search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைகள்: ஐ.நா. தலைவர் கவலை
    X

    காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைகள்: ஐ.நா. தலைவர் கவலை

    • காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.
    • வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.

    தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர்.

    ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மக்கள் தொகையில் 18.7 லட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது.

    காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

    அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன.

    போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1-ந்தேதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார்.

    அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர்.

    வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×