என் மலர்
உலகம்
- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.
- ஐ.நா.-வின் நான்கு பள்ளிகள் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன.
காசாவில் உள்ள ஐ.நா. பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. உயிரிழந்தவர்கள் அந்த பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனியர்கள் ஆவர்.
"இன்று காலை அல்-ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்," என்று சுகாதார துறை செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-கத்ரா தெரிவித்தார்.
முன்னதாக இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 54 பேர் காயமுற்றனர் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் ஐ.நா.-வும் எந்த தகவலும் வழங்கவில்லை.
காசா எல்லையில் உள்ள நான்கு ஐ.நா. பள்ளிகள் வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்ததாக ஐ.நா.-வின் பாலஸ்தீனர்களுக்கான மீட்பு படை தெரிவித்து இருந்தது.
- ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பிறந்தநாளன்று புதிய ஆடை அணிந்து பள்ளிக்கு சென்று சக மாணவ- மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் இவையெல்லாம் ஏழை மாணவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாததாகவே உள்ளது.
இந்நிலையில் ஒரு ஏழை சிறுவனின் பிறந்த நாளை சக மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பயனர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. கொலம்பியாவின் எபிஜிகோ பகுதியை சேர்ந்த சிறுவன் ஏஞ்சல் டேவிட். 8 வயதான இந்த ஏழை சிறுவன் இதுவரை பிறந்தநாளை கொண்டாடியது கிடையாது.
இந்நிலையில் அவனது 8-வது பிறந்தநாளை அறிந்த பள்ளி ஆசிரியர் காசாஸ் சிமெனா அந்த சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வகுப்பறையில் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டார்.
அதன்படி சிறுவன் டேவிட் வகுப்பறைக்கு வந்த போது சக மாணவர்கள் அவரை கைதட்டி, பிறந்தநாள் வாழ்த்து, பாட்டு பாடி வரவேற்றுள்ளனர். மேலும் வகுப்பறையில் பலூன்கள் கட்டி, அலங்காரம் செய்து சிறுவனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் ஆசிரியர் மற்றும் சக மாணவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ‘கர்வாசவுத்’ பண்டிகை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அழகான பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.
- திருமணமாகாத மேரிமில்பென் தனது வருங்கால கணவருக்காக பிரார்த்தனை செய்து பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் வடஇந்தியாவில் திருமணமான பெண்கள் தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக கொண்டாடும் 'கர்வாசவுத்' பண்டிகையை அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகியான மேரிமில்பென் கொண்டாடிய காட்சிகளை தனது எக்ஸ்தளத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்திய பாரம்பரிய உடையில் அலங்காரம் செய்த அவர் ஏராளமான நகைகள் அணிந்து 'கர்வாசவுத்' பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்துடன், அந்த பண்டிகையின் முக்கியத்துவத்தை விளக்கி பதிவிட்டுள்ளார். அதில் 'கர்வாசவுத்' பண்டிகை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அழகான பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இதில் சமூக பிணைப்புகளை வலுப்படுத்தும் கொண்டாட்டமாகும் என குறிப்பிட்டுள்ளார். திருமணமாகாத மேரிமில்பென் தனது வருங்கால கணவருக்காக பிரார்த்தனை செய்து பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
- பாகிஸ்தானை சேர்ந்த யூ-டியூபரான நவுமன் ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. சில வீடியோக்கள் இது எப்படி சாத்தியம் என ஆச்சரியம் கலந்த சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த யூ-டியூபரான நவுமன் ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு சிறுவன் சங்கிலியால் கட்டப்பட்ட புலியை இழுத்து செல்வது போன்ற காட்சிகள் பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வீடியோ வைரலாகி ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்துள்ளது. சில பயனர்கள் சிறுவனின் துணிச்சலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர். அதே நேரம் பயனர்கள் பலரும் சிறுவனின் செயலை விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டஸ்கனி:
இத்தாலி டஸ்கனி நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைத்து இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதில் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர். 2 பேரை காணவில்லை. இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சாலைகளிலும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது.
இத்தாலியில் வரலாற்று நகரமான புளோரன்ஸ் அருகே உள்ள கேம்பி பிசென்சியோவில் 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அங்கு நிலைமை மோசமாக உள்ளதால் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாள் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐ.பி.எல். தொடர் மிகப்பெரிய வர்த்தகமாக விளங்குகிறது.
- சவுதி அரேபியா கால்பந்து மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் முதலீடுகளை செய்து உள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் இப்போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 16 சீசன்கள் நடந்து உள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐ.பி.எல். தொடர் மிகப்பெரிய வர்த்தகமாக விளங்குகிறது. அதன் மதிப்பும் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல்லில் முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா கால்பந்து மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் முதலீடுகளை செய்து உள்ளது. இதற்கிடையே சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள், ஐ.பி.எல். அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த கட்டமைப்பை 30 பில்லியன் டாலர் (ரூ.2.5 லட்சம் கோடி) மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வந்த போது, ஐ.பி.எல். நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா அரசு இங்கிலீஷ் பிரீமியர் லீக் அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கைப் போலவே, ஐ.பி.எல். அமைப்பில் சுமார் 5 பில்லியன் டாலரை (ரூ.41 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து ஐ.பி.எல். கட்டமைப்பை மற்ற நாடுகளுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் வகையில், பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியா அரசு ஐ.பி.எல். அமைப்பில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக முடிவு செய்தாலும், மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் முடிவு எடுக்க செய்ய வேண்டும்.
- சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.
- பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றியது.
இந்த நகரை மீட்க உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷிய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் சாப்சின்கா வேலை வாய்ப்பு மையத்தில் உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 6 பேர் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- மீண்டும் அதிபரானால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் ஆட்சி அமைப்பார்
- டிரம்பின் செயல்திட்ட வடிவம் அஜெண்டா-47 என அழைக்கப்படுகிறது
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார். மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவி வகிப்பார்.
அதிபர் தேர்தலில் வென்றால், நாட்டின் வளர்ச்சிக்காக டிரம்ப் எடுக்க போகும் முக்கிய நடவடிக்கைகளை 'அஜெண்டா 47' (Agenda 47) என அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். அதன்படி, தனது முந்தைய பதவி காலத்தில் தனது திட்டங்களுக்கு நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் தடையாய் இருந்ததாக கருதும் டிரம்ப், இம்முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தயார் செய்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நகரங்களில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களை அமெரிக்க நகரங்களுக்கு வெளியே குடியமர்த்துவது, தேசபக்தி உள்ள ஆசிரியர்களையே கல்வி நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவது, அனைத்து இறக்குமதிகளுக்கும் ஒரு உலகளாவிய அடிப்படை கட்டணத்தை நிர்ணயிப்பது, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் மெக்சிகோ நாட்டினரை மீண்டும் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை ரத்து செய்வது, ரஷியாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கான பல கோடி மதிப்பிலான உதவிகளை நிறுத்துவது, எரிசக்திக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் அரசுக்கு எதிராக செயல்படும் அரசாங்க அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வது என பல அதிரடி நடவடிக்கைகள் இந்த 'அஜெண்டா 47' மூலம் எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
அமெரிக்க வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் வகுக்கும் இந்த திட்டங்களுக்கு ஜனநாயக கட்சியிலும் ஒரு சிலர் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் மீது அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளில் வரும் தீர்ப்பை பொறுத்தே அவர் அதிபராவது முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து ஆய்வின் தரவுகளை அமெரிக்க பல்கலைக்கழகம் பெற்ற ஆய்வு செய்தது
- அதிக உப்பு, கார்டிசாலை அதிகரித்து, அதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் 'சர்க்கரை நோய்' என வழக்கத்தில் அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. ஆங்கிலத்தில் 'டயாபடிஸ்' (diabetes) என அழைக்கப்படும் நீரிழிவில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை உள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்களையும், அதை கட்டுக்குள் வைப்பதற்கான வழிமுறைகளையும் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
சுமார் 4 லட்சம் பேரிடம் 12 வருடங்களாக இங்கிலாந்தில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தரவுகளை பெற்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தின் டுலேன் பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 'அப்சர்வேஷனல் ஸ்டடி' (observational study) என அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு ஆய்வுகளில் ஒரு காரணியை நோய்க்கான நேரடி காரணம் என குறிப்பிட முடியாவிட்டாலும், நோயை உண்டாக்குவதில் மறைமுக தொடர்புடைய காரணியாக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.

அவ்வாறு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாம் சமைக்கும் உணவு மற்றும் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளின் மூலமாக உட்கொள்ளப்படும் உப்பு, நீரிழிவு நோய்க்கு ஒரு மறைமுக தொடர்பு உள்ள காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 8 கிராம் உப்பு, மக்கள் உட்கொள்ளும் சமைத்த மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவின் மூலமாக உடலுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்த அழுத்தம் கூடும் பொழுது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலினின் செயலாக்கம் குறைந்து விடுகிறது. டுலேன் பல்கலைகழக ஆய்வில் உப்பின் அளவு கூடுவதால் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும், இதன் காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
உப்பை குறைப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாகவோ அல்லது உப்பு கூடுவதால் சர்க்கரை அதிகரிப்பதாகவோ கூற இந்த ஆய்வில் நேரடி ஆதாரம் இல்லை. இருந்தாலும், உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே உள்ள நோயாளிகளுக்கு, உட்கொள்ளும் உப்பின் அளவு குறைவதனால் ரத்த அழுத்தம் குறைவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி இருந்த 5 கிராம் தினசரி அளவை விட, இந்தியர்கள் அதிகமாக 9லிருந்து 10 கிராம் வரை உப்பை உட்கொள்கிறார்கள் என சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
- பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வாவில் 17 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்
- இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், விமானப்படை பயிற்சி தளம் மீது தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்தின் மீது, இன்று காலை ஆயுதமேந்திய பயங்கரவாத குழு திடீரென தாக்குதல் நடத்தியது.
இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், பணியில் இருந் பாதுகாப்புப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மூன்று பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இருந்த போதிலும், மூன்று விமானங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புப்படை நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதில் உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் சுமார் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
- காத்மாண்டில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம்
- 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தகவல்
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் மையம், நிலடுக்கம் முதற்கட்ட அளவில் 5.6 ரிக்டர் பதிவானதாகவும், 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன்பின் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் நிலநடுக்கம் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேசிய மையம், நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் உள்ள ஜாஜர்கோட், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
ருகும் மாவட்டத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜாகர்கோட் மாவட்டத்தில் 34 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்னர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய தலைநகர் டெல்லியில இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால், டெல்லிவாசிகள் லோசான அதிர்வை உணர்ந்தனர்.
இந்த நிலையில் நேபாளத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
- இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
- குழந்தைகள், பெண்கள் என இடம் பெயர்ந்த மக்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி எல்லையை கடந்து சென்ற பாலஸ்தீனியர்களில் 14 பேர் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல் கத்ரா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "இஸ்ரேல் இன்று நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என இடம் பெயர்ந்த மக்கள் 14 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவின் கடற்கரை பகுதியை ஒட்டிய சாலையில் பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது. முன்னதாக இங்கு இருப்பவர்களை தெற்கு நோக்கி செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






