search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பண்ட், கேஎல் ராகுல்
    X
    ரிஷப் பண்ட், கேஎல் ராகுல்

    அடுத்த விக்கெட் கீப்பர் யார்?: ரிஷப் பண்ட்-ஐ விட கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு என முன்னாள் வீரர்கள் கணிப்பு

    எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த விக்கெட் கீப்பராக கே.எல். ராகுலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாகவும், சாதனை விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதிக்குப்பின் எம்.எஸ். டோனி சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்தார்.

    இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 13-வது சீசனுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    டோனிக்குப்பின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பண்ட்-ஐ டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக அணி நிர்வாகம் தயார்படுத்தி வந்தது. ஆனால் அதிக வாய்ப்புகள் கொடுத்த போதிலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்கில் ரிஷப் பண்ட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    இதனால் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைத்தனர். அவர் பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங் பணியிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணி களம் இறக்கியது.

    இந்நிலையில் கேஎல் ராகுலுக்குத்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒயிட்-பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் விக்கெட் கீப்பர்களான மோங்கியா, எம்எஸ்கே பிரசாத், தீப் தாஸ்குப்தா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ‘‘50 ஓவர் போட்டியை பொறுத்த வகையில் கேஎல் ராகுல்தான் முதல் தேர்வு என்று நான் நினைக்கிறேன். நான் பார்த்த வரைக்கும் விக்கெட் கீப்பர் பணியில் அவர் மோசமாக செயல்படவில்லை. ஏற்கனவே அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றபோது, அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் இருந்துள்ளது’’ என்று நயன் மோங்கியா தெரிவித்துள்ளார்.

    தாஸ்குப்தா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரைக்கும் இரண்டு பேரும் ஆடும் லெவன் அணியில் விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால், ஒருவருக்குத்தான் வாய்ப்பு என்றால் குறைந்த பட்சம் டி20 அணியிலாவது கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில் அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் அவரிடம், 2023 உலக கோப்பை வரை மிடில் ஆர்டர் வரிசையில் கஷ்டமான ஐந்தாவது இடத்தில் களம் இறங்கிய விளையாட தயாராக இருக்கிறீர்களா? என்று பேசி தெளிவை பெற முடியும்.’’ என்றார்.

    எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘நியூசிலாந்து தொடரை பொறுத்த வரைக்கும் கேஎல் ராகுல்தான் முதல் தேர்வு. 2-வது சஞ்சு சாம்சன். 3-வதாகத்தான் ரிஷப் பண்ட் இருந்தார். அவர் சிறப்பாக செய்தால் பேட்ஸ்மேன் தேவையா? பந்து வீச்சாளர் தேவையா? என்பதற்கு ஏற்பட்ட ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், ஐந்து மாதத்திற்குப் பிறது, ஐபிஎல் முக்கியமானது என்று பேசப்படுகிறது’’ என்றார்.
    Next Story
    ×