search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அதிக விலைக்கு எடுக்கப்படும் வீரர்கள்?- அஸ்வின் கணிப்பு
    X

    அதிக விலைக்கு எடுக்கப்படும் வீரர்கள்?- அஸ்வின் கணிப்பு

    • டிராவிஸ் ஹெட், ரவீந்திர சச்சின் ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.
    • மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச்- மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் ஐ.பி.எல். தேதி முடிவு செய்வது என்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கருதியுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள். இதில் 30 இடம் வெளிநாட்டு வீரர்களுக்கானது. 10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை போவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஆர். அஸ்வின் வீரர்கள் ஏலம் தொடர்பான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ரூ.14 கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் கடந்த காலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் அவரை விடுவித்துள்ளது. அவர் ரூ.10 முதல் 14 கோடிக்கு விலை போகலாம் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

    ஹர்ஷல் படேல் ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், சச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும், கோயட்சே (தென்ஆப்பிரிக்கா) ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், போவெல் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும் விலை போகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட் ரூ.4 கோடி வரைதான் ஏலம் போவார் என்று கணித்துள்ளர். உமேஷ் யாதவுக்கு ரூ.4 முதல் ரூ.7 கோடி வரை கணித்துள்ளார்.

    Next Story
    ×