search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ராஜ்கோட் டெஸ்ட்: கில் டக், ரோகித் அரைசதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 93/3
    X

    ராஜ்கோட் டெஸ்ட்: கில் டக், ரோகித் அரைசதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 93/3

    • சுப்மன் கில் 9 பந்தில் ரன்ஏதும் சேர்க்காமல் டக்அவுட்.
    • ஜெய்வால் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சர்பராஸ் கான், த்ருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டார்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். கடந்த போட்டியில் அறிமுகம் ஆன ரஜத் படிதார் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனால் இந்தியா 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. வலது கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜாவை களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    டக்அவுட் ஆகி சோகமாக வெளியேறும் சுப்மன் கில்

    ரோகித் சர்மாவின் திட்டம் கைக்கொடுத்தது. ரோகித் சர்மா ஒரு பக்கம் நிலையாக நின்று அரைசதம் அடித்தார். மறுபக்கம் ஜடேஜா ஆதரவாக விளையாடி வந்தார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் வீசியுள்ளது. மார்க் வுட் 2 விக்கெட்டும், ஹார்ட்லி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    ரோகித் சர்மா 52 ரன்களுடனும், ஜடேஜா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×