என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 போட்டியில் அனைத்து கால கட்டத்திலும் இந்தியாவின் சிறந்த அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம் கொடுத்துள்ளார் கவாஸ்கர்.
    டி20 போட்டியில் அனைத்து கால கட்டத்திலும் இந்தியாவின் சிறந்த அணியை (11 பேர்) முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வெளியிட்டுள்ளார்.

    கவாஸ்கர் வெளியிட்டுள்ள இந்த அணியில் கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார்.

    20 ஓவர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களான ஹர்திக் பாண்டியா, குர்ணா பாண்டியா போன்றவர்கள் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    இதேபோல சுழற்பந்து வீரர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரையும் கவாஸ்கர் தேர்வு செய்யவில்லை.

    கவாஸ்கர் தேர்வு செய்த இந்தியாவின் சிறந்த 20 ஓவர் அணி வருமாறு:-

    ரோகித் சர்மா, ஷேவாக், தெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் டோனி, ஜடேஜா, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பும்ரா.
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 16-வது போட்டியில் ஐதராபாத் - கவுகாத்தி இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இந்தியன் சூப்பர் ‘லீக்‘ என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 16-வது ஆட்டம் இன்று நடக்கிறது.

    இதில் ஐதராபாத்- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. கவுகாத்தி அணி 5 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    ஐதராபாத் அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி 9-வது இடத்தில் உள்ளது.
    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விளையாடுவதன் மூலம், 100-வது போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ரோகித் சர்மா.
    • சோயிப் மாலிக் 111 போட்டிகளில் விளையாடி முதல் இடம்
    • ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • எம்எஸ் டோனி 98 போட்டிகளில் விளையாடி 3-வது இடம்
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் அவர் அணியை வழி நடத்தி செல்கிறார்.

    நாளைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 100-வது 20 ஓவர் ஆட்டமாகும். 100-வது போட்டியில் விளையாட இருக்கும் முதல் இந்திய வீரர் ஆவார். சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஒருவர் மட்டுமே 100 இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.

    சோயிப் மாலிக் 111 ஆட்டத்தில் விளையாடி 2263 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 99 போட்டியில் 2452 ரன் எடுத்துள்ளார். அப்ரிடி 99 ஆட்டத்திலும், டோனி 98 ஆட்டத்திலும் விளையாடி உள்ளனர். விராட் கோலி 93 போட்டியில் ஆடியுள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் டோனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று வர்ணனையாளராக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    கொல்கத்தா:

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்களாக இருந்த அனைவரையும் போட்டியின் வர்ணனையாளர் அறைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அனுமதி கேட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இ-மெயில் அனுப்பி இருக்கிறது. முன்னாள் டெஸ்ட் கேப்டன்களின் போட்டி அனுபவம் குறித்து கேட்டு ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

    அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் டோனியையும் கவுரவ வர்ணனையாளராக கலந்து கொள்ளுமாறு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்து இருக்கிறது. இதனால் டோனி வர்ணனையாளர் குழுவில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற முயற்சி செய்யவில்லை, அதேபோல் ரிஷப் பந்த் டோனியின் ஸ்டலை பின்பற்ற முயற்சி செய்யக்கூடாது என கில்கிறிஸ்ட் அட்வைஸ் செய்துள்ளார்.
    கிரிக்கெட் உலகில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். அவருக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் நீண்ட கால விக்கெட் கீப்பராக இருந்தவர் இயன் ஹீலி.

    இருந்தாலும் நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற முயற்சி செய்ததில்லை. அதபோல் ரிஷப் பந்த் எம்எஸ் டோனியின் ஸ்டைலை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘இந்திய ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய முதல் ஆலோசனை என்னவென்றால், எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதுதான்.

    டோனியை பற்றி அவர்கள் உருவாக்கிய பிம்பத்திற்கான அச்சு, அப்போதே சிதைக்கப்பட்டு விட்டது. எனவே, அந்த அச்சில் மீண்டும் ஒரு தயாரிப்பை உருவாக்க முடியாது.

    என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து நான் சொல்வது, ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான இயன் ஹீலிக்குப் பிறகுதான் நான் வந்தேன். நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற விரும்பியதில்லை. அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்பினேன். நான் கில்கிறிஸ்டாக இருக்க விரும்பினேன். இதுதான் ரிஷப் பந்த்துக்கு என்னுடைய அட்வைஸ்’’ என்றார்.
    ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இரண்டு இன்னிங்ஸாக நடத்துவதற்குப் பதில் நான்கு இன்னிங்ஸாக நடத்த வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட் நான்கு இன்னிங்ஸாக நடத்தப்படுகிறது. ஆனால் 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் இரண்டு இன்னிங்ஸாக நடத்தப்படுகிறது. ஒரு இன்னிங்ஸில் தவறு செய்தாலே, தோல்வியை தழுவும் நிலை உள்ளது.

    இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 25 ஓவர்களாக பிரித்து நான்கு இன்னிங்ஸ்களாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘50 ஓவர் கிரிக்கெட் போட்டியை 25 ஓவர்களாக பிரித்து நான்கு இன்னிங்ஸாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இன்னிங்ஸிற்கும் இடையில் 15 நிமிடம் இடைவெளி கொடுக்க வேண்டும்.

    ஏராளமான கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளோம். இதை கொண்டு வந்தால் மிகப்பெரியதாக இருக்கும். 50 ஓவர் போட்டியில் Team A மற்றும் Team B விளையாடுகிறது என்றால், Team A டாஸ் வென்றால், முதலில் 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும்.

    அதன்பிறகு Team B 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். அதன்பின் Team A 25 ஓவர்களில் என்ன நிலையில் இருந்ததோ, அதில் இருந்து ஆட்டத்தை தொடர வேண்டும். அதன்பின் Team B சேஸிங் செய்ய வேண்டும்.

    ஒருவேளை 25 ஓவர்களுக்குள் Team A ஆல்அவுட் ஆகிவிட்டால், Team B 50 ஓவர்கள் தொடர்ச்சியாக விளையாடி டார்கெட்டை எட்ட விளையாடலாம். தற்போது ஏராளமான புதிய ஆலோசனைகள் உள்ளன. இதை 50 ஓவர் போட்டியில் நடைமுறைப்படுத்தலாம்’’ என்றார்.
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும்.

    மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்த தொடருக்கான ஆட்சி மன்ற குழு இன்று முடிவு செய்தது.

    ‘‘ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த ஏலம் பாரம்பரியமான  பெங்களூருவில் இருந்து இந்த முறை கொல்கத்தாவுக்கு செல்கிறது’’ என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
    கான்பெர்ராவில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்தின் அபார ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.
    • பாபர் அசம் 50 ரன்னும், இப்திகார் அகமது 62 ரன்னும் அடித்தனர்.
    • வார்னர் 20 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 17 ரன்களும் சேர்ப்பு
    • மூன்று போட்டிகள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் பேட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாபர் அசாம், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் ஜமான் 2 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் 6 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 14 ரன்னிலும், ஆசிஃப் அலி 4 ரன்னிலும் வெளியேறினர்.

    பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி  ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 62 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

    இப்திகார் அகமது

    பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங்கை தொடங்கியது. டேவிட் வார்னர் 20 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    3-வது வீரராக களம் இறங்கிய ஸ்மித் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 80 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் போட்டி மழையால் கைவிடபட்டதால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
    விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு என்ற வதந்தி உள்ள நிலையில், கோலிக்கு ரோகித் சர்மா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி
    • சமூக வலைத்தளத்தில் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்ந்த ரோகித் சர்மா, அதை துண்டித்தார்
    • எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை- விராட் கோலி வெளிப்படையாக பேட்டி
    இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.

    விராட் கோலியின் வேலைப்பளு அதிகமாக உள்ளது. இதனால் ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்கலாம் என்ற செய்தி வெளியானது. இதற்கு உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியது முக்கிய காரணம்.

    இதற்கிடையில் உலகக்கோப்பை தொடரின்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. வதந்தி பரவிக் கொண்டிருந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை பின்தொடர்ந்து ரோகித் சர்மா அதை துண்டித்தார். இதனால் வதந்தி உண்மையாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

    இதை விராட் கோலி முற்றிலும் மறுத்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தால் உலகக்கோப்பையில் மேலும் இரண்டு சதங்கள் அடிப்பார் என்று எப்படி கூறியிருப்பேன் என்று விராட் கோலி தெரிவித்தார்.

    இதற்கிடையே தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின்போது ரோகித் சர்மா தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தபோது விராட் கோலி புன்னகையுடன் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், வீரர்கள் அறையில் கதவை ரோகித் சர்மா வரும் வரை திறந்து வைத்திருந்தார்.

    ரோகித் சர்மா விராட் கோலி

    இந்த சம்பவங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை என்பதை காட்டியது. இந்நிலையில் இன்று 31-வது பிறந்த நாளை கொண்டாடும் விராட் கோலிக்கு ரோகித் சர்மா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் இவருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
    லக்னோவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் லெவன் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • வெஸ்ட் இண்டீஸ் 38.5 ஓவரில் 156 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
    • ஆப்கானிஸ்தா லெவன் 34.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து சேஸிங் செய்தது
    • ரஹ்மத் ஷா 47 ரன்கள், அஸ்கர் ஆப்கன் 33 ரன்

    ஆப்கானிஸ்தான் இந்தியாவில் உள்ள மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது

    ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தத் தொடர் லக்னோவில் நாளை தொடங்குகிறது.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்னோட்டமாக நேற்று ஆப்கானிஸ்தான் லெவன் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிஸ்தான் லெவன் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் சுருண்டது.

    அந்த அணி 38.5 ஓவர்களே தாக்குப்பிடித்தது. ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார். லெவின் 24 ரன்களும், பூரண் 20 ரன்களும், ஹோல்டர் 31 ரன்களும் சேர்த்தனர்.

    ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன்-உல்-ஹக், ஷராபுதீன் அஷ்ரஃப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. ரஹ்மத் ஷா (47), நஜிபுல்லா ஜத்ரான் (40), அஸ்கர் ஆஃப்கன் (33) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 34.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.
    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இஸ்லாமாபாத்தில் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடப்பதாக இருந்தது.

    இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றி பொதுவான இடத்தில் வைக்குமாறு சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தை அகில இந்திய டென்னிஸ் சங்கம் கேட்டுக்கொண்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை சர்வதேச டென்னிஸ் சங்கம் ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. எந்த இடம் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
    ஊக்க மருந்து உட்கொண்டதால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கட்லு ரவிக்குமாருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    விளையாட்டு வீரர்-வீராங்கணைகளிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (நாடா) போதை மருந்து சோதனை நடத்துவது வழக்கம். சிறுநீர் மற்றும் ரத்த மாதிரி மூலம் இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.

    இந்த நிலையில் ஊக்க மருந்து உட்கொண்டதால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கட்லு ரவிக்குமார் உள்பட 5 பேருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்கும் வீரர் கட்லு ரவிக்குமார் தங்கம் வென்றார். அவர் 64 கிலோ பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    இதே போல் 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ பிரிவில் அவர் வெள்ளி பதக்கம் வென்றார். இந்த நிலையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது பரிசோதனையின் மூலம் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் 4 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதே போல பளு தூக்கும் வீராங்கணை பூர்ணிமா பாண்டே, பளுதூக்கும் வீரர் குர்மெய்ல்சிங் ஆகியோரும் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    பூர்ணிமா பாண்டே 2016-ம் ஆண்டு ஜூனியர் காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றவர் ஆவார்.

    இதே போல வட்டு எறியும் வீரர் தரம்ராஜ் யாதவ், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய வீரரான சஞ்ஜித் ஆகியோரும் ஊக்க மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களுக்கும் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    இதில் தரம்ராஜ் யாதவ் பெடரேசன் கோப்பை தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் ஆவார்.
    ×