என் மலர்
செய்திகள்

ஸ்டூவர்ட் பிராட், முகமது ரிஸ்வான்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்-அவுட்
சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னி்ங்சில் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் மழை குறுக்கிட்டதால், 45.4 ஓவர்களவே வீசப்பட்டது. இதில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் நடத்தப்படவில்லை. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பாகிஸ்தான அணி சார்பில் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 72 ரன்களும், பாபர் அசாம் 47 ரன்களும், அபித் அலி 60 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
Next Story






