என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமாவாசை திதி"

    • திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
    • தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

    இதே போல், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.

    நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.

    அதேபோல், நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

    • குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்’ என்கிறோம்.
    • ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.

    குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்' என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் `பித்ரு தோஷம்', இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

    பரிகாரம்:

    ராமேஸ்வரம் சென்று `திலஹோமம்' செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், `திருவெண்காடு' சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப் பரிகாரம்.

     திலஹோமம்:

    குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் `திலஹோமம்' செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

    தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள்:

    * பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.

    * ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை. மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

    * ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

    * கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தோஷம் வர பல்வேறு காரணம்:

    * கருச்சிதைவு

    * பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.

    * இளையதாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.

    * தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.

    * ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் வரும்.

    * துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

     தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்ரு தோஷம்:

    இவர்களது குடும்பம் ஜோதிடரீதியில் எவ்வளவு அதிர்ஷ்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும், அந்த பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருகளும், பித்ரு தேவதைகளும் தடை செய்வார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மை உடையது.

    பரிகாரம்

    `சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம்' செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.

    பித்ரு பூஜை செய்ய சிறந்த தலம்

    சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள், 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், ஒரு வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டுக்கு கொடுக்க `பித்ரு தோஷம்' நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் `பித்ரு தோஷம்' முழுமையாக நீங்கும்.

    உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஊரில் தான் சில பறவைகளைக் காண முடியும். ஆனால் காக்கை உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரே பறவை இனமாகும். இந்த காக்கையை `சனிபகவானின்' வாகனமாக மட்டும் பார்க்காமல் நமது முன்னோர்களின் வடிவான பித்ருகளாகவும் வழிபட்டுள்ளனர்.

    நமது முன்னோர் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் உழல்பவர்கள். தினமும் காக்கைக்கு ஒரு பிடி உணவு அளித்தால் அவர்களின் பிரச்சினையின் தீவிரமும் பிடி அளவு வீதம் கரையத் தொடங்குவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த பழக்கம் மெதுவாக மறைந்து தற்போது அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் மட்டும் காக்கைக்கு உணவிடுகிறோம். முன்னோர் பழக்கத்தை நாமும் பின்பற்றினால் பிரச்சினைகளின் தீவிரத்தில் இருந்து விடுபடுவோம்.

    • 108 சுற்றுக்கள் அரசமரத்தை அதிகாலையில் வலம் வருவது நல்லது.
    • மரத்தில் இருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும்.

    அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோம வாரம் என்கிறது சாஸ்திரம். அந்த நாளில் அரசமரத்தை வழிபட்டு வலம் வருவது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்கிறார்கள்.

    அமாவாசை நாளில் 108 சுற்றுக்கள் அரசமரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும். எனவேதான், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரசமரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரசமரத்தை வழிபட்டு, மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம: என்ற ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

    ×