search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்மன்பிரீத் கவுர்
    X
    ஹர்மன்பிரீத் கவுர்

    முத்தரப்பு டி 20 கிரிக்கெட் - ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

    ஆஸ்திரேலியாவில் தொடங்கிய முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் அதிரடி ஆட்டத்தில் இங்கிலந்து அணியை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி.
    மெல்போர்ன்:

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது.

    இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    கான்பெர்ராவில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹீதர் நைட் 67 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி சார்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் ஷபாலி வர்மா (30), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (26) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

    இறுதியில், இந்திய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டபோது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (42 ரன்) சிக்சர் அடித்து இலக்கை எட்ட வைத்தார்.
    முத்தரப்பு தொடரின் முதல் ஆட்டத்தை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
    Next Story
    ×