என் மலர்
பாகிஸ்தான்
- வன அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிங்கக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
- ஒவ்வொரு மாதமும் 5 நிமிடங்கள் மக்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று வித்தியாசமான தண்டனையை அளித்தார்.
பாகிஸ்தானை சேர்ந்த 'யூ-டியூபர்' ரஜப்பட் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற அவரது நண்பரும், பிரபல யூ-டியூபருமான ஓமர் டோலா என்பவர் நண்பருக்கு வித்தியாசமாக பரிசளிக்க முடிவு செய்து ஒரு சிங்கக்குட்டியை திருமண பரிசாக வழங்கினார்.
இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர். இதையடுத்து வன அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிங்கக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நீதிபதி, யூ-டியூபர் ரஜப்பட் உயிரியல் பூங்காவில் சிங்கக்குட்டியை பராமரிக்க நிதியுதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் 5 நிமிடங்கள் மக்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று வித்தியாசமான தண்டனையை அளித்தார்.
- பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.
இந்தநிலையில் தற்போது அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- பாகிஸ்தானில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது.
- இந்த மோதலில் பயங்கரவாதிகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
லாகூர்:
பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு, பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் பொதுமக்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரைக் குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் கலாட் மாவட்டத்தின் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் 18 பேர், பயங்கரவாதிகள் 12 பேர் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.
- வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் கராச்சி நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது.
இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் ரெயில் பெட்டிகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
- நவநாகரிக உடைகள் அணிந்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக இருந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர்கள் ஹீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்தவர் அன்வரூல் ஹக். இவருக்கு திருமணமாகி ஹீரா (வயது 15) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறி குடியுரிமை பெற்று 28 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சிறுமி ஹீரா அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்துள்ளார்.
ஹீரா தனது செல்போனில் பிரபல சமூக வலைத்தள செயலியான டிக்டாக்கை பதிவிறக்கம் செய்து அதில் வீடியோ வெளியிட்டு நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நவநாகரிக உடைகள் அணிந்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாக இருந்துள்ளார்.
ஹீராவின் இந்த நடவடிக்கையை அன்வரூல் ஹக் கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் ஹீரா டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பு அன்வரூல் ஹக் தனது மகள் ஹீராவுடன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு வந்திருந்தார். பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் உள்ள பூர்வீக வீட்டில் ஹீராவுடன் அன்வரூல் ஹக் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று அன்வரூல் ஹக் வீட்டினுள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அங்கே வீட்டு முற்றத்தில் ஹீரா உடலில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். சிறுமியை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஹீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்தான விசாரணையில் அன்வரூல் ஹக் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தனது மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றதை ஒத்து கொண்டுள்ளார். சிறுமி ஹீரா தொடர்ந்து டிக்டாக் பயன்படுத்தி வந்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்வதற்காகவே அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு கூட்டி வரப்பட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து அன்வரூல் ஹக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
- பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
முல்தான்:
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குடகேஷ் மோட்டி அரை சதம் கடந்து 55 ரன் எடுத்தார். வாரிகன் 36 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது. ரிஸ்வான் 49 ரன்னும், சவுது ஷகீல் 32 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 4 விக்கெட்டும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 66.1 ஓவரில் 2-வது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெய்ட் 52 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து, 254 ரன்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 178 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை என்பதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள லக்கி மார்வத் பகுதியில் 18 பயங்கரவாதிகள் பலியாகினர்.
லாகூர்:
பாகிஸ்தானில் 3 வெவ்வெறு சம்பவங்களில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3,000 கிராம் வெடிபொருட்கள், 11 டெட்டனேட்டர்கள், 22 அடி பாதுகாப்பு ஃப்யூஸ் கம்பி, தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பகுதியில் அமைந்துள்ள லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், லக்கி மார்வத் மாவட்டத்தில் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், பயங்கரவாத தடுப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் லக்கி மார்வத் மாவட்டத்தில் 18 பயங்கரவாதிகளும், கராக் மாவட்டத்தில் 8 பயங்கரவாதிகளும் சேர்த்து மொத்தம் 26 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 123 ரன்னில் சுருண்டது.
முல்தான்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சாத் ஷகீல் 84 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 25.2 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வாரிகன் 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
93 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 157 ரன்களில் ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 7 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. அலிக் அத்தான்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 55 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 127 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 5 விக்கெட்டும், அப்ரார் அகமது 4 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சஜித் கானுக்கு அளிக்கப்பட்ட்டது.
- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 137 ரன்னில் சுருண்டது.
முல்தான்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிறிது கால தாமதம் ஆனது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. சாத் ஷகீல் 56 ரன்களுடனும், ரிஸ்வான் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பனிமூட்டத்தால் இன்றும் ஆட்டம் தொடங்க காலதாமதம் ஆனது.
தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சாத் ஷகீல் 84 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 25.2 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வாரிகன் 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
93 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார். இதுவரை பாகிஸ்தான் 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- பாகிஸ்தானில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.
லாகூர்:
பாகிஸ்தானின் கைபர்பக்துவா மாகாணத்தில் உள்ள குர்ராம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பழங்குடியின குழுக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது.
நிலப்பிரச்சனை தொடர்பாக ஷியா மற்றும் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர்கள் இடையே அந்த மாவட்டத்தில் நடந்து வரும் மோதலில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குர்ராம் மாவட்டத்திற்கு வாகனங்களில் உணவு, மருந்து உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அப்போது அங்கு வந்த கிளர்ச்சியாளர்கள் அந்த வாகனங்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு, ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 2 பேர், லாரி டிரைவர் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் 5 டிரைவர்களை கடத்திச்சென்றனர். நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று [வெள்ளிக்கிழமை] வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை ஆல்-கதிர் என்ற பெயரில் அவர்கள் இணைந்து நிறுவிய அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB) கடந்த 2023 இல் முன்வைத்தது
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 3 முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் ஜாவேத் ரண தீர்ப்பளித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டரும், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராகவும் இருந்த இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று இம்ரான் கான் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- ராவல்பிண்டி நகரின் பரபரப்பான சாலையில் எவ்வித பதற்றமும் இன்றி ஜாகிதா டாக்சியை ஓட்டிச் சென்றார்.
- வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரைச் சேர்ந்தவர் ஜாகிதா காஸ்மி, 67 வயதான இவருக்கு 7 மகன்கள் உள்ளனர். 37 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவர் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக டாக்சி ஓட்டினார். இதன்மூலம் அவர் நாட்டின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்தநிலையில் ராவல்பிண்டி நகரின் பரபரப்பான சாலையில் எவ்வித பதற்றமும் இன்றி ஜாகிதா டாக்சியை ஓட்டிச் சென்றார். இதனை அவரது மகன் மஜித் வீடியோவாக எடுத்து `தாய்தான் ஒருவரது முதல் மற்றும் என்றென்றும் சிறந்த தோழி' என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோவை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு தங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளனர்.






