search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mary Millben"

    • இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுக்கு பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.
    • குடியரசு தலைவராக திரவுபதி முர்மு உருவாவதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.

    பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய - அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, "நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுக்கு பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர் என நான் நம்புகிறேன். குடிமக்களாக நாட்டில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தி நமக்கு உள்ளது. எனவே இந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களின் குரலையும் வாக்கையும் ஓங்கி ஒலிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார். மேலும், அமைச்சரவையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் குடியரசு தலைவராக திரவுபதி முர்மு உருவாவதற்கு மோடி காரணம் என்றும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு தொடர்ந்து பலப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

    கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, பாடகி மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன'பாடி, பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவரது பாதம் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் கருத்தரிப்பு சதவீதம் குறைவு குறித்து மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கருத்து.
    • நிதிஷ்குமார் கருத்து மிகவும் இழிவானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    வாஷிங்டன்:

    பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    அவர், குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி அவையில் பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற ஒரு பெண், தன்னுடைய கணவரிடம் கூறி, உறுதி செய்து கொள்வார் என்றார். இதனை விவரித்து பேசும்போது, கைகளை அசைத்து, அதற்கான செய்கைகளை வெளிப்படுத்தியதுடன், மிகைப்படுத்தியும் பேசினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

    அவரது பேச்சுக்கு பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ்குமார் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியது.

    இதையடுத்து, பீகார் சட்டசபை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால் எனது பேச்சுகளைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    இந்நிலையில, நிதிஷ்குமார் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் எக்ஸ் சமூக வலைதளத்தில், பீகார் முதல் மந்திரிக்கான வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவேன் என தைரியமுள்ள பெண் ஒருவர் முன்வந்து அறிவிப்பார் என நான் நம்புகிறேன். நான் ஓர் இந்திய குடிமகளாக இருந்திருப்பேன் என்றால் பீகாருக்குச் சென்று முதல் மந்திரிக்கான தேர்தலில் போட்டியிடுவேன். பீகாரை வழிநடத்த பெண் ஒருவருக்கு பா.ஜ.க. அதிகாரமளிக்க வேண்டும். அதுவே பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சிக்கான உண்மையான உணர்வாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • ‘கர்வாசவுத்’ பண்டிகை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அழகான பாரம்பரியத்தை கொண்டாடுகிறது.
    • திருமணமாகாத மேரிமில்பென் தனது வருங்கால கணவருக்காக பிரார்த்தனை செய்து பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

    இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் வடஇந்தியாவில் திருமணமான பெண்கள் தனது கணவரின் நீண்ட ஆயுளுக்காக கொண்டாடும் 'கர்வாசவுத்' பண்டிகையை அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடகியான மேரிமில்பென் கொண்டாடிய காட்சிகளை தனது எக்ஸ்தளத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

    இந்திய பாரம்பரிய உடையில் அலங்காரம் செய்த அவர் ஏராளமான நகைகள் அணிந்து 'கர்வாசவுத்' பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்துடன், அந்த பண்டிகையின் முக்கியத்துவத்தை விளக்கி பதிவிட்டுள்ளார். அதில் 'கர்வாசவுத்' பண்டிகை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அழகான பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இதில் சமூக பிணைப்புகளை வலுப்படுத்தும் கொண்டாட்டமாகும் என குறிப்பிட்டுள்ளார். திருமணமாகாத மேரிமில்பென் தனது வருங்கால கணவருக்காக பிரார்த்தனை செய்து பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

    • மோடியின் கால்களை தொட்டு வணங்கியவர் மில்பென்
    • நாட்டின் மதிப்பை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமைக்கான பண்பில்லை

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மேரி ஜே. மில்பென் (Mary J. Millben).

    இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் இவர் ஒரு நடிகையாகவும், ஊடக பிரபலமாகவும் திகழ்கிறார். கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்று பயணம் செய்தபோது, மோடி பங்கேற்ற பயண நிறைவு நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் இந்திய தேசிய கீதத்தை பாடியவர் மில்பென்.

    அந்நிகழ்ச்சியில் அவர் மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். இது குறித்த வீடியோ அப்போது வைரலானது.

    கடந்த மே மாதம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே துவங்கிய ஒரு மோதல் இனக்கலவரமாக மாறி வன்முறை வெடித்தது.

    கடந்த ஜூலை மாதம், ஒரு இனத்தை சேர்ந்த இரு பெண்களை மே மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மற்றொரு இனத்தை சேர்ந்தவர்கள் மானபங்கப்படுத்திய அரை நிமிடத்திற்கும் குறைவான ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலானது.

    இந்த சம்பவத்திற்காக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மோடிக்கு ஆதரவாக மில்பென் குரல் கொடுத்திருக்கிறார்.

    மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற பாலியல் வன்முறைகளை மோடி வெளிப்படையாக பேசியதை ஜூலை மாதமே பாராட்டிய மில்பென் மணிப்பூர் வன்முறை, மோடியின் தலைமை மற்றும் இந்திய எதிர்கட்சிகள் குறித்து சமூக வலைதளமான எக்ஸ்ஸில் (டுவிட்டர்) பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

    இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் கடவுளின் குழந்தைகள். மணிப்பூரில் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்காக என் மனம் மிகவும் வருந்துகிறது. உண்மை என்னவென்றால் மோடியின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளது. மணிப்பூரின் பெண்களுக்கான நீதியை மோடி பெற்று தருவார். பிரதமர் மோடி மணிப்பூர் பெண்களின் விடுதலைக்காக போராடுவார்.

    கலாசார மரபுகளை அவமரியாதை செய்து, தன் நாட்டின் மதிப்பினை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமை பண்பாகாது. பொய் கதைகளை நேர்மையற்ற ஊடகங்கள் உரக்க சொன்னாலும் அவற்றில் வலு இருக்காது. உண்மைதான் எப்போதும் மக்களை சுதந்திரமாக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்காவில் மக்கள் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் முழக்கமான "சுதந்திரம் ஒலிக்கட்டும்" எனும் வார்த்தைகளை குறிப்பிட்டு "என் இனிய இந்தியாவே, உண்மை ஒலிக்கட்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • மேரி மில்பென் இந்திய தேசிய கீதத்தை பாடுகிறார்.
    • 10-ந்தேதி பியானோ இசைமேதை லிதியன் நாதஸ்வரத்துடன் இணைந்து பாடுகிறார்.

    வாஷிங்டன் :

    நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக வரும் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கவிடப்படுகிறது.

    தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் பங்கேற்று பாடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் அழைப்பின்பேரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக அவர் இங்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மேரி மில்பென் பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் என 3 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி பாடி உள்ளார்.

    இந்தியாவின் 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' மற்றும் 'ஜன கண மன' ஆகிய பாடல்களுக்கு பெயர் பெற்றவர், இந்த மேரி மில்பென்.

    தனது இந்திய பயணத்தால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிற இவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மனித உரிமை போராளியான டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ‌ ஜூனியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 1959-ம் ஆண்டு அவர் இந்தியாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டதன் மூலம், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் கலாசார தூதராக பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.

    இந்த பொக்கிஷம் போன்ற நாட்டை நான் கொண்டாடுவதில் பரவசம் அடைகிறேன். இந்தியாவுடனும், உலகமெங்கும் உள்ள இந்திய சமூகங்களுடனும், எனது அர்த்தமுள்ள உறவைக் கொண்டாகிறேன். இந்திய சுதந்திரத்தின் இந்த முக்கியமான கொண்டாட்டத்தின்போது, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ஜனநாயகக் கூட்டை முன்னிலைப்படுத்துகிறேன்.

    நான் எனது இந்திய பயணத்துக்கு தயாராகிற இந்த வேளையில், எனது இதயத்தின் உணர்வுகள், "மற்ற நாடுகளுக்கு நான் சுற்றுலா பயணியாக செல்லலாம். ஆனால் இந்தியாவுக்கு நான் புனித பயணியாக வருகிறேன்" என்ற டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை எதிரொலிக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    'இந்தியாஸ்போரா' அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமியின் அழைப்பின் பேரில் மேரி மில்பென் 'இந்தியாஸ்போரா குளோபல் போரத்தில்' முதன்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அவர் இந்திய தேசிய கீதத்தை பாடுகிறார். 10-ந் தேதி மாலை சர்வ தேச இளம் பியானோ இசைமேதை லிதியன் நாதஸ்வரத்துடன் இணைந்து அவர் பாடுகிறார். இந்த லிதியன் நாதஸ்வரம், சென்னையைச் சேர்ந்த 16 வயதே ஆன இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×