என் மலர்
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், காஸ்பர் ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
- ரஷிய வீரர் மெத்வதேவ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் 3-6 என முதல் செட்டை இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், காஸ்பர் ரூட் உடன் மோதுகிறார்.
Next Story






