என் மலர்
விளையாட்டு
ஒவ்வொரு தொடரிலும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. கொல்கத்தாவில் வங்காளதேசத்துக்கு எதிராக நடந்த இந்த பிங்க் நிற பந்து டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. சில ஆண்டுகளாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் முயற்சியால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகுந்த நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல இந்த போட்டி அவசியமாகும். ஒவ்வொரு டெஸ்டும் பகல்-இரவு போட்டியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு தொடரில் குறைந்தது ஒரு டெஸ்ட் பகல்-இரவு மோதலாக இருக்க வேண்டும். பகல்-இரவு டெஸ்டை நடத்தியதில் எனது அனுபவங்களை கிரிக்கெட் வாரியத்தின் மற்ற நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வேன். மற்ற இடங்களிலும் பிங்க் பந்து டெஸ்டை நடத்த முயற்சிப்போம். இப்போது ஒவ்வொரு வீரரும் இத்தகைய போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்கள். வெறும் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதை யாரும் விரும்பவில்லை’ என்றார்.
அதே சமயம் இந்திய கேப்டன் விராட் கோலி, பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பது எப்போதாவது மட்டுமே நடக்க வேண்டுமே தவிர வழக்கமாகி விடக்கூடாது என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளார்.
புதுடெல்லி:
முதுகு வலி காரணமாக ஓய்வில் இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டிரெய்னர் ரஜினிகாந்த் சிவஞானம் மேற்பார்வையில் மும்பை கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பும்ரா ஜிம் பயிற்சியில் ஈடுபடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Ready to jump into this week like. #MondayMotivationpic.twitter.com/zpxsaXIKwm
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) December 2, 2019
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பிரியம் கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 13-வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 17-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 4 முறை சாம்பியனான இந்தியா, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, 2 முறை சாம்பியனான பாகிஸ்தான், தலா ஒரு முறை சாம்பியனான இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
நடப்பு சாம்பியன் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் முதல்முறையாக தகுதி பெற்ற ஜப்பான் மற்றும் நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும்.
உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, தென்ஆப்பிரிக்கா சென்று அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அடுத்து அங்கு நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட 4 நாட்டு அணிகள் பங்கேற்கும் போட்டி தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து ஆகியவை இந்த போட்டியில் பங்கேற்கும் மற்ற 3 அணிகளாகும். இந்த போட்டிக்கான இந்திய அணியில் உலக கோப்பை அணியினருடன் கூடுதல் வீரராக ஐதராபாத்தை சேர்ந்த ரக்ஷன் இடம் பிடித்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அகில இந்திய ஜூனியர் தேர்வு கமிட்டியினர் மும்பையில் நேற்று தேர்வு செய்து அறிவித்தனர். அணியின் கேப்டனாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் பிரியம் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
பிரியம் கார்க் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, துருவ் சந்த் ஜூரெல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷாஸ்வாத் ரவாத், திவ்யான்ஷ் ஜோஷி, ஷூபாங் ஹெஜ்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அங்கோல்கர், குமார் குஷக்ரா, சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பட்டீல்.

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சவுரப் வர்மா 7 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தை பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சவுரப் வர்மா 7 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தை பிடித்துள்ளார்.
சையத் மோடி சர்வதேச போட்டியில் இறுதிப்போட்டிக்கு வந்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சவுரப் வர்மாவின் சிறந்த தரநிலை இதுவாகும். மற்ற இந்திய வீரர்கள் சாய் பிரனீத் 11-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 12-வது இடத்திலும், காஷ்யப் 23-வது இடத்திலும், சமீர் வர்மா 26-வது இடத்திலும், பிரனாய் 27-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். தரவரிசையில் டாப்-30 இடத்திற்குள் 6 வீரர்களை கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். இந்த வகையில் சீன வீரர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 6-வது இடமும், சாய்னா நேவால் 10-வது இடமும் வகிக்கிறார்கள்.

13-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கவுள்ள நிலையில் ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர் விலகி உள்ளார்.
புதுடெல்லி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 713 பேர் இந்தியர்கள். மீதியுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதிலிருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள்.
ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 215 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள். 754 பேர் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள்.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 55 பேர் ஏலப்பட்டியலில் உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39), வெஸ்ட் இண்டீஸ் (34), நியூசிலாந்து (24), இங்கிலாந்து (22), ஆப்கானிஸ்தான் (19), வங்காளதேசம் (6) ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்காவில் இருந்து ஒரு வீரரும் இதில் இடம் பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.4 கோடிக்கு எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் போட்டி முழுவதும் ஆடவில்லை.
சர்வதேச போட்டியில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்த மேக்ஸ்வெல் ஐ.பி.எல். ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.
கிறிஸ் லின், கம்மின்ஸ், ஹாசில்வுட், மிச்சேல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை), ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்கள் வருமாறு:-
ராபின் உத்தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்சட்சன், மார்கன், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட்.

உலகின் சிறந்த வேகப்பந்து வீரரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஸ்டார்க் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவர் ஏலத்தில் இருந்து விலகினார். கடந்த முறையும் அவர் ஆடவில்லை.

2018-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.4 கோடிக்கு எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் போட்டி முழுவதும் ஆடவில்லை.
சர்வதேச போட்டியில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்த மேக்ஸ்வெல் ஐ.பி.எல். ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.
கிறிஸ் லின், கம்மின்ஸ், ஹாசில்வுட், மிச்சேல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை), ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்கள் வருமாறு:-
ராபின் உத்தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்சட்சன், மார்கன், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட்.
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரா ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஹேமில்டன்:
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடந்தது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன் எடுத்தது. இதற்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 476 ரன் குவித்தது.
101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 37 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது.
வில்லியம்சனும், டெய்லரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். முதலில் வில்லியம்சன் 231 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 21-வது செஞ்சூரி ஆகும்.
அதைத்தொடர்ந்து டெய்லர் 184 பந்துகளில் 100 ரன்னை எடுத்தார். இதில் 11 பவுண்டரியும், 2 சிக்சர்களும் அடங்கும். சிக்சர் மூலம் அவர் சதத்தை தொட்டார். 96-வது டெஸ்டில் விளையாடும் டெய்லருக்கு 19-வது சதம் ஆகும். டெஸ்டில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதல் 2 இடங்களில் அவர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதோடு போட்டி முடிந்து டெஸ்ட் டிரா ஆனது. வில்லியம்சன் 104 ரன்னிலும், டெய்லர் 105 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்தடெஸ்டில் மொத்தம் 5 சதம் அடிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் லாதம், வில்லியம்சன், டெய்லர் ஆகியோரும், இங்கிலாந்து தரப்பில் பர்னஸ், ஜோரூட் ஆகியோரும் சதம் அடித்தனர்.
இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் இரட்டை சதம் அடித்தார். அந்த அணி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே ஆடியது.
இந்த டெஸ்ட் டிரா ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
20 ஓவர் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும்.
மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்திய அணிக்காக விளையாடிய 19 வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 634 வீரர்கள் மற்றும் 11 வெளிநாடுகளை சேர்ந்த 258 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 9 ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை இறுதி செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின்போது டிம் பெய்னுக்கு ஸ்மித் ஆலோசனை வழங்கியதை பார்க்க பிடிக்கவில்லை என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, கேப்டன் டிம் பெய்னிடம் ஆஃப் சைடு பீல்டிங் குறித்து ஸ்டீவ் ஸ்மித் ஆலோசனை வழங்கினார்.
ஸ்மித் ஆலோசனை வழங்கியதை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘ஸ்மித் சில் பீல்டிங் எல்லையை மாற்றியமைத்ததை பார்க்க விரும்பவில்லை. அவர் டிம் பெய்னிடம் சென்று, ஆஃப்-சைடு பீல்டிங் செய்வது குறித்து ஆலோசனை வழங்க முற்பட்டார்.
ஆனால், டிம் பெய்ன் ஸ்மித் விரும்பியபடி அந்த வீரரை செல்ல அனுமதித்தாரா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஸ்மித் அந்த வீரரை நகர்த்த விரும்பினார். இதை நான் முற்றிலும் வெறுக்கிறேன்’’ என்றார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், கர்நாடக அணியின் கேப்டனுமான மணிஷ் பாண்டே தமிழ் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே. இவர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்றிரவு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
நேற்றிரவு போட்டியில் ஜொலித்த அவர், இன்று காலை மும்பையில் தமிழ் நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். அவர் இடம்பிடித்துள்ள ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 14 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடதரில், இரண்டு டெஸ்டிலும் இன்னிங்ஸ் தோல்வியையே தழுவியது.
பாகிஸ்தான் அணி கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு வெற்றி அல்லது டிரா கூட பெற முடியாத நிலையை அடைந்துள்ளது. இதுவரை 14 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
வெளிநாட்டு மண்ணில் ஒரு அணி தொடர்ந்து 14 போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. அத்துடன் தொடர்ந்து ஐந்து தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா உயர்ந்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஷஸ் தொடரின்போது அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால், ஒரு டெஸ்டிற்கு தலா 60 புள்ளிகள் வழங்கப்படும்.
3, 4 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு புள்ளிகள் குறைத்து வழங்கப்படும். ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரண்டில் வெற்றி பெற்றது. இரண்டில் தோல்வியடைந்தது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 24 புள்ளிகள், டிரா ஆனால் 8 புள்ளிகள் கிடைக்கும். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு 56 புள்ளிகள் கிடைத்தது.
இதற்கிடையே இந்தியா வெஸ்ட் இண்டீஸ் (2), தென்ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம் (2) அணிகளுக்கெதிராக அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில்தான் ஆஸ்திரேலியா சொந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு 120 புள்ளிகள் கிடைத்தன.
இதன்மூலம் ஆஸ்திரேலியா 7 போட்டிகளில் 4-ல் வெற்றி, 2-ல் தோல்வி, ஒன்றில் டிரா மூலம் 176 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து இலங்கைக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 60 புள்ளிகள் பெற்றுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்டில் வெற்றி பெற்று 60 புள்ளிகள் பெற்றுள்ளது. 2-வது போட்டி டிராவில் முடிந்தால் 20 புள்ளிகள் கிடைக்கும். அப்போது நியூசிலாந்து 140 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கும்.

மாலத்தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் நேபாள வீராங்கனை ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல், 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
தெற்காசிய போட்டியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் டி20 கிரிக்கெட் போட்டியில் மோதின. முதலில் மாலத்தீவு அணி பேட்டிங் செய்தது.
அந்த அணி 10.1 ஓவரில் வெறும் 16 ரன்களே எடுத்து ஆல்அவுட் ஆனது மாலத்தீவ. நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்துகளில் ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதில் கடைசி மூன்று விக்கெட்டையும் ஹாட்ரிக் விக்கெட்டாக வீழ்த்தினார். மாலத்தீவு அணி 10.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 16 ரன்களே எடுத்தது.
பின்னர் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் ஐந்து பந்திலேயே இலக்கை எட்டியது.
டி20 கிரிக்கெட்டில் இந்திய வீரர் தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதேபோல் வீராங்கனைகளில் சீனாவிற்கு எதிராக மலேசியாவைச் சேர்ந்த மாஸ் எலிசா 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.