என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருப்பெருத்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-28 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி காலை 8.38 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.06 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கும், மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கும் திருமஞ்சன சேவை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை.

    திருப்பெருத்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-பெருமை

    கடகம்-மேன்மை

    சிம்மம்-நிறைவு

    கன்னி-யோகம்

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்-சிறப்பு

    தனுசு- நிறைவு

    மகரம்-உழைப்பு

    கும்பம்-யோகம்

    மீனம்-நட்பு

    • கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும்.
    • வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.

    நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆடி மாதம் தேய்பிறையில் வரும் இந்த பஞ்சமி திதிக்கு "ரக்ஷா பஞ்சமி" என்று பெயர். இந்த பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாடு மிக மிக முக்கியமானதாகும்.

    பொதுவாகவே பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாட்டுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் ஆடி மாத தேய்பிறையில் செய்யப்படும் வராகி வழிபாடு இரட்டிப்பு பலன்கள் தரக்கூடியதாகும்.

    இந்த ஆடி மாதத்தில் இந்த பலனை நீங்கள் பெற வேண்டுமானால் முதலில் வராகி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

    வராகி என்ற பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரில் ஐந்தாவதாக உள்ளவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).

    அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி.

    இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும். பொதுவாக மஞ்சள் உடையும், முக்கியமாக கலப்பையும், உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள். ஆக தண்டம் ஏந்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பார்கள். நெல்லையப்பர் கோவில் வராகி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சை பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.

    ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராகி சொரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.

    கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தைய உன்னதமான நிலை.

    வராகி வராகரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்லப்படுகிறாள். அதில் வராகி அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராகியின் தத்துவத்தை உணர்த்தி விடும்.

    வராகம் என்றால் என்ன? பன்றி. வராக மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராகிதான். என்ன உதவி தெரியுமா?

    பன்றிக்கு இயல்பிலேயே வானை நோக்கும் சக்தி கிடையாது. எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராக அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கின் நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வராகி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

    வராகி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். அதாவது குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.

    குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும். எதிரிகள் குறைவார்கள். ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது. இதனால் தான் வராகிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.

    வராகி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

    ஆனால் ஒரு விஷயம், வராகி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வராகி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

    ஆனால் வராகி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், ஸ்ரீ வராகிக்கு உகந்ததாக இரவு நேர வழிபாட்டைச் சொல்வர். எனவே, இருள் கவ்விய மாலை வேளையில், வராகியை தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

    வராகிக்கு பூமி கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழகு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை அன்னைக்குப் படைத்துப் பிரசாதமாக வாங்கிச் செல்வது விசேஷம்.

    திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

    வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும். நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வராகியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும். நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமையிலும், கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வராகியை வழிபட வேண்டும்.

    பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக இவள் விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வராகி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராகி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.

    நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வராகி தேவி. மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வராகி தேவி.

    பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வராகி மாலா போற்றுகின்றது. இத்தகைய சிறப்புடைய வராகிக்கு தமிழகம் முழுவதும் ஆலயங்கள் இருக்கின்றன. நமது சென்னையில் பல ஆலயங்களில் வராகிக்கு சன்னதி இருந்தாலும் தனி ஆலயம் என்று பார்த்தால் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகில் இருக்கும் வராகி அம்மன்தான் அனைவருக்கும் தெரிய வரும். சைதாப்பேட்டை நுழைவு வாயலில் பிரதான சாலை ஓரத்திலேயே இந்த அம்மன் வீற்றிருந்து தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களை வருந்த விடாமல் பலன்களை கொடுத்து கொண்டு இருக்கிறாள். இந்த வராகியை வராகி வள்ளி என்றும் அழைக்கிறார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வராகி அம்மன் ஆலயம் இந்த இடத்தில் உள்ளது.

    இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் நம்பிக்கை தெய்வமாக வராகி அம்மன் இருந்து வருகிறார்.

    2015-ம் ஆண்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 3 அடி உயரத்தில் வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் வருடத்திற்கு 3 நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முதல் நவராத்திரி வசந்த நவராத்திரி. அந்த நவராத்திரியின் போது அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். 2-வதாக ஆஷாட நவராத்திரியையொட்டி 10 நாட்கள் விழா நடைபெறும். 10-வது நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அடுத்த நவராத்திரி சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியையொட்டி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    மாதத்திற்கு 2 முறை பஞ்சமி வரும். அதில் ஒன்று வளர்பிறை பஞ்சமி, 2-வது தேய்பிறை பஞ்சமி. இந்த 2 பஞ்சமியும் அம்மனுக்கு மிகுந்த விசேஷ நாளாகும். இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதம் 3-வது வாரம் வள்ளி அம்மனுக்கு கூழ் படைத்தல் நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு அன்னாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவது சிறப்பு. வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.



    மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகள் இங்கு வந்து வராகி அம்மனின் அருளால் பூரண குணமாகி செல்கின்றனர். பல ஆண்டுகளாக தீராத வழக்குகள் அம்மனின் அருளால் முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் பலர் நேரில் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு நன்றி செலுத்தி செல்கின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கு வந்து வழிபட்டு பதவி உயர்வு மற்றும் பலன்களை பெற்று செல்கின்றனர். மேலும் பல அதிசயங்கள் கோவிலில் நடந்து உள்ளது. பிரார்த்தனை நிறைவேறிய பணக்காரர்கள் பலர் கோவிலில் வந்து சேவை செய்கின்றனர்.

    ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் போது கர்ப்பிணி பெண்களை அமர வைத்து பூஜை செய்யப்படுகிறது. அடுத்ததாக குழந்தை இல்லாத பெண்களை அமர வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    வளைகாப்பு நிகழ்ச்சி பூஜையில் அமர்ந்த பெண்கள் பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளது. நெல்லை மாவட்ட ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவர் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியமில்லாமல் மனமுடைந்து இருந்தார். இந்த கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு அம்மனை தரிசித்து சென்றார்.

    கோவிலில் தரிசனம் செய்து சென்ற சில நாட்களிலேயே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. கோவிலில் தினந்தோறும் நடக்கும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய வெளிமாநில பக்தர்கள் பலர் விமானத்தில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பெரும்பாலானோர் மலேசியாவில் இருந்து வருகின்றனர்.

    வராகி அம்மனுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கும் தொடர்பு உள்ளது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது போல் வராகி அம்மனும் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவில் மூடப்படும். மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு 9½ மணிக்கு கோவில் மூடப்படும்.

    • பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர்.
    • வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கொடுமுரு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.

    பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர். பின்னர் வெங்கடேஸ்வர சாமிக்கு அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.

    தேள்களைப் பிடித்து மாலையாக கட்டும் பக்தர்களுக்கு தேள் கொட்டவில்லை. பொதுவாக பக்தர்கள் சாமிக்கு பட்டு வஸ்திரம் மலர் மாலை மற்றும் ஆபரணங்களை அணிவித்து பூஜைகள் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்த வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். இதேபோல் சில பக்தர்கள் தேள்களை பிடித்து தங்களது முகம்,தலை, கைகளில் வைத்து நூதன முறையில் வழிபட்டனர். 

    • இருக்கன்குடி மாரியம்மன் பவனி.
    • மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

    இந்த வார விசேஷங்கள்

    12-ந் தேதி (செவ்வாய்)

    * சங்கடகர சதுர்த்தி.

    * வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.

    * சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந் தேதி (புதன்)

    * இருக்கன்குடி மாரியம்மன் பவனி.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந் தேதி (வியாழன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (வெள்ளி)

    * இருக்கன்குடி மாரியம்மன் ஆடித் திருவிழா.

    * பெருவயல் முருகப்பெருமான் திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (சனி)

    * கோகுலாஷ்டமி.

    * நெல்லை நகரம் சந்தான கோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம்.

    * திருத்தணி முருகப் பெருமான் தெப்ப உற்சவம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டாள் தங்க மயில் வாகனத்தில் உலா.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (ஞாயிறு)

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் பவனி.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    18-ந் தேதி (திங்கள்)

    * தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், உப்பூர், மிலட்டூர் தலங்களில் விநாயகர் விழா தொடக்கம்.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-27 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை காலை 10.35 மணி வரை. பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : பூரட்டாதி பிற்பகல் 2.20 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீமுத்து மாலையம்மன் பவனி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப்பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம் வழிபாடு.

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீசித்தநாதீஸ்வர் கோவலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தெனான்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-உண்மை

    கன்னி-உவகை

    துலாம்- அனுகூலம்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- சுகம்

    மகரம்-செலவு

    கும்பம்-லாபம்

    மீனம்-நிறைவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் அகலும்.

    ரிஷபம்

    புதிய பாதை புலப்படும் நாள். வரும் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் லாபம் உண்டு. எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மிதுனம்

    அல்லல்கள் அகலும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    கடகம்

    மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். அடுத்தவர்களின் மனம் புண்படும் விதம் நடந்து கொள்ள வேண்டாம். பயணங்களில் கவனம் தேவை.

    கன்னி

    வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். கலைத் துறையினரின் சந்திப்பால் காரியம் ஒன்று முடிவாகும்.

    துலாம்

    வரவும், செலவும் சமமாகும் நாள். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. சகோதரர் வழியில் சச்சரவுகள் உண்டு. தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தட்டுப்பாடு அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    தனுசு

    குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத் தொழில் புரிவோர் லாபம் காண்பர். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல தகவல் நண்பர்கள் மூலம் வந்து சேரும்.

    மகரம்

    செல்வாக்கு உயரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். உதிரி வருமானங்கள் பெருகும்.

    கும்பம்

    தாமதித்த காரியம் தடையின்றி நடைபெறும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கேற்றால் போல் செயல்படுவீர்கள்.

    மீனம்

    புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணவரவு திருப்தியளிக்கும். சுபகாரிய பேச்சு முடிவாகும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    • 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • மண்டல பூஜை விழாவையொட்டி காலையில் 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7-ந்தேதி கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடந்தது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷே விழா என்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷே விழா நிறைவடைந்த பிறகு 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். ஆனால் ஆவணி திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மண்டல பூஜை நடந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல நிறைவு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை விழாவிற்காக பெங்களூரை சேர்ந்த திருமலை திருப்பதி, ஸ்ரீமன் நாராயணா சபா சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் கோவிலை அலங்காரம் செய்வதற்காக அலங்கார பொருட்கள், மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இந்த அலங்காரத்தில் தென்னங்குருத்து இலை, அந்தோனியம், ரோஸ், கிசாந்திமம், ப்ளூ டெசி, ஜெர்ப்புறா, ஜிப்ஸி, சுகர் கேன், காமினி, டேய் சுனிஸ், செக்ஸி ஹலோ கோனியோ, ஆர்கிட்ஸ், ஆரஞ்சு, அண்ணாச்சி பழம், சோளக்கருகு, கரும்பு உள்பட பல்வேறு வகையான அலங்கார பொருட்களை பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டது.

    கோவிலில் உள்ள சண்முக விலாச மண்டபம், மூலவர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், விநாயகர் பெருமாள், கொடிமரம், நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்டது.

    இதற்காக பணியில் சேலம், சென்னை, பெங்களூரு, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த 110 பணியாளர் ஈடுபட்டனர்.

    மண்டல பூஜை விழாவையொட்டி காலையில் 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு மண்டல பூஜை அபிஷேக பூர்த்தி பூஜை தொடங்கி நடைபெற்றது.

    • எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது.
    • கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும்.

    விநாயகரை வணங்கும் முறை

    அகரம், உகரம், மகரம் (அ, உ, ம) ஆகிய மூன்றும் சேர்ந்தது தான் 'ஓம்' என்ற நாதபிரம்மம். 'ஓம்' என்ற வடிவத்தில் விநாயகரின் உருவம் அமைந்துள்ளது. வலது கையால் முகத்துக்கு மேலாக இடப்பக்கத்திலும், இடது கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்றுமுறை குட்டிக் காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டு கணபதியை வணங்க வேண்டும்.

    சிவாலயங்களில் படிக்க வேண்டிய பாடல்

    சிவாலயத்திற்கு செல்லும் பொழுது எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பிறகு இந்தப் பாடலை அவசியம் படித்து வழிபடுவது நல்லது.

    கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாய் பிழையும் நின்னஞ்செழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!

    நிலவொளியில் கிரிவலம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்

    * ஆன்மிக நலம், அருள் ஏற்படும்.

    * நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

    * நியாயமான கோரிக்கைகள் நிச்சம் கைகூடும்.

    * திருமண தோஷம் விலகி, திருமணம் விரைவில் நடைபெறும்.

    * குழந்தைச் செல்வம், நன்மக்கட்பேறு வாய்க்கும்.

    * பகை விலகும்.

    * உடல் உறுதி பெறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

    * புகழும், பொருளும் கிடக்கும். தொழில் விருத்தி ஏற்படும்.

    கோவிலில் பிரகாரம் வரும்பொழுது...

    கணபதிக்கு ஒரு பிரகாரம்

    சூரியனுக்கு இரண்டு பிரகாரங்கள்

    சிவன் பார்வதிக்கு மூன்று பிரகாரங்கள்

    விஷ்ணு இலக்குமிக்கு நான்கு பிரகாரங்கள்

    அரச மரத்திற்கு ஏழு பிரகாரங்கள்

    குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது.

    கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க கடவுள் துதி

    வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள் சிலர், வினாத்தாளை வாங்கியவுடன் பதிலை மறந்து விடுவதுண்டு. இதனால் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ மாணவியர்கள் தினமும் கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றைப் படிக்கலாம். சரஸ்வதி கவசம் படித்தால் கல்வியில் தேர்ச்சியுறலாம். கற்றவர்கள் பாராட்டும் அளவு முன்னேற்றமும் வந்துசேரும்.

    தெய்வங்களும்... திசையும்...

    எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது. அதற்கேற்ப வழிபட்டால்தான், அற்புதமான பலன் கிடைக்கும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும். ஆனால் நடராஜர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி படங்களை தெற்கு நோக்கி இருக்கும் விதத்தில் வைத்து வழிபட்டால்தான், சிறப்பான பலன்களை பெற முடியும். நடராஜர் படத்தை திருவாதிரை நட்சத்திர நாளில், பூஜையறையில் வைத்து சிவபுராணம் படித்தால், கலைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிட்டும். தட்சிணாமூர்த்தி படத்தை உத்திரம் நட்சத்திரம் அன்று பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் வளர்ச்சியைக் காணலாம்.

    பலம் தரும் பழங்கள்

    பார்வை பலத்தைக் கூட்டும் நெல்லிக்கனி

    இருதயத்தைக் காக்கும் மாதுளம் பழம்

    ஜீரண சக்தியைக் கொடுக்கும் பப்பாளிப்பழம்

    உடல் பருமனைக் கூட்டும் வாழைப்பழம்

    தேனுடன் இணைத்துச் சாப்பிட்டால் இருமல் நீக்கும் பலாப்பழம்

    ரத்த விருத்தியை அதிகரிக்கும் சாத்துக்குடி

    சதைப்பிடிப்பை அகற்றும் திராட்சை

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் கொய்யா

    ரத்தத்தைச் சுத்தமாக்கும் எலுமிச்சை

    ஞாபக சக்தியைக் கூட்டும் விளாம்பழம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகம் சம்பந்தமாக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழிலில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

    ரிஷபம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார விரோதம் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான்.

    கடகம்

    எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த காரியமொன்று முடியாமல் போகலாம். திடீர் செலவுகளைச் சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

    சிம்மம்

    உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள். அன்னிய தேசத்தில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

    கன்னி

    நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும். உடல் நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

    துலாம்

    அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    விருச்சிகம்

    யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    தனுசு

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பயணம் எதிர்பார்த்த பலனை தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

    மகரம்

    பெருமைகள் சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சி வெற்றி தரும்.

    கும்பம்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மீனம்

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    தனுசு

    அரசு வேலை முயற்சி வெற்றி தரும் வாரம். 5ம் அதிபதி செவ்வாய் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரிக்கிறார். இது மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு. அரசாங்க வேலைக்கான முயற்சியில் வெற்றி உண்டு. அரசுப் பணியில் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும். குடும்பத்தில் நிம்மதி கூடும்.

    தன யோகம் சிறப்பாக அமையும். வீடு, வாகன யோகம் உண்டாகும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. சமுதாய அங்கீகாரம் அதிகரிக்கும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.

    குலதெய்வ அருள் கிட்டும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    மகரம்

    வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் வாரம். உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்திற்கு சனி, செவ்வாய் சம்மந்தம் உள்ளது. மனதில் நிறைவும், நெகிழ்சியும் உண்டாகும். பூர்வீக சொத்தை பிரிப்பதில் உடன் பிறந்தவர்களுடன் நிலவிய சர்ச்சைகள் விலகும். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள்.

    திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பங்குச் சந்தையில் புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பட்ட வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும். தந்தையின் ஆலோசனை பயன் தரும்.

    பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத் தடை அகலும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். வழக்குகளில் வெற்றி உறுதி. அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறையினரும் பிரபலமடைவார்கள். பண விசயத்தில் யாரையும் நம்பக்க கூடாது. கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடவும்.

    கும்பம்

    பணவரவு, வருமானம் கூடும் வாரம். ராசியில் ராகு பகவான் உள்ளார். லாப ஸ்தான பலத்தால் வருமானம் அதிகரிக்கும். புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும்.

    வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம்.

    நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பால் சாதம் படைத்து வழிபடவும்.

    மீனம்

    துன்பங்களும், துயரங்களும் முடிவுக்கு வரும் வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு 2,9-ம் அதிபதி செவ்வாயின் பார்வை உள்ளது. திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். செய்த தர்மம் தலை காக்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.

    தடைப்பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். நடுத்தர வர்க்கத்தின் வருமானம் உயரும்.வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

    தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபடவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    சிம்மம்

    புதிய சொத்துக்கள் சேரும் வாரம். ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் நான்காம் அதிபதி செவ்வாய் நிற்கிறார். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும்.

    வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு. விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி முதல் 14.8.2025 அன்று காலை 9.06 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். கோகுலாஷ்டமியன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு திரட்டுப்பால் வைத்து வழிபடவும்.

    கன்னி

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். புதியவற்றை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம்.

    பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலர் வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள் சுப செலவிற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 14.8.2025 அன்று காலை 9.06 மணி முதல் 16.8.2025 அன்று காலை 11.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தின் நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். கோகுலாஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதிரசம் வைத்து வழிபடவும்.

    துலாம்

    திருப்பு முனையான வாரம். கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சேமிப்புகள் கூடும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணத் தடை அகலும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரக் கூடிய காலமாகும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

    16.8.2025 அன்று காலை 11.43 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடவும்.

    விருச்சிகம்

    தந்தையால் உயர்வு அடையும் வாரம். தந்தைக்கு காரக கிரகமான சூரியன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களின் தொழில் வளர வாழ்வாதாரம் உயர தந்தை உதவி செய்வார். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    வெளிநாட்டு வணிகம், உணவுப் பொருட்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் நல்ல பலன் தரும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு லட்டு படைத்து வழிபடவும்.

    • வார ராசிபலன்
    • 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்

    மேஷம்

    புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு செவ்வாய் சனி பார்வை. இந்த அமைப்பு நல்ல எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

    தலைமைப் பண்பு மிகுதியாகும். கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குல கவுரவத்தை கட்டி காப்பீர்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும்.

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். கோகுல அஷ்டமி அன்று வெண்ணை படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    ரிஷபம்

    லாபகரமான வாரம். தன லாப ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் ரிஷப ராசிக்கு சாதகமாக உள்ளது. தீராத மன சஞ்சலம் தீரும் காலம் வந்து விட்டது. தாராள தன வரவால் குடும்பத்தில் குதூகலம் கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். பட்ட கடனும், நோயும் தீரும் காலமும் வந்து விட்டது. வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.

    ஆயுள் சார்ந்த பயம் விலகும். உடம்பும், மனதும் புத்துணர்ச்சியடையும். புத்திர பிராப்தம் சித்திக்கும். பங்குச் சந்தை ஆதாயம் கூடும். அதிர்ஷ்ட பொருள் வரவு மனதை மகிழ்விக்கும். தொழில் முயற்சிக்கு ஏற்ற லாபம் நிச்சயம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசாங்க வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.

    அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற அரசின் ஆதரவு கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பால் சில அசவுகரியம் உண்டா கலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடவும்.

    மிதுனம்

    மகிழ்ச்சியான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் தருவது கேந்திரங்கள். தற்போது மிதுன ராசிக்கு கேந்திர ஸ்தானங்கள் பலம் பெறுகிறது. மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். சில சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான புதிய முயற்சிகள் திட்டங்கள் பலிதாகும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏறபடும்.

    தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

    பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். கோகுல அஷ்டமி அன்று வெண் பொங்கல் படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    கடகம்

    சிறிய முயற்சியில் பெரிய தடைகள் அகலும் வாரம். ராசியில் சூரியன் நிற்பதால் தலைமைப்பதவி தேடி வரும்.பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை வராது. வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு நல்ல மதிப்பும் கிடைக்கும். அரசு வருமானம் ஆதாயம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். பாக்கிய ஸ்தான சனி பகவான் புதிய தொழில் முதலீட்டிற்கு தூண்டினாலும் ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நல்லது. பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு, கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

    பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 12.8.2025 அன்று காலை 6.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகலாம். பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. உணவு கட்டுப்பாடு அவசியம். கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு எள்ளுருண்டை படைத்து வழிபடவும்.

    ×