search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன்
    X
    பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன்

    ஒருநாள் கிரிக்கெட்: பிரித்வி ஷா, சாம்சன் அதிரடியால் இந்தியா ஏ எளிதில் வெற்றி

    நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தியா ஏ எளிதாக வெற்றி பெற்றது.
    இந்தியா ஏ அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நியூசிலாந்து லெவன் அணிக்கெதிராக இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா ஏ வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று  போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இந்தியா ஏ பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரவிந்த்ரா 49 ரன்களும், 4-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் ப்ரூஸ் 47 ரன்களும் அடித்தனர்.

    மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து ஏ அணி 230 சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்தியா ஏ அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும் கலீல் அகமது மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

    பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். அகர்வால் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    பிரித்வி ஷா 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷுப்மான் கில் 35 பந்தி் 30 ரன்கள் அடித்தார். சஞ்சு சாம்சன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 35 ரன்கள் விரட்டினார். விஜய் சங்கர் 20 ரன்களும், குருணால் பாண்டியா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ 29.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் சேர்த்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×