என் மலர்
உலகம்
- நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியம்.
- சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.
வனாடு அல்லது வனுவாட்டு குடியரசு என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுகள், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
இந்நிலையில், வனாடுவின் தெற்கே இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிடுகையில், "நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியமாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.
பூகம்பங்கள், புயல் சேதம், வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக வனாடு உள்ளதாக உலக இடர் அறிக்கையின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர்.
- இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் இந்த விருதில் அடங்கும்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான மீரா சந்த் (81), பெற்றுள்ளார்.
மீரா சந்த் பல்வேறு கலாசார சமூகங்கள் குறித்த புத்தகங்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். மீரா சந்த் உடன் நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலேசியா நாட்டிய கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீது ஆகியோரும் இந்த உயரிய விருதை பெற்றனர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் இந்த விருதில் அடங்கும்.
சிங்கப்பூர் அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மீரா சந்த் உள்பட 3 பேருக்கும் விருது வழங்கி கவுரவித்தார்.
கடந்த வருடம் தமிழரான இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இடைவிடாத தாக்குதல் நடந்து வருவதால் போரில் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ஆக்ரோஷத்துடன் தாக்கி வருவதால் நிவாரண பொருட்கள் வரும் வாகனங்களால் பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு வர முடியவில்லை.
காசா:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. .கடந்த மாதம் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாநகரில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதி முழுவதும் தற்போது இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கான்யூஸ் நகரம் இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமாகி விட்டது. தற்போது இஸ்ரேல் படையினர் தெய்ர்-அல்-பலா நகரை நோக்கி முன்னேறி வருகிறது.
இங்குள்ள ஒரு வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு தஞ்சம் அடைந் திருந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 34 பேர் பலியாகி விட்டனர்.
இடைவிடாத தாக்குதல் நடந்து வருவதால் போரில் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை காசாவில் 16 ஆயிரத்து 200 பேர் உயிர் இழந்து உள்ளனர். 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
காசாவில் தவிக்கும் பொதுமக்களுக்கு எகிப்து எல்லை ரபா வழியாக நிவாரண பொருட்கள் லாரி போன்ற வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் இந்த பகுதி அமைந்துள்ள தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ஆக்ரோஷத்துடன் தாக்கி வருவதால் நிவாரண பொருட்கள் வரும் வாகனங்களால் பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு வர முடியவில்லை. இதன் காரணமாக நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.ஏற்கனவே குறைந்த அளவிலேயே உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் கிடைத்து வரும் சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான்.
- அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.
கராச்சி:
இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் அந்த அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது பெயர் அட்னான் அகமது என்கிற அபு ஹன்சாலா சம்பவத்தன்று இவனை வீட்டின் அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அட்னான் அகமது உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை.
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான். அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுவின் நெருங்கிய கூட்டாளியாகவும், வலது கரமாகவும் இருந்து வந்தான். ஹபீஸ் சயீது காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஆவான்.
கடந்த 2015-ம் ஆண்டு உத்தம்பூரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
13-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் ஹபீஸ் சயீதுவை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான் அவனது முக்கிய கூட்டாளி அட்னான் அகமது சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கும், அட்னான் அகமதுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் உதவி செய்து வந்தது.
தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் பணம் உள்ளிட்ட உதவிகளை அவர்கள் செய்து வந்தாக கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு பாம்பேர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அட்னான் அகமது முக்கிய பங்காற்றினான்.
இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.
பாகிஸ்தானை பொறுத்தவரை சமீப காலமாக பல பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான மவுலானா மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான தாவூத் மாலிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2017-ல் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.
- துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தின் அருகில்தான் பிரபல சூதாட்ட மையம் உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் உள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், "நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூன்று முறை துப்பாக்கியால் சுடும் பெரிய சத்தத்தை கேட்டேன். அதன்பின் இரண்டு முறை சத்தம் கேட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் போலீசார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் நான் அடித்தளத்திற்கு ஓடினேன். நாங்கள் அங்கு 20 நிமிடங்களில் பதுங்கி இருந்தோம்" என்றார்.
லாஸ் வேகாஸில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூட நடைபெற்றது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.
- வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர்.
ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
காசா மக்கள் தொகையில் 18.7 லட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது.
காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன.
போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1-ந்தேதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார்.
அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர்.
வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார்.
- மக்கள் தொகை 2.6 கோடி மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது.
- பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்.
கடுமையான மற்றும் வித்தியாசமான சட்ட விதிகளை கொண்ட நாடாக வட கொரியா அறியப்படுகிறது. இந்த நாட்டினை கிம் ஜாங் உன் சர்வாதிகாரி போன்று ஆட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மிகச்சிறிய நாடான வடகொரியாவில் மக்கள் தொகை 2.6 கோடி மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வடகொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அந்நாட்டில் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கூறி மேடையிலேயே கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழதார்.

இது குறித்து பேசிய அவர், "நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். இது தான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பதோடு, குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
குழந்தை பிறப்பு குறித்து பேசியதோடு, அதே மேடையில் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார். கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வேலி வழியாக கான்யூனுஸ் நகருக்குள் நுழைந்து வருகின்றன.
- கான்யூனுஸ் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வீசப்படுகின்றன.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
வடக்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதி முற்றிலும் சின்னா பின்னாமாகி உள்ளது. இதற்கிடையே தெற்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.
அங்குள்ள மக்கள் இடம் பெயர இஸ்ரேல் வலியுறுத்தியது. அதன்படி தெற்கு காசாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. அங்குள்ள முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. தரைப்படை வீரர்களும் முன்னேறி வருகிறார்கள்.
இந்நிலையில் தெற்கு காசாவின் முந்தய நகரமான தான் யூனிசை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவத்தின் தளபதி ஜெனரல் பிங்கெல் மேன் கூறுகையில்ற, "தரைப்படை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து நாங்கள் மிகவும் தீவிரமான நிலையில் இருக்கிறோம். தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரமான கான் யூனுசை முற்றிலும் சுற்றி வளைத்து உள்ளோம். அந்த நகரின் மையப்பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே வடக்கு காசாவில் ஜபாலியா, ஷுஜாய் பகுதிகளில் சண்டையிட்டு வருகிறோம். வடக்கு காசா பகுதியில் பல ஹமாஸ் கோட்டைகளை கைப்பற்றினோம். தற்போது தெற்கில் ஹமாசின் கோட்டை நகருக்கு எதிராக செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
இஸ்ரேல் துருப்புகள் மற்றும் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வேலி வழியாக கான்யூனுஸ் நகருக்குள் நுழைந்து வருகின்றன.
கான்யூனுஸ் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் வீசப்படுகின்றன. அதில், "உங்கள் பாதுகாப்புக்காக நீங்கள் இருக்கும் தங்குமிடங்களிலும், மருத்துவமனைகளிலும் இருங்கள். வெளியே வராதீர்கள். வெளியே செல்வது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் முடிந்த பிறகு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் கையாளும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "போருக்கு பிறகு காசா பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் மட்டுமே கையாள முடியும். காசாவில் ராணுவமற்ற மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் படை செய்யும். இதை செய்யக்கூடிய ஒரே சக்தி இஸ்ரேல்தான். காசா பகுதியின் ராணுவ மயமாக்கலுக்கான எந்தவொரு சர்வதேச சக்தியையும் அல்லது முயற்சியையும் நான் நம்பவில்லை.
ஹமாசின் ராணுவ மற்றும் அரசியல் திறன்களை முற்றிலுமாக அகற்றி இஸ்ரேலுக்கு எதிர்காலத்தில் காசா பகுதியில் இருந்து எந்த அச்சுறுத்தலும் வராது என்பதை உறுதிப்படுத்துவோம். தற்போது காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்போம்" என்றார்.
- அகமதாபாத்தில் இருந்து துபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தர்வால் தர்மேஷ் குணமடைந்தார்.
கராச்சி:
இந்தியாவின் அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் நேற்று இரவு புறப்பட்டு சென்றது. அப்போது பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை விமானத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அகமதாபாத்தில் இருந்து துபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் (வயது 27) என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை அளவு குறைந்து படபடப்பு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு துபாய்க்கு புறப்பட்டது.
கடந்த மாதம் 23-ந்தேதி அன்று ஐதராபாத் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக கராச்சியில் அவசரமாக தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
- மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ஜெனிவா:
மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறியதாவது:-
ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவாக உள்ளது. வரிகளை உயர்த்துவது ஆரோக்கியமான மக்கள்தொகைக்கு வழிவகுக்கும். மதுபானங்கள் மற்றும் சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கு அதிக கலால் வரி விதிக்கப்பட வேண்டும். மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
80 லட்சத்துக்கு அதிகமானோர் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் இறக்கின்றனர். மதுபானங்கள், சர்க்கரை-இனிப்பு பானங்கள் மீதான வரியை அமல்படுத்துவது இந்த இறப்புகளைக் குறைக்கும். இது இந்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும். ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது. மதுபான விஷயத்தில், வன்முறை மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்கவும் வரி உதவுகிறது. மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் வருவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
- சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது.
- மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருந்திருந்தனர்.
அவர்களில் 46 பேர் கீழே இறங்கி வந்துவிட்டனர். மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் 12 பேரும் பலியானது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.
- சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
- இந்தப் பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடம் பிடித்துள்ளார்.
நியூயார்க்:
உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் முக்கியமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர் 5-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
இதைப்போல எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 60-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 76-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார்-ஷா ஆகியோர் கடந்த ஆண்டிலும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






