என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.
    • ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு.

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.

    இதனை ருத்ராஷ்டமி தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இது தேவர்களே பைரவரை பூஜிக்கின்ற நாள்.

    எனவே தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.

    தைமாதம் முதல் துவங்கி ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமையும் பைரவரை வணங்கி பஞ்சதீபம் ஏற்றி, காலபைரவ அஷ்டகம் படித்து பூஜை செய்து வந்தால், எதிரிகள் அழிந்து கடன்கள் தீர்ந்து யம பய மட்டுமல்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

    செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் இணைந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருத்தப்படுகிறது.

    12 மாத அஷ்டமி பெயர்கள்

    ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு.

    மார்கழி மாதம்: திரியம்பகாஷ்டமி,

    சித்திரை மாதம்: ஸ்நாதனாஷ்டமி,

    வைகாசி மாதம்: சதாசிவாஷ்டமி,

    ஆனி மாதம்: பகவதாஷ்டமி,

    ஆடி மாதம்: நீலகண்டாஷ்டமி,

    ஆவணி மாதம்: ஸ்தானு அஷ்டமி,

    புரட்டாசி மாதம்: சம்புகாஷ்டமி,

    ஐப்பசி மாதம்: ஈசான சிவாஷ்டமி,

    கார்த்திகை மாதம்: சம்புகாஷ்டமி

    மார்கழி மாதம்: ஈசான சிவாஷ்டமி,

    தை மாதம்: தேவாகாலபைரவாஷ்டமி.

    நவக்கிரகங்களுக்கும் சனிபகவானுக்கும் பைரவர்தான் குரு.

    சனிபகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை ஆண்டு சனி காலம், சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர்.

    இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தீர்ப்பவர் பைரவர்.

    ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயாசம், படையலிட்டு அல்லது கறிவேப்பிலை மாலை, பாகற்காய் மாலை அணிவித்து ஒரு பூசணியில் மிளகு தீபம், ஒரு பாகற்காய் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் பிடியிலிருந்து விடுபடலாம்.

    இது பொதுவான பரிகார பூஜை. இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

    சனிஸ்வர பகவானுக்குனு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது.

    நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.

    ராசிக்கு சனி பகவான் பார்வை இருந்தால் சனிக்கிழமை காலையில் ஒன்பது கருப்பு மிளகைத் தூள் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    அதன் பிறகே கோவிலுக்குச் சென்று சனிஸ்வரருக்கும் ஸ்ரீபைரவருக்கும் வழிபாடு செய்து வரவேண்டும்.

    ராசிக்கு சனிபகவான் பார்வை இருக்கும் வரை பொதுவான பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்து வரவேண்டும்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜன்ம அல்லது த்ரிஜன்ம நட்சத்திரம் அன்று செய்வது சிறந்தது.

    • கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.

    1. குடம் என்றால் மேற்கு என்று பொருள். மூக்கு என்றால் மூக்கு போன்று குறுகிய வடிவம் என்று அர்த்தமாகும். அதாவது குடந்தை நகரம் மேற்கே மூக்கு போன்று குறுகியும் கிழக்கில் அகன்றும் விளங்குவதால் குடமூக்கு என்ற பெயரை பெற்றதாக சொல்கிறார்கள்.

    2. சங்க இலக்கியங்களில் குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் 1384-ம் ஆண்டு முதல் கும்பகோணம் என்று அழைக்கப்பட்டது. சாரங்கபாணி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதை உறுதிபடுத்துகிறது.

    3. கும்பகோணம் என்ற சொல் வடமொழி சொல் ஆகும். வடமொழியில் குடம் என்றால் கும்பம், மூக்கு என்றால் கோணம் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஏற்பட்ட கும்பகோணம் என்ற பெயர் கடந்த 600 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

    4. "குடமெடுத்து ஆடிய எந்தை" என்ற பாடல் வரியே குடந்தையாக மாறியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

    5. கும்பகோணத்துக்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டனம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம், சாரங்கராஜன்பட்டினம், சேந்திரசாரம், ஒளிர்மிகு பட்டணம் உள்பட பல பெயர்கள் இருந்தன. இந்த பெயர்கள் தற்போது வழக்கில் இல்லை.

    6. கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    7. சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.

    8. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன்னுடைய திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார்.

    • காசி விசுவநாதர் கோவில்
    • அபிமுகேசுவரர் கோவில்

    1. கோடீஸ்வர சுவாமி கோவில்

    2. சக்ரபாணி சுவாமி கோவில்

    3. சங்கராச்சாரியார் மடம்

    4. காளஹஷ்தீஸ்வரர் சுவாமி கோவில்

    5. அய்யனார் கோவில்

    6. கோபாலசாமி கோவில்

    7. கும்பேசுவரர் கோவில்

    8. ராமசாமி கோவில்

    9. சாரங்கபாணி கோவில்

    10. சோமேஸ்வரன் கோவில்

    11. நாகேசுவரன் கோவில்

    12. காசி விசுவநாதர் கோவில்

    13. அபிமுகேசுவரர் கோவில்

    14. பிரம்மன் கோவில்

    15. கம்பட்ட விசுவநாதர் கோவில்

    • 11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.
    • சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    5-ந்தேதி காலை சின்ன ஷேச வாகனம், இரவு அம்ச வாகனம், 6-ந் தேதி சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல் வாகனம், 7-ந் தேதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது.

    8-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார். இரவு கருட சேவை நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    9-ந் தேதி காலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 10-ந் தேதி சூரிய பிரபை வாகனமும், இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

    11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.

    இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் பிரமோற்சவ விழா நாட்கள் நடைபெறும் நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-17 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 11.26 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: அசுவினி காலை 7.45 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் ஸ்ரீ வரகுணமங்கை ஸ்ரீ பரமநாதன், வரகுணவல்லி சென்று தரிசித்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-நிறைவு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சிரமம்

    துலாம்- செலவு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- உற்சாகம்

    மகரம்-ஓய்வு

    கும்பம்-முயற்சி

    மீனம்-புகழ்

    • ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது.
    • மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பிராணநாதேஸ்வரர். மங்களநாதர் என்றும் இவரை அழைப்பார்கள். இந்தக் கோவிலில் எல்லாம் மங்களகரமானவையே! இறைவி 'மங்களநாயகி'. விநாயகர் 'மங்கள விநாயகர்'. விமானம் 'மங்கள விமானம்'. கோவில் 'மங்கள கோவில்'. தீர்த்தம் 'மங்கள தீர்த்தம்'.தல வரலாறு : எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி. ஆனால் இன்னொரு பெண்ணோ இறைவனுடன் போராடி தன் கணவனை மீட்டாள்.

    என்ன கதை அது? முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர். தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவாலயம் ஒன்று அமைக்க ஆர்வம் கொண்டார். ஆனால் அதற்கு நிறையப் பணம் வேண்டுமே! என்ன செய்வது? என்று யோசித்தார். வரி வசூலில் வரும் பணம் யாவும், அலைவாணர் மூலமே கஜானாவுக்குச் செல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மேல் இருந்த பக்தியால் அலைவாணர் அந்தத் தவறை செய்யத் துணிந்தார். ஆம்! வரி வசூலில் வசூலான பணம் முழுவதையும், கோவில் கட்டுவதில் செலவழிக்கத் தொடங்கினார். கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. அரசின் வரிப்பணத்தை அமைச்சர் கோவில் கட்ட செலவிடுகிறார் என்று கேள்விப்பட்ட மன்னன் கோபம் கொண்டான். மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள். மனமிறங்கினர் இறைவனும், இறைவியும். இறந்து போன அலைவாணர், உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல எழுந்து வந்தார். தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் 'பிராண நாதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி 'மங்கள நாயகி' என அழைக்கப்படுகிறார்.

    வழிபாடு : திருமங்கலக்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவனை, திருமால், பிரம்மதேவன், அகத்தியர், சூரியன், காளி ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இது திருமாங்கல்ய தோஷங்களை நீக்கும் தலம். மங்களாம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் அகலும். இங்கு ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னையின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு, பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. பிராண நாதேஸ்வரருக்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும்.

    கோவில் அமைப்பு : ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது. உள்ளே இரண்டு பிரகாரங்கள். இறைவன் பிராணநாதேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் தென்திசை நோக்கியபடி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் மங்களநாயகி. அம்மனின் முன்கரத்தில் மாங்கல்ய சரடுகள் தொங்குகின்றன. தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆறுமுகக்கடவுள், பிரம்மன் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பழமையான கோவிலை சம்பந்தரும், திருநாவுக் கரசரும் தம் தேவாரத்தில் சிறப்புறப் பாடியுள்ளனர். நவக்கிரக நாயகர்கள் சாப விமோசனம் பெற அருளிய, திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரையும், மங்களாம்பிகையையும் தரி சனம் செய்து விட்டு, அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று நவக்கிரக நாயகர்களையும் ஒருமுறை தரிசித்து வரலாமே! தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி.

    • விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
    • தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.

    நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

    நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.

    பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.

    பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

    • கண்ணாடி டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
    • கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும்.

    அனைவருடைய வாழ்விலும் சரி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்கை யாருக்குமே கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

    பொதுவாக உப்பு என்பது ஒரு ஆன்மிகம் பொருளாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்த கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் இதன் காரணமாக தான் கல் உப்பை ஆன்மிக பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    பரிகாரத்தை செய்யும் முறை: இரவு உறங்குவதற்கு முன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் அதாவது ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கல் உப்பு ஒரு கைப்பிடியளவு மற்றும் அந்த கண்ணாடி டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.

    இந்த டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்திற்கு அருகாமையில் வைத்து உங்கள் மனதில் நிறைவேற வேண்டிய விஷயங்களை மனதில் நினைத்து அந்த விஷயம் நிறைவேற வேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு உறங்க செல்லுங்கள்.

    பின் மறுநாள் இரவு இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் அல்லது நீரோட்டம் உள்ள இடத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் இது போன்று செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் நம்பிக்கையுடன் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றிபெறும்.

    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-16 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நண்பகல் 1.35 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ரேவதி காலை 9.10 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்காரம் சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-சுபம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- அமைதி

    மகரம்-பரிசு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-இனிமை

    • சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும்.
    • 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான மந்திரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

    திருமணம், குழந்தை பேறு இல்லாத வாழ்க்கை முழுமை பெறாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் பலவிதமான மன வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். பார்க்க கூடியவர்கள் அனைவரும் ஏன் இன்னும் வரன் அமையவில்லையா என்று கேட்டு மனதை புண்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஜாதகத்தை பார்ப்பார்கள். ஒவ்வொரு ஜாதக காரரை பார்த்து இதற்கு ஏதும் பரிகாரம் செய்யலாமா அல்லது ஏதும் கோவிலுக்கு செல்லலாமா என்று கேட்பார்கள்.இதற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் திருமண வரன் கிடைக்கும். அவை என்ன மந்திரம் என்று இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான பரிகாரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

    மேஷம், விருச்சிகம்

    மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

    ரிஷபம், துலாம்

    ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

    மிதுனம், கன்னி

    மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வர திருமண தடை நீங்கும்.

    கடகம், சிம்மம்

    கடகம், சிம்மம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வரவும்.

    தனுசு, மீனம்

    தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

    மகரம்

    தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கும்பம்

    தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 15 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி பிற்பகல் 3.58 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.46 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பாலபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருச்சேறை ஸ்ரீசாரநாதர், திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் தலங்களில் அலகங்கார திருமஞ்சன சேவை. கலிக்காம நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனிவாசனப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-பயணம்

    கடகம்- பரிவு

    சிம்மம்-பந்தம்

    கன்னி-பாசம்

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- ஓய்வு

    மகரம்-முயற்சி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-இன்பம்

    ×