என் மலர்
நீங்கள் தேடியது "Aalaya Vazhipadu"
- ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் நிறைய ரகசியங்களை உள்ளடக்கி வைத்துள்ளனர்.
- அவற்றை அறிந்து கொண்டு கடவுளை வழிபாடு செய்தால் ஆத்மார்த்தமான பலன்களை நாம் அனுபவிக்க முடியும்.
ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் நிறைய ரகசியங்களை உள்ளடக்கி வைத்துள்ளனர்.
அவற்றை அறிந்து கொண்டு கடவுளை வழிபாடு செய்தால் ஆத்மார்த்தமான பலன்களை நாம் அனுபவிக்க முடியும்.
பொதுவாக இறைவனை நெருங்க வேண்டுமானால் உண்மையான வழிபாடு, மனதை நெகிழ செய்யும் பிரார்த்தனை, குறைகளை தீர்த்துக் கொள்ளும் பரிகாரம் ஆகிய மூன்றும் அவசியமாகும்.
யார் ஒருவர் தினமும் இறைவனை வழிபடுகிறாரோ, அதுவும் பிரதிபலன் எதிர்பாராமல் வழிபாடு செய்கிறாரோ அவருக்கு முக்தி பாதை உடனே தெரியும்.
இத்தகைய வழிபாட்டுக்கு நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ள சமயச்சடங்குகள் உதவி செய்பவையாக உள்ளன.
இறை வழிபாட்டின் போது தேங்காய், வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடு செய்வோம்.
இந்த சமயச் சடங்குகளின் பின்னால் தத்துவம் உள்ளது.
- நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது.
- அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.
முதலில் ஆலயங்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது ஏன் என்பதை பார்க்கலாம்.
நம் அறிவை எப்போதும் ஆணவம் மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆணவம் நீங்கினால்தான் அறிவு பிரகாசிக்கும்.
இதை நமக்கு உணர்த்துவது தேங்காய்.
தேங்காயைச் சுற்றியுள்ள ஓடு அறிவை சூழ்ந்துள்ள ஆணவத்தை காட்டுகிறது.
அந்த தேங்காய் ஓட்டை இரண்டாக உடைத்து விட்டால் உள்ளே தேங்காயின் வெள்ளைப் பகுதியை காணலாம்.
அது கள்ளமற்ற நம் மனதை காட்டுகிறது.
தேங்காய் உடைக்கும் போது வெளியேறும் தண்ணீர் நம் மனதில் உள்ள பந்த பாசங்கள் விலகி ஓடுவதை உணர்த்துகிறது.
ஆணவம், பந்த பாசம் விலகி விட்டால் தேங்காய் வெள்ளைப் பகுதி போல நம் மனம் பிரகாசமாகி விடும்.
அது நம் அறிவை பளீரென பிரகாசிக்க செய்யும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நம் மனதில் உள்ள ஆணவம் நீங்க வேண்டும் என்பதையே தேங்காய் உடைப்பு பிரதிபலிக்கிறது.
தேங்காய்க்கு முக்கண் உண்டு.
நாம் கடவுளை பிரார்த்தனையும், தியானமும் செய்து வழிபாட்டால் மூன்றாவது கண்ணாகிய ஞானத்தை பெறலாம் என்பதை தேங்காயின் முக்கண் காட்டுகிறது.
- ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.
- இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.
வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதியும் இருப்பதாக ஐதீகம், எனவே தான் இறைவழிபாடு வெற்றிலை இல்லாமல் முழுமை அடையாது என்பார்கள்.
வெற்றிலையை நாம் எப்போதும் வெற்றி தரும் இலையாக பார்க்க வேண்டும்.
மேலும் வெற்றிலையை உரிய முறையில் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
வெற்றிலையை நம் முன்னோர்கள் நமது உடலுடன் ஒப்பிட்டனர்.
இதை உணர்த்த பூஜைகளில் நம் முன்னோர்கள் வெற்றிலை வைப்பதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தனர்.
ஸ்தூல உடல், சூட்சம உடல் இரண்டையும் குறிக்க பூஜைகளில் 2 வெற்றிலை வைப்பது வழக்கம்.
அது போல ஸ்தூல உடல், சூட்சம உடல், காரண உடல் மூன்றையும் குறிக்க மூன்று வெற்றிலை வைத்து வழிபட்டனர்.
நோய் இல்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே வெற்றிலை வைப்பதன் குறிக்கோளாகும்.
பாக்கு என்பது செல்வத்தை குறிக்கும். வாழைப்பழம் என்பது பிறப்பற்ற நிலையை குறிக்கும் பொதுவாக பழம் சாப்பிட்டு நாம் வீசி எறியும் கொட்டையில் இருந்து புதிய செடி முளைக்கும்.
ஆனால் வாழைப்பழத்தை வீசி எறிந்தால் அது முளைப்பதில்லை. இது பிறவி இல்லாததை காட்டுகிறது.
இறைவழிபாட்டின் முக்கிய நோக்கமே இன்னொரு பிறவி வேண்டாம் என்பது தான்.
அதை இறைவனிடம் வேண்டவே மறுபிறவி இல்லாத வாழைப்பழத்தை பூஜையில் வைக்கிறோம்.
உலகம் முழுவதும் இறை வழிபாட்டில் வாழைப்பழம் முக்கிய இடம் பிடித்து இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபடுவதை நாம் செய்யும் நல்வினை, தீவினை இரண்டையும் குறிக்கும்.
ஆக தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய நான்கையும் வைப்பதன் தத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
வாழ்வில் ஒருவருக்கு அறிவு, ஆரோக்கியம், செல்வம், பிறப்பற்ற நிலை ஆகிய நான்கும் முக்கியம். தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகிய நான்கும் அவற்றை தருகின்றன.
- தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.
- சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.
சமயச் சடங்குகளில் குங்குமம், சந்தனம், திருநீறும் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியபடி உள்ளன.
திருநீறு பூசுவது என்பது நம் வாழ்க்கை நிலை இல்லாதது, சாம்பலாகி விடுவோம் என்பதை காட்டுகிறது.
யார் ஒருவர் நெற்றியில் 3 விரல்களால் திருநீறு பூசிக் கொள்கிறாரோ அவரிடம் இருந்து ஆணவம், கன்மம், மாயை மூன்றும் விலகி விடும் என்பது ஐதீகம்.
குங்குமம் என்பது சக்தியின் அடையாளம். பராசக்தி துணை இல்லாமல் இந்த உலகில் நாம் எதுவும் செய்ய முடியாது.
இதனால்தான் பூஜைகளில் குங்குமம் தவறாமல் இடம் பெறுகிறது.
தினமும் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்பவர்கள் அம்பிகையின் திருவருள் சிறப்பை எளிதில் பெறுபவர்கள் என்பதை குறிக்கிறது.
சந்தனம் குளிர்ச்சியை தருவது. இறைவழிபாடு செய்பவர்கள் நிச்சயம் மனம் குளிர்வார்கள் என்பதை சந்தனம் காட்டுகிறது.
இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், நாட்டில் நில வளமும், நீர் வளமும் பெருகும் என்பதை காட்டுகிறது.
இறைமூர்த்தங்களை அலங்காரம் செய்வது என்பது, அவன் படைக்கின்ற பொருட்களை காத்து நிலை பெறச் செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.
- ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.
- அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.
இறைவழிபாட்டின் போது நாம் செய்யும் ஹோமங்கள், எல்லாப் பொருட்களையும் இறைவனே அழிக்கிறான் என்பதை காட்டுகிறது. தீபாராதனை காட்டுவது அறிவு செல்வத்தை உணர்த்துகிறது.
ஆனால் சூடம் ஏற்றி தீபாராதனை செய்வதற்கு வேறொரு தத்துவம் உள்ளது.
அதாவது சூடம் கடைசி வரை எரிந்து காற்றோடு கலந்து விடும். அதுபோல ஆன்மா கடைசியில் இறைவனுடன் கலந்து விடும் என்பதை சூடம் தீபாராதனை காட்டுகிறது.
ஆலயத்தில் மாவிலை தோரணம் கட்டுவதிலும் ஒரு தத்துவம் உள்ளது. மாவிலை ஒரு போதும் அழுகாது. காய்ந்து சருசாகி உலர்ந்து மண்ணோடு மண்ணாக சேர்ந்து விடும்.
அதுபோல நம் உடலும் இடையில் கெட்டுப் போகாமல் நீண்ட காலம் காய்ந்து சருகாகி உலர வேண்டும் என்பதை மாவிலை தோரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.
அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.
விளக்கு தீபம் எப்போதும் மேல் நோக்கியே எரியும்.
எனவே விளக்கு ஏற்றினால் கர்வம் மறைந்து, நம் அறிவானது மேல் நோக்கி உயர்ந்து பிரகாசிக்கும் என்பதை தீபம் காட்டுகிறது.
- அந்த தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்தால் மனம் பக்குவத்துக்கு வரும்.
- சமயச் சடங்குகளை அளவிட முடியாது. ஏராளம் உள்ளன.
ஆலயத்தில் நமக்கு தரும் தீர்த்தத்திலும் ஒரு தத்துவம் உள்ளது. துளசி மகாலட்சுமி குடியிருக்கும் இடமாகும்.
அதை உட்கொள்ளும்போது பக்தன் மங்கலம் பெறுகிறான்.
அறிவியல் ரீதியாகவும் துளசியில் எத்தனையோ மருத்துவ குணங்கள் இருப்பது தெரிந்ததுதான்.
அதுபோல ஆலயத்தில் நாம் தியானம் செய்து ஓம் மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திர அதிர்வலை உடலுக்கு புத்துணர்ச்சி தருவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
இறை வழிபாட்டின் ஒரு அங்கமாக நாம் விரதம் இருப்பதிலும் ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல ரகசியங்கள் புதைந்துள்ளன.
விரதம் மன உறுதியை வளர்த்து இறைவனுடன் இரண்டற கலக்க செய்வதை காட்டுகிறது.
அது போல கடவுள் எடுத்த அவதாரங்களிலும் தத்துவங்கள் அடங்கியுள்ளது.
உதாரணத்துக்கு நரசிம்ம அவதாரத்தை எடுத்துக் கொண்டால், "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்" என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
ஆலயத்துக்குள் நுழைந்ததும் விநாயகர் முன்பு நின்று கொண்டு, தலையில் குட்டி, தோப்புக் காரணம் போடுவதில் தொடங்கி, கடைசியில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வருவது வரை அனைத்திலும் தத்துவங்கள் உள்ளன.
அந்த தத்துவங்களை புரிந்து கொண்டு இறைவழிபாடு செய்தால் மனம் பக்குவத்துக்கு வரும்.
சமயச் சடங்குகளை அளவிட முடியாது. ஏராளம் உள்ளன.
சமயச் சடங்குகள் உதவியுடன் கடவுளை வழிபடும்போது மனம் பக்குவமாகி விடும். "இறைவனே... நீயே கதி" என்று சரண் அடைந்து விடுவோம்.
சமயச் சடங்குகளை செய்து பாருங்கள், இந்த உண்மை உங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக புரிந்து விடும்.






