என் மலர்
விளையாட்டு
மாலத்தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் நேபாள வீராங்கனை ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல், 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
தெற்காசிய போட்டியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் டி20 கிரிக்கெட் போட்டியில் மோதின. முதலில் மாலத்தீவு அணி பேட்டிங் செய்தது.
அந்த அணி 10.1 ஓவரில் வெறும் 16 ரன்களே எடுத்து ஆல்அவுட் ஆனது மாலத்தீவ. நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்துகளில் ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதில் கடைசி மூன்று விக்கெட்டையும் ஹாட்ரிக் விக்கெட்டாக வீழ்த்தினார். மாலத்தீவு அணி 10.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 16 ரன்களே எடுத்தது.
பின்னர் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் ஐந்து பந்திலேயே இலக்கை எட்டியது.
டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதேபோல் வீராங்கனைகளில் சீனாவிற்கு எதிராக மலேசியாவைச் சேர்ந்த மாஸ் எலிசா 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. டி20 போட்டியை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதிய இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் களமிறங்கினர்.
ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மார்கஸ் லபுஸ்சேன் உடன் ஜோடி சேர்ந்த வார்னர் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இரு வீரர்களும் சதம் விளாசினர். மார்கஸ் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் முச்சதம் விளாசினார்.
ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 335 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 302 ரன்களில் 'ஆல் அவுட்’ ஆனது. இதனால் அந்த அணி 'பாலோ ஆன்’ நிலையை சந்தித்தது. பாகிஸ்தான் அணியின் 8-வது வீரராக களமிறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா 113 ரன்களும், பாபர் ஆசம் 97 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

387 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் என்ற மோசாமான நிலையில் இருந்தது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஷான் மசூத் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அந்த அணியின் நாதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்க் டேவிட் வார்னருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
அடிலெய்டுவில் நடைபெற்று வரும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்ததால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் டிரிபிள் செஞ்சூரியும் (335 ரன்), மார்கஸ் லபுஸ்சேன் சதமும் (162ரன்) அடித்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ‘பாலோ ஆன்’ நிலையை சந்தித்தது.
8-வது வீரராக களம் இறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா முதல் முறையாக சதம் அடித்தார். அவர் 113 ரன்னும், பாபர் ஆசம் 97 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 6 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
387 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் என்ற பரிதாபத்தில் இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 248 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.
தொடக்க வீரர் ஷான் மசூத்தும், ஆசாத் சபீக்கும் 4-வது விக்கெட்டுக்கு கடுமையாக போராடினார்கள். பாகிஸ்தான் 32.1 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. தற்போது வரை பாகிஸ்தான் அணி 77 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 226 ரன்களை எடுத்துள்ளது. அப்ரிடி 1 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர்.
லயன் 3, ஹசில்வுட் 2 விக்கெட்டும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடி வரும் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி 476 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
ஹேமில்டன்:
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 375 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்து இருந்தது.
ஜோரூட் 114 ரன்னும், ஒலிபோப் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 106 ரன்கள் பின்தங்கிய நிலை, கைவசம் 5 விக்கெட் என்ற கணக்கில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது.
ஜோரூட் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவர் 335 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 150 ரன்னை தொட்டார். அவருக்கு போப் எல்லா வகையிலும் உதவியாக இருந்தார்.
இந்த ஜோடி நிதானமாக ஆடி 100 ரன்னை சேர்த்தது. மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 375 ரன்னை தாண்டி முன்னிலை பெற்றது. போப் 167 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். 4-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் அரை சதமாகும்.
மறுமுனையில் இருந்த ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 412 பந்துகளில் 200 ரன்னை எடுத்தார். இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். 88-வது டெஸ்டில் விளையாடும் ஜோரூட்டுக்கு 3-வது இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ல் இலங்கைக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 200 ரன்னும் (அவுட்இல்லை), 2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் 254 ரன்னும் எடுத்து இருந்தார்.
இந்த ஜோடியை வாங்கர் பிரித்தார். போப் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 455 ஆக இருந்தது. 6-வது விக்கெட் ஜோடி 193 ரன் எடுத்தது முக்கியமானது. அதை தொடர்ந்து கேப்டன் ஜோரூட்டும் வெளியேறினார். அவர் 441 பந்துகளில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் 226 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி 162.5 ஓவரில் 476 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது நியூசிலாந்து அணியின் ஸ்கோரைவிட 101 ரன் கூடுலாகும். வாக்னர் 5 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
101 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. 28 ரன்னில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.
ராவல் ரன் எதுவும் எடுக்காமல் சாம்கரண் பந்திலும், டாம் லாதம் 18 ரன்னில் வோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 375 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்து இருந்தது.
கேப்டன் ஜோரூட், தொடக்க வீரர் பர்னஸ் (101 ரன்) ஆகியோர் சதம் அடித்து இங்கிலாந்து அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர்.
ஜோரூட் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவர் 335 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 150 ரன்னை தொட்டார். அவருக்கு போப் எல்லா வகையிலும் உதவியாக இருந்தார்.
இந்த ஜோடி நிதானமாக ஆடி 100 ரன்னை சேர்த்தது. மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 375 ரன்னை தாண்டி முன்னிலை பெற்றது. போப் 167 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். 4-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் அரை சதமாகும்.
மறுமுனையில் இருந்த ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 412 பந்துகளில் 200 ரன்னை எடுத்தார். இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். 88-வது டெஸ்டில் விளையாடும் ஜோரூட்டுக்கு 3-வது இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ல் இலங்கைக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டில் 200 ரன்னும் (அவுட்இல்லை), 2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் 254 ரன்னும் எடுத்து இருந்தார்.
இந்த ஜோடியை வாங்கர் பிரித்தார். போப் 75 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 455 ஆக இருந்தது. 6-வது விக்கெட் ஜோடி 193 ரன் எடுத்தது முக்கியமானது. அதை தொடர்ந்து கேப்டன் ஜோரூட்டும் வெளியேறினார். அவர் 441 பந்துகளில் 22 பவுண்டரி, 1 சிக்சருடன் 226 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி 162.5 ஓவரில் 476 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது நியூசிலாந்து அணியின் ஸ்கோரைவிட 101 ரன் கூடுலாகும். வாக்னர் 5 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
101 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. 28 ரன்னில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.
ராவல் ரன் எதுவும் எடுக்காமல் சாம்கரண் பந்திலும், டாம் லாதம் 18 ரன்னில் வோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவாவின் லெனி ரோட்ரிக்ஸ் கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
கொச்சி:
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய கேரளா பிளாஸ்டர்ஸ்- எப்.சி. கோவா அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் 52-வது நிமிடத்தில் கோவா வீரர் மோர்டடா பால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆடிய போதிலும் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கோவாவின் லெனி ரோட்ரிக்ஸ் கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

குஜராத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அகமதாபாத்:
சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கர்நாடக அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் மனீஷ் பாண்டே சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார். தேவ்தத் படிக்கல் 32 ரன்னும், ரோஹன் கதம் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், கர்நாடகா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது.
தமிழ்நாடு சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின்,முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. முன்னணி ஆட்டக்காரர்கள் ஓரளவு ரன் எடுத்தனர்.
ஷாருக் கான் 16 ரன், ஹரி நிஷாந்த் 14 ரன், வாஷிங்டன் சுந்தர் 24 ரன், தினேஷ் கார்த்திக் 20 ரன் எடுத்து அவுட்டாகினர். தமிழக அணியில் பாபா அபராஜித் 40 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 43 ரன்னில் ரன் அவுட்டானார். அவருக்கு ரவிசந்திரன் அஷ்வின் ஒத்துழைப்பு கொடுத்தார்.
கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட தமிழக அணி ஒரு ரன் மட்டுமே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அடிலெய்டு டெஸ்டில் 400 ரன்களை அடிக்க தவறிய வார்னருக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் அடித்த டேவிட் வார்னர், லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததால் வார்னரால் சாதனைப் படைக்க முடியவில்லை.
இந்நிலையில் அட்டாக் ஆட்டம் ஆடும் டேவிட் வார்னரால் எனது சாதனையை முறியடிக்க மீண்டும் வாய்ப்பு இருக்கிறது என லாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில் ‘‘வார்னரின் ஆட்டம் மிகச் சிறந்த இன்னிங்ஸ். ஆஸ்திரேலியா வெற்றியைத்தான் மிகப்பெரியதாக நினைத்தது. சீதோஷ்ணநிலை மிகப்பெரிய பங்கு வகித்ததால் அப்படி ஒரு முடிவை எடுத்தது. ஆனால், ஆஸ்திரேலியா டேவிட் வார்னரை 400 ரன்கள் அடிக்கும் வரை சென்றிருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
நான் இங்கே அதை பார்க்க விரும்பினேன். டேவிட் வார்னரிடம் 12 ஓவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள், தேனீர் இடைவேளைக்குள் 400 ரன்களை கடந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். இது சிறப்பானதாக இருந்திருக்கும்.
2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தானின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியதை நியாயப்படுத்தாலம். இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நீண்ட நேரம் முதல் இன்னிங்சை இழுத்தது. ஆகவே, டிக்ளேர் செய்தது அந்த நேரத்தில் சரியானது.
சர் டொனால்டு பிராட்மேன் சாதனையை முறியடித்ததும், எனது சாதனையை நோக்கி வார்னர் விரைவார் என்று விரும்பினேன். வர்ணனையாளர்கள் ஹெய்டன் சாதனையை முறியடிக்கலாம் எனக் கூறினர். ஆனால், 381 ரன்னைத் தொட்டால், என்னுடைய சாதனையை தொட்டுவிடுவார் என்று நினைத்தேன்’’ என்றார்.

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் உள்ளார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டார். இவருடன் ககன் கோடாவும் நியமிக்கப்பட்டார்.
ஜட்டின் பரஞ்போ, சரன்தீப் சிங், தேவங் காந்தி ஆகியோரும் தேர்வுக்குழுவில் உள்ளனர். இவர்கள் 2016-ல் நியமிக்கப்பட்டனர். லோதா பரிந்துரைக்கு முன் தேர்வுக்குழுவினரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாக இருந்தது.
லோதா பரிந்துரையில் அது ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டது. எனினும், பிரசாத்தின் பதவிக்காலம் குறித்து முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில்தான் பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பழைய நடைமுறையின்படி தேர்வுக்குழுவின் காலம் நான்கு ஆண்டு. அதனால் பதவிக்காலம் முடிந்து விட்டதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை கங்குலி உறுதி செய்துள்ளார்.
மேலும், 2016-ல் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு புதிதாக தேர்வுக்குழு நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமது, ஏற்கனவே மனதளவில் பதவியை இழக்க தயாராக இருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்பராஸ் அகமது. இவர் அந்த அணியின் கேப்டனாக திகழ்ந்தார். 2017 ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியாவை இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
அப்போது பாகிஸ்தான் ரசிகர்களாலும், அந்நாட்டு கிரிக்கெட் போர்டாலும் பாராட்டப்பட்டார். ஆனால் இங்கிலாந்தில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இறுதியாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், கேப்டன் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். அதற்காக தனது மனநிலையை தயார்படுத்திக் கொண்டேன் என சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘உண்மையாகவே, கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறோம். அதற்கான மனதளவில் தயாராகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.
சீனியர் வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும்படி ஆலோசனை வழங்கினார்கள். சில நேரங்களில் ஓய்வு என்பது அவசியம். ஏனென்றால், நான் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மிகவும் நெருக்கடியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்.
தற்போது என்னுடைய முழுக்கவனம், உள்ளூர் கிரிக்கெட்டை பற்றிதான். பாகிஸ்தான் தேசிய அணிக்கு திரும்புவதை பற்றி யோசிக்கவில்லை. என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எப்போது என்னை அழைக்கிறார்களோ, அப்போது என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

விராட் கோலியுடன் தொடக்க வீரராக யார் களம் இறங்க விரும்புவீர்கள்? என்று ரசிகர்களிடம் ஆர்சிபி கேள்வி கேட்டதற்கு பார்தீவ் பட்டேல் நறுக்கென பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.
2019 சீசனில் அவருடன் பார்தீவ் பட்டேல் தொடக்க வீரராக களம் இறங்கினார். ஆனால் விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகா வீரர் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடி வருகிறார்.
அவரை ஆர்சிபி தக்க வைத்துள்ளது. அடுத்த சீசனில் தேவ்தத் படிக்கல் ஆர்சிபி அணியில் முக்கிய பங்காற்றுவார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ‘‘நமக்கு 240 சேஸிங் என்றால், எதிர்முனையில் விராட் கோலி இருந்தால், மற்றொரு முனையில் நீங்கள் தேவ்தத் படிக்கல் அல்லது பார்தீவ் பட்டேல் ஆகியோரில் யாரை தேர்வு செய்வீர்கள்’’ என ரசிகர்களிடம் ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டிருந்தது.
இதனை வைத்து பார்க்கும்போது பார்தீவ் பட்டேல் தொடக்க வீரர் வரிசையில் இருந்து இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘நாங்கள் 239 ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் ஏன் விரும்புகிறீர்கள்?’’ என பதில் அளித்துள்ளார்.

கர்நாடகா அணிக்காக விளையாடி வரும் 19 வயதே ஆன இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் ஆர்சிபி-யில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா அணிக்காக விளையாடி வருபவர் இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல். 19 வயதே ஆன இவர் கடந்த ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதேபோல் ஆர்சிபி அணியும் அவரை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட களம் இறக்கவில்லை.
இந்நிலையில்தான் விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 11 போட்டிகளில் விளையாடி 609 ரன்கள் குவித்தார். சராசரி 67.66. ஸ்டிரைக் ரேட் 80.09 ஆகும். அவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம், இரண்டு சதங்கள் அடங்கும்.
அதேபோல் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 11 ஆட்டங்களில் 548 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 68.50. ஸ்டிரைக் ரேட் 178.50. இவரது ஸ்கோரில் ஐந்து அரைசதம், ஒரு சதம் அடங்கும்.
இவரது ஆட்டத்தை பார்த்த இந்திய அணி கேப்டனும், ஆர்சிபி கேப்டனுமான விராட் கோலி அணியில் உள்ள பயிற்சியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் 12 வீரர்களை வெளியேற்றிய நிலையில், தேவ்தத்தை தக்கவைத்துள்ளது.
2020 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆடும் லெவன் அணியில் தேவ்தத்திற்கு உறுதியாக இடம் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.

அடிலெய்டு டெஸ்டில் வார்னர் 335 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததால் லாரா சாதனையை முறியடிக்க முடியாமல் போனது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி முச்சதம் அடித்தார்.
அவர் 335 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கூடுதலாக ஒரு மணி நேரம் டிக்ளேர் செய்யாமல் இருந்திருந்தால் டேவிட் வார்னர் 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் லாரா சாதனையை முறியடிக்க ஹிட்மேனால்தான் முடியும் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘ஒருநாள் லாராவின் சாதனையை முறியடிக்கும் நபர் யார் என்று நான் கூற விரும்பினால், அவர் ரோகித் சர்மாவாகத்தான் இருப்பார்’’ என்றார்.