என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • போபண்ணா ஜோடி 2வது சுற்றில் தோல்வி அடைந்தது.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரஸ் மால்டேனி-மேக்சிமோ கோஜாலே ஜோடி உடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 4-6, 7-6 (7-5), 11-9 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

    புதுடெல்லி:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 72 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.

    சென்னை அணி 10 போட்டியில் 2 வெற்றி, 8 தோல்வி என கடைசி இடத்தில் நீடிப்பதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறவில்லை

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • ரஷிய வீரர் மெத்வதேவ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.

    இதில் 3-6 என முதல் செட்டை இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், காஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய சி.எஸ்.கே. 190 ரன்களைக் குவித்தது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளேயில் மீண்டும் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷேக் ரஷித் 11 ரன்னும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்னும், ஜடேஜா 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன் - பிரேவிஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. 78 ரன்கள் சேர்த்த நிலையில் பிரேவிஸ் 32 ரன்னில் அவுட்டானார்.

    சாம் கர்ரன் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 47 பந்தில் 88 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பஞ்சாப் அணி சார்பில் 19வது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங், யான்சென் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

    பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்னும், நேஹல் வதேரா 5 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 6வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் உசிஜிமாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • 19 ஆவது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    • சாஹல் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சர் விளாசினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிரடியாக விளையாடிய சாம் கரண் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இப்போட்டியில் 19 ஆவது ஓவரை வீசிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    சாஹல் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சர் விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹூடா 3ஆவது பந்தில் 2 ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 5வது பந்தில் கம்போஜ், 6ஆவது பந்தில் நூர் அகமது ஆட்டமிழக்க சாகல் ஹாட்ரிட் விக்கெட்டுகளுடன் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    • சாம் கர்ரன் 47 பந்தில் 88 ரன்கள் விளாசினார்.
    • எம்.எஸ். தோனி 4 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் அடித்தார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3ஆவது ஓவரில் சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய இந்த ஓவரின் 3ஆவது பந்தில் ரஷீத் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 21 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து சாம் கர்ரன் களம் இறங்கினார். யான்சன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மாத்ரே (7) ஆட்டமிழந்தார். பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஜடேஜா 17 ரன்னில் வெளியேறினார்.

    ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தபோதிலும் மறுமுனையில் சாம் கர்ரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு பிரேவிஸ் சப்போர்ட்-ஆக விளையாடினார். சாம் கர்ரன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். சென்னை அணி 11.1 ஓவரில 100 ரன்னைத் தொட்டது. பிரேவிஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஓமர்சாய் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 14.1 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது. 5ஆவது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் துபே ஜோடி சேர்ந்தார்.

    16-ஆவது ஓவரை சூர்யான்ஷ் ஷெட்ஜெ வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சாம் கர்ரன் சிக்சருக்கு தூக்கினார். சிஎஸ்கே 15.3 ஓவரில் 150 ரன்னை தொட்டது. 4ஆவது மற்றும் 5ஆவது பந்தை பவுண்டரி விரட்டினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 26 ரன்கள் கிடைத்தது.

    17ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18ஆவது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த சாம் கர்ரன் 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 47 பந்தில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 17.4 ஓவரில் 172 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து துபே உடன் எம்.எஸ். தோனி ஜோடி சேர்ந்தார்.

    19ஆவது ஓவரை சாகல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எம்.எஸ். தோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். எம்.எஸ். தோனி 4 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 3ஆவது பந்தில் 2 ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 5வது பந்தில் கம்போஜ், 6ஆவது பந்தில் நூர் அகமது ஆட்டமிழக்க சாகல் ஹாட்ரிட் விக்கெட்டுன் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். இந்த ஓவரில் துபே ஆட்டமிழக்க சி.எஸ்.கே. 19.2 ஓவரில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஜோடி அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்துள்ளது.
    • சிஎஸ்கே 5 போட்டிகளில் கடைசி 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடி கடைசி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் எதிரணி தொடக்க வீரர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அடித்த 46 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். ஒரு அணியின் தொடக்க ஜோடி கூட 50 ரன்களை தாண்டவில்லை.

    இதில் சென்னை அணி மிகவும் மோசம். இன்றைய தொடக்க ஜோடியான ரஷீத்- மாத்ரா ஜேதடி 21 ரன்கள் அடித்தது. 6 இன்னிங்சில் இதுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.

    • தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார்.
    • மேரி கோமின் கணவர் ஓன்லர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    மணிப்பூரை சேர்ந்த மேரி கோம் மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றவர்.

    குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும், கணவர் ஓன்லரும் பிரிந்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

    இந்நிலையில், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார். அது இச்சமயம் மற்றொரு வீராங்கனையின் கணவருடன் தான் டேட்டிங் செய்வதாக வெளியான தகவலையும் மேரி கோம் மறுத்துள்ளார்.

    மேரி கோமின் கணவர் ஓன்லர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாம். இதனாலும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது மேரி கோம் தன் 4 பிள்ளைகளுடன் பரிதாபாத்திலும், அவரது கணவர் ஓன்லர் டெல்லியிலும் தனித்தனியே வசித்து வருகிறார்கள். 

    • புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:-

    ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.

    பஞ்சாப் கிங்ஸ்:-

    பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், இங்கிலிஷ், மார்கோ யான்சன், சூர்யான்ஷ் ஷெட்ஜெ, ஓமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், சாகல், அர்ஷ்தீப் சிங்.

    • காலிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் மேடிசன் கீஸ் மோதினர்.
    • முதல் செட்டை ஸ்வியாடெக் 0-6 என இழந்தார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) மோதினர்.

    இதில் முதல் செட்டை ஸ்வியாடெக் 0-6 என இழந்தார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 2 செட்டுகளையும் ஸ்வியாடெக் வென்றார்.

    இதன்மூலம் காலிறுதியில் 0-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • டெல்லி- கொல்கத்தா போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர்.
    • கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு வழக்கம் போல இரு அணி வீரர்களும் நட்பாக பேசிக்கொண்டனர். அப்போது கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் கன்னத்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்தார். இதனால் ரிங்கு சிங் சோகமான ரியாக்ஷன் கொடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

    இது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை கேட்டுக் கொண்டனர்.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் - ரிங்கு சிங் ஆகியோருக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

    அதாவது குல்தீப் யாதவ் 2016 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டங்களில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தூங்குவது, சாப்பிடுவது உட்பட பல விஷயங்களில் நட்பாக இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை ஒன்று சேர்த்து எக்ஸ்தளத்தில் வீடியோ ஆதாரமாக கொல்கத்தா பதிவிட்டுள்ளது.

    மேலும் குல்தீப் - ரிங்கு ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட வீடியோவையும் கொல்கத்தா நிர்வாகம் சேர்த்து பதிவிட்டுள்ளது. அதில் இது தான் ஊடகங்களில் வெளியாகும் செய்தி மற்றும் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ற தலைப்புடன் கொல்கத்தா நிர்வாகம் பதிவிட்டுள்ளது. அதே வீடியோவை "நட்பு மட்டுமே" என்ற தலைப்பில் டெல்லி அணியும் வெளியிட்டுள்ளது.

    ×