என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை.
    • வாயிலார் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-5 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி காலை 11.53 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.20 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் காலையில் வெள்ளச்சிவிகை, மாலையில் சிவபூஜை செய்தருளல். தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் பவனி. வாயிலார் நாயனார் குருபூஜை. திருகுற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் வீதி உலா. ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-நன்மை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-ஆக்கம்

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- வாழ்வு

    மகரம்-பரிவு

    கும்பம்-பாசம்

    மீனம்-பக்தி

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
    • விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று (புதன்கிழமை) மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு (கடந்த சனிப்பெயர்ச்சி 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.) சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்தநிலையில், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு, தரிசனத்திற்கான ஆன்லைன் மற்றும் கட்டண டிக்கெட், இலவச தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

    குறிப்பாக, நளன் குளம் வாயிலிலிருந்து இலவச தரிசனம் வரிசை தொடங்குகிறது. வி.ஐ.பி. தரிசனம், யானை மண்டபம் வழியாகவும், 1,000 ரூபாய் டிக்கெட் கோவில் ராஜகோபுரம் வழியாகவும், 600 டிக்கெட் தெற்கு வீதி வழியாகவும், 300 டிக்கெட் மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர் வாயில் வழியாகவும் செல்கிறது. கோவிலைச்சுற்றி ஆன்லைன் மற்றும் கட்டண தரிசனம் டிக்கெட் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில், புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடும் வருவது போல் ஏற்பாடு செய்யப்படுள்ளது. வழி தவறினாலும், கியூ ஆர் கோடு மூலம் உரிய இடத்திற்கு சென்று சேரலாம்.

    வாகன நிறுத்துமிடத்திலிருந்து பக்தர்களை இலவச பஸ் மூலம் கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக 26 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. பஸ் நிறுத்தம் இடத்திலும் 120-க்கு மேற்பட்ட நகரும் கழிவறை வசதிகளும், 212-க்கு மேற்பட்ட நிரந்தர கழிவறை வசதிகள் உள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லும் இடத்தில் தண்ணீர், பிஸ்கட், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முக்கியமாக, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணிவரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 162 கண்காணிப்பு கேமராக்கள், மெகா எல்.இ.டி. டிவி வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரியிலிருந்து 1500 போலீசாரும், உள்ளூர் போலீசார் சுமார் 300 பேரும், இதுதவிர அப்த மித்ரா, தன்னார்வலர்களும் என சுமார் 2000 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், விநாயாக மிஷன் மற்றும் மீனாட்சி மிஷன் தனியார் மருத்துவமனை குழு ஏற்பாடு செய்துள்ளோம்.

    அதேபோல், இவர்கள் நளன் குளத்தில் குளிக்க, சிறப்பு ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிபெயர்ச்சிக்கு வருகை தந்து, மிக எளிமையாக தரிசனம் செய்து செல்லலாம்.

    • தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா.
    • 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வந்த குமாரகோவில் வேளிமலை முருகனுக்கு நாகர்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    • சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, சிறப்பு அபிஷேகம்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூரில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில்இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    இதற்காக நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சணை தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, நவக்கிரஹ பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து 5.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவில் முன்பு உள்ள சுரபி நதியில் நீராடி தங்கள் பரிகார பூஜைகளை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    திருக்கனூர்:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அட்சதை கலசம் திருக்கனூர் கடைவீதியில் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    ஊர்வலத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கலசத்தை கையில் ஏந்தியவாறு திருக்கனூர் கடை வீதியில் இருந்து கே.ஆர்.பாளையம் செங்கேணி அம்மன் கோவில் வரை நடந்து சென்றார்.

    அவருடன் ராமர், லட்சுமணன், சீதை வேடம் அணிந்த பக்தர்களும் பஜனை பாடல்களை பாடியவாறு மேளதாளத்துடன் சென்றனர்.

    பின்னர் கோவிலில் வைத்து அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • கும்ப ராசிக்கு இன்று மாலை சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
    • 21 தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடலாம்.

    புதுச்சேரி:

    சனிப் பெயர்ச்சி இன்று நடக்கிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். சனி (வக்ர) பெயர்ச்சியை யொட்டி எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபடலாம் என்று பிரபல ஆற்காடு பஞ்சாங்க ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கூறியிருப்பதாவது:-

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை சரியாக 4.05 மணிக்கு சனி (வக்ர) பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் சனி பகவானை வழிபடலாம். கருப்பு துணியில் எள் கட்டி நல்லெண்ணைய் ஊற்றி 2 தீபமும், 19 அகல் தீபமும் ஏற்றி மொத்தம் 21 தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடலாம்.

    எள் உருண்டை, எள் சாதம், நெய்வேத்தியமாக செய்து வழிபடலாம். இந்த வழிபாடு செய்வதன் மூலம் பரிகார பலன்கள் கிடைக்கும்.

    மேஷம், மிதுனம், துலாம், தனுசு, மகர ராசிக்கு சனி பெயர்ச்சி நல்ல பலன்களை தருகிறது. ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம், மீனம் ராசிகளுக்கு சுமாரான பலன்களை தருகிறது.

    மேஷ ராசியில் 11-ம் இடத்தில் லாபஸ்தான மானத்தில் சனி இருக்கிறார். இதனால் அவர்களுக்கு தொட்டதெல்லாம் லாபகரமாக இருக்கும்.

    ரிஷப ராசியில் 10-ம் இடத்தில் ஜீவனாஸ்தானத்துக்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிகாரர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படும்.

    மிதுன ராசியில் 9-ம் இடத்தில் பாக்கியஸ்தானத்துக்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர் களுக்கு நல்லது நடக்கும். மரியாதை உயரும்.

    கடக ராசியில் அஷ்டம சனியான 8-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிகாரர்கள் கோர்ட்டு, வழக்கு என்று அலைய வேண்டியதிருக்கும்.

    சிம்ம ராசியில் கண்டக சனியான 7-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இவர்களுக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

    கன்னி ராசியில் 6-ம் இடத்தில் ரோக ருன சப்தகுரு ஸ்தானத்திற்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர்கள் பழைய கடன்களை வட்டியுடன் செலுத்தும் நிலை ஏற்படும்.

    துலாம் ராசியில் 5-ம் இடமான பூர்வீக புண்ணிய ஸ்தானத்திற்கு சனி பகவான் செல்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு திருமண ஏற்பாடு மும்முரமாக நடை பெறும். பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்.

    விருச்சிக ராசியில் அர்த்தாஷ்டம சனி 4-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் வரும்.

    தனுசு ராசியில் 3-ம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் பழைய சொத்தை நல்ல விலைக்கு விற்கலாம். புதிய சொத்தை குறைந்த விலைக்கு வாங்கும் நிலை உருவாகலாம்.

    மகர ராசிக்கு 2-ம் இடமான பாதக சனி. காதல் திருமணம் கைகூடும், மருத்துவச் செலவு ஏற்படும்.

    கும்ப ராசிக்கு 1-ம் இடமான ஜென்ம சனி. பணத்துக்கு கஷ்டம், பொருளாதார பாதிப்பு ஏற்படும்.

    மீன ராசிக்கு 12-ம் இடமான விரய சனி. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நஷ்டம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாள்.
    • வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளல்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லட்சுமி பதக்கம், மகர கர்ண பத்ரம், புஜகீர்த்தி, ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, காசு மாலை, 2 வட முத்து மாலை, ஒட்டியாணம், அடுக்கு பதக்கங்கள்உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.
    • 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் தூய்மைப் பணி தொடங்கி 10 மணி வரை 4 மணி நேரம் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அதிகாலையில் சுவாமிக்கு திருப்பாவை நிவேதனம் செய்த பின், சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.

    அதன்பின் ஆனந்த நிலையத்தில் தொடங்கி, தங்க வாசல் வரை மற்றும் உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை உபகரணங்கள் உள்ளிட்டவை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது.

    பிறகு, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி, மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அர்ச்சகர்கள், சுவாமி சிலையை மறைத்திருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்ற 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி இதுகுறித்து கூறுகையில் பல நூறு ஆண்டுகளாக ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கருவறை மற்றும் உபகோவில்களின் சுவர்களில் எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் வாசனை திரவியங்கள் தூவப்பட்டுள்ளன என்றார்.

    • அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே!
    • ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே!

    திருப்பாவை

    பாடல்

    ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

    ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்

    பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்

    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

    தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    கடல் போன்ற நிலையில் அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே! மழைக்கு அதிபதியாகிய மன்னனே! நீ மழையை பெய்விக்காமல் ஒளிந்து கொள்ளாதே! நீ கடலில் புகுந்து, நீரை முகர்ந்து கொண்டு வானத்தை அடைய வேண்டும். இந்த உலகின் மூல முதல்வனாகிய திருமாலின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறவேண்டும். பெருமையும், எழிலும் பொருந்திய நாராயணனின் கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்ன வேண்டும். அவனது மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கு ஒலிப்பதை போல. இடி இடிக்க வேண்டும். பெருமாளின் சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல உலக மக்கள் யாவரும் வாழும் படியாகவும் நாங்கள் மகிழ்ந்து நீராடுவதற்கு தாமதம் செய்யாமல் மழையை பொழியச் செய்யவேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

    வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

    எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

    விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

    உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

    எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே! இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை? கிளிபோல பேசும் நம் தோழியர் அனைவரும் வந்துவிட் டார்களா? என்று கேட்கிறாய். இறைவனைப் பாட வந்தவர்களை கணக்கிட்டு சொல்கிறோம். யார் வரவில்லை என்பதை எண்ணிப்பார்த்து சொல்கிறோம் அதற்கு நேரம் ஆகும். அதுவரைக்கும் நீ தூங்கிக்கொண்டு காலத்தை வீணாக்காதே. தேவருக்கு ஒப்பற்ற மருந்தாகவும், வேதங் களின் சிறந்த பொருளாகவும் கண்ணுக்கு இனிமையாகக் காட்சிதரும் சிவனை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கிறோம். ஆகை யால் நீயே வந்து எண்ணிக்கொள். எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் நீ போய் தூங்கு!

    • பலன் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு.
    • நீதி, நியாயம் கிடைக்கும் படியாகச் செய்வார்.

    சனி பகவான், சுபஸ்ரீசோபகிருது வருடம் மார்கழி மாதம் நாலாம் தேதி (20.12.2023) புதன்கிழமை, மாலை 5.23 மணி அளவில் அவிட்டம் நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் சொந்த வீடான கும்பராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார். அங்கு, 6.3.2026 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார். "கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்" என்ற பழமொழிக்கேற்ப, நீதிமானும் நியாயவானுமான சனி பகவான், தனது ஆட்சி வீடான கும்பராசியில் சஞ்சரிக்கும் பொழுது, நீதி, நியாயம் கிடைக்கும் படியாகச் செய்வார்.

    பலன் பெறும் ராசிகள்:
    மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு.

    எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்:

    கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஜன.17-ந்தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. ஆனால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த மாதம் 20-ந்தேதிதான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

    • இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும்.
    • சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக வருகின்றது.

    `மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்' என்பது பழமொழி, அப்படிப்பட்ட சனி பகவான் இப்பொழுது பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குச் செல்கின்றார்.

    கும்பச் சனியின் சஞ்சாரம்!

    சனி பகவான் சுபஸ்ரீ சோபகிருது வருடம் மார்கழி மாதம் 4-ந் தேதி (20.12.2023) புதன்கிழமை அன்று மாலை 5.23 மணி யளவில் அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் தன் சொந்த வீடான கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகின்றார். அங்கு 6.3.2026 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார்.

    அவரது அருட்பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பதிகின்றது. இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும். இந்த சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக வருகின்றது.

    சிம்ம ராசிக்கு கண்டகச் சனியாக வருகின்றது. விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வருகின்றது. மகர ராசிக்கு குடும்பச் சனியாகவும், கும்ப ராசிக்கு ஜென்மச் சனியாகவும் வருகின்றது. மீன ராசிக்கு ஏழரைச் சனியாக வருகின்றது.

    இதுவரை அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த மிதுன ராசிக்கு அது விலகுகின்றது. கடக ராசிக்கு கண்டகச்சனி விலகுகின்றது.

    துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், தனுசு ராசிக்கு ஏழரைச் சனியும் விலகுகின்றது.

    சனி விலகும் ராசிக்காரர்கள், நள சக்கரவர்த்திக்கு சனி விலகி அருள் கொடுத்த தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது நல்லது.

    குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகள்!

    இந்த சனியின் சஞ்சார காலத்தில் 2 முறை குருப்பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. 1.5.2024-ல் ரிஷப ராசியிலும், 11.5.2025-ல் மிதுன ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இடையில் 8.10.2025 முதல் 20.12.2025 வரை வக்ர இயக்கத்தில் கடக ராசிக்குச் செல்கின்றார்.

    26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். இடையில் இரண்டு முறை கும்ப ராசியில் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு 12 ராசிகளுக்கும் பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    வளர்ச்சி தரும் வழிபாடு!

    உங்கள் ஊருக்கு அருகிலுள்ள சிவாலயங்களில் இருக்கும் சனி பகவானையும், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சானூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்அருகில் உள்ள பெருச்சிக் கோவில், நல்லிப்பட்டி, திருக்கொடியலூர் போன்ற சிறப்பு தலங்களில் உள்ள சனி பகவானையும் வழிபடலாம்.

    சனிபகவான் ஆட்டிவைக்கும் கிரகம் அல்ல, அரவணைக்கும் கிரகம் என்பதை அறிந்து கொள் ளுங்கள். நல்லதே நடக்கும்.

    • கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்’ என்பது பழமொழி.
    • பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    * `கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்' என்பது பழமொழி. `நீதிமான்' என்றும், `நியாயவான்' என்றும், போற்றப்படும் சனி தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் பொழுது நீதி, நியாயம் கிடைக்க போராட்டங்கள் அதிகரிக்கும். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.

    * அரசியல் சதுரங்கத்தில் கட்சித்தாவல்கள் அதிரடியாய் அமையும். அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் களம் சவாலான போட்டியாக அமையும். ஆயினும் முடிவில் மக்கள் விரும்பியபடி நல்லாட்சி அமையும்.

    * முற்காலத்தில் `குடங்களை' சுமந்த பெண்கள், இக்காலத்தில் 'மகுடங்களை' சுமக்க, கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியின் பலத்தால் வழிபிறக்கும். அரசியல் களத்தில் பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    * தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை நினைக்க இயலாத அளவிற்கு உயரும். திடீர், திடீரென விலை குறைவது போல் தோன்றி மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

    * பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை சனிப்பெயர்ச்சி காலத்திலிருந்து இறங்கு முகமாக இருக்கும். ஆயினும் ஜூன் மாதத்திற்கு மேல் விலை ஏறிக்கொண்டே சென்று உச்சத்தைத் தொடும்.

    * சனியின் வக்ர காலத்திலும், செவ் வாய், சனியோடு சம்பந்தப்படும் நேரத்திலும் கடல் கொந்தளிப்பு, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். உலக நாடுகளுக்குள் பிரச்சினைகள் தலைதூக்கும்.

    * புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையினைச் சேர்ந்தவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    * செந்நிறக் காய்கறிகள், வெள்ளைநிற உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும்.

    ×