என் மலர்
விளையாட்டு
- ஐபிஎல் ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகள் தங்களது அணிகளில் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது.
- பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று அசத்தியது.
இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளதால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
ஐ.பி.எல். ஏலத்திற்கு முன் பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அடுத்த சீசனுக்கு முன் தங்களது அணிகளைச் சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.
இதேபோல், ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து குமார் சங்ககரா விலக உள்ளதாகவும், டிராவிட் அந்தப் பதவிக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
- இரண்டாம் நாள் முடிவில் இந்தியா டி அணி 206 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஷ்ரேயஸ் அய்யர், தேவ்தத் படிக்கல் அரை சதமடித்தனர்.
புதுடெல்லி:
துலீப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. டாஸ் வென்ற சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் கடந்து 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சி அணி சார்பில் வைஷாக் 3 விக்கெட்டும், அனுஷ் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் அரை சதம் அடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியா டி சார்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டும், அக்சர் படேல், சரண் ஜெயின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினர்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர்-தேவ்தத் படிக்கல் ஜோடி 53 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் 54 ரன்னில் அவுட்டானார்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல்-ரிக்கி புய் ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 49 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா சி அணியை விட 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டும், விஜய்குமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்தியா இதுவரை 26 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கம் ஆகும்.
அமெரிக்கா வெள்ளிப் பதக்கமும், உஸ்பெகிஸ்தான் வெண்கலமும் வென்றது.
- இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இதில் 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், பெண்கள் 200 மீட்டர் டி-12 காலிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 25.41 வினாடிகளில் ஓடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
- இந்தியா பி அணியில் முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துலிப் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும் ஈஸ்வரன் தலைமையிலினா இந்தியா பி அணியும் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து முஷீர் கான் மற்றும் சைனி ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமும் சைனி அரை சதமும் விளாசினர். இந்த ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ் தயாள் 10, சைனி 56 என விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் இந்தியா பி அணி 116 ஓவரில் 321 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இந்தியா சி அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 72 ரன்கள் விளாசினார்.
- இந்தியா டி அணி தரப்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
துலிப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய டி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சி அணி தரப்பில் வைஷாக் 3 விக்கெட்டும் அனுஷ் காம்போஜ் ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனையடுத்து இந்தியா சி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ்- சுதர்சன் களமிறங்கினர். சுதர்சன் 7 ரன்னிலும் ருதுராஜ் 5 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த ஆர்யன் ஜூயல் 12, ரஜத் படிதார் 13 என ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் - அபிஷேக் போரல் ஜோடி பொறுப்புடன் விளையாடிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார். மானவ் சுதர் 1, ஹிருத்திக் ஷோக்கீன் 5, விஜய்குமார் வைஷாக் 1 என வெளியேறினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திரஜித் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் அவர் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா டி தரப்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
- இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 16-வது இடத்தில் உள்ளது.
- பாரா ஒலிம்பிக் தடகளத்தில் இன்று மதியம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்54 பிரிவு இறுதிப் போட்டி நடக்கிறது.
பாரீஸ்:
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் (12 விளையாட்டு) கலந்து கொண்டனர். 8-வது நாளான நேற்று வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 16-வது இடத்தில் உள்ளது.
9-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரா ஒலிம்பிக் தடகளத்தில் இன்று மதியம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்54 பிரிவு இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் இந்திய வீரர் திபேஷ்குமார் பங்கேற்கிறார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பாவனாபென் அஜபாஜி சவுத்ரி களம் காணுகிறார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் எப்64 பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரவீண்குமார் பங்கேற்கிறார்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்57 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோம் ராணா, ஹோகாடோ செமா களம் காணுகிறார்கள்.
ஆண்களுக்கான 400 மீட்டர் (எப்47 பிரிவு) ஓட்டத்தில் திலீப் காவித், பெண்களுக்கான 200 மீட்டர் (எப்12) ஓட்டத்தில் சிம்ரன் சர்மா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பெண்களுக்கான வலுதூக்குதல் 67 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸ்தூரி ராஜாமணி பங்கேற்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இப்போட்டி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
கேனோயிங் போட்டியில் இந்திய வீரர் யாஷ்குமார், இந்திய வீராங்கனைகள் பிராச்சி யாதவ், பூஜா ஒஜா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இன்று ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வலுதூக்குதல் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
- பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.
- சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.
கராச்சி:
சமீபத்தில் உள்நாட்டில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் தோற்றது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறுகையில், 'சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காமல் சொந்த மண்ணில் நடக்கும் தொடரை வெல்ல முடியாது. கடந்த 3-4 ஆண்டுகளாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வாரியம் சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் பொறுமையாக இருப்பதில்லை.
பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போதும், சுழற்பந்து வீச்சாளர்களால் தான் அங்கு டெஸ்ட் போட்டிகளை வென்றோம். கடந்த காலத்தில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் போல் வலிமையான வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது இல்லை.
இருப்பினும் அவர்கள் தொடரை கைப்பற்றி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த வாரம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரே அதற்கு சான்று' என்றார்.
- முதல் செட்டை 1-6 என கரோலினா கைப்பற்றினார்.
- அடுத்த 2 செட்டுகளை ஜெசிகா வென்று அசத்தினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசு வீராங்கனையான கரோலினா முச்சோவாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கரோலினா கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதிபோட்டியில் சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு பெகுலா தகுதி பெற்றுள்ளார்.
- நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகம் முழுவதும் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
இவர் படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான். கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதைத் தாண்டி அடுத்த கட்டமான அரை இறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை.
இந்தநிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார்.
இதன் மூலம் தற்போது வரை கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா, எம்மா நவரோ மோதினார்.
- 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனையான எம்மா நவரோவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 7-6 (7/2) என்ற செட் கணக்கில் நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.
- இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.
பாரீஸ் ஆண்கள் கிளப் த்ரோ எஃப் 51 இல் பாரா ஒலிம்பிக்கில் தரம்பிர் தங்கம் வென்றார்.
அவர் கூறுகையில்: - "நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும். இன்று ஆசிரியர் தினம், அமித் சரோஹா இல்லாவிட்டால், நாங்கள் இங்கு இருந்திருக்க மாட்டோம், இந்தியாவிலும் இந்த விளையாட்டு இருந்திருக்காது என்பது உண்மைதான்..."






