search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saneeshwara Bagavan"

    • சிறப்புப் பூஜை, திருக்கல்யாணம், மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும்.
    • திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும்.

    சிறப்புப் பூஜை, திருக்கல்யாணம், மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும்.

    சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு, லாட சித்தர் பீடத்தில் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம், சோனைக் கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு சிறப்புப் பூசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

    சென்னையிலிருந்து தேனி அல்லது சின்னமனூர் நகருக்குச் செல்ல வேண்டும்.

    குச்சனூருக்கு தேனி மற்றும் சின்னமனூர் ஆகிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது.

    திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    • குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
    • சனீஸ்வர பகவானுக்கு “காகம்“ வாகனமாகவும், “எள்” தானியமாகவும் இருக்கிறது.

    இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது.

    இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.

    சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது.

    சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது.

    இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.

    அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.

    இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.

    • அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான்.
    • அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான்.

    இப்பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினமும் இறைவனிடம் வேண்டி வந்தான்.

    இப்படி அவன் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது.

    அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான்.

    அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான்.

    அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர்.

    இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான்.

    மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான்.

    இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது.

    சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானான். மிகவும் துன்பமடைந்தான்.

    தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்துத் தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

    இவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார்.

    அவர், "முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடிக்கிறது.

    அவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன.

    இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்.

    உன் தந்தையின் முற்பிறவி பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன." என்றார்.

    சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன், வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான்.

    அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

    சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழரை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார்.

    அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் "இந்த ஏழரை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது.

    தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்" என்று சொல்லி மறைந்தார்.

    பின்பு அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.

    சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் தன்னுடைய வழிபாடு,

    சனி தோசம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்,

    அந்த செண்பகநல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து

    வழிபாட்டுத் தலமாக்கினான். இதன்பிறகு இந்த செண்பகநல்லூர், குச்சனூர் என்று ஆகிவிட்டது.

    "தினகரன் மான்மியம்" என்கிற பெயரில் வெளியான பழமையான நூலில் இந்தத் தலத்திற்கான வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

    • சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.
    • தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர்.

    சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.

    சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும்.

    மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.

    தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

    நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டினார்.

    நவக்கிரகங்களில் தான் மட்டுமே அதிக பலத்துடன் இருக்க வேண்டும் என்றும், அத்துடன் தன் பார்வை பட்டால் மற்றவர்கள் எல்லா பலமும் இழந்து விடவேண்டும் என்றும் ஈசனிடம் வரம் கேட்டார் சனி பகவான்.

    சிவபெருமான், சனிபகவானின் இந்த வேண்டுகோளையும் ஏற்று, நவக்கிரகங்களில் அதிக பலத்தையும், விண்ணுலகம், மண்ணுலகம் அனைத்தையும் அவரது ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சிபுரியும் பெருமைக்கு உரிய கடவுளாக்கினார்.

    இயம தர்மராசாவும், தாம் உயிரைப் பறிக்கும் தொழிலைச் செய்வதால் எம்மோரும் தம்மை குறைவாக மதிக்கின்றனர் என எண்ணி தவமிருந்து இறைவனிடம் "தர்மராசா" என்னும் பட்டத்தினைப் பெற்றார்.

    • திருநள்ளாறு தலத்தில் இப்படிதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த கட்டுபாடும் கிடையாது.
    • திருநள்ளாறு தலத்துக்கு தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.

    1. திருநள்ளாறு தலத்தில் இப்படிதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த கட்டுபாடும் கிடையாது. உங்கள் வசதிக்கு ஏற்ப, உங்கள் சக்திக்கு ஏற்ப வழிபடலாம்.

    2. திருநள்ளாறு தலத்தில் கால் வைத்தாலே போதும், ஏழரை சனி, அஷ்டமத்துவ சனி, சனி திசை போன்ற அனைத்து விதமான சனி தோஷங்களும் நிவர்த்தி ஆகிவிடும்.

    3. திருநள்ளாறு தலத்துக்கு தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள். சனிக் கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை அதிகரிக்கும்.

    4. திருநள்ளாறு தலத்தில் கையெடுத்து கும்பிட்டு நமஸ்காரம் செய்யக்கூடாது என்று சிலர் புரளி கிளப்பி விட்டுள்ளனர். இதை பக்தர்களும் மூட நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறார்கள். ஆலயத்துக்குள் வந்துவிட்டாலே ஈசனை வழிபட வேண்டும் என்பது விதியாகும் என்று சிவாச்சாரியார் டி.ராஜா சுவாமிநாத குருக்கள் தெரிவித்தார்.

    5. சிலர் திருநள்ளாறு தலத்துக்கு வந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதுவும் பக்தர்களிடையே பரவியுள்ள மூட நம்பிக்கை என்று ராஜா சுவாமிநாத குருக்கள் தெரிவித்தார்.

    6. பொதுவாக சிலர் மற்றவர்களை திட்டும்போது "சனியனே" என்று திட்டுவதுண்டு. இப்படி திட்டுவது சனிபகவானை அவமரியாதை செய்வதற்கு சமமாகும். 'சனியனே' என்று சொல்ல சொல்ல அது சனீஸ்வர பகவானை கோபப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    7. ஒவ்வொருவரது வாழ்விலும் 4 தடவை சனீஸ்வர பகவான் வருவார். மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி என்று அதை சொல்வார்கள். அதை ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப திருநள்ளாறு சென்று வழிபட்டால் முழுமையான பலன்களை பெறலாம்.

    8. வெளியூர்களில் இருந்து திருநள்ளாறு தலத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் நேரிடையாக வீட்டுக்குதான் செல்ல வேண்டும். வேறு கோவில்களுக்கு செல்லக்கூடாது என்று விவரம் தெரியாத ஜோதிடர்கள் சொல்வதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை. திருநள்ளாறு தலத்தில் வழிபட்டு பிறகு மற்ற தலங்களுக்கு தாராளமாக செல்லலாம்.

    9. திருநள்ளாறு தலத்தில் நவக்கிரக ஹோமம் நடத்தினால் நிச்சய வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.

    10. திருநள்ளாறில் வழிபட்டால் நோய்கள் நீங்கும். செல்வம் பெருகும். கல்வி வளரும். திருமண யோகம் உண்டாகும். களத்தர தோஷம் நீங்கும். விவசாயம் செழிக்கும். எண்ணை வியாபாரம் மேம்படும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    11. புதிதாக வீடு, நிலம் வாங்க விரும்புபவர்கள் திருநள்ளாறு தலத்தில் வழிபட்டு விட்டு சென்றால் வெற்றி உண்டாகும். பூமி தொடர்பான வழக்குகளில் திருநள்ளாறு சனிபகவான் வெற்றி தேடித்தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    12. திருநள்ளாறு தலத்துக்கு செல்பவர்கள் தவறாமல் எள் தீபம் ஏற்றுவது நல்லது. இந்த எள் தீபத்தை ஆலயத்திலேயே தருகிறார்கள். ஒரு நபர் ஒரு தீபம் ஏற்றினால் போதுமானது. சிலர் தங்கள் வயதுக்கு ஏற்ப 30 வயது என்றால் 30 தீபம் ஏற்றுகிறார்கள். அப்படி ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

    13. திருநள்ளாறு தலமானது 100 சதவீதம் திருப்பதி தலத்துக்கு இணையானது. திருநள்ளாறில் ஈசனும், திருப்பதி வெங்கடாஜலபதியும் கருணை காட்டாமல் எந்த பக்தனும் அந்த தலங்களுக்கு செல்ல இயலாது.

    14. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அதே போன்றுதான் திருநள்ளாறுக்கு சென்றாலும் திருப்பம் வரும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பம் மட்டுமின்றி வாழ்வில் முன்னேற்றத்தையும் தரும் தலமாக திருநள்ளாறு தலம் திகழ்கிறது.

    15. திருநள்ளாறில் தர்ப்பண்ணேஸ்வரருக்கு காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும் அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.

    16. சனீஸ்வர பகவானுக்கு கருநீல வஸ்திரம் சாத்துவது நல்லது. பக்தர்கள் வஸ்திரங்களை உபயமாக எடுத்து கொடுக்கலாம்.

    17. சில பக்தர்கள் திருநள்ளாறுக்கு ஏழரை சனி தோஷம் இருப்பவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டும் என்று தவறான கருத்துடன் இருக்கிறார்கள். இத்தகைய தகவல் பரவி இருப்பதில் உண்மையில்லை. எல்லா பக்தர்களும், எல்லா நாட்களும் திருநள்ளாறு தலத்துக்கு சென்று வழிபடலாம்.

    18. திருநள்ளாறு தலத்தில் வழிபாடு செய்ய சிறப்பு விதிகள் எதையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. மற்ற ஆலயங்களில் நீங்கள் எப்படி வணங்குகிறீர்களோ அப்படி வழிபட்டாலே போதும்.

    19. திருநள்ளாறு செல்பவர்கள் நளத் தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்பது அவசியமானது. புனித நீராட முடியாதவர்கள் அந்த தீர்த்தத்தை எடுத்து தலையிலாவது தெளித்துக் கொள்ள வேண்டும்.

    20. திருநள்ளாறு நள தீர்த்தத்தில் உள்ள தண்ணீர் வாரத்துக்கு ஒரு தடவை முழுமையாக மாற்றப்படுகிறது.

    21. திருநள்ளாறு தலத்துக்கென தங்க ரதம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த தொகைகளை அன்பளிப்பாக செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுவாக சனீஸ்வர பகவான் உக்கிர நிலையில் இருப்பதாக சொல்வார்கள்.
    • ஆனால் திருநள்ளாறு தலத்தில் அவர் மிகவும் சாந்தமான நிலையில் இருக்கிறார்.

    திருநள்ளாறு தர்ப்பண்ணேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான் அனுகிரக மூர்த்தியாக திகழ்கிறார்.

    பொதுவாக சனீஸ்வர பகவான் உக்கிர நிலையில் இருப்பதாக சொல்வார்கள்.

    ஆனால் திருநள்ளாறு தலத்தில் அவர் மிகவும் சாந்தமான நிலையில் இருக்கிறார்.

    எனவே திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபட்டால் நீங்கள் கேட்டது எல்லாம் கிடைக்கும்.

    இழந்த பதவி தேடி வரும். பதவி உயர்வு தானாக வரும். செல்வங்கள் குவியும். செல்வாக்கு அதிகரிக்கும்.

    குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். புகழ் ஓங்கும்.

    இப்படி சனீஸ்வர பகவான் வேண்டிய வரம்களை எல்லாம் வாரி வழங்கும் கற்பகவிருட்சமாக இருக்கிறார்.

    • தேவர்களை புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டுச் சனிபகவான் நளன் மேல் கோபம் கொண்டார்.
    • இத்தலத்து சனி பகவான் சன்னதி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    நிடத நாட்டு மன்னனான நளன், விதர்ப்ப நாட்டு வீரசேனன் மகள் தமயந்தியைச் சுயம்வரத்தின் மூலமாக மணந்து கொண்டான்.

    தேவர்களை புறக்கணித்து நளனைத் தமயந்தி மணந்தது கேட்டுச் சனிபகவான் நளன் மேல் கோபம் கொண்டார்.

    நளனிடம் ஏதும் குறை காணாது 12 ஆண்டுகள் காத்திருந்து, நளன் ஒருநாள் சந்தியா வந்தனம் செய்யும்போது காலில் நீர் பட்டும் படாமலும் கழுவிச் சென்ற குற்றங்கண்டு அவனை பற்றினார்.

    இதனால் நளன் கடும் துன்பங்களை அனுபவித்தார். துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கிய பின்னருங்கூட, சனியின் வேகம் தணியாமல் தீர்த்த யாத்திரையை நாரதர் உபதேசப்படி மேற்கொண்டான்.

    விருத்தாசலம் சிவ ஆலயத்தில் சந்தித்த பரத்வாஜ முனிவர் திருநள்ளாறு சென்று வழிபடுமாறு அறிவுரை கூறினார்.

    அவ்வாறே நளன் திருநள்ளாறு அடைந்து, தீர்த்தம் உண்டாக்கி, நீராடி, இறைவனை வழிபட, திருநள்ளாற்று ஆலயத்துக்குள் நுழைந்தான்.

    அவனை பற்றி இருந்த சனி உள்ளே நுழைய அஞ்சி அங்கேயே தங்கி விட்டார்.

    இதனால் இத்தலத்து சனி பகவான் சன்னதி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    • திருநள்ளாறு தலமானது ஸ்ரீ சனிபகவானுக்கு மட்டுமே உரிய கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.
    • நல்ல யோகத்தை, நீண்ட ஆயுளையும் வெற்றியையும் மன நிம்மதியையும் கொடுக்கும்.

    திருநள்ளாறு தலமானது ஸ்ரீ சனிபகவானுக்கு மட்டுமே உரிய கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.

    ஸ்ரீ சொர்ண கணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீபிராணாம்பிகை பின்னர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் மற்றும் முக்கிய சன்னதிகளைக் கொண்டவை ஆகும்.

    இந்த மூர்த்திகள் தனிச்சிறப்பும் புராதன பெருமையும் அருணகிரிநாதராலும் நால்வராலும் பாடல் பெற்றவையாகும்.

    பக்தர்கள் திருநள்ளாருக்கு சனிக்கிழமையில்தான் செல்ல வேண்டும் என்பதும், பூஜைகள் அனைத்தும் சனிக்கிழமைகளில் மட்டும் செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தி தவறாக வழிக்காட்டுகின்றனர்.

    பக்தர்கள் இதை மனதில் வைத்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்து இருந்து சில நிமிடம் மட்டுமே ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகின்றது.

    மேலும் அபிஷேகம் போன்றவற்றை சிறிய இடத்தில் நின்று சிரமப்பட்டு தரிசிக்கின்றனர்.

    ஆனால் சனிபகவானை வாரத்தின் அனைத்து நாட்களிலும் தரிசனம் செய்து பூர்ண அனுக்கிரகத்தை பெற முடியும்.

    புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்யும் பக்தர்கள் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும்.

    அது மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் சனி ஹோரை என்று சொல்லப்படும் நேரம் 1 மணி நேரம் உள்ளது.

    ராகு ஹோரை காலத்தில் ராகுவை வழிபடுவது நல்லதை கொடுக்கும்.

    அதே போல் சனிஹோரையில் தரிசனம், பூஜைகள் செய்வது நல்ல யோகத்தை, நீண்ட ஆயுளையும் வெற்றியையும் மன நிம்மதியையும் கொடுக்கும்.

    • சிறு சிறு சிரமங்களை மட்டும் காண்பித்து நேர்வழியை நினைவூட்டி அருள் தருவார்.
    • அவர் பரம கருணாமூர்த்தி என்றே சொல்ல வேண்டும்.

    கிரகங்களின் கையில் நம் வாழ்க்கை உள்ளது.

    குறிப்பாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆயுட்காரனாக பலரது வாழ்க்கையில் குறிப்பிட்ட இடத்தை பெறுகிறார்.

    ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு போவதற்கு அதிகப்படியாக சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்து கொள்ளும் கிரகமாகவும் விளங்குகிறார்.

    இந்த இரண்டரை ஆண்டுகளில் பலருக்கு பலவிதமான மாற்றத்தையும் திருப்பங்களையும் ஏற்படுத்துகிறார்.

    ஸ்ரீ சனிபகவான் கெடுதலையும் தீமையையும் தரக் கூடிய கிரகம் அல்ல அவர் பரம கருணாமூர்த்தி என்றே சொல்ல வேண்டும்.

    ஸ்ரீ சனிபகவான் சிரமங்களையும் கெடுதல்களையும் அவர் பிரவேசிக்கும் ஸ்தானத்தை அடிப்படையாகக்

    கொண்டும் பூர்வ ஜென்மம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தினை அடிப்படையாகக் கொண்டும்

    அளவோடு கெடுதல்களை செய்வார்.

    முற்பிறவியில் கடுமையானப் பாவங்கள் செய்தவர்கள் இப்போதைய பிறவியில் அசுப பலன் தரும் ஸ்தானத்திற்கு

    வரும் போது ஏழரைச் சனி அஷ்டமி சனி காலங்களில் தீமையான பலன்களையும் குற்றத்திற்கு தகுந்த

    தண்டனையையும் மட்டுமே அவர் அளித்தருள்வார்.

    சனி பகவானை போன்று கொடுப்பாரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பார்களே அதன்படி அவரின் முன்னால் படித்தவர் பதவி உள்ளவர் பணம் படைத்தவர் ஏழை என்ற எந்த பாகுபாடும் அவரிடம் கிடையாது.

    அவர் அவருக்கு உரிய பலன்களை அந்தந்த காலங்களில் சஞ்சாரத்தின் போது உணர்த்தும் விதமாகவும் மனம் மாறும் விதமாக அளிப்பார்.

    ஆனால் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் இருந்தாலும், தெய்வ பக்தியுடன் உள்ளவர்கள்,

    சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்த அப்பாவிகள் செய்த பாவத்திற்கு உண்மையாக மனம் வருந்துபவர்கள்,

    தர்ம சிந்தனை உள்ளவர்கள் பிறருக்கு எப்போதும் மனதால் தீங்கும் தொல்லைகளையும் கொடுக்காதவர்கள்,

    இவர்களுக்கு சலுகைகள் கொடுப்ப தோடும், திருந்தவும் சந்தர்ப்பங்களைக் கொடுத்து ஏழரைச் சனியின்,

    அஷ்டமத்து சனியின் காலத்தின் போது கூட தண்டிப்பதில்லை.

    சிறு சிறு சிரமங்களை மட்டும் காண்பித்து நேர்வழியை நினைவூட்டி அருள் தருவார்.

    மனிதனாக அவதாரம் எடுத்து இருப்பது அவனோடு அருளால்தான் என்று இந்த புவியில் கூடுமானவரை தீமை செய்யாமல் எல்லோருக்கும் நன்மைகளை செய்து வந்தால் நிச்சயம் அவரின் அருள் கிடைக்கும்.

    இவ்வாறு தனக்கென ஒரு நியாயத்தையும், நீதியையும், தர்மத்தையும் அடிப்படையாக கொண்ட

    சட்ட சாம்ராஜ்ஜியத்தை கொண்டு உரிய காலத்தில் உரிய தண்டனையே கொடுப்பதால் சனி பகவான் நீதியை நிலைநாட்டுபவர் ஆகிறார்.

    • அந்த ஏழரை வருஷங்களில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும்.

    "நமஸ்தே கோண ஸம்ஸ்தாய

    பிங்களாய நமோஸ்துதே

    நமஸ்தே பப்ருரூபாய

    குஷணாயக நமோஸ்துதே

    நமஸ்தே ரெளத்ர தேஹாய

    நமஸ்தே சாந்த காயச

    நமஸ்தே மந்த ஸம்ஜ்ஞாய

    ஸநைஸ்சர நமோஸ்துதே"

    என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் ஏழரை சனி உள்ளவர்கள் சனீஸ்வரனின் கருணையைப் பெறுவார்கள்.

    அந்த ஏழரை வருஷங்களில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும்.

    சனீஸ்வரன் காயத்ரி

    "காக த்வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தந்நோ மந்த ப்ரசோதயாத்"

    இதை தினசரி பாராயணம் செய்வது நல்லது.

    • சனிக்கிழமைதோறும் ஒரு வேளை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
    • ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    1. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எதுவும் சாப்பிடாமல் முழுமையாக உண்ணா நோன்பு இருந்து காகத்திற்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.

    2. சனிக்கிழமைதோறும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து ஸ்ரீ சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.

    3. சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி படுக்கும் போது அதை தலைக்கு அடியில் வைத்து படுத்திருந்து காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் இதை செய்யலாம்.

    4. ஒரு தேங்காயை ஸ்ரீ சனிபகவான் கோவிலில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம் அல்லது திலதீபம் ஏற்றி வழிபடலாம்.

    5. ஸ்ரீ சனிபகவானுக்கு நல்லெண்ணை, பால், தயிர் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி எள்ளு சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

    6. ஸ்ரீ சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக ஆராதனைகளும் சிறப்போடு செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்து பயன்பெறலாம்.

    7. எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கும், ஸ்ரீ சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.

    8. ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.

    9. அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது ஸ்ரீ சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரம் அன்றைக்கோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களைத்தரும்.

    ×