என் மலர்
வழிபாடு
- ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.
- திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 20 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி நண்பகல் 1.24 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: விசாகம் பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு அனுஷம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் தெப்போற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-பயிற்சி
கடகம்-சிறப்பு
சிம்மம்-கட்டுப்பாடு
கன்னி-நலம்
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-நன்மை
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-பண்பு
கும்பம்-பாசம்
மீனம்-கவனம்
- 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது.
- 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆலய 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. இன்று முதல் தினமும் மாலையில் திருப்பலி நடக்கிறது. வருகிற 8, 9-ந்தேதிகளில் அருட்தந்தை ஸ்டீபன் தச்சீல் சிறப்பு நற்செய்தி கூட்டமும், குணமளிக்கும் வழிபாடும் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி நற்கருணை பவனி நடைபெறுகிறது. 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
இந்த 2 நாட்களிலும் மாபெரும் தேர் பவனியானது ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ரெயில்வே மைதானத்தில் ஒன்று கூடி திருப்பலியோடு நிறைவுபெறும். 11-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எரியும் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியவாறு பவனியாக வந்து பங்கேற்கிறார்கள்.
- அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில்.
- கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும்.
- 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.
களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும் 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். ஜோதிடரிடம் பெரியோர்கள் மிக ஆர்வமாக கேட்கும் கேள்விகள் மனைவி எவ்வாறு அந்நியமா, எந்தத் திசை, கருப்பா சிவப்பா என்று தான் கேட்பார்கள் இந்த களத்திரகாரகன் சுக்கிரனும் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இவரில் ஒருவர் நிறத்துக்கு எதுவோ அதுதான் மனைவி இருக்கும் ஒரு ஆக அமையும் மூல நூல்கள் அனைத்திலும் திருமணம் செய்ய வேண்டிய பையனுக்கு அமையக்கூடிய பெண் எந்தத் திசையில் அமைவாள் என்று கூறப்பட்டுள்ளது பெண்ணிற்கு மணமகன் திசை குறித்து குறிப்பு இல்லை. இது ஓரளவுக்கு ஒத்துவரும்.
களத்ரதோஷம்:
1. திருமணம் காலதாமதமாக நடைபெறும் .
2.திருமணம் செய்ய பல ஆண் பெண் ஜாதகங்களைப் பார்த்து அவர்களிடம் அலைந்து பின்னர் நிச்சயமாகும்.
3. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போகும் அமைப்பு
4. கூடிவரும் திருமணம் நின்று போகும் அளவிற்கு அல்லது மன வருத்தம். களத்ர தோஷம் ஏற்படக் காரணம்:
1.லக்னத்திற்கு ஏழில் சனி செவ்வாய் சேர்ந்திருத்தல்.
2. லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் நீசம் பெற்று இருந்து சுக்ர தசை நடத்தல்.
3. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் , 6,8,12 -ல் தனித்து இருந்தாலும் , பாபக்கிரஹங்களுடன் சேர்ந்து இருப்பதும்.
4. லக்னத்தில் இருந்து 2,7,9 ல் பாபக் கிரஹங்கள் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
5. லக்னத்தில் இருந்து 7 – க்குடையவன் தசை நடப்பது.
6 . ஏழில் சனி , செவ் , ராகு அல்லது கேது சேர்ந்திருப்பது.
7. நான்காம் இடத்தில் சனி , செவ்வாய் , ராகு அல்லது கேது இருத்தல்.
களத்ர தோஷ பரிகாரங்கள் :
`பெற்ற தாயாருக்கு உடுத்த துணி இல்லை. பையன் காசியில் சென்று வஸ்திர தானம் செய்தானாம். இது பழமொழி. பெற்ற தாயாருக்கு எதுவும் கொடுக்காமல், கோடி கோடியாகத் தானம் செய்தாலும் பலன்தருமா? இதுபோல், திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் உள்ளூர் தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியவைகளை வணங்காமல், தோஷ பரிகாரம் என்று திருமணஞ்சேரி, காளகஸ்தி, சூரியநானார் கோவில் என்று வழிபாடுகள் நடத்துவதில் என்ன பிரயோசனம்?
எனவே குலதெய்வம் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் சுமங்கிலியாக இறந்த முன்னோர்களுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி சுமங்கிலி பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ மஹாலெஷ்மி, கௌரி பூஜைகள் செய்யலாம்.
தீர்க்க சுமங்கலிகளாக வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நல்ல மஞ்சள் குங்குமம் கொடுத்து அவர்கள் ஆசிர்வாதம் பெற வேண்டும். எந்தெந்த கிரஹத்தால் களத்ர தோஷம் ஏற்பட்டுள்ளதோ அந்த கிரஹங்களுக்குரிய கடவுளை வழங்க வேண்டும்.
- கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது.
- காசிக்கு நிகரான கோவில்
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை கோலா கலமாக நடைபெற்றது. கடந்த மாதம்(ஜனவரி) 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 29-ந்தேதி முதல்கால வேள்வி பூஜை தொடங்கியது.
நேற்று 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும் ,காலை 10 மணிக்கு அவினாசியப்பருக்கு துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடந்தது. மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடந்தது.
சிகர நிகழ்ச்சியான இன்று 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறை விண்ணப்பம், பேரொளி ஆராதனை நடந்தது.காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அவிநாசியப்பர், பெருங்கருணாம்பிகை அம்மன், சுப்பிரமணிய பெருமான் ஆகிய மூலவர் சன்னதி, விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.பின்னர் டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய, தென்னாடுடைய சிவனே போற்றி, சிவ... சிவ... என எழுப்பிய கோஷம் விண்ணை அதிரச் செய்தது.
கும்பாபிஷேகத்தை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீகாமாட்சிதாச சுவாமிகள், தென்சேரிமலை முத்து சிவராம சுவாமிகள் ஆகியோர் நடத்தினர்.
இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
- குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்’ என்கிறோம்.
- ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.
குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்' என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் `பித்ரு தோஷம்', இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.
பரிகாரம்:
ராமேஸ்வரம் சென்று `திலஹோமம்' செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், `திருவெண்காடு' சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப் பரிகாரம்.

திலஹோமம்:
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் `திலஹோமம்' செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.
தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள்:
* பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.
* ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை. மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.
* ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
* கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தோஷம் வர பல்வேறு காரணம்:
* கருச்சிதைவு
* பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.
* இளையதாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.
* தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.
* ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் வரும்.
* துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்ரு தோஷம்:
இவர்களது குடும்பம் ஜோதிடரீதியில் எவ்வளவு அதிர்ஷ்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும், அந்த பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருகளும், பித்ரு தேவதைகளும் தடை செய்வார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மை உடையது.
பரிகாரம்
`சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம்' செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.
பித்ரு பூஜை செய்ய சிறந்த தலம்
சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள், 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், ஒரு வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டுக்கு கொடுக்க `பித்ரு தோஷம்' நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் `பித்ரு தோஷம்' முழுமையாக நீங்கும்.
உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஊரில் தான் சில பறவைகளைக் காண முடியும். ஆனால் காக்கை உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரே பறவை இனமாகும். இந்த காக்கையை `சனிபகவானின்' வாகனமாக மட்டும் பார்க்காமல் நமது முன்னோர்களின் வடிவான பித்ருகளாகவும் வழிபட்டுள்ளனர்.
நமது முன்னோர் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் உழல்பவர்கள். தினமும் காக்கைக்கு ஒரு பிடி உணவு அளித்தால் அவர்களின் பிரச்சினையின் தீவிரமும் பிடி அளவு வீதம் கரையத் தொடங்குவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த பழக்கம் மெதுவாக மறைந்து தற்போது அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் மட்டும் காக்கைக்கு உணவிடுகிறோம். முன்னோர் பழக்கத்தை நாமும் பின்பற்றினால் பிரச்சினைகளின் தீவிரத்தில் இருந்து விடுபடுவோம்.
- ஜோதிடத்தில் நவகிரகங்களின் பங்கு முக்கியமானது.
- கிரகங்களின் தாக்கத்தை வைத்தே வாழ்க்கை கணிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு சிறப்பு உடையது. ஜோதிடத்தில், நவகிரகங்களின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஒரு ஜாதகத்தில் கிரகங்களின் தாக்கத்தை வைத்தே அவர்களின் வாழ்க்கை கணிக்கப்படுகிறது. கிரகங்கள் செயலிழந்தால் தோஷங்கள் வரும் என கூறப்படுகிறது. கிரக தோஷங்களை நீக்கும் வழிபாட்டுத் தலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூரியன்:- சூரியனார் கோவில், இளையான்குடிக்கு அருகே உள்ள சேத்தூர்.
சந்திரன்:- திங்களூர், மானாமதுரை, திருவக்கரை, திருவிடைமருதூர், திருந்துதேவன்குடி.
செவ்வாய்:- வைத்தீஸ்வரன் கோவில், தேவிப்பட்டிணம் அருகில் உள்ள பெருவயல்.
புதன்:- திருவெண்காடு, மதுரை, மேலநெட்டூர், காசி.
வியாழன்:- திருச்செந்தூர், ஆலங்குடி, தென்குடித்திட்டை, மேலப்பெருங்கரை, மாயூரம், திருத்தேவூர், சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடி, வாழகுருநாதன்.
சுக்ரன்:- கஞ்சனூர், திருவாடானை, திருவேற்காடு, திருவரங்கம், திருவெள்ளியங்குடி.
சனி:- திருநள்ளாறு, திருப்புகலூர், எமனேசுவரம், திருக்கொள்ளிக்காடு.
ராகு:- திருநாகேஸ்வரம், காஞ்சியில் உள்ள திருவூரகம், நயினார்கோயில், திருக்காளத்தி.
கேது:- கீழப்பெரும்பள்ளம், ராமேசுவரம் கொழுவூர்.
- நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
- சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரட்சை.
பிரதோஷம் அன்று நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேசுவரரின் இருகொம்பு களுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான காலம் பிரதோஷ நேரமாகும். இது `தினப் பிரதோஷம்' எனப்படும். சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம்.

பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் அதற்கு அவ்வளவு மகிமை உண்டு. பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். இந்த நாளில் நாம் சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
அதோடு நாம் எந்த அபிஷேகப் பொருளைக் கொண்டு நந்திகேசுவரருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்களும் சொல்லப்பட்டுள்ளது. அவற்றையும் பார்ப்போம்.
பால் - நோய்தீரும்
தயிர் - வளம் பல உண்டாகும்
தேன் - இனிய சரீரம் கிட்டும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
நெய் - முக்தி பேறு கிட்டும்
இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
எண்ணெய் - சுகவாழ்வு கிட்டும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
- `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே’
- சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர்.
சுந்தர மூர்த்தி நாயனார், சிவதலம் தோறும் தரிசனம் செய்து கொண்டு வந்தார். அப்படி அவர் இந்தத் திருத்தலம் வந்தபோது, ஒரு தெருவில் இரண்டு விதமான சத்தம் கேட்டு ஒரு கணம் நின்றார். அங்கே ஒரு வீட்டில் 7 வயது சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடந்தது. அதன் எதிர் வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டது. இதுபற்றி சுந்தரர் விசாரித்தபோது, 'பூணூல் அணிவிக்கும் சிறுவனின் வயதை கொண்ட எதிர் வீட்டு சிறுவனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலை விழுங்கிவிட்டதாகவும், அந்தச் சிறுவன் இருந்தால் இன்று பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அந்த வீட்டினர் அழுவதாகவும் தெரியவந்தது.
சுந்தரர் அந்தச் சிறுவனின் பெற்றோருடைய துன்பத்தை துடைக்க எண்ணினார். அவர்களை சிறுவன் விழுங்கப்பட்ட முதலை வாழும் குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே..' என்று சிவனிடம் மனமுருக வேண்டிப் பாடினார், சுந்தரர். அப்போது நீருக்குள் இருந்து வெளிப்பட்ட முதலை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுங்கிய சிறுவனை உயிருடன் உமிழ்ந்தது.
அதுவும் அந்தச் சிறுவன் தற்போதைய பருவத்தில் இருந்தது மேலும் ஆச்சரியமான ஒன்று. அந்த சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர். இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் நினைத்து மெய்சிலிர்த்தனர். பின்னர் சிறுவனை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனுக்கும் உபநயனம் செய்துவைத்தனர்.
- தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 256-வது தலமாகும்.
- தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார்.
மாணிக்கவாசகரால் `அரிய பொருளே அவிநாசி அப்பா..' என்று போற்றப்பட்டவர், அவிநாசியில் உள்ள அவிநாசியப்பர். இந்தத் திருத்தலம் பழமையும், பெருமையும் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 256-வது தலமாகும். சிவபெருமான் ஆடிய அக்னி தாண்டவத்தின்போது வெளிப்பட்ட வெம்மைக்குப் பயந்து, தேவர்கள் அனைவரும் ஓரிடத்தில் புகுந்து ஒளிந்துகொண்டனர். தேவர்கள் புகுந்து ஒளிந்த காரணத்தால் `புக்கொளியூர்' (புக்கு+ஒளியூர்) என்று பெயர் பெற்றது. புராண காலத்தில் இவ்வூரின் பெயர் திருப்பொக்குளியூர்.
கோவிலின் பெயர் அவிநாசி. `விநாசி' என்றால் `பெருங்கேடு' என்று பொருள். `அவிநாசி' என்பதற்கு `பெருங்கேட்டை போக்கவல்லது' என்று பொருள். காலப்போக்கில் கோவிலை ஒட்டி வளர்ச்சியடைந்த நகரம், கோவிலின் பெயரால் `அவிநாசி' என்றே பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தின் தெற்கே சற்று தொலைவில் இன்றும் `திருப்பொக்குளியூர்' என்ற சிற்றூர் இருக்கிறது. இந்த ஆலய இறைவன், தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். காசியில் உள்ள சுயம்பு மூர்த்தியான விசுவநாதரின், வேர் ஒன்று தென் திசை நோக்கி ஓடி வந்து, நுனியில் கிளைத்து முளைத்தெழுந்த கொழுந்தாக, அவிநாசியில் உள்ள சுயம்பு மூர்த்தி அறியப்படுகிறார். இதனால் இந்த மூர்த்தி, `வாரணாசி கொழுந்து' என்று போற்றப்படுகிறார்.
எனவே இத்தல இறைவன், காசி விசுவநாதருக்கு இணையான மூர்த்தியாகும். அவிநாசியில் அருள்வதால், `அவிநாசியப்பர்', `அவிநாசிநாதர்' என்றும், பிரம்மதேவன் பூஜித்ததால் `பிரம்மபுரீசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தல அம்பாளின் திருநாமம், `கருணாம்பிகை' என்பதாகும். இவர் `பெருங்கருணாம்பிகை', `கருணாலய செல்வி', `திருக்காமக்கோட்டை நாச்சியார்' போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவ்வாலய தலவிருட்சம் பாதிரி மரம், ஆதி காலத்தில் மா மரம் தல விருட்சமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு காசி தீர்த்தம், கங்கை தீர்த்தம், தெப்பக்குளம், நாககன்னி தீர்த்தம், தாமரைக் குளம், ஐராவதத்துறை ஆகியவை தீர்த்தங்களாக இருக்கின்றன.

ஆலய அமைப்பு
இத்திருக்கோவில் நல்லாற்றின் கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தின் முன்னால் 70 அடி உயரம் கொண்ட ஒரே கல்லாலான தீப ஸ்தம்பம் உள்ளது. அதற்குப் பின்னால் ஏழு நிலை கோபுரம் காணப்படுகிறது. அம்மன் சன்னிதிக்கு முன்பாகவும் ஐந்து நிலை கோபுரம் ஒன்று இருக்கிறது. இத்தீப ஸ்தம்பம் கொங்கு நாட்டில் வேறெந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத ஒன்று. தீப ஸ்தம்பத்திற்கு தெற்கே தெப்பக்குளமும், அதன் எதிரில் பாதிரி மரத்து அம்மன் கோவிலும், அதற்கு சற்று தெற்கே முதலை வாயில் இருந்து சிறுவனை அழைத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் சன்னிதியும், முதலை வெளிப்பட்ட ஏரியும் உள்ளது.
ஏழுநிலை ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் நவரங்க மண்டபத்தை அடையலாம். இந்த மண்டபத்திற்குள் ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, ஆலங்காட்டு காளியம்மை, வீரபத்திரர் சிலைகளும், பலிபீடம், கொடிமரம், நந்தியம்பெருமான் உள்ளனர். இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால், மூலவர் அவிநாசியப்பரை தரிசிக்கலாம்.
பல அற்புதங்கள் நிகழ்த்திய இத்தல இறைவன், இங்கே சுயம்பு லிங்கமாக அருளை அள்ளி வழங்குகிறார். மூலவர் அருளும் கருவறையும், பிரகார அமைப்பும் இந்த ஆலயத்தின் ஆதி வடிவமைப்பாகும். இந்த ஈசனை வழிபட்டு விட்டு வெளியே வரும்போது, உள்சுற்று பிரகாரத்தில் அறுபத்து மூவரும் காட்சி தருகின்றனர்.
தொடர்ந்து தென்மேற்கு மூலையில் தல விநாயகரும், அவரை அடுத்து ஐம்பூதங்களின் வடிவாக பஞ்ச லிங்கங்கள், முருகப்பெருமான், மகாலட்சுமி சன்னிதிகளும் உள்ளன. கருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை அம்மனும் காட்சி தருகின்றனர். ஈசானிய மூலையில் சண்டிகேசுவரரும், நவக்கிரகங்களும் உள்ளன.
துர்க்கை அம்மனுக்கு அருகில் காசி தீர்த்த கிணறு இருக்கிறது. கங்கை நதி, இந்த கிணற்றுக்குள் வருவதாக ஐதீகம். கிணற்றுக்கு அருகாமையில் உள்ள ஞான (கால) பைரவர், சிறப்புக்குரிய மூர்த்திகளில் ஒருவராவார். இவருக்கு மட்டும் தனி சகஸ்ரநாமம் உள்ளது. வசிஷ்டருக்கு சனி தோஷம் நீக்கிய, அனுக்கிரக சனி பகவானும் இங்கே சிறப்புடன் வணங்கப்படுகிறார்.
பிரகாரத்தின் தெற்கு பக்கத்தில் சுவாமியின் வலப்புறம் அம்பிகை சன்னிதி உள்ளது. சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த அம்மனின் திருமேனி, கருணை பொங்கும் விழியோடு அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதியை அடுத்து திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.
தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில், ஆயுள் நீட்டிப்புக்காகவும், விஷப் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், எதிரிகள் பயம் விலகவும் இறைவனையும், அம்பாள் சன்னிதியில் உள்ள தேள் வடிவத்தையும் வணங்குகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கோயம்புத்தூருக்கு கிழக்காக 42 கி.மீ தொலைவிலும், திருப்பூரில் இருந்து வடமேற்காக 12 கி.மீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டத்தில் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி திருத்தலம் உள்ளது. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு தேவாரத் தலமான திருமுருகன்பூண்டி உள்ளது.
- தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி.
- சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம்.
கல்வியை வழங்கும் தெய்வங்களில் முதன்மை பெற்றவராக இருப்பவர் மகாகணபதி ஆவார். உலகில் உள்ள பெரிய புத்தகமாக மகாபாரதத்தை தம் கைப்பட எழுதி பெருமை சேர்த்தவர். அவர் அனேக அன்பர்களுக்கு ஞானத்தை போதிக்கும் குருபிரானாக இருப்பதை காண்கிறோம். தமிழ் வேதமான திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிக்கு அவர் ஆசிரியனாக இருந்து கல்வி கற்பித்ததை அவருடைய வரலாறு கூறுகிறது. சில தலங்களில் அவருக்குப் பள்ளிக்கூட விநாயகர் என்ற பெயரும் வழங்குகிறது.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் வாழ்ந்து வீடுபேறு பெற்றதால், திருச்செங்காட்டாங்குடி. அதற்கும் அதன் அருகிலுள்ள தலமான மருகலுக்கும் இடையே சிறுத்தொண்டர் மகனான சீராளன் படித்த பள்ளிக் கூடம் உள்ளது. அந்த இடத்தில் இப்போது விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அது பள்ளிக்கூட பிள்ளையார் கோவில் என வழங்குகிறது.
ஆவுடையார் கோயில் எனப்படும் திருப்பெருந்துறை தலத்தில் பூஜித்து வந்த அந்தணர்கள், குழந்தைகளுக்கு வேத ஆகமங்களைப் பயிற்றுவிக்க நல்ல குருமாரைத் தேடி வந்த அவர்களின் பெருமைகளை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் தானே வயோதிக ஆசிரியனாகத் தோன்றினார்.
அத்தலத்து சிறார்களுக்கு அவர் உயர்ந்த பாடங்களை நடத்தி ஞானமூட்டினார். அப்படி அவர் வீற்றிருந்து பள்ளிக்கூடம் நடத்திய இடத்தில் ஒரு விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பள்ளிக்கூடப் பிள்ளையார் என்றே பெயர் பெற்றது. இப்படி தமிழக மெங்கும் பல ஊர்களில் பள்ளிக்கூடப் பிள்ளையார் எனும் பெயரில் பல விநாயகர் ஆலயங்கள் இருந்து வந்துள்ளன.
விநாயகரின் அகன்ற காதுகள் நிறைய விஷயங்களை விடாமல் கேட்க வேண்டும் என்பதையும் துதிக்கையால் மூடியவாய் அதிகமாகப் பேசாமல் ஞானத்தைச் சிந்திக்க வேண்டும் என்பதையும், அவரது உடைந்த கொம்பு எழுதும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு நல்ல விஷயங்களைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதையும், கையிலுள்ள மோதகம் எப்போது அறிவில் நிறைவாக இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாகக் கூறுவர். அவர் கையிலுள்ள பாச, அங்குசம் மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்தி அடக்கி ஒருமுக சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த மனஅடக்கம் ஒருமுக சிந்தனை எழுதும் ஆற்றல், ஆசிரியர்கள் சொல்வதை ஒன்றுவிடாமல் கேட்டுக் கொள்ளுதல், நன்கு சிந்தித்தல் எப்போது அறிவைத் தேடுவதில் கவனம் கொள்ளுதல் ஆகியவை ஒவ்வொரு பள்ளி மாணவனுக்கும் தேவையான குணங்களாகும். அவற்றை நினைவூட்டலே ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அவர் வீற்றிருந்து அவர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
- சுப முகூர்த்த தினம், முத்துக்குமார சுவாமி திருவீதி உலா.
- ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 19 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி காலை 12.40 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 2.43 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். வைதீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி திருவீதி உலா. ராமேசுவரம் பர்வதவர்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. திருவிடைமருதூர் பிருகத்கு ஜாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தேர்ச்சி
ரிஷபம்-பரிசு
மிதுனம்-நிறைவு
கடகம்-நலம்
சிம்மம்-கடமை
கன்னி-உழைப்பு
துலாம்- நன்மை
விருச்சிகம்-புகழ்
தனுசு- போட்டி
மகரம்-முயற்சி
கும்பம்-பாராட்டு
மீனம்-உயர்வு






