என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம்.
    • மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 19 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவாதசி காலை 7.45 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: ரோகிணி நாளை விடியற்காலை 4.52 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், சிதம்பரம் ஆவுடையார் கோவிலில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்- நன்மை

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-வாழ்வு

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- வெற்றி

    மகரம்-லாபம்

    கும்பம்-சுகம்

    மீனம்-பரிவு

    • அந்த தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்தால் மனம் பக்குவத்துக்கு வரும்.
    • சமயச் சடங்குகளை அளவிட முடியாது. ஏராளம் உள்ளன.

    ஆலயத்தில் நமக்கு தரும் தீர்த்தத்திலும் ஒரு தத்துவம் உள்ளது. துளசி மகாலட்சுமி குடியிருக்கும் இடமாகும்.

    அதை உட்கொள்ளும்போது பக்தன் மங்கலம் பெறுகிறான்.

    அறிவியல் ரீதியாகவும் துளசியில் எத்தனையோ மருத்துவ குணங்கள் இருப்பது தெரிந்ததுதான்.

    அதுபோல ஆலயத்தில் நாம் தியானம் செய்து ஓம் மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திர அதிர்வலை உடலுக்கு புத்துணர்ச்சி தருவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

    இறை வழிபாட்டின் ஒரு அங்கமாக நாம் விரதம் இருப்பதிலும் ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல ரகசியங்கள் புதைந்துள்ளன.

    விரதம் மன உறுதியை வளர்த்து இறைவனுடன் இரண்டற கலக்க செய்வதை காட்டுகிறது.

    அது போல கடவுள் எடுத்த அவதாரங்களிலும் தத்துவங்கள் அடங்கியுள்ளது.

    உதாரணத்துக்கு நரசிம்ம அவதாரத்தை எடுத்துக் கொண்டால், "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்" என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

    ஆலயத்துக்குள் நுழைந்ததும் விநாயகர் முன்பு நின்று கொண்டு, தலையில் குட்டி, தோப்புக் காரணம் போடுவதில் தொடங்கி, கடைசியில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வருவது வரை அனைத்திலும் தத்துவங்கள் உள்ளன.

    அந்த தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்தால் மனம் பக்குவத்துக்கு வரும்.

    சமயச் சடங்குகளை அளவிட முடியாது. ஏராளம் உள்ளன.

    சமயச் சடங்குகள் உதவியுடன் கடவுளை வழிபடும்போது மனம் பக்குவமாகி விடும். "இறைவனே... நீயே கதி" என்று சரண் அடைந்து விடுவோம்.

    சமயச் சடங்குகளை செய்து பாருங்கள், இந்த உண்மை உங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக புரிந்து விடும்.

    • ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.
    • அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.

    இறைவழிபாட்டின் போது நாம் செய்யும் ஹோமங்கள், எல்லாப் பொருட்களையும் இறைவனே அழிக்கிறான் என்பதை காட்டுகிறது. தீபாராதனை காட்டுவது அறிவு செல்வத்தை உணர்த்துகிறது.

    ஆனால் சூடம் ஏற்றி தீபாராதனை செய்வதற்கு வேறொரு தத்துவம் உள்ளது.

    அதாவது சூடம் கடைசி வரை எரிந்து காற்றோடு கலந்து விடும். அதுபோல ஆன்மா கடைசியில் இறைவனுடன் கலந்து விடும் என்பதை சூடம் தீபாராதனை காட்டுகிறது.

    ஆலயத்தில் மாவிலை தோரணம் கட்டுவதிலும் ஒரு தத்துவம் உள்ளது. மாவிலை ஒரு போதும் அழுகாது. காய்ந்து சருசாகி உலர்ந்து மண்ணோடு மண்ணாக சேர்ந்து விடும்.

    அதுபோல நம் உடலும் இடையில் கெட்டுப் போகாமல் நீண்ட காலம் காய்ந்து சருகாகி உலர வேண்டும் என்பதை மாவிலை தோரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

    ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.

    அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.

    விளக்கு தீபம் எப்போதும் மேல் நோக்கியே எரியும்.

    எனவே விளக்கு ஏற்றினால் கர்வம் மறைந்து, நம் அறிவானது மேல் நோக்கி உயர்ந்து பிரகாசிக்கும் என்பதை தீபம் காட்டுகிறது.

    • தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.
    • சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.

    சமயச் சடங்குகளில் குங்குமம், சந்தனம், திருநீறும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியபடி உள்ளன.

    திருநீறு பூசுவது என்பது நம் வாழ்க்கை நிலை இல்லாதது, சாம்பலாகி விடுவோம் என்பதை காட்டுகிறது.

    யார் ஒருவர் நெற்றியில் 3 விரல்களால் திருநீறு பூசிக் கொள்கிறாரோ அவரிடம் இருந்து ஆணவம், கன்மம், மாயை மூன்றும் விலகி விடும் என்பது ஐதீகம்.

    குங்குமம் என்பது சக்தியின் அடையாளம். பராசக்தி துணை இல்லாமல் இந்த உலகில் நாம் எதுவும் செய்ய முடியாது.

    இதனால்தான் பூஜைகளில் குங்குமம் தவறாமல் இடம் பெறுகிறது.

    தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.

    சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.

    இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், நாட்டில் நில வளமும், நீர் வளமும் பெருகும் என்பதை காட்டுகிறது.

    இறைமூர்த்தங்களை அலங்காரம் செய்வது என்பது, அவன் படைக்கின்ற பொருட்களை காத்து நிலை பெறச் செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.

    • ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.
    • இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.

    வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம், எனவே தான் இறைவழிபாடு வெற்றிலை இல்லாமல் முழுமை அடையாது என்பார்கள்.

    வெற்றிலையை நாம் எப்போதும் வெற்றி தரும் இலையாக பார்க்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை உரிய முறையில் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

    வெற்றிலையை நம் முன்னோர்கள் நமது உடலுடன் ஒப்பிட்டனர்.

    இதை உணர்த்த பூஜைகளில் நம் முன்னோர்கள் வெற்றிலை வைப்பதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தனர்.

    ஸ்தூல உடல், சூட்சம உடல் இரண்டையும் குறிக்க பூஜைகளில் 2 வெற்றிலை வைப்பது வழக்கம்.

    அது போல ஸ்தூல உடல், சூட்சம உடல், காரண உடல் மூன்றையும் குறிக்க மூன்று வெற்றிலை வைத்து வழிபட்டனர்.

    நோய் இல்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே வெற்றிலை வைப்பதன் குறிக்கோளாகும்.

    பாக்கு என்பது செல்வத்தை குறிக்கும். வாழைப்பழம் என்பது பிறப்பற்ற நிலையை குறிக்கும் பொதுவாக பழம் சாப்பிட்டு நாம் வீசி எறியும் கொட்டையில் இருந்து புதிய செடி முளைக்கும்.

    ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.

    இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.

    அதை இறைவனிடம் வேண்டவே மறுபிறவி இல்லாத வாழைப்பழத்தை பூஜையில் வைக்கிறோம்.

    உலகம் முழுவதும் இறை வழிபாட்டில் வாழைப்பழம் முக்கிய இடம் பிடித்து இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

    இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபடுவதை நாம் செய்யும் நல்வினை, தீவினை இரண்டையும் குறிக்கும்.

    ஆக தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய நான்கையும் வைப்பதன் தத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

    வாழ்வில் ஒருவருக்கு அறிவு, ஆரோக்கியம், செல்வம், பிறப்பற்ற நிலை ஆகிய நான்கும் முக்கியம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகிய நான்கும் அவற்றை தருகின்றன.

    • நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது.
    • அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.

    முதலில் ஆலயங்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது ஏன் என்பதை பார்க்கலாம்.

    நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.

    இதை நமக்கு உணர்த்துவது தேங்காய்.

    தேங்காயைச் சுற்றியுள்ள ஓடு அறிவை சூழ்ந்துள்ள ஆணவத்தை காட்டுகிறது.

    அந்த தேங்காய் ஓட்டை இரண்டாக உடைத்து விட்டால் உள்ளே தேங்காயின் வெள்ளைப் பகுதியை காணலாம்.

    அது கள்ளமற்ற நம் மனதை காட்டுகிறது.

    தேங்காய் உடைக்கும் போது வெளியேறும் தண்ணீர் நம் மனதில் உள்ள பந்த பாசங்கள் விலகி ஓடுவதை உணர்த்துகிறது.

    ஆணவம், பந்த பாசம் விலகி விட்டால் தேங்காய் வெள்ளைப் பகுதி போல நம் மனம் பிரகாசமாகி விடும்.

    அது நம் அறிவை பளீரென பிரகாசிக்க செய்யும்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நம் மனதில் உள்ள ஆணவம் நீங்க வேண்டும் என்பதையே தேங்காய் உடைப்பு பிரதிபலிக்கிறது.

    தேங்காய்க்கு முக்கண் உண்டு.

    நாம் கடவுளை பிரார்த்தனையும், தியானமும் செய்து வழிபாட்டால் மூன்றாவது கண்ணாகிய ஞானத்தை பெறலாம் என்பதை தேங்காயின் முக்கண் காட்டுகிறது.

    • ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் நிறைய ரகசியங்களை உள்ளடக்கி வைத்துள்ளனர்.
    • அவற்றை அறிந்து கொண்டு கடவுளை வழிபாடு செய்தால் ஆத்மார்த்தமான பலன்களை நாம் அனுபவிக்க முடியும்.

    ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் நிறைய ரகசியங்களை உள்ளடக்கி வைத்துள்ளனர்.

    அவற்றை அறிந்து கொண்டு கடவுளை வழிபாடு செய்தால் ஆத்மார்த்தமான பலன்களை நாம் அனுபவிக்க முடியும்.

    பொதுவாக இறைவனை நெருங்க வேண்டுமானால் உண்மையான வழிபாடு, மனதை நெகிழ செய்யும் பிரார்த்தனை, குறைகளை தீர்த்துக் கொள்ளும் பரிகாரம் ஆகிய மூன்றும் அவசியமாகும்.

    யார் ஒருவர் தினமும் இறைவனை வழிபடுகிறாரோ, அதுவும் பிரதிபலன் எதிர்பாராமல் வழிபாடு செய்கிறாரோ அவருக்கு முக்தி பாதை உடனே தெரியும்.

    இத்தகைய வழிபாட்டுக்கு நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள சமயச்சடங்குகள் உதவி செய்பவையாக உள்ளன.

    இறை வழிபாட்டின் போது தேங்காய், வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடு செய்வோம்.

    இந்த சமயச் சடங்குகளின் பின்னால் தத்துவம் உள்ளது.

    • பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
    • கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்

    1. இந்திர தீர்த்தம் -வானுலக வாழ்வு அளிக்கும்

    2. அக்கினி தீர்த்தம் -பிரமஹத்தி தோஷம் நீங்கும்

    3. யம தீர்த்தம் -யம பயமில்லை

    4. நிருதி தீர்த்தம் -பூத, பிரேத, குற்றம் நீங்கும்

    5. வருண தீர்த்தம் -ஆயுள் விருத்தி உண்டாகும்

    6. வாயு தீர்த்தம் -பிணிகள் அகலும்

    7. குபேர தீர்த்தம் -சகல செல்வங்களும் உண்டாகும்

    8. ஈசான தீர்த்தம் -சிவனடி சேர்க்கும்

    9. பிரம தீர்த்தம் -பித்ருக்களை கரையேற்றும்

    10. கங்கை தீர்த்தம் -கயிலை பதவி அளிக்கும்

    11. யமுனை தீர்த்தம் -பொன்விருத்தி உண்டாகும்

    12. கோதாவிரி தீர்த்தம்-இஷ்ட சித்தி உண்டாகும்

    13. நருமதை தீர்த்தம் -திடகாத்திரம் உண்டாகும்

    14. சரசுவதி தீர்த்தம் -ஞானம் உண்டாகும்

    15. காவிரி தீர்த்தம் -புருஷார்த்தங்களை நல்கும்

    16. குமரி தீர்த்தம் -அசுவமேத பலன்களைக் கொடுக்கும்

    17. பயோடினி தீர்த்தம் -கோலாகலம் அளிக்கும்

    18. சரயு தீர்த்தம் -மனக்கவலை தீரும்

    19. அறுபத்தாறு கோடி தீர்த்தம்-துன்பம் நீங்கி இன்பம் கைகூடும்.

    • மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.
    • அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    மகாமகம் குளத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கினார்.

    அஷ்டதிக்கு பாலகர்கள் 8 பேரும் தீர்த்தம் கண்டனர்.

    தம் பாவங்களைப் போக்க வந்த நவக்கன்னியர் ஒன்பது பேரும் தத்தம் பேரால் ஓர் தீர்த்தம் கண்டனர்.

    தேவர், கின்னார், கிம்புருடர், கந்தர்வர், சித்தர், வித்தியாதரர், சாரணர், முனிவராதியோர் கண்ட தீர்த்தமும் பல.

    ஆகவே மகாமக தீர்த்தத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் ஒன்று, திக்குபாலகர் தீர்த்தம் எட்டு, நவகன்னியர் தீர்த்தம் ஒன்பது, தேவராகியர் தீர்த்தம் அறுபத்தாறு கோடியுமாகும்.

    இப்படி அனைத்து தீர்த்தங்களும் ஒரு சேர விளங்குவதே மகாமகத் தீர்த்தமாகும்.

    • கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பை பெறும்.
    • சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பு அக்குழந்தை பெற்று இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் சூரியன் பலமானால் தந்தையின் உருவ அமைப்பையும், சந்திரன் பலமானால் தாயின் உருவ அமைப்பும் அக்குழந்தை பெற்று இருக்கும்.

    கருவுற்ற தாய் மார்கள் சுகபிரசவம் பெற வர்மக்கலை மருத்துவத்தில் வர்மப்புள்ளிகள் உள்ளன.

    இந்த வர்மப்புள்ளிகளை சரியான காலத்தில் சரியான முறைப்படி தூண்டுவதன் மூலம் 100சதவீதம் சுகபிரசவம் பெற முடியும்.

    குழந்தை பாக்கியம் பெறும் தம்பதியர்களுக்கு மலச்சிக்கலோ, மனச்சிக்கலோ, தோல் நோய்கலோ இருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கு எதாவது ஒரு நோய் ஏற்படுத்தும்.

    ஆகவே குழந்தை பாக்கியம் பெற விரும்பும் தம்பதியர்கள் இவ்வாறு நோய்கள் இல்லாமல் இருந்தால் அது பிறக்கும் குழந்தையையும் பாதிக்காமல் இருக்கும்.

    • ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.
    • ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன

    மனிதனின் உடலில் பஞ்சபூதம் இயங்கும் ஆனால் ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நான்கு பூதம் தான் வேலை செய்யும் தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த பின்பு தான் 5வது பூதம் தன் வேலையை செய்யும்.

    இதைத் தான் ஜோதிடத்தில் குழந்தை பிறந்த நேரம் லக்கனம் எடுத்துக் கொண்டும் அன்றயை சோச்சாரப்படியும் ஜாதகம் கணிப்பார்கள்.

    குழந்தை பிறந்த பின்புதான் நவகிரகங்கள் வேலை செய்யும், என்றால் இந்த கிரகங்கள் தாயின் கருவறையில் இருந்தே வேலை செய்யும். இதைத்தான் கர்பகாலம் சென்ற இருப்பு என ஜாதகத்தில் எழுதுவார்கள்.

    நவகிரகங்கள் கர்ப்பகாலத்தில் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

    கர்ப்பம்

    1. முதல் மாதம் சுக்கிரனின் ஆளுகை விந்து இன்னும் திரவ நிலையிலேயே இருக்கும்.

    2. இரண்டாம் மாதம் அதிபர் செவ்வாய் உருவம் பெற ஆரம்பிக்கிறது.

    3. மூன்றாம் மாதத்திற்கு குரு அதிபதி ஆகிறார். அங்கங்கள் உருவாகின்றன.

    4. நான்காம் மாதம் சூரியன் எலும்புகள் உருவாகின்றன.

    5. ஐந்தாம் மாதம் சந்திரன் தோல் தோன்றுகிறது.

    6. ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.

    7. ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன.

    8. எட்டாம் மாதம் லக்ன அதிபதி. தொப்புள் கொடி மூலம் குழந்தை உணவு எடுத்துக்கொள்கிறது.

    9. ஒன்பதாம் மாதம் சூரியன்: கர்ப்பத்திலுள்ள சிசு தாகம், பசி இவைகள் உணர வைக்கிறார்.

    10. பத்தாம் மாதம் சந்திரன்: பிரசவத்திற்கு தயாராக்குகிறார்

    இவ்வாறு நவகிரகங்கள் தன் வேலையை கர்பகாலத்தில் செய்கின்றன.

    • கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும்.
    • சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும். சித்திரை மாதத்தில் சூரியன் இருக்கிறார் என்றால் அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் பிரவேசித்துக்கொண்டு இருப்பார்.

    இதில் நான்காவதாக இருக்கும் கடகத்திற்கு வருகிறார். அது சந்திரனின் இடம். இது அம்பாளுக்கு உரிய இடம். அம்பாள் தவம் இருந்து சிவனை அடைந்த இடமாகவும், சிவன் போய் சேரும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவியான சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    ஆனால் நம் முன்னோர்கள் கணவன் மனைவி சேரக்கூடாது என்று கூறிவைத்துள்ளார்கள். இதில் பகுத்தறிவான விஷயம் என்னவென்றால் ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை வெயில் காலத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் நம் முன்னோர்கள் இதனை கூறி வைத்துள்ளனர்.

    ஆடி மாதத்திற்கு உள்ள சிறப்புகள்:

    ஆடி மாதத்தில் தான் தட்சாயணம் காலம் ஆரம்பிக்கிறது.

    குழந்தை பாக்கியம், திருமணத்தடை, தொழில் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வெற்றிழை வைத்து பிரசன்னம் பார்ப்போம். வெற்றிலை வைத்து பார்க்கும் போது இதில் 5-வதாக வைத்த வெற்றிழை கிழிந்து இருந்தால் அது குழந்தை பாக்கியம் பிரச்சினை. இதற்கு சிறந்த தீர்வு குலதெய்வ வழிபாடு தான்.

    ஆடிமாதம், பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில்  11 பேரிடம் மடிப்பிச்சை எடுக்க வேண்டும்.

    என் வம்சம் தழைக்க என் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் குலதெய்வ கோவிலில் குறைந்தது 6 மணிநேரமாவது உட்கார்ந்து விட்டு வர வேண்டும்.

    மேலும் பித்ருக்கள் சாபம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தடைபடும். அப்போது பித்ருக்களுக்கு உகந்தது ஆடி அமாவாசை. யாரெல்லாம் முன்னோர்களுக்கு கொல்லி வைத்தார்களோ அவர்கள் எல்லாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். ஆடி அமாவாசை நாளில் பித்ருக்கள் தர்ப்பணம் அளிக்கும் போது பித்ருக்கள் சாபம் நீங்கி வம்சம் தழைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குலதெய்வமே தெரியாதவர்கள் என்னசெய்வது?

    முதலில் விநாயகர் வழிபாடு செய்யலாம். வெற்றிலை பிரசன்னத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்.

    தர்ப்பணம் பெண்கள் கொடுக்கலாமா?

    எள், தண்ணீர் இரைக்கும் செயலை சுமங்கலிகள் செய்யக்கூடாது. பெண்கள் சுமங்கலியாக இருக்கும் பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மருமகன்கள் இதனை செய்யலாம். யாருமே தர்ப்பணம் கொடுக்க இல்லை என்றாலும், தர்ப்பணம் கொடுப்பதற்கு ஒரு பிராமணன் இருப்பார். அவரிடம் சென்று தர்ப்பணம் கொடுக்க சொல்லலாம்.

    திருமணத்தடை நீங்க ஆடி மாதத்தில் எந்த அம்மனை வணங்கலாம்?

    சிவனும், அம்பாளும் சேர்ந்த ஒரு அற்புதமான மாதம் தான் இந்த ஆடி மாதம் இந்த மாதத்தில் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணத்தடை இருந்தால். முத்துமாரி அம்மன், காமாட்சி அம்மன் அல்லது அவர்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம். செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மல்லிகைப்பூ போட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

    யாருடைய வீட்டிலாவது பெண்கள் கல்யாணத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை கன்னி தெய்வம் என்று சொல்வார்கள். இவர்களை வழிபடுவதற்கென்று ஒரு முறை உள்ளது. அந்த முறைப்படி கும்பிட்டு வந்தால் திருமண வாழ்க்கை கூடிவரும்.

    ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டிற்கு சென்று முருகனுக்கும், அம்மனுக்கு மாலை போட்டு சாமி கும்பிட்டுவிட்டு அந்த மாலையை திருமணத்தடை உள்ளவர்கள் மாலையை போட்டு வழிபட்டு விட்டு அந்த மாலையை வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். கல்யாணம் கைகூடியவுடன் இரண்டு மாலையாக முருகனுக்கு செலுத்திவிட வேண்டும்.

    ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்தப்படுவதில்லை?

    ஆடி மாதத்தில் லக்கணமும், கோச்சார பலனும் நன்றாக இருப்பதில்லை என்பதினால் திருமண காரியங்களை செய்வதில்லை. சர ராசி, சிர ராசி, உபய ராசி என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு உபய ராசியில் சந்திரன் இருக்கும் காலக்கட்டத்தில் புதுமனை புகுவிழா செய்யக்கூடாது. அதுபோல ஆடி மாதத்தில் தெய்வத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு அளிக்கப்படும் நைவேத்தியங்கள்?

    பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி இருக்கும். சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் இதனை நைவேத்தியம் செய்யலாம். மனமுருகி வழிபட்டாலும் தெய்வ அனுக்கிரகம் இருக்கும்.


    ×