என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
    • 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 196 பந்துகளில் 131 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

    அதன் பின்னர் களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அப்போது அவரின் தந்தையும், மனைவியும் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்.

    ஹர்திக் பாண்டியா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது சர்பராஸ் கான் 48 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த அணியில் அவர் இடம்பிடிக்க போராடி வந்தார்.

    இந்த நிலையில்தான் தற்போது ராஜ்கோட் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல் ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 26 வயதாகும் சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் 14 சதம், 11 அரைசதங்கள் அடித்துள்ளார். 301 நாட்அவுட் அதிகபட்ச ஸ்கோராகும்.

    • ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.
    • ஜடேஜா- சர்பராஸ் கான் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    33 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 157 பந்தில் சதம் அடித்த அவர் 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.

    ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அறிமுக வீரர் சர்பராஸ் கான் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் ஜடேஜா சதத்தை நோக்கி மெதுவாக சென்று கொண்டிருந்தார். சர்பராஸ் கான் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    முறுமுனையில் சதம் அடித்த ஜடேஜா அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இறுதியாக 198 பந்தில் சதம் அடித்தார் ஜடேஜா. ஆனால் சதம் அடிப்பதற்கு முன்னதாக சர்பராஸ் கான் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

    ஜடேஜாவின் சொந்த மாநிலம் குஜராத். தனது சொந்த மாநிலத்தில் சதம் அடித்த அவர் தனது ஸ்டைலான வாள்வீச்சு முறையில் சந்தோசத்தை வெளிப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும். கடைசி 10 ரன்களை எடுக்க 26 பந்துகள் எடுத்துக் கொண்டார்.

    குஜராத் மாநிலம் என்றாலும் அம்மாநிலத்தின் சவுராஷ்டிரா அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 79 சிக்ஸ் உடன் டோனியை 3-வது இடத்திற்கு தள்ளியுள்ளார்.
    • இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் கண்ட தொடக்க வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஜடேஜா 68 ரன்களுடனும், ரோகித் சர்மா 97 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ரேஹன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலும், 3-வது பந்திலும் தலா இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அவர் 157 பந்தில் சதத்தை எட்டினார். சொந்த மண்ணில் அவரது 9-வது சதம் இதுவாகும்.

    மேலும், இந்த ஆட்டத்தில் இதுவரை இரண்டு சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

     சேவாக் 90 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார். டோனி 78 சிக்ஸ் உடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா 79 சிக்ஸ் உடன் டோனியை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும், இங்கிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கி 3 சதங்கள் அடித்துள்ளார். முரளி விஜய், கேஎல் ராகுல், விஜய் மெர்சன்ட் ஆகியோரும் 3 சதங்கள் அடித்துள்ளனர். கவாஸ்கர் 4 சதங்கள் அடித்துள்ளார்.

    • ஜெய்ஸ்வால், கில், ரஜத் படிதார் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா களம் இறங்கினார்.
    • ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 125 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை வலது கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறி வரும் நிலையில், அடுத்து இரண்டு அறிமுக வீரர்கள் இருப்பதால் ஜடேஜாவை முன்னதாக களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    ரோகித் சர்மாவின் கணக்கை ஜடேஜா வீணடிக்கவில்லை. சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டார். ரோகித் சர்மா உடன் சரியான முறையில் ஜோடி அமைத்தார்.

    ஜடேஜா 97 பந்தில் ஐந்து பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அத்துடன் ரோகித் சர்மா உடன் இணைந்து இந்திய அணிக்கு (158/3) 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்துள்ளார்.

    • சுப்மன் கில் 9 பந்தில் ரன்ஏதும் சேர்க்காமல் டக்அவுட்.
    • ஜெய்வால் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சர்பராஸ் கான், த்ருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டார்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். கடந்த போட்டியில் அறிமுகம் ஆன ரஜத் படிதார் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனால் இந்தியா 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. வலது கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜாவை களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    டக்அவுட் ஆகி சோகமாக வெளியேறும் சுப்மன் கில்

    ரோகித் சர்மாவின் திட்டம் கைக்கொடுத்தது. ரோகித் சர்மா ஒரு பக்கம் நிலையாக நின்று அரைசதம் அடித்தார். மறுபக்கம் ஜடேஜா ஆதரவாக விளையாடி வந்தார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் வீசியுள்ளது. மார்க் வுட் 2 விக்கெட்டும், ஹார்ட்லி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    ரோகித் சர்மா 52 ரன்களுடனும், ஜடேஜா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • 15 ஆண்டுகளான கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுமுறை கேட்டுள்ளார்.
    • காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் விராட் கோலி அல்ல.

    ராஜ்கோட்:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை. தொடர்ந்து எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் எதற்காக விலகினார் என்ற காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி. சி.சி.ஐ) தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அதன் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. தொடர்ந்து ஆதரவு அளிக்கும். 15 ஆண்டுகளான கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுமுறை கேட்டுள்ளார். அது அவருடைய உரிமை. காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் விராட் கோலி அல்ல. நமது வீரர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவது தொடர்பாக விராட் கோலியிடம் விரைவில் பேசுவோம்.

    வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுவார். ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையின் போது ஹர்த்திக் பாண்ட்யா காயம் அடைந்ததால் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா திரும்ப அழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எதிர் காலத்தில் 20 ஓவர் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா நிச்சயம் கேப்டனாக இருப்பார்.

    ரோகித்சர்மாவிடம் திறமை இருக்கிறது. அவரது தலைமையில் 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.

    கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உள்ளூரில் நடைபெறும் முதல்தர போட்டியில் விளையாடுவது கட்டாயமாகும். தேர்வு குழு தலைவர், பயிற்சியாளர் அல்லது கேப்டன் உங்களி டம் (வீரர்கள்) உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஆட வேண்டும். இது அனைத்தும் ஒப்பந்த வீரர்களுக்கு பொருந்தும்.

    வீரர்கள் தனது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. அதை தேர்வு குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசின் முடிவுப்படி தான் இந்திய அணி பங்கேற்பது தெரிய வரும்.

    இவ்வாறு ஜெய்ஷா கூறி உள்ளார்.

    • முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
    • 65 முதல் தர போட்டிகளில் 14 சதம், 11 அரைசதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் சர்பராஸ் கான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணியில் அறிமுகமாகும் 311-வது வீரர் இவராவார். அவருக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த அணியில் அவர் இடம்பிடிக்க போராடி வந்தார்.

    இந்த நிலையில்தான் தற்போது ராஜ்கோட் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் விளையாடி 69.85 சராசரி வைத்துள்ளார். 26 வயதாகும் சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் 14 சதம், 11 அரைசதங்கள் அடித்துள்ளார். 301 நாட்அவுட் அதிகபட்ச ஸ்கோராகும்.

    • இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
    • இந்திய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக அறிமுகம்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

    அந்த வரிசையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். 

    • இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.
    • இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்தது.

    அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கும் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை ஜெய் ஷா வெளியிட்டார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

     


    "2023 அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாம் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற போதிலும், தொடரச்சியாக பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் நம் மனங்களை வென்றனர். 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேசிய கோடி உயர பறக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

    இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 266 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து விளையாடிய இலங்கை 267 ரன்கள் எடுத்து வென்றது.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஒவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 65 ரன், ஓமர்சாய் 54 ரன் எடுத்தனர். குர்பாஸ் 48 ரன்னிலும், அலிகில் 32 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 173 ரன்கள் சேர்த்த நிலையில், அவிஷ்கா பெர்னாண்டோ 91 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 40 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    • ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
    • இந்திய ஆண்கள் அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    சிலாங்கூர்:

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. முதலில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் யங் கா லாங் அங்குஸ் உடன் மோதினார். இதில் பிரனாய் 18-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹாங்காங் முதலில் 1-0 என முன்னிலை பெற்றது.

    அடுத்து நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர்.

    தொடர்ந்து நடந்த ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை பெற உதவினர்.

    இறுதியில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா காலிறுதியில் சீனாவுடன் மோதுகிறது.

    • முகமது நபி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×