என் மலர்
அமெரிக்கா
- வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.
- செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். அவர் கூறும்போது, சர்வாதிகாரி மதுரோ மீது அவமானம் என்ன ஒரு கேலிக்கூத்து என்றார்.
இதையடுத்து நிகோலஸ் மதுரோ கூறும்போது, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க். நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உன்னை கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். இதை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, `சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்' என்றார்.
- கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர்.
- கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளார். சிகாகோவில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்கத்தின் மாநாட்டில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது. கமலா ஹாரிஸ் தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக இல்லை. ஏனென்றால் அவர் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகி விட்டார்.
இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான்தான் என்றார்.
கமலா ஹாரிஸ் மீதான டிரம்ப்-ன் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, ஒருவரை அவர்கள் யார், அவர்கள் எப்படி அடையாளம் காட்டுகிறார்கள் என்பதைச் சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. டிரம்ப் கருத்து வெறுக்கத்தக்கது மற்றும் அவமதிப்பு ஆகும் என்றார்.
கமலா ஹாரிசின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
- இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஓலிம்பிக்ஸ் 2024 துவக்க விழாவில் விசேஷ அணிவகுப்பு, வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் நகரை அதிர வைத்தன. சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் வரிசையில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கண்டன குரல் எழுப்பினர். அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "உண்மையில் நான் வெளிப்படையான ஒருவன், ஆனால் அவர்கள் செய்தது மிக மோசமான விஷயம். கடந்த இரவு லாஸ்ட் சப்பர் நிகழ்வை அவர்கள் வெளிப்படுத்தியதை போன்று நாங்கள் செய்ய மாட்டோம்," என்று தெரிவித்தார்.
சர்ச்சைக்கு உள்ளான அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக் கொண்டு லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் வகையில் மேஜையில் படுத்திருந்தார்.
- சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
வன்முறைகளின் உற்பத்திக் களமாக அமெரிக்கா மாறி வருவதை நாளுக்கு நாள் அதிகமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வாரத்திற்கு ஒன்று நடப்பதால் அந்நாட்டின் மக்களுக்கு வன்முறை என்பது நார்மலைஸ் ஆனதாக மாறி வருகிறது.
அந்த வகையில், நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பூங்காவில் இருந்தவர்களில் 6 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் ஏறத்தாழ அனைவரும் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்துள்ளனர். அதற்கான தோட்டாக்களை அவர்கள் மளிகைக் கடைகளில் உள்ள மெஷினில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் எடுத்துக்கொள்ளும் வசதியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.
- கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார்.
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தினார். பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டுஅவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கிவருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.
எனவே தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இன்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார். இந்நிலையில் வெகு காலம் கழித்து நடந்த இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாடியுள்ளார்.


அப்போது இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நேதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நேதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர்பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நேதன்யாகுவுக்கு காட்டி விளக்கம் கொடுத்தார் டிரம்ப்.


- அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
- கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என்றார் முன்னாள் அதிபர் ஒபாமா.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்றவேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர். இதனால் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.
இதையடுத்து, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முன்மொழிந்தார். அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்த வாரம் நானும், மிச்சலும் எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார். எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.
அடுத்த மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 'நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள்'
- வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.
இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜோ பைடன் மற்றும் அமெரிக்க தலைவர்களிடம் பேசுவார்த்தை நடந்த நேற்று முன் தினம் அமெரிக்கா வந்துள்ளார். நேதன்யாகுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் தலைநகர் வாஷிங்க்டன் யூனியன் கட்டிடத்தின்முன் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து நேதன்யாகுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள். நேதனயாகு நீ உள்ளே ஒளிந்துகொள்ள முடியாது, நீ செய்வது இனப்படுகொலை என்று கோஷம் எழுப்பினர். சில போராட்டக்காரர்கள் நேதன்யாகு நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் செய்தனர்.



இதனால் போராட்டக்கார்கள் மீது போலீஸ் கடுமையான அடக்குமுறையை உபயோகப்படுத்தியது. நகரின் சுவர்க்ளிலும், கொலம்பஸ் உள்ளிட்டவர்களின் சிலைகளிலும் கிராஃபிட்டி வரைந்து தங்களின் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். கைகளில் ரத்தத்துடன் ஜோ பைடன் நிற்கும் படங்களை போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வரைந்தனர்.

மேலும் அமெரிக்க கொடியையும், நேதன்யாகுவின் உருவ பொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து நேற்று ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை நேதன்யாகு சந்தித்து பேசிய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர். இந்நிலையில் அமெரிக்க கோடியை எரித்தது நாட்டுப் பற்றின்மையை காட்டுவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த போராட்டங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
- போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், கடத்த 9 மாதங்களாக காசாவில் நடந்தவை கொடூரமானது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும், பசியில் துடித்தபடி தொடர்ந்து இடம்பெயரும் மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் நேதன்யாகுவிடம் பேசியது குறித்து பின்னர் மனம் திறந்த கமலா ஹாரிஸ், காசா மக்கள் படும் துயரம் குறித்தும் இதுவரை பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள் குறித்தும் அங்கு நிலவும் மனிதநேய சிக்கல் குறித்தும் எனது கவலையை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார். எனவே இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தக்குக்கு உடன்பட்டு இருதரப்பிலும் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இதற்கிடையில் இன்று குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை நேதன்யாகு சந்திக்க உள்ளார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் 1,197 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்னும் 111 பேர் ஹமாஸிடம் பிணை கைதிகளாக உள்ளனர். ஹமாஸ் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
- பிரதமர் மோடி கடந்த 7, 8-ந்தேதிகளில் ரஷியா சென்றிருந்தார்.
- அதே நேரத்தில் நேட்டோ மாநாடு நடைபெற்றது.
இந்திய பிரதமர் மோடி கடந்த 8 மற்றும் 9-ந்தேதி என இரண்டு நாட்கள் பயணமாக ரஷியா சென்றிருந்தார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திய பிறகு மோடியின் முதல் பயணம் இதுவாகும். மோடி பயணம் மேற்கொண்ட நேரத்தில்தான், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நேட்டோ மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.
இந்த நிலையில் நேட்டோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷிய பயணம் மேற்கொண்டது. அதிகரிக்கும் இந்தியா- ரஷியா இடையிலான உறவு அளிக்கிறது என அமெரிக்க பராளுமன்ற எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் டொனால்டு லு பதில் அளித்தார்.
"இந்திய பிரதமர் மோடியின் பயணம் நேரம் பற்றிய கவலைப்பற்றி உங்கள் கருத்துடன் நான் உடன்பட முடியாது. எங்களுடைய இந்திய நண்பர்களுடன் (அதிகாரிகளடன்) இது தொடர்பாக கடினமான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிக்கிறோம்" என டொனால்டு அமெரிக்கா பாராளுமன்ற எம்.பி.க்களிடம் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "இந்தியா பிரதமர் மோடி ரஷியா செல்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின்பேது போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சியை சந்தித்து பேசினார். உக்ரைன் மீதான போர் சண்டையால் போரை வெல்ல முடியாது. உக்ரைன் சண்டையில் குழந்தைகள் உயிரிழந்ததை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். புதின் இருக்கையில் அவர் முன் லைவ் டெலிவிசனில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார் " என்றார்.
ரஷியா பயணத்தின்போது இந்திய பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது குறித்து மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரஷியா- இந்தியா உடன் புதிய முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை. தொழில்நுட்ப ஒத்துழைப்பை பார்க்க முடியவில்லை" என்றார்.
"உக்ரைனில் உள்ள கிய்வ் நகரில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் புடின் வேண்டுமென்றே ஏவுகணைகளை வீசிய அன்றே மாஸ்கோவில் போர்க்குற்றவாளி புட்டினை நான் மிகவும் மதிக்கும் மற்றும் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி கட்டித் தழுவியதைக் கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்" என எம்.பி. ஒருவர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
- நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது, இந்திய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.
இந்த நிலையில் 2 இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.
பயிற்சி பெறும் வீரர்களில் ஒருவர் ஏற்கனவே ரஷியா மாஸ்கோவின் யூரி ககாரின் விண்வெளிப் பயிற்சி மையத்தில் அடிப் படைப் பயிற்சி பெற்றவர் ஆவார். டெக்சாசில் பயிற்சியை முடித்த பிறகு, இந்த இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய-அமெரிக்க விண்வெளி பயணத்தில் சேருவார்.
இந்த விண்வெளிப் பய ணம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அக்சியோம் ஆகியவை இந்திய விண்வெளி வீரர்களுக்கு தேவையான நிபுணத்துவத்தை பெற உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நாசா பயிற்சி மற்றும் இந்திய-அமெரிக்க மிஷன் ஆகியவை இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான ஆயத்தப் படிகளாகும்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "விண்வெளிப் பயணத்திற்கான பொதுவான பயிற்சியை இந்திய வீரர்கள் பெற்றிருந்தாலும், இந்தியாவில் அவர்களது பயிற்சியின் பெரும்பகுதி ககன்யான் மாட்யூல்களில் கவனம் செலுத்தியது.
எனினும் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலைய மாட்யூல்கள் மற்றும் நெறிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்" என்றார்.
மேலும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் கூறும்போது, "இந்த திட்டம் இந்திய விண்வெளி வீரர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும். இது ககன்யான் திட்டத்தை நோக்கிய ஒரு மிக முக்கியமான படியாகும்" என்றார்.
- ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து.
- 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் டெர்மினல் 8-ல் உள்ள எஸ்கலேட்டரில் தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். 900-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
- மணிப்பூரில் வன்முறை அதிகரித்து காணப்படுகிறது.
அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களிடம் இந்தியா பயணம் செய்பவர்கள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
"குற்றம் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுவதால் இந்தியா செல்வோர் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். சில பகுதிகளில் அதிகளவு அபாயம் கொண்டுள்ளது."
"இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர்கள். அங்கு தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது."
"இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது."
"சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தை, அரசு சேவை வழங்கும் பகுதிகளை குறிவைத்து சுற்றுலாவாசிகள் மீது கயவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்," என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.






