search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நீதியை நிலைநாட்டும் ஸ்ரீ சனிபகவான்
    X

    நீதியை நிலைநாட்டும் ஸ்ரீ சனிபகவான்

    • சிறு சிறு சிரமங்களை மட்டும் காண்பித்து நேர்வழியை நினைவூட்டி அருள் தருவார்.
    • அவர் பரம கருணாமூர்த்தி என்றே சொல்ல வேண்டும்.

    கிரகங்களின் கையில் நம் வாழ்க்கை உள்ளது.

    குறிப்பாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆயுட்காரனாக பலரது வாழ்க்கையில் குறிப்பிட்ட இடத்தை பெறுகிறார்.

    ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு போவதற்கு அதிகப்படியாக சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்து கொள்ளும் கிரகமாகவும் விளங்குகிறார்.

    இந்த இரண்டரை ஆண்டுகளில் பலருக்கு பலவிதமான மாற்றத்தையும் திருப்பங்களையும் ஏற்படுத்துகிறார்.

    ஸ்ரீ சனிபகவான் கெடுதலையும் தீமையையும் தரக் கூடிய கிரகம் அல்ல அவர் பரம கருணாமூர்த்தி என்றே சொல்ல வேண்டும்.

    ஸ்ரீ சனிபகவான் சிரமங்களையும் கெடுதல்களையும் அவர் பிரவேசிக்கும் ஸ்தானத்தை அடிப்படையாகக்

    கொண்டும் பூர்வ ஜென்மம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தினை அடிப்படையாகக் கொண்டும்

    அளவோடு கெடுதல்களை செய்வார்.

    முற்பிறவியில் கடுமையானப் பாவங்கள் செய்தவர்கள் இப்போதைய பிறவியில் அசுப பலன் தரும் ஸ்தானத்திற்கு

    வரும் போது ஏழரைச் சனி அஷ்டமி சனி காலங்களில் தீமையான பலன்களையும் குற்றத்திற்கு தகுந்த

    தண்டனையையும் மட்டுமே அவர் அளித்தருள்வார்.

    சனி பகவானை போன்று கொடுப்பாரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பார்களே அதன்படி அவரின் முன்னால் படித்தவர் பதவி உள்ளவர் பணம் படைத்தவர் ஏழை என்ற எந்த பாகுபாடும் அவரிடம் கிடையாது.

    அவர் அவருக்கு உரிய பலன்களை அந்தந்த காலங்களில் சஞ்சாரத்தின் போது உணர்த்தும் விதமாகவும் மனம் மாறும் விதமாக அளிப்பார்.

    ஆனால் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் இருந்தாலும், தெய்வ பக்தியுடன் உள்ளவர்கள்,

    சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்த அப்பாவிகள் செய்த பாவத்திற்கு உண்மையாக மனம் வருந்துபவர்கள்,

    தர்ம சிந்தனை உள்ளவர்கள் பிறருக்கு எப்போதும் மனதால் தீங்கும் தொல்லைகளையும் கொடுக்காதவர்கள்,

    இவர்களுக்கு சலுகைகள் கொடுப்ப தோடும், திருந்தவும் சந்தர்ப்பங்களைக் கொடுத்து ஏழரைச் சனியின்,

    அஷ்டமத்து சனியின் காலத்தின் போது கூட தண்டிப்பதில்லை.

    சிறு சிறு சிரமங்களை மட்டும் காண்பித்து நேர்வழியை நினைவூட்டி அருள் தருவார்.

    மனிதனாக அவதாரம் எடுத்து இருப்பது அவனோடு அருளால்தான் என்று இந்த புவியில் கூடுமானவரை தீமை செய்யாமல் எல்லோருக்கும் நன்மைகளை செய்து வந்தால் நிச்சயம் அவரின் அருள் கிடைக்கும்.

    இவ்வாறு தனக்கென ஒரு நியாயத்தையும், நீதியையும், தர்மத்தையும் அடிப்படையாக கொண்ட

    சட்ட சாம்ராஜ்ஜியத்தை கொண்டு உரிய காலத்தில் உரிய தண்டனையே கொடுப்பதால் சனி பகவான் நீதியை நிலைநாட்டுபவர் ஆகிறார்.

    Next Story
    ×