என் மலர்
செய்திகள்

டோனி மனைவி சாக்ஷி
நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் மறக்கமாட்டார்கள் - சாக்ஷி
நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள் என டோனியின் மனைவி சாக்ஷி டுவிட்டரில் கூறியுள்ளார்.
ராஞ்சி:
டோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் என்ன சாதித்து உள்ளர்களோ அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். கிரிக்கெட் விளையாட்டுக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக வாழ்த்துகள். உங்களது சாதனைகளையும், எப்படிப்பட்ட நபர் என்பதையும் நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் மிகவும் நேசித்த விளையாட்டில் இருந்து விடைபெறும் போது எவ்வளவு கண்ணீரை, உணர்ச்சியை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்பதை அறிவேன். ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள். இனி பல அற்புதமான விஷயங்கள் வர உள்ளன.
இவ்வாறு கூறியுள்ள சாக்ஷி, ‘நீங்கள் சொன்னதை மக்கள் மறந்து விடுவார்கள். நீங்கள் செய்ததை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்’ என்று அமெரிக்க பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ சொன்ன தத்துவத்தையும் சுட்டிகாட்டியுள்ளார்.

Next Story