என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
    • சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    28-ந்தேதி (செவ்வாய்)

    * காஞ்சிபுரம் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜர், மதுரை கூடலழகர் தலங்களில் விடையாற்று உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமா வாளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    29-ந் தேதி (புதன்)

    * காஞ்சிபுரம் வரதராசர் பல்லக்கில் தீர்த்தவாரி.

    * அகோபிலமடம் திருமத் 27-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    31-ந் தேதி (வெள்ளி)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    1-ந் தேதி (சனி)

    * திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழ கர், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருப்பதி ஏழுமலை யான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    2-ந் தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * சர்வ ஏகாதசி.

    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    3-ந் தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    • மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம்.
    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 15 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம் : உத்திராடம் காலை 9.46 மணி வரை. பிறகு திருவோணம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    நாளை அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. திருவோண விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காஞ்சிபுரம் ஸ்ரீவரதாஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - ஆக்கம்

    ரிஷபம் - ஆரோக்கியம்

    மிதுனம் -வெற்றி

    கடகம் - சாதனை

    சிம்மம் - பாசம்

    கன்னி - உதவி

    துலாம் - நட்பு

    விருச்சிகம் - ஆர்வம்

    தனுசு - போட்டி

    மகரம் - ஆக்கம்

    கும்பம் - பாராட்டு

    மீனம் - பக்தி

    • என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,' என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.
    • சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி. இங்கு பிறந்த குமாரசாமி நாடார் ஒரு நாள் தனது ஊருக்கு வந்த ஒரு முனிவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாத பூஜை செய்து, அருஞ்சுவை விருந்து அளித்தார். அப்போது அந்த முனிவர் ஒரு தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமியிடம் கொடுத்தார்.

    இந்த ஏட்டை தொடர்ந்து படித்து வந்ததன் பயனாக, மந்திரங்கள் சிலவற்றை கற்றுக்கொண்டு தினமும் தியானமும், பூஜையும் செய்து வந்தார். இதனால் பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களை இவர் வெறுமே பார்த்தாலே அந்த விஷம் இறங்கியது. ஏற்கெனவே விஷப்பூச்சிக் கடியல் சரும நோய் ஏற்பட்டவர்களும் இவர் பார்வை பட்டு குணமானார்கள். இதனால் மதுரைக்குத் தெற்கே இருந்து பலர் ஏரல் வந்து குமாரசாமி நாடாரின் பார்வை பெற்றுச் செல்வார்கள். இவருடைய புகழ் நாளுக்கு நாள் பரவியது. இவரது வழித்தோன்றலில் ஒருவர் ராமசாமி நாடார். மனைவி சிவனைந்தம்மாள். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்த பின்னும் குழந்தைப் பேறு இல்லை.

    ஒருநாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த ஒரு துறவி, "நீ செட்டியாபத்து சென்று அங்கு ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்" என்று கூறினார். (ஏரலில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டியாபத்து.) அதன்படி தம்பதிகள் செட்டியாபத்து கோயிலுக்குச் சென்று தரிசித்தனர். அன்றிரவு ராமசாமி கனவில் தர்மம் கேட்டுவந்த துறவி தோன்றி, 'உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு அருணாசலம் என்று பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்டவனாக வளருவான்' என்று கூறினார். சில நாட்களில் சிவனைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில், 2.10.1880 அன்று அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர். உடனே ராமசாமி நாடார் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார்.


    அருணாசலம், மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தன. அருணாசலம், பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு அவர் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். வாலிப பருவம் அவரை நெருங்க, அவர் தனது எண்ணத்தை இறைத் தேடலில் செலுத்தி வந்தார். தனது வழி முன்னோடிகள் செய்து வந்த விஷக்கடி மருத்துவத்தினையும் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் பேராதரவு பெற்றார்.

    இதற்கிடையில் இவரது அறிவாற்றலையும், ஆங்கிலப் புலமையையும் கண்ட அன்றைய ஆங்கில அரசு இவரை சிறுதொண்டநல்லூருக்கு முன்சீப்பாக (நிர்வாக அதிகாரி) நியமித்தார்கள். அந்தப் பொறுப்பை அருணாசலம் சிறப்பாக செய்து வந்தார். சிறுவயதாக இருந்தாலும் வரி வசூல் செய்வது, அந்தக் கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளை பஞ்சாயத்து பேசி முடிப்பது என்று 8 ஆண்டுகளாக சிறந்து விளங்கினார். இதற்கிடையில் ஒருநாள் ஊழலுக்குத் துணைபோகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட, அக்கணமே அப்பதவியைத் துறந்தார். பிறகு ஆன்மீகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டார்.

    அவருக்கு திருமணம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். ஆனால், அவரோ '28 வயது ஆகட்டும். அப்ப பார்த்துக்கலாம்' என்று கூறிவிட்டார். அப்பழுக்கற்ற பிரம்மச்சாரியாக வாழ்ந்த இவரை கவனித்துவந்த அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் இருவரின் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அவரை நியமித்தார்கள். சேர்மன் அருணாசலம், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார்.

    எண்ணெயால் எரியும் தெருவிளக்குகளை அமைத்தார். இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க பணியாளர்களை நியமித்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி செய்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு பழகினார். அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால், பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார். ஒருநாள் அப்பகுதியைச் சேர்ந்த பால்நாடார் என்பவரை பாம்பு கடித்து விட்டது. அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த விஷத்தினை உறியச் செய்தார்.


    இதைக்கண்ட அனைவரும் அவருக்குள் ஏதே ஒரு தெய்வ சக்தி இருப்பதை உணர்ந்தனர். இதற்குப் பிறகு அவரை சேர்மன் சாமி என்றே அழைத்தனர். ஒருநாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்து, 'காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடி மாதம் 13 ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன்.

    நான் உயிர் நீத்தாலும் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வருபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்கான சடங்குகளை செய்யுங்கள். அப்போது வானத்தில் கருடன் ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல்மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,' என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.

    அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை தினம். முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி 'வருகிறேன்' என்று கூடியிருந்த அனைவரையும் புன்னகை முகத்துடன் பார்த்துச் சொல்லி கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது.(பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டன. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது. சுவாமிகள் படித்த நூல்கள், பயன்படுத்திய விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமியை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள்.

    சுவாமி தெய்வ நிலையடைந்த ஒருசில நாளில் அவரோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றபோது, பாம்புக் கூட்டம் படையெடுத்து வந்து அவர்களை விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார்.

    அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தெய்வநிலை பெற்ற தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்டத் தீர்மானித்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். சுவாமிகள் உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர் ஆதிதிராவிடப் பெண்ணான சுடலைப் பேச்சி. அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி 'தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும்' என்று கூறினார். அதன்படி அவரது நோய் தீர்ந்தது.

    கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்த மெக்வர், டேவிட்சன் இருவரும் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர் வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு வருமுன்பு குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன.

    ஆகவே அவர்கள் குதிரையை விட்டு இறங்கி கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். அதைப் பார்த்த அவர்கள் பயந்து வெடவெடத்து, காலணிகளை கழற்றி விட்டு, தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்றதும் கலெக்டர், கோயில் அமைந்திருந்த இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது.

    சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ பிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணி கரையில் கூடுகிறார்கள். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள்.

    உடம்பிலும், கை, கால்களிலும் பூசிக்கொள்கின்றனர், அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார். மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது.

    சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், தற்போதும் சுவாமிகள் பலவிதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார். திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்கள் தாமிரபரணியில் நீராடியபோது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ''சேர்மா! என் மகனை காப்பாற்று'' எனக் குரல் எழுப்பியுள்ளார்.

    அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றினார். சற்குணம் மகனை அரவணைத்துக்கொண்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்டபோது அவரை காணவில்லை. மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அனைவரும் நம்பினர். ஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகிய பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனைச் சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள். இந்த மந்திர மையை இட்டுக்கொள்ளும் பக்தர்கள் திருஷ்டி, பேய், பிசாசுகள் விலகுவதாக அனுபவபூர்வமாக சொல்கிறார்கள்.


    குலசேகரபட்டினம் அருணாசல பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவார். ஒருமுறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அரிசியை ஒரு நார்ப்பெட்டியில் வைத்துக்கொண்டு ஏரலுக்கு வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க, ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து 'இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா,' என்றார். பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. தன்னை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அவரும் அவர் அனுபவத்தைக் கேட்டவரும் கருதினர்.

    இங்கு சித்திரைத் திருவிழா மற்றும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முக்கிய விழாக்களாகும். மாதம்தோறும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சுவாமி இங்கு ராஜகோலத்தில், நின்றபடி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜை நடக்கிறது. மனநோய், பேய்பிடி, விஷப்பூச்சிக்கடி, வீண்பயம், குடும்பப் பிரச்னை, மன அழுத்தம் என அனைத்தையும் போக்கும் பரிகாரத் தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர்.

    திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் தென்திருப்பேரையிலிருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஏரல் தாமிரபரணிக்கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப்பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
    • காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.

    உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டுருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.

    தாலி, குங்குமம், திருமண மோதிரம், மெட்டி, மாலை போன்றவை தவறி கீழே விழுந்தால் அது நம் அனைவரின் மனதிலும் கெட்ட செயலாக தான் தோன்றும். அந்த சமயத்தில் ஏதேனும் பதற்றங்கள் அதிகமாக ஏற்படும். நமக்கு கெட்ட செயல் நடக்கும்போது தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் நாம் கூப்பிடுவது வழக்கம். திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி கழன்று விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன், திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி விழுவது போன்று கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம்.


    திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:

    திருமணம் ஆன பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போல் கனவு வருவது இயல்பான ஒன்றுதான். தாலி அறுவது போன்று கனவு வந்தால் திருமணம் ஆன பெண்ணிற்கு அவருடைய கணவனின் மீது கோபம் கூட இருக்கலாம். அல்லது வீட்டில் கணவன்மார்கள் அந்த பெண்ணிடம் சண்டைகள் எதுவும் போட்டு இருக்கலாம்.

    அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்து இருக்கும். இதில் எதுவும் இல்லையென்றால் கணவனிடம் அந்த பெண்ணிற்கு ஏதேனும் பிடிக்காமல் இருந்து இருக்கலாம். பெண்களுக்கு தாலி அறுந்து விழுவது போன்று கனவு வந்தால் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:

    திருமணம் ஆகாத பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போன்று வந்தால் அது இயற்கைக்கு மாறான ஒரு விஷயமாகும். தாலி அறுவது போல் கனவு வந்தால் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு சிந்தனை செயல்களும் அவர்களிடத்தில் இருக்காது. பிறகு ஏன் இந்த கனவு வர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளதுதான்.

    தாலி அறுவது போன்ற கனவு திருமணம் ஆகாத பெண்ணிற்கு வந்தால் அவர்களுக்கு திருமணம் பற்றிய பயமும், பதற்றமும் ஆழ்மனதில் அவர்களுக்கிடையில் அறியாமல் இருக்கும்.


    திருமணம் செய்யும் நேரம்:

    உதாரணத்திற்கு அந்த பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்த்து கொண்டிருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று கனவு வந்தால் நடக்கவிருக்கும் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து உள்ளது என்ற அறிகுறியாகும். உள்மனதில் அந்த பெண்ணிற்கு இப்போது திருமணம் நிச்சயிக்க வேண்டாம் என்று கூறுவதாகும்.

    வர போகும் ஆபத்தில் இருந்து அந்த பெண்ணை பாதுகாப்படைய செய்கிறது. இது போன்று உள்ளவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்காமல் இருப்பது நல்லது. காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.

    6 மாதம் பொருத்திருந்து அதன் பின்னர் தாலி அறுவது போன்று கனவு வருகிறதா என்று பார்த்து, கனவு வரவில்லை என்றால் அதன் பிறகு திருமண பேச்சை பற்றி யோசிக்கலாம். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று வருவதால் அந்த பெண்ணிற்கு திருமணத்தில் பிரச்சனை ஏற்படப்போகிறது என்று கனவு மூலம் இறைவன் காட்டுகிறார்.

    அந்த பெண்ணிற்கு திருமணத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று அர்த்தமாகும். இது போன்ற சூழலில் யார் மீதும் காதல் கொள்வது, புதிதாக வரன்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். கனவுகளில் பல வகையான கனவுகள் உள்ளன. அவைகள் அனைத்திற்கும் அர்த்தம் இருக்கிறது என்று கூறமுடியாது. ஆனால் சில கனவுகளுக்கு அர்த்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 14 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி மாலை 5.08 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: பூராடம் காலை 10.36 மணி வரை. பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை; மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம். மதுரை ஸ்ரீகூடலழகர் கருட வாகனத்தில் திருவீதியுலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-பரிவு

    மிதுனம்-நன்மை

    கடகம்- யோகம்

    சிம்மம்-வரவு

    கன்னி-நலம்

    துலாம்-மேன்மை

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- உண்மை

    மகரம்-கவனம்

    கும்பம்-பெருமை

    மீனம்-திறமை

    • வரதராஜ பெருமாளை குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.
    • மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்று திகழ்கிறது. அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகாசி விழா கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-வது நாளில் நடைபெற்ற கருடசேவை உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றுகாலை கோலாகலமாக நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிக்கு தாடை கொண்டை அணிந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.

     ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை அங்கு குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வணங்கினர்.

    பின்னர் மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கியது. பக்தர்களுக் குதேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

     

    • இன்று சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த தினம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-13 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை இரவு 6.28 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : மூலம் காலை 11.04 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கடஹர சதுர்த்தி, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி

    இன்று சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய்க் காட்சி. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - சுகம்

    ரிஷபம் - இன்பம்

    மிதுனம் - உவகை

    கடகம் - போட்டி

    சிம்மம் - பெருமை

    கன்னி - அமைதி

    துலாம் - ஜெயம்

    விருச்சிகம் - செலவு

    தனுசு - தெளிவு

    மகரம் - இனிமை

    கும்பம் - முயற்சி

    மீனம் - நற்செயல்

    • பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார்.
    • தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது விபூதியை தடவினார்.

    பகவான் சாய் பாபா இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஷீரடி சாய் பாபாவின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார்.

    பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர்.

    அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது விபூதியை தடவினார். கொஞ்சம் விபூதியை அவரது வாயில் இட்டார்.

    இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாய் பாபா மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது விபூதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது.
    • புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும்.

    * அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து கோலமிடுவது மிகவும் நல்லது. அதிகாலையில் கோலம் போடுவதால் கஷ்டங்கள் விலகும். காலை 6 மணிக்குள் கோலம் போட வேண்டும்.

    * காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது. முகம் கழுவி, திலகம் வைத்துக்கொண்டு வெளியில் சென்று கோலம் போட வேண்டும்.

    * கோல மாவுடன் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடலாம். வெறும் பச்சரிசி மாவிலும் கோலம் போடலாம்.

    * வாசலில் கோலமிடுவது, அழகுக்கு மட்டுமல்ல. தீய சக்திகள் நம் வீட்டுக்கு உள்ளே நுழையாமல் தடுக்கவும் தான் கோலமிடுகிறோம்.

    * உட்கார்ந்தபடி போடக்கூடாது. வலக்கையால் தான் கோலமிட வேண்டும்.

    * புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும். கோடுகளையும் அப்படியே போட வேண்டும். மேலிருந்து கீழாக போடக்கூடாது.

    * ஈரிழைக் கோலம் மங்கலத்தைக் கொடுக்கும், ஒரு கோடு, மூவிழைக் கோலம் அமங்கலத்தைக் குறிக்கும். விழாக்காலத்திற்கு நாலிழைக் கோலம் நல்லது.

    • அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
    • பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மந்திகுளம்பட்டி கிராமத்தில் அகோர வீரபத்திரர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அகோர வீரபத்திரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. குரும்பர் இன மக்கள் சார்பில் நடந்த இந்த விழாவில் கோவில் முன்பு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த ஏதுவாக வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

    பின்னர் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார். பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தலையில் தேங்காய் உடைக்கும்போதும், சாட்டையடி வாங்கும்போதும் ஒரு பக்தருக்கு கூட ரத்தம் வந்தது கிடையாது என்றும், பக்தர்கள் தெரிவித்தனர்.


    • ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    • மதுரை ஸ்ரீகூடலழகர் எடுப்புச் சப்பரம் சப்தாவர்ணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 12 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை இரவு 7.24 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: கேட்டை காலை 11.06 மணி வரை. பிறகு மூலம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம். மதுரை ஸ்ரீகூடலழகர் எடுப்புச் சப்பரம் சப்தாவர்ணம். பழனி ஸ்ரீஆண்டவர் பவனி. திருஞானசம் பந்தர் நாயனார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார், முருகநாயனார் குருபூஜை, உப்பிலியப்பன் கோவில், சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விருப்பம்

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-நிறைவு

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-நற்செய்தி

    கன்னி-அமைதி

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- பாராட்டு

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-உதவி

    மீனம்-பக்தி

    • வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008.
    • செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது.

    காலத்தால் அளவிட முடியாத பழம் பெருமையும், புராண வரலாறும் கொண்டது திருச்செங்கோடு என்ற திருக்கொடி மாட செங்குன்றூர். வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008. இதில் பாடல் பெற்ற தலங்கள் என்னும் புகழ் பெற்றவை 274 கோவில்கள்.

    இதில் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திருப்புக்கொளியூர் என்னும் அவினாசி, திருமுருகன் பூண்டி, திருநனா என்றழைக்கப்படும் பவானி, திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்றழைக்கப்படும் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர். திருவெஞ்சாமக்கூடல், திருப்பாண்டி, கொடுமுடி, திருக்கருவூரணி நிலை என்னும் கரூர் ஆகிய 7 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

    செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது என்றாலும், செந்நிறமாக திகழ புராணம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

    திரிபுரம் எரிக்க புறப்பட்ட சிவபெருமான் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்மை நாணாக்கி, அக்கினி தேவனை அம்பு முனையில் பொருத்தி, வாயுவை விசையாக்கி எடுத்து சென்றார். எல்லாம் சிவம் என்றிருக்க நம் துணையின்றி சிவனால் முப்புரத்தை எரிக்க முடியாது என மேரு, வாசுகி, அக்கினி, வாயு ஆகியோர் ஆணவம் கொண்டனர்.

    இதனை உணர்ந்த எம் பெருமான் இவர்கள் துணையின்றி தம் சிரிப்பாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்தார். இந்த நிலையில் வாயுவுக்கும் மும்மூர்த்திகளின் ஆபரணமாக திகழும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற பெரும் போட்டி, சண்டை எழ இதில் தலையிட்ட தேவர்கள் மேரு மலையை வாயு தன் பலத்தால் தகர்க்க வேண்டும்.

    ஆதிசேஷன் தன் பலத்தாலும் படத்தாலும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டு வெல்பவர்களே பலசாலி என்று கூறினார்கள். அதன்படி மேரு மலையை ஆதிசேஷன் பற்றிக் கொள்ள,வாயுதேவன் தன் பலம் முழுவதையும் பிரயோகித்தும் வெற்றி காண முடியவில்லை.

    தோல்வியில் ஆத்திரம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் ஈரேழு லோகங்களிலும் காற்றே இல்லாமல் செய்கிறான். சுவாசிக்க காற்று இல்லாமல் உயிரினங்களும், பயிரினங்களும் மயங்கி விழ பயந்து போன தேவர்கள் வாயுவிடம் மன்றாடினார்கள்.

    வாயுதேவன் மறுக்கவே தெய்வ குணம் கொண்ட ஆதிசேஷனை போட்டியில் விட்டுக் கொடுக்கும்படி வேண்டினார்கள். மனமிறங்கிய ஆதிசேஷன் தன் பிடியை தளர்த்த வாயு தன் பலத்தால் மோதி ஆதிசேஷனின் தலையையும், மேருமலையின் சில பாகங்களையும் பிய்த்து கொண்டு போகும் படி செய்தார்.

    இதில் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும், மேருவின் ஐந்து மலைகளும் பெயர்ந்து விழுந்தது. ஆதிசேஷனின் நடுநாயகமான தலையும், அதில் இருந்து பீறிட்ட ரத்தம் தோய்ந்து விழுந்ததால் செங்குன்றூர் எனவும், பின்னர் திருக்கொடி மாடச்செங்குன்றூர் எனவும் வழங்கப்பட்டு காலப் போக்கில் மருவி திருச்செங்கோடானது. 

    ×