என் மலர்
வழிபாடு
- பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
- இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது.
திருப்பாவை
பாடல்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே! மார்கழி மாத பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
திருப்பாற்கடலில் பாம்பணையில் துயில்கின்ற பரந்தாமனின் திருவடியை அன்புடன் பாட வேண்டும். நெய், பால் ஆகியவற்றை உண்ணக்கூடாது. அதிகாலையில் எழுந்து நீராடி, கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலில் பூ சூடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பிற ரைப்பற்றி கோள் சொல்லக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது. செய்யத்தகாத காரியங்களையும் செய்யக்கூடாது.
யோகிகளுக்கும், தவசிகளுக்கும் நாமாக சென்று தர்மம் செய்ய வேண்டும். பிறருக்கு கொடுக்கும் போது செருக்கு இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், பரமன் அடிபணிந்து செய்ய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்
நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்
விளக்கம்
சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது, யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடி வான இறைவன் மீது பாசம் வைத்திருப்பதாகச் சொல்வாய். அதே அன்பை இந்த மலர் படுக்கையின் மீது எப்போது வைத்தாய். பெண்களே!
நீங்கள் கேலியாக பேசி விளையாடுவதற்கு இது ஏற்ற இடம் அல்ல. தேவர்கள் சிவபெருமானை வாழ்த்துவதும், வணங்குவதுமாக உள்ளனர். இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது. ஒளிமயமான ஈசன் தனது திருவடிகளை இம்மண்ணில் படும்படி அருள்புரிய வந்துள்ளார். சிவலோகத்தில் வீற்றிருக்கும் அவர், தில்லை சிதம்பரத்தில் நம்மைக் காக்க எழுந்தருளியுள்ளார். நாம் சென்று வழிபடுவோம்.
- 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
- பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது
சிதம்பரம்:
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடை பெறுகிறது. வருகிற 27-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
28-ந் தேதி (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவ சங்கர தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.
- சஷ்டி திதி சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
- 21 நூல்களை திரியாகத் திரித்து தீபம் ஏற்றினர்.
தொன்றுதொட்டு நகரத்தார் பிள்ளையார் நோன்பு நோற்று வருகின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய அடையாளங்களோடு சில விரதங்களையும் விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அப்படி குறிப்பிடத்தக்க ஒரு நோன்புதான் நகரத்தாரால் கொண்டாடப்படும்
பிள்ளையார் நோன்பு. கார்த்திகை மாதம் சஷ்டி திதி சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் இந்த நோன்பு தொடங்கி, சதய நட்சத்திரம் அன்று நிறைவுபெறும்.
இது குறித்த செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு. நகரத்தார்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகச் செல்வர்களாக விளங்கிய காலம். வியாபார விஷயமாக வணிகம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கார்த்திகை தீபம் அன்று அவர்களுடைய கப்பல் கடலில் புயலில் மாட்டிக் கொண்டது. தங்கள் குலதெய்வமான மரகதப் பிள்ளையாரை நினைத்து வேண்டினர். சூறாவளியில் சிக்கினாலும் எந்த ஆபத்தும் இன்றி கப்பல் அங்குமிங்கும் தடுமாறி 21 நாட்கள் கழித்து ஒரு தீவின் கரையை அடைந்தது.
அன்றைய தினம் சஷ்டி திதி சதய நட்சத்திரம். அங்கேயே அவர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் கொண்டு வந்திருந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலிய பொருள்களைக் கலந்து மாவுப் பிள்ளையார் பிடித்து, 21 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு ஒரு நூலாக 21 நூல்களை திரியாகத் திரித்து தீபம் ஏற்றினர்.
அதன் பிறகு சொந்த ஊர் அடைந்து தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி பிள்ளையாருக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு, இருபத்தோராம் நாள் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் கூடும் நாளில் ஆவாரம்பூ அரிசிமாவு பிள்ளையாரும் புத்தம்புது வேஷ்டியில் நூலில் செய்யப்பட்ட திரியையும் கொண்டு விளக்கு ஏற்றி வணங்குவார்கள். பிறகு, அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வார்கள்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ேகாவிலில் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி.
- ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்பெருமாள் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-2 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 6.36 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.26 மணி வரை பிறகு சதயம் நாளை விடியற்காலை 4.47 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சஷ்டி விரதம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்பெருமாள் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சி. சிதம்பரம், திருநெல்வேலி, திருக்குற்றாலம் கோவில்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமிக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம் அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஊக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-பெருமை
கடகம்-புகழ்
சிம்மம்-நிம்மதி
கன்னி-உற்சாகம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-பரிவு
தனுசு- சாந்தம்
மகரம்-போட்டி
கும்பம்-தேர்ச்சி
மீனம்-மேன்மை
- 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா.
- சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அன்னதானம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான சிறப்பு முகாம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அன்னதானம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
பக்தர்கள் இ-சேவை, இ-நவகிரக சாந்தி, இ-காணிக்கை சேவைகளை www.thirunallarutemple. என்ற ஆன்லைன் மூலம் பெறலாம். ரூ.1000, ரூ.600 ரூ.300 என்ற கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500-ம், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300-ம், சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300-ம் சிறப்பு ஒரு மண்டல (48நாட்கள்) அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ரூ.2400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே இது மார்கழி மாதம்.
- ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி
பாடல்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களே! ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே ! இது மார்கழி மாதம். முழு நிலவு ஒளி வீசும் நாள். இந்த நாளில் நீராடச்செல்வோம். கூர்மையான வேல் உள்ளவனும், பகைவர்களுக்கு கொடுமை செய்பவனும் ஆன நந்தகோபனின் குமாரன், அழகு நிறைந்த கண்களைக் கொண்ட யசோதை பிராட்டிக்கு இளம் சிங்கம் போன்றவன், கார்மேகம் போன்ற உடல் அமைந்தவன், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று பிரகாசிக்கும் முகத்தையும் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், நாம் விரும்பிய வரத்தைத் தருவான். அதனால் உலகத்தார் அனைவரும் புகழும் வண்ணம் நீராடி மகிழ்வோம்; வாருங்கள்!
திருவெம்பாவை
பாடல்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்
கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்
விளக்கம்
ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி! தொடக்கமும் முடிவும் இல்லாதவன் சிவபெருமான். ஒளிவடிவான அவனைப்பாடினோம். அந்த பாடலைக் கேட்ட பின்பும் நீ உறங்குகின்றாயே. உன்னுடைய காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? சிலம்பணிந்த இறைவனின் திருப்பாதங்களை நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்ட ஒருத்தி, அவன் நினைவில் விம்மி விம்மி அழுது தன்னை மறந்தாள். பின்னர் மலர் படுக்கையில் இருந்து புரண்டு எழுந்து, எதுவும் செய்யமுடியாமல் விழுந்து விட்டாள். இறைவனிடம் அவள் கொண்ட பக்தி நிலை அப்படியானது. ஆனால் எங்கள் தோழியாகிய நீயோ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். இனியாவது எழுந்து வந்து இறைவனைப் பாடுவாய்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வ ரூபம், 4 மணிக்கு உதயமார் த்தாண்ட அபிஷேகம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு மேல் உச்சிக்கால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தேர் கிரிவீதி உலா, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8-8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
முக்கிய விழா நாட்களான வருகிற 27-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில் அதிகலை 2 மணிக்கும், ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு மற்றும் ஜனவரி 15-ந் தேதி (திங்கள்கிழமை) தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்நடைபெறுகிறது.
- தென்மேற்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும்.
- எதிர்மறை ஆற்றல் அனைத்தையுமே இந்த இரண்டு காய்களும் ஈர்த்துக்கொள்ளும்.
தெய்வ அம்சம் வீட்டில் நிறைந்திருக்க வீட்டிற்குள் எதிர்மறை சக்திகளான பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை, ஆவி சேட்டைகள் நீங்கி தெய்வ சக்திகள் வீட்டில் குடியேற வெள்ளை பூசணிக்காய் ஒன்று, மஞ்சள் பூசணிக்காய் ஒன்று வாங்கி மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதில் வெள்ளை பூசணிக்காயை உங்களுடைய வீட்டின் வடகிழக்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். மஞ்சள் பூசணிக்காயை தென்மேற்கு மூலையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும்.


ஆமாவாசை அன்று இந்த இரண்டு காய்களையும் வாங்கி உங்கள் வீட்டில் வைக்கலாம். அல்லது ஞாயிற்றுக்கிழமை வாங்கி வைக்கலாம். நீங்கள் வைத்த நாட்களில் இருந்து 30 நாட்கள் உங்களுடைய வீட்டில் வைத்திருந்து அதன்பிறகு 30 நாட்கள் கழித்து இந்த காய்களை எடுத்து யாருடைய கண்களுக்கும் தெரியாமல் ஒரு பையில் வைத்து காட்டுப்பகுதிக்கு சென்று போட்டுவிட வேண்டும்.
இவ்வாறு செய்வதன்மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தையுமே இந்த இரண்டு காய்களும் ஈர்த்துக்கொள்ளும். உங்கள் வீடு சுத்தப்படுத்தப்படும். கெட்ட சக்திகள், கெட்ட எண்ணங்கள் வெளியேறிய பிறகு நல்ல சக்திகள், இறைசக்திகள் வீட்டினுள் குடியேறும்
- 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறும்.
- 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டு சேவை நடந்து வருகிறது. தை மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறுகிறது.
இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுப்ரபாத சேவைக்கு பதிலாக அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 14-ந்தேதி 30 நாட்கள் திருப்பாவை சேவை நடைபெறுகிறது. ஜனவரி 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிப்பொழிவு நிலவு வருகிறது.
இதனால் மலைப்பாதையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே மலைப் பாதையில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் நேற்று 59,734 பேர் தரிசனம் செய்தனர். 30,654 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள் இன்று.
- வெண்பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளான நேற்று `கண்ணனெனும் கருந் தெய்வம்' பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து சாய் கிரீடம், ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், சந்திரகலா, பருத்திப்பூ பதக்கம், நகரி, ஆறு வட முத்துமாலை, காசு மாலை, அடுக்கு வைர மகர கண்டிகை பதக்கங்கள், வைர ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து பின் சேவையாக, புஜ கீர்த்தி, வெண்பட்டு உடுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
- அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-1 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி இரவு 8.55 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: திருவோணம் காலை 7.57 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாரா யணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆவுடை யார்கோவில் மாணிக்க வாசகர் உற்சவம் ஆரம்பம். வெள்ளிச் சிவிகையில் புறப்பாடு. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ள ஸ்ரீ அனுமருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நம்பிக்கை
ரிஷபம்-சாதனை
மிதுனம்-தனம்
கடகம்-பக்தி
சிம்மம்-நிறைவு
கன்னி-உண்மை
துலாம்- சுபம்
விருச்சிகம்-உதவி
தனுசு- பாராட்டு
மகரம்-சுகம்
கும்பம்-பரிசு
மீனம்-சாதனை
- மார்கழி மாதம் `தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.
மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது.
மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதம் `தனுர் மாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார். சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான், வேறெந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது.
மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.
மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிப்பது இறைவனின் அருளைத் தரும்.






