என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வருகிற 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (செப்டம்பர் 9) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ. 1000-இல் துவங்குகிறது. அதிகபட்ச விலை ரூ. 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. 

    • இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.

    இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும்.

    இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார். 

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையரில் ஜெலினா-லுட்மிலா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ-உக்ரைனின் லுட்மிலா கிச்னாக் ஜோடி, சீனாவின் ஷாங் ஷுய்-பிரான்சின் கிறிஸ்டினா மெடோனோவிக் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஜெலினா-லுட்மிலா ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    இந்த ஜோடிக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

    • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. நாளையுடன் இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.

    இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பாரீசில் இருந்து இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா மற்றும் பிரனவ், மோனா அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து அசத்தினார்.

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 16.4 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 59 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    • மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார்.
    • 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார்.

    துலீப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது.

    அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்தியா சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது.

    2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா டி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    இப்போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்ததை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீரர் பிரிட்ஸ் போராடி வென்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சிஸ் தியாபே ஆகியோர் மோதினர்.

    தொடக்கம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை தியாபே கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றினார்.

    இதேபோல் 3வது செட்டை தியாபேவும், 4வது செட்டை பிரிட்சும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில் பிரிட்ஸ் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இது இவரது கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் இறுதிப்போட்டி ஆகும்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பிரிட்ஸ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொள்கிறார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 221 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் கேப்டன் ஒல்லி போப் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இதில் மான்செஸ்டர் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 5 ரன்னில் வெளியேறினார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டுடன், கேப்டன் ஒல்லி போல் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

    பென் டக்கெட் அரை சதமடித்து 86 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் சேர்த்தது. அடுத்து இறங்கிய ஜோ ரூட் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 44.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 103 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.

    ஓவல் மைதானத்தில் மழை பெய்ததாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் ஆட்டம் பல மணி நேரம் தடைபட்டது.

    • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் ஹகோடா சேமா வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 12-வது வெண்கலப் பதக்கம் ஆகும்.

    ஈரான் தங்கமும், பிரேசில் வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    நாகாலாந்தில் இருந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் அரையிறுதி சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்,

    இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 7-5, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இறுதிப் போட்டி நடைபெறும்.

    • ஆப்கானிஸ்தான், நியூசிலாந்துக்கு இடையே முதல் முறை டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
    • இரு அணிகள் மோதும் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் வரும் 9-ம் தேதி நடக்கிறது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துலா ஷாஹிடி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

    ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சட்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலி கில், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷம்ஸ் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், கலீல் அஹ்மத்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, அமெரிக்காவின் டொனால்ட் யங்-டெய்லர் டவுன்செண்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட் கணக்கில் வென்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    ×