என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐ.சி.சி. ஒருநாள் தொடரில் சிறந்த சேஸ்: ஆஸ்திரேலியா புதிய சாதனை
- ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லாகூர்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து 165 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் இந்திய அணி நிர்ணயித்த (321/6) இலக்கை இலங்கை அணி (322/3) ரன் எடுத்து வெற்றிபெற்று இருந்தது.
ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) இது சிறந்த சேஸ் ஆனது.
இதேபோல், இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் சிறந்த சேஸ் ஆகவும் இது அமைந்தது. சிட்னியில் 2011-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா 334/8 ரன் எடுத்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






