என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் விளையாடுகின்றன.
    • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டுள்ளது.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    எட்டு அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டியின் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டுள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதை ஒட்டி இந்திய அணி இந்த முறையும் அந்நாட்டுக்கு சென்று விளையாட மறுத்து விட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக அட்டவணையை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும் இதற்கு சில நிபந்தனைகளை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தோல்வியுற்றால் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த வேண்டும்.

    வருங்காலங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா செல்லாது என்றும் தங்களுக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும். மேலும், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் நிபந்தனைகள் வைக்கப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
    • ஜோ ரூட், 2-வது இன்னிங்ஸில் 23 ரன்களை அடித்தார்.

    நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த நிலையில், நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஜோ ரூட், 2-வது இன்னிங்ஸில் 23 ரன்களை அடித்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 1625 ரன்களை அடித்துள்ளார். தற்போது ஜோ ரூட் 1630 ரன்களை அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது ஜோ ரூட் (1630) முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (1625) இரண்டாவது இடத்திலும், அலெஸ்டர் குக் / கிரேம் ஸ்மித் (1611) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    • இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து ஆல்-அவுட்ஆனது.
    • மிட்செல் 84 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

    நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் 100 ரன்களை அதிவேகமாக சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்து ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து ஆல்-அவுட்ஆனது. ஹாரி புரூக் 171 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் 151 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. நியூசிலாந்து அணி 2-வது74.1 ஓவர்களில் 254 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் 84 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆனார்.

    இதனால் இங்கிலாந்துக்கு 104 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான கிராவ்லி ஒரு ரன்னி லும், டக்கெட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் ஜேக்கப் பெத்தேல் - ஜோ ரூட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பெற செய்தது. இங்கிலாந்து அணி வெறும் 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் பெத்தேல் 50 ரன்னுடனும், ஜோ ரூட் 23 ரன்னுடம் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    • 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.
    • 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்

    இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர். நேற்று முன் தினம் நடந்த 4-வது சுற்று டிராவில் முடிந்தது.

     

    4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் நேற்று 5 வது சுற்று நடைபெற்றுள்ளது. இதில் டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

    22 நகர்த்தல் வரை ஆட்டம் சமநிலையில் இருந்தது. 23வது நகர்த்தலில் குகேஷ் சற்று சறுக்கினார். ஆனால் அடுத்தடுத்த நகர்த்தலில் அவர் மீண்டு வந்த நிலையில் 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.

     

    எனவே ஐந்து சுற்றுகள் முடிவில், குகேஷ் மற்றும் டிங் லிரென் ஆகிய இருவரும் 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மொத்த  பரிசுத்தொகை ரூ.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவை (57.69 புள்ளி) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை தென் ஆப்பிரிக்கா (59.26 புள்ளி) பிடித்துள்ளது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பவுமா 70 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது .அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் 7விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து 149 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    இதனால் இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை 282 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிக பட்சமாக தினேஷ் சண்டிமால் 83 ரன்கள், தனஞ்செயா டி செல்வா 59 ரன்கள் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது.

    • அரைசதம் அடித்த வில்லியம்சன் 61 ரன்களில்அவுட் ஆனார்.
    • 2-வது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை வில்லியம்சன் கடந்தார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக வில்லியம்சன் 93 ரன்கள் அடித்தார்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 171 ரன்களும், ஸ்டோக்ஸ் 80 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து 151 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3-வது நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்துள்ளது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வில்லியம்சன் 61 ரன்களில் வீழ்ந்தார்.

    முன்னதாக வில்லியம்சன் இந்த 2-வது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் நியூசிலாந்து தரப்பில் 9000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

    • எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது.
    • தற்போது அந்த முடிவில் இருந்து பாகிஸ்தான் பின் வாங்கி உள்ளது.

    துபாய்:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.

    இந்திய அணி இந்த முறையும் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

    எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது நிலையில் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது.

    • லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
    • டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.

    2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டு வீரர் லுவனக் மைனமை 21-8, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், வியட்நாமின் டாங் நுயெனுடன் மோதினார். இதில் ரஜாவத் 21-13, 21-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
    • 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

    டர்பன்:

    இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 7 விக்கெட்டும், கோட்சி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 4வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ், பவுமா ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.

    4வது விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸ் 122 ரன்னில் அவுட்டானார். பவுமா 113 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா எஞ்சியுள்ள 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் டாய் விங்கை 21-15, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    பி.வி.சிந்து அரையிறுதியில் சக நாட்டு வீராங்கனையான உன்னாட்டி ஹூடாவை எதிர்கொள்கிறார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 12-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் அதிரடியாக ஆடிய அரியானா அணி 42-30 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது.

    இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அரியானா அணி 12 வெற்றி, 3 தோல்வி என மொத்தம் 61 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.

    மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் அணி 34-33 என குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

    ×