என் மலர்
ஆன்மிகம்
- இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.
- இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.
திருஷ்டி என்பது மிகவும் பொல்லாதது என்று கூறுவார்கள். கல்லடி பட்டாலும் படலாம். ஆனால் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள். ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும் பொறாமை எண்ணத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. எவர் ஒருவர், தம்மை பார்த்து தீய எண்ணத்துடனும் பொறுமையுடனும் கண் இமைக்காமல் பார்க்கிறாரோ அப்போது நமக்கு திருஷ்டி என்பது ஏற்படும். இதனை போக்குவதற்கு தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிக்கும் முறை என்று செய்து வந்தார்கள். கல் உப்பு, வர மிளகாய், கடுகு, எலுமிச்சை பழம் என பல பொருட்களை கொண்டு மந்திரம் திருஷ்டி கழிப்பார்கள். அப்படி திருஷ்டி கழிக்கும் போது ஒரு மந்திரத்தை கூறுவார்கள்.
அந்த மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்கும் போது எந்த விதமான திருஷ்டியாக இருந்தாலும் நம்மை விட்டு நீங்கி விடும்.
திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய தமிழ் மந்திரம்:
பாம்பு கண்ணு, பல்லி கண்ணு பல்லியோட போ
பேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போ
பிச்சை கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ
உங்கள் குடும்பத்தில் திருஷ்டி அதிகமாக உள்ளவர்களை கிழக்கு பார்க்க உட்கார வைத்து உப்பு, வர மிளகாய் மற்றும் கடுகு கொண்டு தலையை இடது புறமாக மூன்று முறையும், வலது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். அப்படி சுற்றும்போது இந்த மந்திரத்தை மூன்று கூற வேண்டும். அதன் பிறகு, திருஷ்டி கழித்த பொருட்களை தீயில் போட்டு விட வேண்டும். இம்முறையில் தான் அக்காலத்தில் உள்ளவர்கள் திருஷ்டி கழிப்பார்கள்.
மேலும், நீங்கள் எலுமிச்சைப்பழம் கொண்டு திருஷ்டி கழிக்கும்போது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூறி திருஷ்டி கழிக்க வேண்டும்.
மஞ்சள் வர்ண புளித்த மாரி!
ரத்த வீர ராசா கன்னி,
மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா!வா!
இவ்வாறு நீங்கள் திருஷ்டி கழிக்கும்போது இந்த மந்திரங்களை கூறி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் திருஷ்டி அனைத்தும் விலகும்.
- 5-ந்தேதி அமாவாசை.
- நாளை பிரதோஷம்
2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)
* சர்வ ஏகாதசி.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்
* பிரதோஷம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு,
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
4-ந்தேதி (வியாழன்)
* சிதம்பரம் சிவபெருமான் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.
5-ந்தேதி (வெள்ளி)
* அமாவாசை.
* ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* மேல்நோக்கு நாள்.
6-ந்தேதி (சனி)
* ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி உற்சவம் ஆரம்பம்.
* திருவில்லிபுத்தூர் திருவி பெரியாழ்வார் விழா தொடக்கம்
* திருநள்ளார் சனி பகவான் சிறப்பு அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
7-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு.
* ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி.
* ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி சிம்ம வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
8-ந்தேதி (திங்கள்)
* ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி அனுமன் வாகனத்தில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
- தஞ்சையில் வடபத்ரகாளியாக அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.
- அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள்.
அன்னை பராசக்தியானவள், துர்க்கையாக, காளிதேவியாக என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து, தீமையின் உருவமாகத் திகழ்ந்த பல அரக்கர்களை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் சொல்கிறது.
வாழ்வில் வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், அனைவரும் தெய்வத்திடம் வேண்டுவது 'செய்யும் செயல்களில் வெற்றிபெற அருள்புரிய வேண்டும்' என்பதைத்தான். அப்படி சோழர்களுக்கு வெற்றியை தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.

தல வரலாறு
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர்.
அன்னையும், அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப, நிசும்பர்கள், அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ, "இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன்" என்று கூறினாள்.
இதையடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால், இந்த அன்னையை 'நிசும்பசூதனி' என்று அழைத்தனர்.
சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள், இந்த நிசும்பசூதனி. கி.பி. 850-ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி, பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார்.
பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன்னர், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.
சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் 7 அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தெரியும்படியான தோற்றத்தில் காட்சி தருகிறாள்.
அஷ்ட திருக்கரங்களுடன் திகழும் இந்த அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள். நிசும்பனின் தலையைக் கொய்து, அந்த தலை மீது தன் திருவடியை வைத்து, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், திரிசூலம் ஆகியவற்றை தாங்கியபடி, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி இருக்கிறாள்.
இந்த கோவில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோலத்திலான உருவம் காணப்படுகிறது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால், ராகு - கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும்.
இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.
இக்கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை, 21 நாட்களுக்கு ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணிவரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோவில் தெரு வழியாக இக்கோவிலை சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
- வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
- பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும்.
சத்தியவதன் என்ற அரசனின் வழியில் வந்தவன், சத்ரஜித். இவன் சூரிய பகவான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். சூரிய பகவானை தினமும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுக்கு சூரிய பகவானும் அருள்புரிந்து வந்தார்.
ஒரு சமயம் சத்ரஜித்துக்கு, சூரிய பகவான் காட்சி கொடுத்தார். மிகுந்த ஒளியுடன் காணப்பட்டதால் சூரிய பகவானின் முழு உருவத்தையும் சத்ரஜித்தால் பார்க்க முடியவில்லை.
அவன் சூரிய பகவானைப் பார்த்து, "இறைவா.. நீங்கள் மிகுந்த ஒளியுடன் இருக்கிறீர்கள். ஆகாயத்தில் பார்க்கும் பொழுது, உங்களின் முழு உருவத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் உங்களை தரிசனம் செய்ய முடியாத வருத்தம் எனக்கு ஏற்படுகிறது. உங்களின் திருவடி முதல் சிரசு வரை நான் தரிசிக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினான்.
அதற்கு சூரிய பகவான், "என் கழுத்தில் உள்ள சியாமந்தக மணி அதிக ஒளியை வெளிப்படுத்துவதால்தான், உன்னால் என்னை பார்க்க முடியவில்லை" என்று கூறி, தன் கழுத்தில் இருந்த சியாமந்தக மணியை கழற்றி வைத்தார்.

அதன்பிறகு சூரிய பகவானை முழுமையாக தரிசனம் செய்யும் பாக்கியம், சத்ரஜித்துக்கு கிடைத்தது. சூரியனின் கழுத்தில் கிடந்த சியாமந்தக மணி தனக்கு கிடைக்க வேண்டும் என்று சத்ரஜித் விரும்பினான். அவனது விருப்பத்தை அறிந்து கொண்ட சூரிய பகவானும், சியாமந்தக மணியை அவனுக்கு பரிசாக அளித்து விட்டு மறைந்தார்.
இந்த சியாமந்தக மணி, ஒரு நாளைக்கு 8 பாரம் (ஒரு கழுதையால் சுமக்கக் கூடிய அளவு) பொன்னை அளிக்கக்கூடியது. இந்த மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு, சூரிய பகவானே நடந்து வருவது போல் துவாரகையை நோக்கி நடந்து சென்றான் சத்ரஜித். துவாரகை மக்கள் "சூரிய பகவானே வருகிறார்" என்பதாக பேசிக் கொண்டனர்.

இதை அறிந்த கிருஷ்ண பகவான், 'இந்த ரத்தினம் நல்லவர்கள் கையில் இருக்க வேண்டியது, சத்ரஜித் கழுத்தில் இருப்பது தகாது. இது இருக்க வேண்டியது உக்கிரசேன அரசனின் அரண்மனை பொக்கிஷத்தில்தான்' என்று எண்ணினார்.
இந்த எண்ணத்தை தெரிந்து கொண்ட சத்ரஜித், கிருஷ்ணரால் தனக்கு ஏதாவது துன்பம் வரலாம் என்று நினைத்து, சியாமந்தக மணியை தன்னுடைய தம்பி பிரசேனனிடம் கொடுத்து வைத்தான்.
சியாமந்தக மணிக்கு ஒரு குணம் உண்டு. தகுதி இல்லாதவர், சுத்தமற்றவர் கையில் அது சென்றால், அது அந்த நபருக்கு கெடு பலன்களையே ஏற்படுத்தும்.
பிரசேனன், சியாமந்தக மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு கம்பீரமாக காட்டில் வேட்டையாடச் சென்றான். ஒளி வீசும் அந்த மணியைக் கண்ட ஒரு சிங்கம், பிரசேனனையும், அவனது குதிரையையும் கொன்று விட்டு, சியாமந்தக மணியை ஏதோ ஒரு மாமிசம் என்று எண்ணிக் கொண்டு வாயில் கவ்விச் சென்றது.
அந்த நேரத்தில் கரடிகளின் தலைவனான ஜாம்பவான் அங்கு வந்தார். அவர் சிங்கத்தின் வாயில் இருந்த சியாமந்தக மணியை கண்டதும், சிங்கத்தைக் கொன்று விட்டு, அதை எடுத்துச் சென்று தன் மகன் சுகுமாரன் விளையாடுவதற்காக அவன் தூங்கும் தொட்டிலில் கட்டி வைத்தார்.
இதற்கு இடையில் காட்டிற்குச் சென்ற பிரசேனன், பல நாட்களாக திரும்பி வராததால், சியாமந்தக மணிக்காக கிருஷ்ணன்தான், பிரசேனனைக் கொன்று விட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்த வீண் பழி, கிருஷ்ணனின் காதிற்கும் சென்றது.
அவர் 'இதை இப்படியே விடக்கூடாது. தன் மீது விழுந்த பழியை நீக்க வேண்டும்' என்று நினைத்து, தன் யாதவ சேனைகளுடன் காட்டிற்குச் சென்று பிரசேனனை தேடினார். அப்பொழுது பிரசேனனின் குதிரையின் காலடி தடம் இருப்பதைக் கண்டார்.
அதை பின்பற்றிச் சென்றபோது, பிரசேனனும், அவன் குதிரையும் ஒரு இடத்தில் கொல்லப்பட்டதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து ஒரு சிங்கத்தின் காலடித் தடம் இருப்பதைப் பார்த்தனர்.
அந்த தடத்தை பின்பற்றி செல்கையில், ஓரிடத்தில் சிங்கம் இறந்து கிடந்தது. அதற்கு அருகில் கரடியின் காலடித் தடம் தென்பட்டது. அதை பின்பற்றிச் செல்கையில், அது ஒரு குகையின் வாசலில் போய் முடிந்தது.
குகைக்குள் சென்று பார்க்க அனைவரும் தயங்கினர். உடனே கிருஷ்ண பகவான் தனியாக அந்த குகைக்குள் சென்றார். அப்பொழுது ஒரு பெண், ஜாம்பவானின் மகனை கையில் வைத்துக்கொண்டு, சியாமந்தக மணியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனை பார்த்தவுடன் பயந்து அலற, அந்த சப்தம் கேட்டு ஜாம்பவான் அங்கு ஓடி வந்தார்.

கிருஷ்ண பகவானுக்கும், ஜாம்பவானுக்கும் யுத்தம் ஆரம்பமாயிற்று. அவர்கள் இருவரும் 21 நாட்கள் தொடர்ந்து யுத்தம் செய்தனர். ஒருவருக்கொருவர் கைகளால் அடித்துக் கொண்டு மல்யுத்தம் புரிந்தனர். இறுதியில் ஜாம்பவான் தன் மேல் விழும் அடி அத்தனையும் ராமபிரானின் அரவணைப்பு போல் தோன்றுவதை உணர்ந்தார்.
வந்துள்ளது நாராயணனின் அவதாரம் என்பதை அறிந்து கொண்ட அவர், கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தார். கிருஷ்ணனும் ஜாம்பவானிடம் மகிழ்ச்சியாக பேசினார். ஜாம்பவான், சியாமந்தக மணியை கிருஷ்ண பகவானிடம் கொடுத்துவிட்டு, தன் வளர்ப்பு மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த கதையை படிப்பவர்களுக்கு, வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.
- இன்று சர்வ ஏகாதசி.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-18 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 9.24 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: பரணி காலை 6.33 மணி வரை பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.51 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-தனம்
மிதுனம்-லாபம்
கடகம்-முயற்சி
சிம்மம்-போட்டி
கன்னி-நிறைவு
துலாம்- நலம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- ஆதரவு
மகரம்-புகழ்
கும்பம்-மாற்றம்
மீனம்-பரிசு
- இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
- நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களை நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களாக பலரும் கருதுகின்றனர். ஆனால் செவ்வாய்க் கிழமையை எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற தினமாக எவரும் பார்ப்பதில்லை. உண்மையில் செவ்வாய் கிழமைக்கு எந்த ஒரு மகிமையும் இல்லையா? இதுகுறித்து நமது ஆன்மிகம் கூறுவது என்ன? செவ்வாய்க்கிழமையில் நாம் எதை எல்லாம் செய்து என்னென்ன பலன்களை அடையலாம்? இப்படி பல தகவலைகளை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நவகிரகங்களுக்குள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகமாகும். செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனையும் அடைய முடியாது என்றும் சொல்வார்கள்.

முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் மௌன அங்காரக விரதம் ஒன்று பின்பற்றப்படுகிறது. தர்ம சாஸ்திரத்தில் இதை பற்றி மிகவும் சிறப்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன் பிரச்சனை உள்ளவர்கள் போன்றோர் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை பூஜை செய்தால் தோஷம் நீங்கும். அவர்களின் கடன் சுமையும் விரைவாகவே தீர்ந்துவிடும். அதேபோல் மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கும், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும். இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர உங்களது கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சினையில் இருந்து விரைவாக வெளிவர முடியும். ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் நோய் நொடியில்லாமல் நிறைவான செல்வங்கள் பெற்று இனிமையான வாழ்வினை அடைய முருகப் பெருமான் திருவருள் புரிவார். அதிலும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் இதனை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.
- பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.
- இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.
சக்ரபாணி திருக்கோவிலுக்கு தென்மேற்கில் அமைந்த இந்த திருக்கோவில், மற்ற கோவில்களை விட வித்தியாசமானது.
இங்கு இறைவன் பன்றி (வராகம்) முகத்தோடு காட்சியளிக்கிறார். தாயார் பூமாதேவி.
முன்னொரு சமயம் "இரண்யாட்சன்" என்ற ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டான்.
இதனால் பெரிதும் கலக்கமுற்ற வானவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று, நடந்ததை சொல்லி, பூமாதேவியை அந்த அசுரனிடமிருந்து காக்கும்படி வேண்டினார்கள்.
அந்த அசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட பூமியைக் கொண்டு வர திருமால் வராக அவதாரம் எடுத்தார். பாதாளம் புகுந்தார்.
அந்த இரண்யாட்சனுடன் கடுமையாக போர்புரிந்து தனது ஒரு கொம்பினால் அவனையும் அவனை சார்ந்த அசுரர் கூட்டத்தையும் அழித்தார்.
அசுரர்கள் கொல்லப்பட்ட பின்பு வராகமூர்த்தி, தனது இன்னொரு கொம்பினால் பூமியை பாதாள உலகத்திலிருந்து தாங்கி, மீட்டுக்கொண்டு மேலே வந்தார்.
பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.
இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.
திருமாலை சரண் அடைந்தால் நாம் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்பதற்கு அடையாளமாக விளங்குவதுதான் குடந்தையில் உள்ள இந்த ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்.
- கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.
- ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.
இந்த கோவில் அழகான பல்வகையான மந்திர-தந்திர சிறப்புகளைக் கொண்டது. காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில் இத்தலம் அமைந்துள்ளது.
கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.
மூலவர் சாரங்கபாணி, எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார். தாயார் விஜயவல்லி, பஞ்சமுக ஆஞ்சநேயர் இங்கிருக்கிறார்.
சக்ரபாணியின் எட்டு கைகளுடன் கூடிய திருக்கோலத்தை காண விரும்பிய பிரம்மா, சூரியன், அக்னி, திருமகள் ஆகியோருக்கு பெருமாள் பிரத்ட்சயம் ஆனார் என்பது மிகச்சிறப்பு.
இங்கு எழுந்தருளியிருக்கிற பெருமாள் சக்கர வடிவமாக தாமரைப் பூவில் அறுகோண யந்திரத்தில் காட்சி தருகிறார்.
முன்னொரு சமயம் குடந்தையில் தங்கி தவம் செய்த தேவர்களை முனிவர்களை, அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்து துன்புறுத்தினர்.
ஒருகால கட்டத்தில் தொந்தரவு, அளவுக்கு அதிகமாகப் போகவே, அவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்ற பெருமாள் தனது கையிலிருந்த சுதர்சன சக்கரத்தால் அசுரர்களை கொன்று அழித்தார்.
அன்று எந்த கோலத்தில் நின்று அசுரர்களை அழித்தாரோ அதே கோலத்தில் இன்ற நமக்கு கருணை கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
கும்பகோணத்தில் உள்ள பெரிய கடைவீதியில் அமைந்த அற்புதமான கோவில். சின்ன கோவில் இது.
இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி. அமைதியாகவும், கருணையுடன் பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.
யார் என்ன பாவத்தைச் செய்திருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த தலத்திற்கு வந்து எம்பெருமான் ராஜகோபாலனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்.
அவர்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறி விடும் என்பது இந்த ராஜகோபால சுவாமி கோவிலின் விசேஷம்.
இன்னும் சொல்லப் போனால் மன்னார்குடி ராஜகோபால பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அத்தனையும் இந்த கும்பகோணம் ராஜகோபால சுவாமிக்கும் உண்டு.
- நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.
- திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த கோவில் கும்பகோணம் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெரிய கடை வீதியின் தென்கோடியில் அமைந்திருக்கிறது.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திய ரகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ல் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.
"ஆதி கும்பேஸ்வரர்" திருக்கோவிலுக்கு மிக அருகிலேயே இக்கோவில் இருக்கிறது. கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும்.
5 நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி மூலவர் ராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் எல்லாருடனும் சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.
நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.
திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆஞ்சநேயர் வீணையுடன் ராமாயண பாராயணத்துடனும் இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.
கோவிலை விட்டு வெளியே வந்தாலும் இந்த கோவிலின் 62 தூண்களில் காணப்படும் நுண்ணிய வியக்கத்தக்க சிற்பங்கள் நம் கண்ணிலேயே நிற்கும்.
சாரங்கபாணி கோவில் காவிரியாற்றின் தென் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது.
கிழக்கு நோக்கி 147 அடி உயரம் கொண்ட 11 நிலை ராஜகோபுரம் உண்டு.
மூன்று பிரகாரங்களை உள்ளடக்கியது. மூலவர் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள்.
உத்யோக சயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலை. ஆராவமுதன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
இத்தலத்தில் உள்ள இறைவன் சாரங்கம் என்னும் வில்லை ஏந்தி காட்சியளிப்பதால் சாரங்கபாணி என்று பெயர் பெற்றார்.
தாயார் கோமளவல்லித் தாயார். புஷ்கரணி, ஹேமபுஷ்கரணி, மற்றொரு பெயர் பொற்றாமரைக்குளம். விமானம் வைதீக விமானம்.
குளத்திற்கு வடக்கே ஹேமமுனிவர் சன்னதி உண்டு.
வசந்தமண்டபம், 100 கால் மண்டபம் இந்த கோவிலுக்கு தனிச்சிறப்பு.
ஹேமமுனிவரின் மகளாகத் தோன்றிய திருமகள், இத்தலத்தில் தவம்புரிந்து கோமளவல்லி என்ற பெயர் கொண்டு இத்தல இறைவனை மணந்ததாக ஐதீகம்.
உபய பிரதான திவ்விய சேத்திரமான இத்தலத்தில் மூலவருக்கு என்ன சிறப்பு செய்யப்படுகிறதோ, அதே சிறப்பு உற்சவ மூர்த்திக்கும் செய்யப்படுகிறது.
கோமளவல்லி தாயார் இதுவரை கோவிலை விட்டு வெளியே வந்ததில்லை.
எனவே தாயாருக்கு படிதாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு.
உத்ராயண புண்ணிய காலத்தில் அதற்குரிய உத்ராயண வாசல் வழியாகவும், தட்சிணாயண காலத்தில் தட்சிணாயண வாசல் வழியாகவும் சென்றுதான் பகவானைத் தரிசிக்க வேண்டும்.
சுவாமியின் கருவறையே தேர் வடிவில் பிரமாண்டமான சக்கரங்களைக் கொண்டு மிக நுண்ணிய கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.
சோழ நாட்டு 40 திவ்ய தேசங்களில் இத்தலம் 14-வதாக போற்றப்படுகிறது.
இப்பெருமாளுக்கு "ஆராவமுதன்" என்று ஸ்ரீமந் நாத முனிகள் திருப்பெயர் சூட்டியிருக்கிறார்.
ஸ்ரீஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்¢கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களா சாசனம் செய்துள்ளனர்.
ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும்போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது.
நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கின்றனர்.
அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்காதேவி (அண்டபுஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப்பெருமான்)
ரோகிணி - ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு)
மிருகசீரிடம்- ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீராமர் (விஷ்ணு)
பூசம் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்- ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்-ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்- ஸ்ரீஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலட்சுமி தேவி
அஸ்தம்- ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மூர்த்தி
விசாகம் - ஸ்ரீமுருகப் பெருமான்
அனுசம்- ஸ்ரீலட்சுமி நாராயணர்
கேட்டை - ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஆஞ்சநேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்- ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணு)
அவிட்டம் - ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
சதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீமகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்
அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






