என் மலர்
விளையாட்டு
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் தொடரில் டிரென்ட் போல்ட் - ரோகித் சர்மா இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் புது பந்து (NEW BALL) சிறிய அளவில் ஸ்விங் ஆகும். மேலும் நியூசிலாந்து சீதோஷ்ண நிலையில் கூடுதலாக ஸ்விங் ஆகும். புது பந்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அபாரமாக பந்து வீசக்கூடியவர். இவர் புது பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்.
அதேவேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டது கிடையாது.
இதனால் ரோகித் சர்மா VS டிரென்ட் போல்ட் மோதல் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும் என நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாட வேண்டாம் என சகாவிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சகா. வங்காளதேசம் அணிக்கெதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின்போது பந்தை பிடித்தபோது கைவிரலில் முறிவு ஏற்பட்டது.
தற்போது காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். இதனால் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்கெதிராக பெங்கால் அணிக்காக விளையாட திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் வகையில் உடற்தகுதியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க, ரஞ்சி போட்டியை புறக்கணிக்கும்படி சகாவிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி அணிக்காக விளையாடிய இஷாந்த் சர்மாவுக்கு போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் ஜப்பானை சேர்ந்த இடோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
18-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தரநிலை பெறாத அமெரிக்காவின் டோமி பால்-ஐ எதிர்கொண்டார். ஐந்து செட் வரை சென்ற இந்த ஆட்டத்தில் டிமிட்ரோவ் 4-6, 6(6)-7(8), 6-3, 7(7)-6(3), 6(3)-7(10) எனத் தோல்வியடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் கனடாவைச் சேர்ந்த மிலோஸ் ரயோனிக் சிலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் காரின்-ஐ எதிர்கொண்டார். இதில் ரயோனிக் 6-3, 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
8-ம் நிலை வீரரான மட்டேயோ பெர்ரேட்டினி அமெரிக்காவின் டென்னிஸ் சன்ட்கிரேனை எதிர்கொண்டார். இதில் தரநிலை பெறாத சன்ட்கிரேன் சிறப்பாக விளையாடினார். ஐந்து செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் பெர்ரேட்டினி 6(7)-7(9), 4-6, 6-4, 6-2, 5-7 எனத் தோல்வியடைந்தார்.

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரர்களான ஸ்ரீகாந்த் கிதாம்பி, சமீர் வர்மா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்கியது. இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஷெசார் ஹிரென் ருஸ்டாவிட்டோவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 14-21, 12-21 என இழந்தது தோல்வியை சந்தித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா மலேசியாவைச் சேர்ந்த லீ ஜீ ஜியாவை எதிர்கொண்டார். இதில் சமீர் வர்மா 16-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ஏ எளிதாக வெற்றி பெற்றது.
இந்தியா ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்து லெவன் அணிக்கெதிராக இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா ஏ வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்தியா ஏ பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரவிந்த்ரா 49 ரன்களும், 4-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் ப்ரூஸ் 47 ரன்களும் அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து ஏ அணி 230 சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ஏ அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும் கலீல் அகமது மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். அகர்வால் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பிரித்வி ஷா 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷுப்மான் கில் 35 பந்தி் 30 ரன்கள் அடித்தார். சஞ்சு சாம்சன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 35 ரன்கள் விரட்டினார். விஜய் சங்கர் 20 ரன்களும், குருணால் பாண்டியா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ 29.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லேவும் ஜப்பானை சேர்ந்த ஒசாகாவும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மெல்போர்ன்:
கிராண்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவருமான ஆஷ்லே (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் சுலோவெனியாவை சேர்ந்த ஹெர்சாக்கை எதிர் கொண்டார்.
இதில் ஆஷ்பார்டி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
3-வது வரிசையில் இருப்பவரும் நடப்பு சாம்பியனுமான நவோமி ஒசாகா (ஜப்பான்) 2-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஜெங்கை எதிர் கொண்டார். இதில் ஒசாகா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
உலகின் 8-வது வரிசையில் உள்ள பெட்ரோ சிவிட்டோவா (செக்குடியரசு) 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த படோசவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் பெட்ரா மேட்ரிக் (குரோஷியா), வோஸ்னியாக்சி (டென்மார்க்) கெனின் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
உலகின் 6-ம் நிலை வீரரான ஸ்டெபான்ஸ் சிட்சி பாஸ் (கிரீஸ்) 2-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த பிலிப்பை சந்திக்க இருந்தார். பிலிப் காயத்தால் விலகியதால் சிட்சிபாஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சாம்குயரி (அமெரிக்கா) 7-6 (7-2), 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் பெர்னாசிசை (லிதுவேனியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா, வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பாங்காக்:
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் இன்று (புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும் என்றால் ஏப்ரல் 26-ந் தேதிக்குள் தரவரிசையில் ‘டாப்-16’ இடங்களுக்குள் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஏப்ரல் மாதம் இறுதிக்குள் தாய்லாந்து மாஸ்டர்ஸ் உள்பட 8 போட்டிகள் அரங்கேற இருக்கின்றன. எனவே வருகிற போட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு வீரர்-வீராங்கனைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தற்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் பி.வி.சிந்து (தரவரிசையில் 6-வது இடம்), சாய் பிரனீத் (11-வது இடம்) ஆகியோர் மட்டுமே ஏறக்குறைய இடத்தை உறுதி செய்துள்ளனர்.
ஒலிம்பிக் தரவரிசையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்திய வீரர்-வீராங்கனைகள் பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டியை தவிர்த்து தாய்லாந்து மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்திக்கிறார். லின்னுடன் ஏற்கனவே மோதிய 4 ஆட்டங்களிலும் சாய்னா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் சொதப்பிய சாய்னா, இந்த ஆண்டில் நடந்த மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் கால்இறுதி வரை முன்னேறினார். ஒலிம்பிக் வாய்ப்புக்கான தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள சாய்னா எஞ்சிய போட்டிகளில் சாதித்து தகுதி பெறுவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், ஷிசர் ஹிரெனையும் (இந்தோனேஷியா), சமீர் வர்மா, லீ ஜி ஜியாவையும் (மலேசியா), பிரனாய், லிவ் டாரெனையும் (மலேசியா) எதிர்கொள்கின்றனர். ஒலிம்பிக் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் கடந்த ஆண்டில் மட்டுமின்றி இந்த ஆண்டு தொடக்கத்திலும் சோபிக்கவில்லை. வரும் போட்டிகளில் அவர் எழுச்சி பெறாவிட்டால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமாகி விடும்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்றுகும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து 20 ஓவர் , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் 24-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது.

டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரங்கள்:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.
ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரங்கள்:-
விராட் கோலி (கேப்ட), ரோகித் சர்மா, பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷ்ப் பண்ட் (கீப்பர்), ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்.
தோள் பட்டை காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத ஷிகர் தவானின் டி20 இடத்திற்கு சஞ்சனும், ஒருநாள் போட்டிக்கான இடத்திற்கு பிரித்வி ஷாவும் களமிறங்க உள்ளனர்.
இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ள நிலையில், அங்குள்ள ஆடுகளங்களின் தன்மைகள் மாறிவிட்டன என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டி வந்த பிறகு பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மைகள் மாறிவிட்டன என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் 1990-களில் வேகப்பந்து வீச்சு சாதகமான வகையில் இருந்தன. 2009-களில் அதிக ரன்கள் குவிக்கும் வகையில் மாற்றப்பட்டன.
நாங்கள் 2009-ல் விளையாடும்போது ஹாமில்டன் ஆடுகளம் மற்ற ஆடுகளத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. வெலிங்கடன், நேப்பியர் ஆடுகளங்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஹாமில்டன் அப்படி இல்லை’’ என்றார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் திறமையை நிரூபித்துள்ள மார்னஸ் லாபஸ்சேன் டி20 போட்டிக்கும் தயாராக உள்ளார் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லாபஸ்சேன். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகம் ஆனார். முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2-வது போட்டியில் அரைசதத்தை தவறவிட்ட அவர், 3-வது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஸ்மித்துடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு இரண்டு போட்டிகளிலும் சிறப்பான வகையில் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
இரண்டு வகை கிரிக்கெட்டிலும் அடியெடுத்து வைத்து லாபஸ்சேன், டி20 கிரிக்கெட்டிலும் விளையாட தயாராக இருக்கிறார் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ‘‘லாபஸ்சேன் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓடுகிறார். இதனால் இரண்டு ரன்கள் அதிக அளவில் கிடைக்கும். இதுபோன்ற வீரர்கள் உங்களுடைய டி20 அணியில் தேவை. அவருக்கு உறுதியான எதிர்காலம் உள்ளது’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் குயின்டான் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து புது வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குயின்டான் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அப்போது டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
27 வயதாகும் குயின்டான் டி காக் இதுவரை 115 ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி 14 சதங்கள், 24 அரைசதங்களுடன் 4907 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் நடால், மெட்வெடேவ், நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
இந்த வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று தொடங்கியது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஏராளமான ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரபேல் நடால் பொலிவியாவைச் சேர்ந்த ஹுகோ டெலியன்-ஐ 6-2, 6-3, 6-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீரரான மெட்வெடேவ் 6-3, 4-6, 6-4, 6-2 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 10-ம் நிலை வீரரான மொன்பில்ஸ் தைவானைச் சேர்ந்த லு யென்னை 6-1, 6-4, 6-2 என எளிதில் வீழ்த்தினார்.
23-ம் நிலை வீரரான நிக் கிர்ஜியோஸ் 6-2, 7(7)-6(3), 7(7)-6(1) என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் நிலை வீரரான டி கோஃபின் 6-4, 6-3, 6-1 என பிரான்ஸ் வீரர் சார்டியை வீழ்த்தினார்.