என் மலர்
விளையாட்டு
ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப நியூசிலாந்துக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை. ஆகவே ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தது. கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 35 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். கேஎல் ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.3 ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தது.

19 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் மணிஷ் பாண்டே. அதன்பின் நான்கு பந்தில் ஐந்து ரன்களே அடித்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 33 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 4 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருக்கும்போது காயம் காரணமாக வெளியேறினார். அப்போது இந்தியா 138 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் நியூசிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சாளர் இந்தியாவால் ரன்கள் குவிக்க இயலவில்லை. ஷிவம் டுபே 6 பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

19 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் மணிஷ் பாண்டே. அதன்பின் நான்கு பந்தில் ஐந்து ரன்களே அடித்தனர். கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 33 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 4 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி 20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மவுன்ட் மாங்கானு:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் சமீபத்தில் தொடங்கியது. இதில் 4-0 என்ற கணக்கில் டி 20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவ்ருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக பதவி வகிக்கிறார்.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ரோகித் சர்மா, (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல், ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), டாம் புருஸ், டேரி மிட்செல், மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குக்ளே, டிம் சவுத்தி (கேப்டன்), ஐஷ் சோதி, ஹமிஷ் பென்னட்.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
மவுன்ட் மாங்கானு:
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த இரு ஆட்டங்களில் சூப்பர் ஓவர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தியது. இதனால் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது.
இந்த தொடரில் 3, 4-வது ஆட்டங்கள் சமனில் முடிந்து அதன் பிறகு சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது வியப்புக்குரிய ஒன்றாகும். 20 ஓவர் தொடர் ஒன்றில் அடுத்தடுத்து இரு ஆட்டங்கள் சமன் ஆனது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். சூப்பர் ஓவரில் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய வீரர்கள் பிரமாதப்படுத்தினர்.
நியூசிலாந்து மண்ணில் எந்த ஒரு அணியும் 5-0 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை வென்றதில்லை. புதிய வரலாறு படைக்கும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். அதே சமயம் தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டதால் பரிசோதனை முயற்சிகள் தொடரும் என்று தெரிகிறது.
லோகேஷ் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் சேர்க்கப்படலாம். இதே போல் பும்ரா, கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்படலாம். விராட் கோலி இல்லை என்றால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துவார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்லவேண்டும். சொந்த ஊரில் அதுவும் 4 முறை டாஸ் ஜெயித்தும் ஒன்றில் கூட வெற்றிக்கனி பறிக்க முடியாததால் நொந்துபோய் உள்ளனர்.
3-வது ஆட்டத்தில் 5 பந்தில் 3 ரன் தான் தேவைப்பட்டது. 4-வது ஆட்டத்தில் கடைசி 4 பந்தில் 3 ரன் தான் தேவையாக இருந்தது. கைவசம் விக்கெட் இருந்தும் நியூசிலாந்து வீரர்கள் சொதப்பினர். கடைசி ஓவர்களில் அவர்கள் ஒன்றிரண்டு ரன்கள் எடுப்பதற்கு பதிலாக அதிரடியாக விளாச முயற்சித்ததாலேயே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இது போன்ற தவறுகளுக்கு இன்றைய ஆட்டத்தில் பரிகாரம் தேடும் முனைப்புடன் ஆடுவார்கள். இடது தோள்பட்டை வலியால் கடந்த ஆட்டத்தில் ஆடாத நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மவுன்ட் மாங்கானு நகரை சுற்றி மலைகள் அமைந்துள்ளன. காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் பந்து ஸ்விங் ஆக வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் கணித்து ஆடினால் ரன்வேட்டை நடத்தலாம். இங்கு இதுவரை நடந்துள்ள 6 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி 4-ல் வெற்றி பெற்றுள்ளது. முடிவு கிடைத்த 5 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது விராட் கோலி, மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது ஷமி.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், கேன் வில்லியம்சன் அல்லது டாம் புருஸ், ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ஹாமிஷ் பென்னட், ஸ்காட் குஜ்ஜெலின்.
இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கொச்சியில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
கொச்சி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
கொச்சியில் நேற்று நடந்த 72-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களின் ஆட்டத்துக்கு கேரளா அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் சென்னை அணி 3-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் கேரளா அணியின் வீரர் ஒக்பீச் ‘ஹாட்ரிக்’ கோல் (48, 65, 76-வது நிமிடம்) அடித்தார். ஆனாலும், சென்னை அணியினர் பதிலுக்கு கோல் மழை பொழிந்தனர்.
நடப்பு தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் சென்னையின் வல்ஸ்கிஸ் (12 கோல்) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், சென்னை அணி 6-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தான் ஆடிய 14 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என 21 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
வெலிங்டனில் நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துபாய்:
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய இந்தியா மணிஷ் பாண்டேயின் அரைசதத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்களுக்கு 165 ரன்கள் குவிக்கவே ஆட்டம் சமனில் முடிந்தது.
இரு அணிகளின் ஸ்கோரும் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அதில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இரண்டு ஓவர்கள் தாமதமாக வீசியதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது இந்திய அணியினர் மெதுவாக பந்து வீசினார்கள். அவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்களுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4வது டி20 போட்டியின் நடுவர்கள் முன்வைத்த இந்த குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிபோட்டியில், முகுருசாவை வீழ்த்தி அமெரிக்காவின் கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இந்த போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் மற்றும் ஸ்பெயினின் முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முகுருசா சிறப்பாக ஆடி முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.
அடுத்த இரண்டு செட்களிலும் அதிரடியாக ஆடிய கெனின் 6-2, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், கெனின் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இது கெனினின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைக்கு பின்னரும் முழு உடல் தகுதி பெறாத காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதன்பின் சிகிச்சை மேற்கொண்டு அணிக்கு திரும்பினா. ஆனாலும், முகுது வலி அவருக்கு தொடர்ந்து இருந்ததால் லண்டன் சென்று அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.
இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அவர் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவந்தார்.
இதற்கிடையில், தற்போது அவருடைய உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியுடன் உள்ளாரா என்பதற்கான பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார்.
இதையடுத்து நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தொடங்கிய முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் அதிரடி ஆட்டத்தில் இங்கிலந்து அணியை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி.
மெல்போர்ன்:
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
கான்பெர்ராவில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 67 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் ஷபாலி வர்மா (30), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (26) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.
இறுதியில், இந்திய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டபோது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (42 ரன்) சிக்சர் அடித்து இலக்கை எட்ட வைத்தார்.
முத்தரப்பு தொடரின் முதல் ஆட்டத்தை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மும்பையில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது மும்பை அணி.
மும்பை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பையில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் டிகோ கார்லோஸ் ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். அதன்பின், ஆட்டம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இறுதியில், மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
ஹராரேயில் நடைபெற்று வந்த ஜிம்பாப்வே - இலங்கை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்ததால் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
ஜிம்பாப்வே - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 406 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 293 ரன்னில் சுருண்டது.
முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலை பெற்றதால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ஜிம்பாப்வே அணியால் அதிக நேரம் விளையாட முடியவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்திருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜிம்பாப்வே 247 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 361 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஆனால் 3-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றினார்.
இலங்கை 87 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மெண்டிஸ் 233 பந்துகளை சந்தித்து 116 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.

இளையோர் உலக கோப்பை காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4-வது காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான பர்ஹான் ஜாகில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் 49.1 ஓவரில் 189 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மொகமது ஹரைரா ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 41.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தானோடு இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான், நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது. 6-ந்தேதி நடக்கம் 2-வது அரையிறுதியில் வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

கடைசி வரை ‘த்ரில்’லாக சென்ற இரண்டு போட்டிகளுக்குப் பிறகு, அற்புதமான ஆட்டத்தை நம்மால் கேட்க இயலாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 165 ரன்கள் சேர்த்தது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியாலும் 165 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 13 ரன்கள் அடித்தது. பின்னர் 14 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெற்றது.
அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டிக்குப்பின் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘கடந்த இரண்டு போட்டிகளில் இருந்து நான் சில புதிய விஷயங்கள் கற்றுள்ளேன். அது எதிரணி சிறப்பாக விளையாடும்போது, இறுதி கட்டம் வரை பொறுமையாக இருந்து, போட்டியை தங்கள் பக்கம் திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.
இதைவிட அற்புதமான போட்டிகளை நம்மால் கேட்க முடியாது. இதற்கு முன் நாங்கள் சூப்பர் ஓவரில் விளையாடியது கிடையாது. தற்போது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது அணியின் தன்மையை காட்டுகிறது.
தொடக்கத்தில் கேஎல் ராகுல் உடன் சஞ்சு சாம்சனை சூப்பர் ஓவரில் களம் இறக்க நினைத்தோம். ஆனால் கேஎல் ராகுல் என்னிடம், நீங்கள்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். உங்களுக்கு அனுபவம் அதிகம் என்றார். அதனால்தான் நான் தொடக்க வீரராக களம் இறங்கினேன்.
கேஎல் ராகுலின் முதல் இரண்டு ஷாட்டுகளும் முக்கியமானதாக அமைந்தது. அதன்பின் நீங்கள் இடைவெளி பார்த்து பந்தை தட்டிவிட்டால் அணியை வெற்றி பெற வைத்து விடலாம். டாப் ஆர்டர் வரிசையில் சஞ்சு சாம்சன் பயமில்லாமல் விளையாடக் கூடியவர். நாங்கள் ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை. அவர் ஆட்டத்தின் வேகத்தை அப்படியே எடுத்துச் செல்ல முயன்றார். அவரது திறமை மீது அவர் உறுதியாக இருக்க வேண்டும். சைனி மீண்டும் வேகமாக பந்து மூலம் ஈர்க்கப்பட்டுள்ளார்’’ என்றார்.