மற்றும் விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

     வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாமி தாிசனம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை விழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில், அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்களில் மார்கழி மாத திருப்பாவை விழா நடந்தது.

    ஆரணி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை வளர்பிறை பஞ்சமி விழாவையொட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேத்துப்பட்டு இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடுங்குளிரிலும் அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கினர். இஞ்சிமேடு பெரிய மலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ஆவணியாபுரம் சிம்மமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தேசூர் ஆதிகேசவபெருமாள் கோவில், சேத்துப்பட்டு வரத சஞ்சீவிராய பெருமாள் கோவில், பெரிய கொழப்பலூர் காரக தூஷணபெருமாள் கோவில், திருக்குராயீஸ்வரர், திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு போளூர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போளூர் மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில், வெண்மணியில் அமைந்துள்ள விநாயகர் கோவில், குன்னத்தூரில் அமைந்துள்ள பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×