என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இந்திய அணி தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து முசீர் கான்- ஆதர்ஷ் சிங் ஜோடி பொறுமையுடன் ஆடியது. இந்த ஜோடியை மஹ்லி பியர்ட்மேன் பிரித்தார். அவரது பந்து வீச்சில் முசீர் கான் கிளீன் போல்ட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் சரண் 8 ரன்னிலும் சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா 9 ரன்னிலும், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 91 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணியிடம் ஐசிசி கோப்பையை தவறவிடும். அந்த நிலையை மாற்றுமா? பதிலடி கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- என்னுடைய போன் வீட்டிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
- பலருடைய போன் நம்பரும், என்னுடைய தனிப்பட்ட டேட்டாவும், அக்கவுண்ட்ஸும் அந்த போனில் தான் இருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வீட்டிருருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தாகூர்புகூர் காவல் நிலையத்தில் கங்குலி புகார் அளித்துள்ளார். அதில் முக்கியமான டேட்டா இருப்பதால் கங்குலி அச்சமடைந்துள்ளார்.
இது குறித்து கங்குலி கூறியிருப்பதாவது:-
என்னுடைய போன் வீட்டிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கடந்த ஜனவரி 19-ம் தேதி காலை 11.30 மணிக்கு தான் போனை பார்த்தேன். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், கவலை அடைந்தேன். ஏனென்றால், அதில், பலருடைய போன் நம்பரும், என்னுடைய தனிப்பட்ட டேட்டாவும், அக்கவுண்ட்ஸும் அந்த போனில் தான் இருக்கிறது. இதன் காரணமாக தனது போனை டிராக் செய்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு காவல் துறையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் கங்குலியின் போனை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.
மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 240 ரன்கள் குவித்தது.
- 2-வதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட்டும் அதிரடியாக விளையாடினார். 14 பந்துகளை சந்தித்த அதில் 31 ரன்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.
தொடக்க வீரர்களான கிங் 5 ரன்னிலும் சார்லஸ் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 18, ஹோப் 0, ருதர்வோர்ட் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய ரசல் - பவல் ஜோடி ரன் வேகத்தை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவல் அரை சதம் விளாசியும் ரசல் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
- 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். சாம் கான்ஸ்டாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் டிக்சனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.
50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியை நமன் திவாரி பிரித்தார். ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் டிக்சன் 42 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஹர்ஜாஸ் சிங் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார்.
- டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - இங்கிலீஸ் களமிறங்கினர். இங்கிலீஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வார்னர் 22 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டோய்னிஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 14 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.
- இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
- முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் பீல்டிங் செய்யும்போது லீச்க்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
அவருக்கு பதிலாக மாற்று வீரரை இங்கிலாந்து அணி அழைக்கும் திட்டம் இல்லை.
- 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
- அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
பெனோனி:
15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் பெனோனி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.
- தேவ்தத் படிக்கல் சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன்கள் குவிப்பு.
- தமிழக அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜெகதீசன் மட்டும் தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்தார்.
தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் இடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா முதல் இன்னிங்சில் 366 ரன் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் (151 ரன்) அடித்தார். அஜித் ராம் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 69.2 ஓவரில் 151 ரன்னில் சுருண்டது. இது கர்நாடகா அணியின் ஸ்கோரை விட 215 ரன் குறைவாகும்.

தமிழக அணியில் பாபா அபரஜித் அதிகபட்சமாக 48 ரன்னும், என்.ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர். கர்நாடகா அணி தரப்பில் விஜயகுமார் 4 விக்கெட்டும், சசிகுமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
215 ரன்கள் முன்னிலையில் கர்நாடகா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.
- 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.
ஜோகன்ஸ்பர்க்:
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவித்தது.
அதே நேரத்தில் விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எஞ்சிய 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய அவரது நண்பருமான டிவில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.
விராட்கோலியும், அனுஷ்கா சர்மாவும் 2-வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும், இதனால் தான் விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிவில்லியர்ஸ் அதை மறுத்து இருந்தார். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்றும், விராட் கோலி குறித்து தவறான தகவலை பகிர்ந்து விட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் 2-வது குழந்தை குறித்த தகவல் தொடர்பாக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு டிவில்லியர்ஸ் மீண்டும் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:-
எனது நண்பர் விராட் கோலி இன்னும் அணியில் இடம்பெறாத நிலையில் உள்ளார். அவருக்கு தகுதியான தனியுரிமையை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.
எனது முந்தைய தகவலில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இதற்காக விராட் கோலி குடும்பத்தினரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர்ந்து கொண்டது சரியல்ல.
அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். எனவே தான் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை. வேறு எதையும் நான் உறுப்படுத்தப் போவதில்லை. அவர் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை நன்றாக இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
- முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 204 ரன்கள் குவித்தது.
- 205 ரன் இலக்கை நோக்கி சென்ற டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் 115 ரன்னில் சுருண்டது.
தென்ஆப்பிரிக்காவில் ஆறு அணிகள் பங்கேற்ற "SA20" 20 ஒவர் தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளனர்.
ஆறு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
அதடிப்படையில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 115 ரன்னில் சுருண்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் ஆகிய அணிகள் இந்த லீக்கில் விளையாடின.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிகள் பட்டியில் முறையே முதல நான்கு இடங்களை பிடித்தன.
குவாலிபையர் 1-ல் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் பார்ல் ராயல்ஸை ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
குவாலிபையர் 2-ல் ஜோகன்னஸ்பர்க்கை டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது.
- 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.
- அறிமுக போட்டியிலே சதம் அடித்த நிலையிலும், ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷா. 24 வயதான இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் சதம் விளாசினார். ஆனால் 2020-க்கும் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. இரண்டு ஆண்டு கால இடைவெளியில் ஐந்து போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்தார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த அவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இங்கிலாந்து கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. ஆறு மாத ஓய்விற்குப் பிறகு தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில்தான் சத்தீஸ்கர் அணிக்கெதிராக 185 பந்தில் 159 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கு முன்னதாக ஒருமுறையும் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்துள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் சதம் அடித்ததன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்தாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பிரித்வி ஷா கூறுகையில் "நான் அதிகப்படியாக எதையும் குறித்து யோசித்து கொண்டிருக்கவில்லை. தற்போதைய நிலையில் இருக்க விரும்புகிறேன். எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நான், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய நோக்கம் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். என்னுடைய பங்களிப்பு மூலம் இந்த சாதனையை அடைய முயற்சி செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பிரித்வி ஷா முதல்தர போட்டியில் 383 பந்தில் 379 ரன்கள் அடித்துள்ளார். அப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்தார். இதன்மூலம் முதல்தர போட்டியில் இரண்டு முறை மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.






