என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • நிரந்தர வசிப்பிட அட்டையை வழக்கத்தில் கிரீன் கார்டு என குறிப்பிடுவார்கள்
    • தற்போதைய நிலவரப்படி காத்திருக்கும் காலம் சுமார் 134 வருடங்கள் ஆகும்

    உயர்கல்விக்காகவும், பணியின் காரணமாகவும் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கும் இந்தியர்களில் பலர் அந்நாட்டிலேயே நிரந்தரமாக குடியேற விண்ணப்பங்களை தாக்கல் செய்வது வழக்கம்.

    அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு பல நிலை விசாரணைகளுக்கு பிறகு அங்கேயே தங்குவதற்கான நிரந்தர வசிப்பிட அட்டை (Permanent Resident Card) வழங்கப்படும். அலுவல் ரீதியாக பி.ஆர். கார்டு என குறிப்பிடப்படும் இது, வழக்கத்தில் கிரீன் கார்ட் என குறிப்பிடப்படுகிறது.

    கிரீன் கார்ட் பெற்று விட்டால் அதனை ஒரு பெருமையாக கருதி அதன் காரணமாக நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடும் அளவிற்கு அதனை பெறுவதற்கு கடும் போட்டி அங்கு நிலவுகிறது.

    பணியின் காரணமாக நிரந்தரமாக அமெரிக்காவில் தங்க கிரீன் கார்டிற்கு விண்ணப்பித்து இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 18 லட்சமாகும். இது அந்நாட்டில் குடியேற விண்ணப்பித்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கையில் 63 சதவீதம் பேர் இந்தியர்கள்.

    இந்நிலையில், புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் இந்தியர்களுக்கு "காத்திருப்பு காலம்" சுமார் 134 வருடங்கள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணியின் காரணமாக அங்கேயே தங்க விரும்பி விண்ணப்பித்து இருப்பவர்களில் அனேகமாக 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் இதனை பெறுவதற்கு முன்பாகவே இறந்து விடுவார்கள் என்றும் அதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் உள்ள முக்கிய வேலைகளுக்கு பணியமர்த்த இந்தியர்களையும், சீனர்களையுமே அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், அங்குள்ள குடியுரிமை சட்டப்படி, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு, மொத்த விண்ணப்பிங்களில் பணிசார்ந்த கிரீன் கார்டு விண்ணப்பங்கள் 7 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    சட்டரீதியான குடியேறுதலுக்கான முயற்சிகளில் உள்ள நீண்ட காலதாமதத்தை தவிர்க்க தற்போதைய ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், விண்ணப்ப தொகுப்பில் சேர்க்கப்பட்டு பிறகு அது ஏற்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு இறுதியாக கிரீன் கார்டு வாங்குவதற்கு அதிர்ஷ்டமும் தேவைப்படும் எனும் நிலை தோன்றி விட்டதாக அங்கு குடியேற துடிக்கும் இந்தியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    • துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரோனில் சிங்கை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘நாட்டின் கதாநாயகன்’ என அழைத்து பெருமைப்படுத்தினார்.
    • ரோனில் சிங்கை கவுரவிக்கும் வகையில் கஸ்டானிஸ்லாஸ், மெர்சிட் ஆகிய நகரங்களில் உள்ள சாலைக்கு அவரது பெயரை வைக்க 2019-ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பிஜி தீவு பகுதியில் வசித்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த மர்மநபர் ஒருவர் ரோனில் சிங்கை சுட்டுக்கொன்றார்.

    இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய பாலோ விர்ஜென் மெண்டோசா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரோனில் சிங்கை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'நாட்டின் கதாநாயகன்' என அழைத்து பெருமைப்படுத்தினார்.

    மேலும் ரோனில் சிங்கை கவுரவிக்கும் வகையில் கஸ்டானிஸ்லாஸ், மெர்சிட் ஆகிய நகரங்களில் உள்ள சாலைக்கு அவரது பெயரை வைக்க 2019-ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது கலிபோர்னியாவின் நியூமேனில் உள்ள நெடுஞ்சாலைக்கு 'கார்ப்ரல் ரோனில் சிங் நினைவு நெடுஞ்சாலை' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    • ரஷியாவுக்கு ராணுவ உதவி செய்ய வடகொரியா ஒப்புக் கொண்டதாக தகவல்
    • ஈரான், சீனா போன்ற நாடுகள் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது

    உக்ரைன் மீது 18 மாதங்களுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது. அதேபோன்று மேற்கத்திய நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன. இதனால் உக்ரைன் எதிர்தாக்குல் நடத்தி வருகிறது.

    அதேவேளையில் ரஷியாவிற்கு ஈரான், வடகொரியா, சீனா ஆகியவை உதவி புரிந்து வருகின்றன. ஆனால், வெளிப்படையாக உதவி செய்வதாக கூறவில்லை. இந்த மூன்று நாடுகளுக்கும் அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே சமீபத்தில் வடகொரிய ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. ரஷியா தாக்குதல் தொடங்கிய பிறகு வெளிப்படையாக இந்த செய்தி உலா வருகிறது. இதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்தை வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் ''உக்ரைனுக்கு எதிராக சண்டையிடும் வகையில் வடகொரியா, ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்கினால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கொரியா தீபகற்பத்தில் அணுஆயுத கப்பலை அமெரிக்கா நிலைநிறுத்திய விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்கா-தென்கொரியாவுக்கும் (கூட்டு) இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது.

    எப்போது வேண்டுமென்றாலும் வடகொரிய மீது தாக்குதல் சதி நடத்தப்பட வாய்ப்புள்ளதால், தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்தை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அவ்வப்போது ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் நடந்தது.

    இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் லேமன்ஸ், வித்ரோ ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் அமெரிக்காவின் கோகோ காப், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுடெல்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது.
    • ஜி20 மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7-ம் தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனவே அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ஜோ பைடனுக்கு இரு தினங்களாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு நட்புறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • வெள்ளையர்கள் பலர் இந்திய வேத மந்திரங்களை சரியாக உச்சரித்தனர்
    • வேத யூனியன் எனும் அமைப்பு ஐரோப்பாவில் உள்ள இந்து மதத்திற்கான அமைப்பு

    இந்தியாவின் தொன்மையான மதமான இந்து மத தெய்வ வழிபாட்டு முறைகளில், வேதம் கற்றறிந்த பண்டிதர்கள் புனித வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவது வழக்கம். கடந்த 4 தசாப்தங்களாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளிலும் இந்து மத நம்பிக்கைகளும் வழிமுறைகளும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு பரவி வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவலானது. அதில் வெள்ளையர்கள் பலர் ஒன்று கூடி அமர்ந்து இந்திய வேத மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் இந்தியர்களை போலவே முழங்கினர்.

    இந்நிகழ்வு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கும் அந்த வீடியோவில், "வெள்ளை மாளிகையில் இது நடைபெற்றது., அமெரிக்கர்கள் இவ்வளவு சிறப்பாக சமஸ்கிருத வேத மந்திரங்களை உச்சரிக்கின்றனர் என்பது கற்பனை செய்யவே முடியவில்லை" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் இது என்று நடந்தது என்கிற தேதி குறிப்பிடப்படாமல் வீடியோ பரவியது.

    ஆய்வில் இது உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.

    யூடியூப் மற்றும் பேஸ்புக் எனப்படும் இணையவழி சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ஏற்கெனவே 2018ல் பதிவிடப்பட்டிருப்பதும், அதில் காணப்படும் நிகழ்வு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்த ஒரு இந்து மத வைதீக சம்பவத்தில் வெள்ளையர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஐரோப்பாவில் உள்ள இந்து மத வேதங்கள் ஓதும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் "வேத யூனியன்" எனும் இந்து மத அமைப்பு, 2018 மார்ச் 3-லிருந்து 4 வரை ஐரோப்பா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்வில் வெள்ளையர்களும் பங்கு பெற்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்று தவறுதலாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பெயருடன் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • கடந்த வருடம் எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
    • அரசின் திட்டங்களில் மஸ்கின் நிழல் ஆதிக்கம் இருக்கிறது

    அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்.

    மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் விண்வெளியிலிருந்து இயங்கும் இணைய சேவைக்கான தனியார் விண்கலன்களான ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் மஸ்க், கடந்த வருடம் உலகின் முன்னணி சமூக உரையாடல்களுக்கான வலைதளமான டுவிட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார்.

    "அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. மஸ்க், டுவிட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனே அறிவித்தார்" என விவரித்து "எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்" என பெயரிட்ட ஒரு நீண்ட கட்டுரையில் அமெரிக்காவின் பிரபலமான "தி நியூயார்க்கர்" எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், "எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்" என இக்கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    பாதுகாவலர்கள் புடைசூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக சில மாதங்களுக்கு முன் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
    • ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் அதாவது 7-ந்தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

    • 2022 மார்ச் மாதம் இரவு விருந்தில் இருவரும் சந்தித்து கொண்டனர்
    • அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது

    உலகின் முன்னணி இணையவழி சமூக கருத்து பரிமாற்ற வலைதளமாக இருந்து வந்த டுவிட்டரை, உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் 2022-ல் சுமார் ரூ. 37 ஆயிரம் ($44 பில்லியன்) கோடிக்கு விலைக்கு வாங்கினார்.

    2022 மார்ச் மாதம் அதன் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பராக் அக்ரவால் எனும் இந்திய-அமெரிக்கரை ஒரு இரவு நேர விருந்தில் எலான் மஸ்க் சந்தித்தார்.

    2022 அக்டோபர் மாதம் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், முதல் வேலையாக பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தார்.

    டுவிட்டர் வலைதளத்தின் லாபத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது வரை எடுத்து வரும் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றம் செய்திருக்கிறார். அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் வாழ்க்கை சரிதத்தை வால்டர் ஐசக்ஸன் என்பவர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வரும் வாரங்களில் வெளியிடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த புத்தகத்தில் பராக் அக்ரவாலை, எலான் மஸ்க் நீக்கியதற்கான காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மஸ்க், பராக் அகர்வால் குறித்து என்ன நினைத்தார் என வால்டர் எழுதியுள்ளார். "அக்ரவால் ஒரு 'நல்ல மனிதர்.' ஆனால், ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு 'நல்ல மனிதர்' எனும் குணம் மட்டும் போதாது. மக்களால் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி விரும்பப்பட வேண்டும் எனும் அவசியமில்லை. நெருப்பை உமிழும் டிராகனை போல் உள்ள ஒரு தலைமை தான் டுவிட்டருக்கு தேவை. அந்த குணம் பராக் அக்ரவாலிடம் இல்லை," இவ்வாறு மஸ்க் கருதியதாக வால்டர் ஐசக்ஸன், மஸ்கின் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

    கடந்த அக்டோபரில் பராக்கை பணிநீக்கம் செய்த மஸ்க், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தானே அந்த பொறுப்பை வகித்து வந்தார்.

    2023 ஜூன் மாதம், விளம்பர துறையில் வல்லவரான லிண்டா யாக்கரினோ எனும் பெண்மணியை நியமித்த பிறகு மஸ்க் அந்த பொறுப்பில் இருந்து விலகி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய அதிபர் புதின் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
    • அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது

    உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு.

    இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது. தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தருகிறார். ஆனால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்பார் எனவும் ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

    சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, ரஷிய-உக்ரைன் போர் குறித்த மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாகவும், இரு நாட்டு பொருளாதார உறவில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் காரணாமாகவும், சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை.

    அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அதிபர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் போது சந்தித்து கொள்வார்கள் என்றும் அப்போது அவர்கள் இருவருக்கும் இடையிலான சிக்கல்களை தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும் நம்பப்பட்டது.

    ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என அதிகாரபூர்வமாக சீனா அறிவித்திருக்கிறது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ரெகோபோத் கடற்கரையில் ஜோ பைடனுக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. தற்போது அங்கு சென்றிருக்கும் அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    சீன அதிபர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை எனும் அறிவிப்பால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனாலும், அவரை நான் விரைவில் சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், எந்த நாட்டில், எப்போது சீன அதிபரை பைடன், சந்திப்பதாக இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது
    • இதில் அமெரிக்காவின் டியாபோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவுடன் மோதினார். இதில் டியாபோ 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் அமெரிக்காவின் கோகோ காப், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ×