என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை சுரேஷ்ரெய்னா அனுப்பி இருக்கிறார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்த சில நிமிடங்களில் அவரது நண்பரும், இடக்கை பேட்ஸ்மேனுமான சுரேஷ்ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

    டோனி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறையாக தகவல் தெரிவித்து விட்டு தனது ஓய்வு முடிவை பகிரங்கப்படுத்தினார். ஆனால் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் ஓய்வு முடிவை வெளியிட்டு இருக்கிறார். ஓய்வை வெளிப்படையாக அறிவித்ததற்கு அடுத்த நாள் தான் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ தகவலை அனுப்பி இருக்கிறார்.

    ஓய்வு அறிவிக்கும் முன்பு வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவிப்பது வழக்கமாகும். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இடக்கை அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ஞாயிற்றுக்கிழமை (சனிக்கிழமை ஓய்வு பெற்றார்) இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரபூர்வாக அனுப்பி வைத்தார். அவரது தலைமையில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும், ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ‘டோனி விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம்’ என்று என்.சீனிவாசன் தெரிவித்தார்.
    சென்னை:

    2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பையையும், 2013-ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்று கொடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கியவரான 39 வயது டோனி கடந்த சனிக்கிழமை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் மவுனம் காத்து வந்த அவரின் திடீர் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    டோனி


    இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் மோசமான தோல்வி காரணமாக அடுத்து வந்த தொடரில் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க தேர்வாளர் ஒருவர் முயற்சி செய்ததாகவும் அதனை தான் தடுத்தி நிறுத்தியதாகவும் அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நமது அணி சிறப்பாக விளையாடவில்லை. எனவே தேர்வாளர் ஒருவர் டோனியை ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பினார். டோனியை எப்படி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடியும். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நமது அணி அவரது தலைமையில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    டோனிக்கு பதிலாக யாரை கேப்டனாக தேர்வு செய்வது என்பது குறித்து கூட தேர்வு குழுவினர் சிந்திக்கவில்லை. இது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்வு குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக டோனியை அணியில் ஒரு வீரராக மட்டும் தேர்வு செய்ய வழியில்லை என்று நான் தெரிவித்தேன். தேர்வு குழு கூட்டத்தில் டோனியை கேப்டனாக தேர்வு செய்ய தேர்வாளர்கள் மறுக்கிறார்கள் என்று வாரியத்தின் செயலாளராக இருந்த சஞ்சய் ஜக்தலே எனக்கு தகவல் தெரிவித்தார். அணியில் ஒரு வீரராக தேர்வு செய்ய மட்டுமே சம்மதிப்பதாக கூறினார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி டோனி கேப்டனாக இருப்பார் என்று முடிவெடுக்க வைத்தேன்.

    டோனி விரும்புகிற காலம் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம். தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும். போட்டியை தவிர்த்து வேறு எதனை பற்றியும் ஒருபோதும் டோனி சிந்திக்காதது தான் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாகும். அந்த கொள்கையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் மழை குறுக்கிட்டதால், 45.4 ஓவர்களவே வீசப்பட்டது. இதில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

    2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் 40.2 ஓவர்களே வீசப்பட்டன.

    3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 91.2 ஓவரில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான அணி சார்பில் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 72 ரன்களும், பாபர் அசாம் 47 ரன்களும், அபித் அலி 60 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 4-வது நாள் 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

    இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தேனீர் இடைவேளை வரை மழையால் போட்டி நடைபெறவில்லை. அதன்பின் போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    அத்துடன் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணி கேப்டன்களும் ஒத்துக்கொண்டதால் போட்டி டிராவில் முடிந்தது.

    ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் 1-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ந்தேதி தொடங்குகிறது.
    ஓய்வு முடிவை அறிவித்த பின்னர் நானும், எம்.எஸ். டோனியும் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுதோம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் டோனி ரசிகர்களால் ‘தல’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். ரெய்னா ‘சின்ன தல’ என்று அழைக்கப்படுகிறார்.

    இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக சென்னை வந்த நிலையில், சுதந்திர தினத்தன்று இருவரும் ஓய்வு முடிவை அறிவித்தனர்.

    முடிவை அறிவித்த பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுதோம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘சென்னை அடைந்ததும் டோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது, ஆகவே, நான் தயாராக இருந்தேன். நான், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், கர்ண் சர்மா ஆகியோர் 14-ந்தேதி ராஞ்சிக்கு வாடகை விமானத்தோடு சென்றோம். அங்கிருந்து டோனியையும், மோனு சிங்கையும் அழைத்து வந்தோம்.

    எங்களுடைய ஓய்வுக்குப்பின், நாங்கள் கட்டிப்பிடித்து நீண்ட நேரம் அழுதோம். அதன்பின் நான், சாவ்லா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கர்ண் சர்மா என நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம்.  எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் எங்களுடைய உறவு குறித்து பேசினோம். இரவில் விருந்து நடைபெற்றது’’ என்றார்.
    எம்.எஸ். டோனி சிறுவனமாக இருந்தபோது பயிற்சியாளராக இருந்த கேசவ் ரஞ்சன் பானர்ஜி மீடியாக்களின் விமர்சனம் அவரை ஓய்வு முடிவிற்கு தள்ளியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
    எம்.எஸ். டோனி சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற இருந்தது. அதன்பின் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது.

    இதனால் டி20 உலக கோப்பையுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. டி20 உலக கோப்பை 2021-ல் இந்தியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளதால் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    ஆனால், ஓய்வு குறித்து எம்.எஸ். டோனி ஏதும் கூறவில்லை. இந்நிலையில் டோனி சிறுவனாக இருந்தபோது அவருக்கு பயிற்சியாளராக இருந்த கேசவ் ரஞ்சன் பானர்ஜி மீடியாக்களின விமர்சனங்கள் ஓய்வு முடிவிற்கு தள்ளியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேசவ் ரஞ்சன் பானர்ஜி கூறுகையில்  ‘‘மீடியாக்களில் 2019 உலக கோப்பைக்குப் பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்ப முடியும் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.

    இதுதான் ஓய்வு குறித்து முடிவு எடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்குமா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால், இந்த முடிவில் அதுவும் ஒரு காரணியாக இருந்திருக்கலாம். டோனியால் மட்டுமே அதுகுறித்து விளக்கம் அளிக்க முடியும்.

    டோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கனும். அடுத்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலக கோப்பையில் விளையாடியிருக்கலாம். அவரது உடற்தகுதியை பொறுத்தமட்டில் எளிதாக விளையாடலாம். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. ஏராளமானோர் இதைத்தான் நினைத்தார்கள்.

    எல்லாம் முடிந்து விட்டது. இது அவரது ஓய்வு பேரிடியாக உள்ளது. அதேவேளை உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
    எம்.எஸ். டோனியின் ஒரு சாதனை மட்டும் எப்போதும் நிலைத்திற்கும் என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. இவர் நேற்றுமுன்தினம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற கேப்டன், அதிகமுறை நாட்அவுட் கேப்டன், அதிக போட்டிகளில் விளையாடிய கேப்டன் என பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்ற கேப்டன் என்ற சாதனை எப்போதுமே நிலைத்திருக்கும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘ஒரு சாதனை பற்றி நீங்கள் பேசும்போது, மூன்று ஐசிசி டிராபிகளை வென்ற சாதனை எம்.எஸ். டோனியுடன் எப்போதும் இருக்கும். மற்ற எந்த கேப்டனும் இந்த சாதனையை (டி20 உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலக கோப்பை) முறியடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    இந்த விசேசமான சாதனை எப்போதுமே நிலைத்திருக்கும். இது எப்போதும் நிலைத்திருக்கும் என்று என்னால் பந்தயம் கூட கட்ட முடியும். இரட்டை சதம் கூட முறியடிக்கப்படலாம். யாராவது ஒரு பேட்ஸ்மேன் வந்து ரோகித் சர்மாவை விட அதிக டபுள் செஞ்சூரி அடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், எந்த கேப்டனாலும் மூன்று டிராபியை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே, டோனி அந்த சாதனையுடன் நிலைத்திருப்பார்.’’ என்றார்.
    எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாகவும், சாதனை விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதிக்குப்பின் எம்.எஸ். டோனி சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்தார்.

    இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 13-வது சீசனுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    டோனிக்குப்பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பண்ட்-ஐ டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக அணி நிர்வாகம் தயார்படுத்தி வந்தது. ஆனால் அதிக வாய்ப்புகள் கொடுத்த போதிலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்கில் ரிஷப் பண்ட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    இதனால் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைத்தனர். அவர் பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங் பணியிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணி களம் இறக்கியது.

    இந்நிலையில் கேஎல் ராகுலுக்குத்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒயிட்-பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் விக்கெட் கீப்பர்களான மோங்கியா, எம்எஸ்கே பிரசாத், தீப் தாஸ்குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ‘‘50 ஓவர் போட்டியை பொறுத்த வகையில் கேஎல் ராகுல்தான் முதல் தேர்வு என்று நான் நினைக்கிறேன். நான் பார்த்த வரைக்கும் விக்கெட் கீப்பர் பணியில் அவர் மோசமாக செயல்படவில்லை. ஏற்கனவே அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றபோது, அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் இருந்துள்ளது’’ என்று நயன் மோங்கியா தெரிவித்துள்ளார்.

    தாஸ்குப்தா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரைக்கும் இரண்டு பேரும் ஆடும் லெவன் அணியில் விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால், ஒருவருக்குத்தான் வாய்ப்பு என்றால் குறைந்த பட்சம் டி20 அணியிலாவது கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில் அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் அவரிடம், 2023 உலக கோப்பை வரை மிடில் ஆர்டர் வரிசையில் கஷ்டமான ஐந்தாவது இடத்தில் களம் இறங்கிய விளையாட தயாராக இருக்கிறீர்களா? என்று பேசி தெளிவை பெற முடியும்.’’ என்றார்.

    எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நியூசிலாந்து தொடரை பொறுத்த வரைக்கும் கேஎல் ராகுல்தான் முதல் தேர்வு. 2-வது சஞ்சு சாம்சன். 3-வதாகத்தான் ரிஷப் பண்ட் இருந்தார். அவர் சிறப்பாக செய்தால் பேட்ஸ்மேன் தேவையா? பந்து வீச்சாளர் தேவையா? என்பதற்கு ஏற்பட்ட ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், ஐந்து மாதத்திற்குப் பிறது, ஐபிஎல் முக்கியமானது என்று பேசப்படுகிறது’’ என்றார்.
    நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் என டோனியின் மனைவி சாக்‌ஷி டுவிட்டரில் கூறியுள்ளார்.
    ராஞ்சி:

    டோனியின் மனைவி சாக்‌ஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நீங்கள் என்ன சாதித்து உள்ளர்களோ அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். கிரிக்கெட் விளையாட்டுக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக வாழ்த்துகள். உங்களது சாதனைகளையும், எப்படிப்பட்ட நபர் என்பதையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் மிகவும் நேசித்த விளையாட்டில் இருந்து விடைபெறும் போது எவ்வளவு கண்ணீரை, உணர்ச்சியை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்பதை அறிவேன். ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். இனி பல அற்புதமான விஷயங்கள் வர உள்ளன.

    இவ்வாறு கூறியுள்ள சாக்‌ஷி, ‘நீங்கள் சொன்னதை மக்கள் மறந்து விடுவார்கள். நீங்கள் செய்ததை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்’ என்று அமெரிக்க பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ சொன்ன தத்துவத்தையும் சுட்டிகாட்டியுள்ளார்.
    இந்தியன் சூப்பர் லீக் 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வழக்கமாக சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி உள்பட 10 நகரங்களில் நடைபெறும். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியை கோவா மாநிலத்தில் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள ஜவஹர்லால் நேரு, ஜி.எம்.சி அத்லெட்டிக், திலக் ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் வருகிற நவம்பர் மாதம் போட்டி தொடங்குகிறது.

    சென்னையின் எப்.சி, நடப்பு சாம்பியன் அட்லெட்டிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி. கோவா உள்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் அரங்கேறும். இந்த தகவலை தெரிவித்த போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி நிறுவனர் நிதா அம்பானி, ‘இந்தியாவில் இந்த அழகான விளையாட்டின் மையமாக கோவா மீண்டும் ஒரு முறை இருக்கப்போகிறது’ என்று குறிப்பிட்டார்.
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் (வயது 73).  40 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ள சேத்தன், சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியுள்ளார்.  இதேபோன்று மராட்டியம் மற்றும் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். முன்னாள் எம்.பி.யான இவர் உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாகவும் இருந்து வந்தார்.

    கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்திருந்த அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த 2-வது மந்திரி இவராவார்.
    சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னி்ங்சில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் மழை குறுக்கிட்டதால், 45.4 ஓவர்களவே வீசப்பட்டது. இதில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.

    2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் நடத்தப்படவில்லை. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பாகிஸ்தான அணி சார்பில் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 72 ரன்களும், பாபர் அசாம் 47 ரன்களும், அபித் அலி 60 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
    எம்எஸ் டோனி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் விளையாட வேண்டும் என வார்னே தெரிவித்துள்ளார்.
    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து எம்எஸ் டோனி ஓய்வு பெற்றுவிட்டார். பிசிசிஐ-யின் விதிப்படி சர்வதேச போட்டியில் இருந்து விலகிய வீரர் டி20 போன்ற லீக்குகளில் விளையாடலாம்.

    இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரட் என லீக்கை அறிமுகம்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் சீசன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே லண்டன் ஸ்பிரிட் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

    இநிலையில் ஓய்வு பெற்ற டோனி, தி ஹண்ட்ரட் லீக்கில் எங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘அடுத்த வருடம் லண்டன் ஸ்பிரிட் அணிக்கு டோனியை அழைத்து வர முடியும் என்றால் ஆச்சர்யம் அடைவேன், அவர் லாரட்சில் விளையாட விரும்பினால், நான் நிச்சயம் அவரை அழைத்து வருவேன். நான் அதற்கான பணத்தை தேடுவேன்’’என்றார்.

    டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக கேப்டன் பதவியில் அவரது அணி இறுதிச் சுற்றை சுற்றியே வந்துள்ளது. அவரது தலைமையில் மூன்று  உலக கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது.

    அவர் ஒரு அபாயகரமான வீரர். பெரும்பாலான போட்டிகளில் ஓரு மனிதராக அணியியை வெற்றி பெற வைத்துள்ளார். அவருடைய கேபடன்ஷிப்பை பார்த்தீர்கள் என்றால், சிறந்த போட்டியாளராகவும், சிறந்த வீரராகவும் திகழ்ந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த விக்கெட் கீப்பரில் ஒருவராக இருப்பார்’’என்றார்.
    ×