என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    • நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    இதேபோல், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    • ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • 10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள்.

    10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

    • தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் விதிமுறை கடந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • டி.ஆர்.எஸ். போன்ற விதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் ஐ.பி.எல். விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. டி.ஆர்.எஸ். உள்பட பல்வேறு விதிமுறைகள் இந்தப் போட்டியில் இருக்கிறது.

    கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்ஸ் வீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பையில் சோதனை முறையில் செய்யப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரரான ஜெய்தேவ் உனட்கட் இதை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சாளர்கள் கூடுதல் நன்மையை அளிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று நான் உணர்கிறேன். ஒரு பந்து வீச்சாளரான நான் இந்த விதியை மிகவும் முக்கியமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டிராவிஸ் ஹெட், ரவீந்திர சச்சின் ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.
    • மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச்- மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் ஐ.பி.எல். தேதி முடிவு செய்வது என்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கருதியுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள். இதில் 30 இடம் வெளிநாட்டு வீரர்களுக்கானது. 10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை போவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஆர். அஸ்வின் வீரர்கள் ஏலம் தொடர்பான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ரூ.14 கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் கடந்த காலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் அவரை விடுவித்துள்ளது. அவர் ரூ.10 முதல் 14 கோடிக்கு விலை போகலாம் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

    ஹர்ஷல் படேல் ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், சச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும், கோயட்சே (தென்ஆப்பிரிக்கா) ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், போவெல் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும் விலை போகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட் ரூ.4 கோடி வரைதான் ஏலம் போவார் என்று கணித்துள்ளர். உமேஷ் யாதவுக்கு ரூ.4 முதல் ரூ.7 கோடி வரை கணித்துள்ளார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    • இன்று நடைபெறும் ஏலத்தில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதனால் கடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். தற்போது காயத்தில் இருந்து ஏறக்குறைய குணம் அடைந்துவிட்டார். இதனால் வருகிற ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று மதியம் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட் கலந்து கொள்ள இருக்கிறார்.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் ரிஷப் பண்ட்-யிடம் உடல் தகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பது புதிய அனுபவம். மேலும் உற்சாகமாக உள்ளது. இதற்கு முன்னதாக ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன்னதாக நான் செய்து கொண்டிருந்ததை விட (கிரிக்கெட் பயிற்சி) தற்போது சிறந்த வகையில் செய்து கொண்டிருக்கிறேன். 100 சதவீதத்திற்கு இன்னும் உடற்தகுதி பெற வேண்டியுள்ளது. ஆனால் இன்றும் சில மாதங்கள் உள்ளது. அதற்குள் நான் முழு உடற்தகுதியை எட்டி விடுவேன்" என்றார்.

    • கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது.
    • வேகப்பந்து வீரரான ஜெய்தேவ் உனட்கட் இதை வரவேற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் ஐ.பி.எல். விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. டி.ஆர்.எஸ். உள்பட பல்வேறு விதிமுறைகள் இந்தப் போட்டியில் இருக்கிறது.

    கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் பந்துவீச்சாளர் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்ஸ் வீச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பையில் சோதனை முறையில் செய்யப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரரான ஜெய்தேவ் உனட்கட் இதை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சாளர்கள் கூடுதல் நன்மையை அளிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று நான் உணர்கிறேன்.

    ஒரு பந்து வீச்சாளரான நான் இந்த விதியை மிகவும் முக்கியமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ருதுராஜ் ஏமாற்றம்.
    • அறிமுக வீரர் சாய் சுதர்சன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டி முடிந்து வீரர்கள் ஓட்டல் அறைக்கு திரும்புவதற்காக பேருந்தில் ஏறிக் கொண்டிருந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் செல்போனை பார்த்தபடி பேருந்து அருகில் வந்து படிக்கட்டில் ஏற முயன்றார். அப்போது தானியங்கி கதவு மூடிக்கொண்டது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் அதிர்ச்சி அடைந்தார்.

    ருதுராஜ் போட்டியில் விளையாடியதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கேப்டன் கே.எல். ராகுல் கதவை மூடியிருப்பார். சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் டிரைவர் கதவை மூடியிருப்பார்என மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.

    இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். அதேவேளையில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    • முதல் போட்டியில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் இன்று விளையாடமாட்டார்.
    • ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் 116 ரன்னில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (5 விக்கெட்), ஆவேஷ் கான் (4 விக்கெட்) மிரட்டினார்கள். பேட்டிங்கில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினர்.

    டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஷ்ரேயாஸ் அய்யர் 2-வது, 3-வது ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் படிதார் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். டோனி டி ஜோர்ஜி, பெலுக்வாயோ, கேப்டன் மார்க்கிராம் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆடுகளத் தன்மையை சரியாக கணிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என்பதை கேப்டன் மார்க்கிராம் ஒப்புக் கொண்டார். அவர்கள் அந்த தவறை திருத்திக் கொண்டு வலுவாக திரும்புவார்கள்.

    கடந்த முறை (2022) தென்ஆப்பிரிக்க தொடரில் லோகேஷ் ராகுல் தலைமையில் முழுமையாக (0-3) தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த முறை அதற்கு பரிகாரம் தேடும் வகையில் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வரிந்து கட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் அதிக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பெர்த் டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 271 ரன்னில் சுருண்டது.
    • 2-வது இன்னிங்சில் 89 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இருந்த போதிலும், ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேய மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என அந்த அணியின் டைரக்டர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஹபீஸ் கூறுகையில் "இந்தத் தொடருக்காக தயாராகும்போது, வீரர்களிடம் ஏராளமான திறமைகளை பார்த்தேன். ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் பகிஸ்தானால் வீழ்த்த முடியும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுடைய திறமையை எங்களால் வெளிப்படுத்த முடியாமல் போனது. அணிக்காக நாங்கள் திட்டத்தை உருவாக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு அணியாக எங்களால் எங்களது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.

    வீரர்கள் சிறப்பாக விளையாட விரும்பினார். ஆனால், அவர்கள் அதை தங்களது ஆட்டத்தில் வெளிப்படுத்தவில்லை. ஒரு அணியாக சில தவறுகளை உருவாக்கினர். நாங்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சூழ்நிலை இருந்தது. அதற்கு ஏற்ப தயாரானோம். ஆனால், எங்களுடைய வெளிப்பாடு சிறப்பாக அமையவில்லை" என்றார்.

    • தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 116 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தமிழகத்தின் இளம் வீரரான சாய் சுதர்சன் அறிமுகம் ஆனார். மூன்று விடிவிலான கிரிக்கெட்டின் ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில்தால் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 43 பந்தில் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாசி அசத்தினார்.

    அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடியதன் மூலம் கனவு நனவாகியதாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லோரையும் போல் சிறுவயதில் இருந்து வளரும்போதே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. கடின முயற்சியின் மூலம் கனவுகள் நனவாகும்.

    இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம். இந்த நினைவுகளை மேலும் நீட்டித்துக் கொண்டு செல்ல பார்க்கிறேன். கே.எல். ராகுலிடம் இருந்து அறிமுகத்திற்கான இந்திய அணியின் தொப்பியை வாங்கியது சிறப்பு தருணம். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து விளையாடியது அமேசிங்.

    இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணி இவரை ஏலம் எடுத்தது. குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    • பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மெல்போர்ன் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் பார்க்க முடியும்.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் கடந்த 14-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் பாக்சிங் டெஸ்டாக டிசம்பர் 26-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கம்மின்ஸ், 2. ஸ்காட் போலந்து, 3. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), 4. ஹேசில்வுட், 5. டிராவிஸ் ஹெட், 6. உஸ்மான் கவாஜா, 7. லபுசேன், 8. நாதன் லயன், 9. மிட்செல் மார்ஷ், 10. ஸ்டீவ் சுமித், 11. மிட்செல் ஸ்டார்க், 12. டேவிட் வார்னர், 13. கேமரூன் க்ரீன்.

    மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியும். கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான 26-ந்தேதி மைதானம் ரசிகர்களால் முழுமையான நிறைந்திருக்கும்.

    • 333 வீரர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 77 வீரர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள்.
    • ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடராக பிசிசிஐ-யின் ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

    2024 சீசனில் விளையாட தேவையான வீரர்களை எடுப்பதற்கான ஏலம் நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வீரர்களை ஏலம் எடுப்பார்கள்.

    ஏலம் விடும் நபர் (தொகுப்பாளர்) இதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். தன்னுடைய அசாத்திய திறமையால் வீரர்களின் ஏலத்தை சில சமயம் அதிகரிக்கக் கூட செய்வர். கடந்த அண்டு ஹக் எட்மேட்ஸ் ஏலத்தை தொகுத்து வழங்கினார்.

    ஆனால் இந்த முறை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தையும் இவர்தான் தொகுத்து வழங்கினார். ப்ரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும் இவர்தான் தொகுதி வஙழகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏலத்தில் 333 பேர் வீரர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது. இதில் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் நியூசிலாந்தின் ரச்சின் ஜடேஜா ஆகியோர் முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

    ×