என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை.. 100-க்கும் அதிக ரன்களை அதிவேகமாக சேஸ் செய்து இங்கிலாந்து வெற்றி
    X

    டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை.. 100-க்கும் அதிக ரன்களை அதிவேகமாக சேஸ் செய்து இங்கிலாந்து வெற்றி

    • இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து ஆல்-அவுட்ஆனது.
    • மிட்செல் 84 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

    நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் 100 ரன்களை அதிவேகமாக சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்து ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 499 ரன்கள் குவித்து ஆல்-அவுட்ஆனது. ஹாரி புரூக் 171 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் 151 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. நியூசிலாந்து அணி 2-வது74.1 ஓவர்களில் 254 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மிட்செல் 84 ரன்கள் எடுத்து கடைசியாக அவுட் ஆனார்.

    இதனால் இங்கிலாந்துக்கு 104 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான கிராவ்லி ஒரு ரன்னி லும், டக்கெட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் ஜேக்கப் பெத்தேல் - ஜோ ரூட் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பெற செய்தது. இங்கிலாந்து அணி வெறும் 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து சார்பில் பெத்தேல் 50 ரன்னுடனும், ஜோ ரூட் 23 ரன்னுடம் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    Next Story
    ×