என் மலர்
இஸ்ரேல்
- ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்.
- பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
ஜெருசலம்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளை மற்ற நாடுகள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மக்களைக் கொல்கின்றனர். அவர்களை கொல்லும் முன் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளனர். அதன்பின்னரே கொன்றுள்ளனர். இதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது தற்காலிகமாக தான் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும். அவர்கள் எங்கிருந்தாலும் அழிப்போம்.
பயங்கரவாதிகள் தொடர்பு குறித்து நாங்கள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீடுகளை அளித்துள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் பயங்கரவாதிகள் சுற்றித் திரிகின்றனர்.
ராணாவை ஒப்படைக்க அமெரிக்காவால் முடியும்போது, பாகிஸ்தானால் ஏன் பயங்கரவாதிகளை (ஹபீஸ் சயீத், சாஜித் மிர், ஜாகிர் ரஹ்மான் லக்வி) ஒப்படைக்க முடியாது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கவே முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.
- பிணைய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இந்நிலையில், காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது. அதாவது பிணைய கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் காசாவில் ஆயுதங்கள் இருக்க கூடாது என்று இஸ்ரேல் நிபந்தனைகள் விதித்துள்ளது.
மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவு பஞ்சம் அதிகரித்துள்ள காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
- புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
- முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.
இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.
முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது.
இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.
அதன்படி, இன்றும் 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரண்ட நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
We have a pope என வாடிகனில் உள்ள தேவாலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்ந்தெடுத்தனர்.
- கடந்த மார்ச் முதல் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
- திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்த்து ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 அக்டோபர் 7 இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை பலியாகினர். 200 பேர் வரை பணய கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இன்று வரை காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 52,000த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் பொது ஹமாஸ் இஸ்ரேல் பணய கைதிகள் பலரை விடுவித்தது. 1 மாதத்தில் போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
கடந்த மார்ச் முதல் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. இதனால் காசா மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு (காலவரையின்றி) அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கூடிய அமைச்சரவையில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இது ஹமாஸ் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை தெற்கு காசாவிற்குள் இடம் பெயர்க்கும் சாத்தியக்கூறும் உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே போரின் பேரில் காசாவின் பாதி பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாடு செலுத்தி வருகிறது. இந்நிலையில் முழுமையான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் போரின் போர்வையில் நிறுவ முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர், காசாவின் பல பகுதிகளில் கூடுதல் ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், ஹமாஸ் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படும் என்றுகூறியுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
காசா போருக்கு எதிராக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர்.
நேற்று இஸ்ரேலின் 2-வது பெரிய நகரமாக திகழ்ந்து வரும் டெல்அவிவ் பென்குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.
போர் தொடங்கிய பிறகு இஸ்ரேல் விமான நிலையம் மீது அவர்கள் முதல் முறையாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விமான பயணிகள் மத்தியிலும் பீதி ஏற்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-
நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டோம். எதிர்காலத்திலும் செயல்படுவோம். இனி 1 முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம், தொடர் தாக்குதல் நடத்துவோம். நாங்கள் 2 பணிகளில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று ஹமாசை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்பது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.
- டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன.
- கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது.
இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய ஊடக நிறுவனமான ஹயோம் பகிர்ந்துள்ள காணொளியில், ஏவுகணை தரையிறங்கிய இடத்தில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. மேலும் பயணிகள் முனையத்திலிருந்து புகை எழுவதை காட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன. கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
- லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.
காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.
லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்தார்.
- போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.
- போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ஈஸ்டர் திங்கள் (ஏப்ரல் 21) அன்று காலை தனது 88 வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் போப் பிராசிஸ் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் நீக்கியுள்ளது.
"போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்" என்று வெளியிட்ட பதிவை இஸ்ரேல் நீக்கியுள்ளது கத்தோலிக்க நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.
மறைந்த போப் பிரான்சிஸ் காசா - இஸ்ரேல் போரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் தனது கடைசி ஈஸ்டர் செய்தியிலும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். அதே நேரம் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது.
- அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 51,000 த்தை தாண்டியுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், தற்காலிக கூடாரங்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, காசாவில் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹமாஸ் அழிக்கப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது.
அவ்வாறு போரிட்டால்தான், இஸ்ரேலுக்கு ஹமாஸ் படையினரால் அச்சுறுத்தல் இருக்காது. போரைத்தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த 2023, அக்டோபர் 7 இல் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 பேர் வரை இறந்தனர்.
200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பலர் இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் வைத்து கொல்லப்பட்டனர்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நீடித்த போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது. இதற்கிடையே மீதமிருக்கும் அனைத்து பயணக்கைதிகளையும் ஒப்படைக்க தயார் என ஹமாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காசாவில் நேற்று கொல்லப்பட்டவர்களில் 5 குழந்தைகள், 12 பெண்கள் அடங்குவர்.
- மத்திய காசாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் காசா முழுவதும் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்குமிடம் தற்காலிக கூடாரங்கள் மீது அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன.


இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பகுதிகள் மீது காசாவிலிருந்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 10 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

கடலோர இஸ்ரேலிய நகரமான அஷ்டோட்டை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. ராக்கெட் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மத்திய காசாவில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கட்டாய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ள நிலையில் மறுபுறம் காசாவில் பெண்கள், குழந்தைகள் தங்கியிருக்கும் தற்காலிக தங்குமிடங்கள் குறிவைக்கபடுவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
- காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
- இதனால் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
காசா:
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் குழந்தைகள் என்றும், 12 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிட்ட கல்லை மட்டும் எடுத்தாள்.
- ஒரு தொல்பொருளை கண்டுபிடித்ததை உணர்ந்தோம்.
இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு முந்தைய கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், "நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய கற்கள் இருந்தது. ஆனால் அவள் இந்த குறிப்பிட்ட கல்லை மட்டும் எடுத்தாள். அந்த கல் பார்ப்பதற்கே அழகாக இருந்தால் என் பெற்றோரை அழைத்தேன். அப்போதுதான் நாங்கள் ஒரு தொல்பொருளை கண்டுபிடித்ததை உணர்ந்தோம்," என்றார்.

பின்னர் அந்தக் குடும்பத்தினர் இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையத்திடம் (IAA) தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுமி ஷிவ்வுக்கு நல்ல குடியுரிமைக்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கினர்.

இதனிடையே இஸ்ரேலின் தொல்பொருள் ஆணைய இயக்குனர் கூறுகையில், "இஸ்ரேல் நாட்டின் தேசிய பொக்கிஷத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த ஷிவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு நன்றி. அனைவரும் அதைப் பார்த்து மகிழ முடியும். பஸ்கா பண்டிகையை முன்னிட்டு, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு கண்காட்சியில் இந்த முத்திரையை நாங்கள் வழங்குவோம்" என்று கூறினார்.






